Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பா.ஜ.,வில் இணைந்த இளம் இயக்குநர்

Posted:

சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது புதிதொன்றும் அல்ல... கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை ஏகப்பட்ட திரைபிரபலங்கள் அரசியலில் இணைந்துள்ளனர். அந்தவகையில் இப்போது இளம் இயக்குநர் ஒருவர் பா.ஜ.,வில் இணைந்துள்ளார். ஜித்தன்-2, 1.A.M., கிரிங் கிரிங்... போன்ற படங்களை இயக்கிய ராகுல், இன்று(ஜூன் 13-ம் தேதி) முறைப்படி தன்னை பா.ஜ.வில் இணைத்து கொண்டார். தமிழக ...

மகளை பள்ளிக்கு அனுப்புவதற்குள் தவித்துப்போன பிருத்விராஜ்..!

Posted:

தமிழில் காவியத்தலைவன் இசைவெளியீட்டு விழா நடைபெற்ற சமயத்தில் தான் பிருத்விராஜுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அலங்ரிதா மேனன் என பெயர் வைத்துள்ளனர் பிருத்விராஜ் - சுப்ரியா தம்பதியினர். தற்போது அலங்ரிதாவுக்கு மூன்று வயதான நிலையில் அவரை பள்ளிக்கு அனுப்பும் வேலைகளை சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டார் பிருத்விராஜ். ...

துல்கர் சல்மான் - ராணா நட்பில் இப்படி ஒரு விஷயம் ஒளிந்துள்ளதா ..!

Posted:

சமீபத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் அழகான பெண் குழந்தைக்கு அப்பாவானார். திரையுலகில் இருந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். நடிகர் விக்ரம் பிரபு, துல்கரை மச்சான் என அழைக்க கூடியவர். அவரும் அந்த நேரத்தில் துல்கருடன் மருத்துவமனையில் இருந்து உதவிகள் செய்தார். துல்கருக்கு குழந்தை பிறந்த தகவல் ...

நானும் காதல் திருமணம் செய்வேன் - கவுதம் கார்த்திக்

Posted:

ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை படங்களை இயக்கிய கண்ணன் தயாரித்து, இயக்கி இருக்கும் படம் இவன் தந்திரன். கவுதம் கார்த்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தொடர்ந்து இன்று(ஜூன் 13-ம் தேதி) செய்தியாளர்களிடம் ...

அப்பா சிறந்த விமர்சகர் : ஸ்ருதிஹாசன்

Posted:

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் 'பெஹன் ஹோகி தேரி'. இந்த படத்தின் சிறப்பு காட்சியை தன்னுடைய அப்பா கமல்ஹாசனுக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிட்டார் ஸ்ருதிஹாசன்.
படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன், 'இந்த படத்தை என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய ...

பிறந்த நாள் டிரென்டிங், விஜய், சூர்யா ரசிகர்கள் போட்டி

Posted:

சமூக வலைத்தளங்களில் எதற்குத்தான் போட்டி போடுவது என்று தெரியவில்லை. அடுத்த வருடப் பிறந்த நாள் கொண்டாட்டத்தைக் கூட இந்த வருடப் பிறந்த நாள் முடிந்ததும் ஆரம்பித்துவிடுவார்கள் போலிருக்கிறது. ஜுன் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருவதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் அடிக்கடி ஏதாவது ஒரு விஷயத்தை ...

ஒரு வருட இடைவெளியில் சந்தானம்

Posted:

நாயகனாக நடிக்க முடிவு செய்த பின், எந்த ஒரு ஹீரோ அழைத்தாலும் கண்டிப்பாக காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருப்பவர் சந்தானம். இருந்தாலும் அவர் முன்பே காமெடியனாக நடித்துக் கொடுத்த சில படங்கள் வெளிவந்து சந்தானத்தின் மார்க்கெட்டைக் கொஞ்சம் பதம் பார்த்தது.

சந்தானம் நாயகனாக நடித்து வெளிவந்த படங்களில், ...

பாத்சாகோ போஸ்டர் வெளியீடு

Posted:

சிவாய் படத்தை தொடர்ந்து அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம் "பாத்சாகோ". மிலன் லூதிரா இயக்கும் இப்படத்தில் அஜய் உடன் இலியானா, இஷா குப்தா, இம்ரான் ஹாஸ்மி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். பாத்சாகோ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த போஸ்டரில் அஜய், கருப்பு நிற லெதர் ஜாக்கெட் அணிந்து, முகத்தை துணியால் ...

"குலோப் ஜாமுன்" பற்றி அபிஷேக் பச்சன்

Posted:

ரியல் கணவன் - மனைவியான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் ஏற்கஜனே குரு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கின்றனர். இப்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். படத்திற்கு குலோப் ஜாமுன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இயக்குநர் அனுராக் காஷ்யாப் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிப்பது பற்றி அபிஷேக் பச்சன் ...

சச்சினை தொடர்ந்து ஹீரோவான இன்னொரு கிரிக்கெட் வீரர்!

Posted:

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற படத்தில் நடித்ததை தொடர்ந்து, இன்னொரு இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்தும், டீம் - 5 என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் தயாராகிறது. பைக் ஸ்டன்டை மையமாக வைத்து உருவாக்கும் இப்படத்தில், ...

மணிரத்தினத்தை கவர்ந்த நடிகை!

Posted:

காற்று வெளியிடை படத்தை அடுத்து, தன் புதிய படத்தை, தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குகிறார், மணிரத்னம். இப்படத்தில், அரவிந்த் சாமி மற்றும் ராம்சரண் நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்க, பல நடிகைகள் முயற்சி எடுத்த நிலையில், காற்று வெளியிடை பட கதாநாயகி, அதிதிராவையே மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளார், மணிரத்னம். காரணம், மேற்படி படத்தில், ...

ஜான் உடன் நடிக்கவில்லை - பரிணிதி சோப்ரா

Posted:

பிரபல இயக்குநர் அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜான் ஆபிரஹாமும், பரிணிதி சோப்ராவும் நடிப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியான நிலையில் அதை மறுத்திருக்கிறார் நடிகை பரிணிதி சோப்ரா. இதுகுறித்து பரிணிதி சார்பில் அவரது செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... "அனீ்ஸ் பாஸ்மியின் ...

தமிழில் என்ட்ரி கொடுக்கும் ஹூமா குரோஷி!

Posted:

இந்தியில், பல படங்களில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை, ஹூமா குரோஷி. இவர், அஜித் நடித்த, பில்லா இரண்டாம் பாகத்திலேயே தமிழுக்கு வர வேண்டியவர்; அச்சமயம், கால்ஷீட் இல்லாததால், தமிழுக்கு வரவில்லை. இந்நிலையில், தற்போது, ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கும், 161வது படத்தில் தமிழுக்கு வருகிறார். இந்தியில், அவர் சில படங்களில், ...

ஹசீனா பார்கர் படம் ரிலீஸ் தள்ளிப்போனது

Posted:

பிரபல நிழல்உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்கர். இவர் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. ஹசீனா ரோலில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அபூர்வா லக்கியா இயக்க, சுவிஸ் என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் நாகித் கான் தயாரிக்கிறார். ஸ்ரத்தாவுடன் சித்தாந்த் கபூரும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து ...

அஜித்தின் சாதனைகளை சொல்லும் பாடல்!

Posted:

நடிகர் அஜித் நடித்துள்ள, விவேகம் படத்தில், அவர், 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில், தீம் சாங் இடம் பெற்றுள்ளது. இந்த ஒரு பாடலுக்காக, இசையமைப்பாளர், அனிருத், 50 டியூன்களை போட, அதில் ஒன்றை, ஓ.கே., செய்துள்ளார், அஜித். இதற்கு முன், வேதாளம் படத்தில் இடம்பெற்ற, 'ஆளுமா டோளுமா...' பாணியில், அதிரடி இசையில், ...

"ஜோக்கர்" படத்தின் உல்டாவா அக்ஷ்யின் "டாய்லெட்" படம்.?

Posted:

பிரதமர் மோடியின் சுத்தமான இந்தியாவை கருத்தை மையமாக கொண்டு, ஹிந்தி நடிகர் அக்ஷ்ய் குமார் நடிப்பில் "டாய்லெட் ஏக் பிரேம் கதா" என்ற படம் உருவாகி உள்ளது. அக்ஷ்ய் குமார் ஜோடியாக பூமி பதேன்கர் நடித்திருக்கிறார். நாராயணன் சிங் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. அதேசமயம் ...

ஹிந்தி தயாரிப்பாளருடன் டாப்ஸீ காதலா?

Posted:

'ஆடுகளம்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் டாப்ஸீ. அதன் பின் தமிழில் அவர் நடித்த சில படங்கள் சரிவரப் போகவில்லை. தெலுங்கிலும் வாய்ப்புகள் குறைந்ததால் ஹிந்திப் பக்கம் போனார். அங்கு அமிதாப்பச்சனுடன் நடித்த 'பின்க்' திரைப்படம் டாப்ஸீக்கு ஹிந்தித் திரையுலகத்தின் கதவைத் தாராளமாகத் திறந்துவிட்டது. அதன் பின் ஹிந்திப் படங்களில் ...

ஜுன் 30ல் தைவானில் 'பாகுபலி 2' வெளியீடு ?

Posted:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகி சுமார் 1700 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கும் படம் 'பாகுபலி 2'. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியானது. படம் வெளியான அனைத்து நாடுகளிலுமே இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது.
இப்படம் அடுத்த கட்ட வெளியீட்டிற்குத் தற்போது தயாராகி வருகிறது. முதல் ...

சீனியர் நடிகரான தந்தையின் பெயரை தவிர்க்கும் அர்த்தனா பின்னு

Posted:

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் தமிழுக்கு வந்தவர் டாப்சி பன்னு. அதன்பிறகு வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை என பல படங்களில் நடித்த அவரை தற்போது தமிழ்ப்படங்களில் பார்க்க முடியவில்லை. இந்தநிலையில், டாப்சி பன்னுவைத் தொடர்ந்து தற்போது அர்த்தனா பின்னு என்ற பெயரில் கேரளாவில் இருந்து ஒரு நடிகை தமிழுக்கு என்ட்ரி கொடுத் ...

ஸ்பைடர் படம் தமிழ் வியாபாரம் தொடங்கியது

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். ராகுல் பிரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்பில் காமெடியனாக ஆர்.ஜே.பாலாஜியும், தெலுங்கு பதிப்பில் பிரியதர்ஷி புள்ளிகொண்டா என்ற காமெடி நடிகரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™