Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பாகுபலி-2 வசூல்ரூ. ஆயிரம் கோடி:ரசிகர்களுக்கு பிரபாஸ் நன்றி

Posted:

சென்னை: கடந்த 28-ம் தேதி வெளியான பாகுபலி -2 இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியான சில நாட்களிலேயே ரூ. ஆயிரம் கோடி அளவிற்கு வசூலாகி சாதனை படைத்துள்ளது. இது இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதனையடுத்து பாகுபலி-2-வில் கதாநாயகனாக நடித்துள்ள ...

ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது - நக்மா

Posted:

ரஜினியின் சினிமா பயணத்தில் முக்கியமானதும், அவருக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வௌிவந்த இப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. இதில் ரஜினி ஜோடியாக நக்மா நடித்திருந்தார். ரஜினியுடன் இவர் நடித்த ஒரே படமும் பாட்ஷா தான். தற்போது நக்மா, சினிமாவை விட்டு முழுநேர அரசியல்வாதியாகிவிட்டார். இவர், தேசிய ...

20 வருடங்களுக்குப் பிறகு டப் செய்யப்படும் சிவாஜி நடித்த மலையாளப்படம்

Posted:

1964 ல் ஸ்கூல் மாஸ்டர் என்ற மலையாளப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் சிவாஜி. அதன் பிறகு, ஏறக்குறைய 14 வருடங்களுக்குப் பிறகு1978 ல் பிரேம்நசீர் நடித்த தச்சோலி அம்பு என்ற மலையாளப்படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்குப் பிறகு ஏறக்குறைய 20 வருடங்களுக்குப் பிறகு, அதாவது 1997-ல் மோகன்லால் இணைந்து சிவாஜி நடித்த மலையாளப் படம் 'ஒரு யாத்ரா மொழி'. ...

ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக தமன்னா?

Posted:

பி.சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா கதாநாயகன், கதாநாயகியாக நடித்த தெலுங்கு படம் '100% லவ்'. 2011-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற இந்தப்படம் இப்போது தமிழில் ரீ-மேக் ஆகிறது. இந்த படத்தை தெலுங்கில் இயக்கிய பி.சுகுமார் தமிழில் தயாரிக்கிறார்.
'பேக் வாட்டர்ஸ்' 'நடாஷா' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளரும், பிரபல ...

இசையமைப்பாளர் விஷயத்தில் இறங்கி வந்த தனுஷ்

Posted:

தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 28-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் மும்பை தாராவி பகுதியில் நடைபெறுவதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே தாராவி போன்ற செட்டை உருவாக்கும் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ...

விஜய்யை தொடர்ந்து கம்யூனிஷத்துக்கு விளக்கம் தந்த துல்கர் சல்மான்..!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படத்தில் விஜய்யின் தங்கை கம்யூனிம்சம்னா என்னண்ணா என விஜய்யிடம் கேட்பார்.. அதற்கு விஜய் "உன் பசி தீர்ந்ததுக்கு அப்புறம் நீ சாப்பிடுற இட்லி இன்னொருத்தனுதுன்னு: விளக்கம் சொல்லி இருப்பார். கம்யூனிசம் என்றால் என்ன என தலைவர்கள், பேச்சாளர்கள் ஆளாளுக்கு விளக்கம் ...

மோகன்லால் படம் மூலம் இயக்குனராகிறார் பீட்டர் ஹெய்ன்..!

Posted:

தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்பவர் பீட்டர் ஹெய்ன்.. ஷங்கரின் படங்களில் அவரது ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிவரும் இவர், ரசிகர்களால் ஆரவாரமாக வரவேற்கப்பட்ட 'பாகுபலி' படத்திலும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி படத்தின் வெற்றியில் பெரிதும் துணை நின்றார்.. கடந்த வருடம் மலையாளத்தில் மோகன்லால் ...

ரூ.1000 கோடி வசூல், அதிகாரப்பூர்வ அறிவிப்பு - பாகுபலி 2 சரித்திர சாதனை

Posted:

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற பாகுபலி 2 படம் உலக அளவில் 9 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலித்து தனிப் பெரும் சாதனையைப் படைத்துள்ளது. படத் தயாரிப்பு நிறுவனம் சற்று முன்னர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான இப் படம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலுமே பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், ...

ஜீவாவின் புதிய படம் கீ: நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்கிறார்

Posted:

போக்கிரி ராஜா, திருநாள், கவலை வேண்டாம் என தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஜீவா அடுத்து ஒரு வெற்றி கட்டாயம் என்ற நிலையில் இருக்கிறார். அடுத்து வெளிவர இருக்கும் காமெடி படமான சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்து கீ என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நாடோடிகள், ஈட்டி, மிருதன் ...

மீண்டும் ஹீரோயின் ஆனார் ஜோதிஷா

Posted:

அம்புலி 3டி படத்தின் மூலம் அறிமுகமானர் ஜோதிஷா. பெங்களூர் பொண்ணு. அதன் பிறகு நலம்தானா, பரமாத்மா படங்களில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு ஹீரோயின் வாய்ப்புகள் இல்லாமல் சின்ன சின்ன கேரக்டர்களில், காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தார்.
பல வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் ஹீரோயின் ஆகியிருக்கிறார். வின்னாளன் படத்தில் யோகி ...

தமிழில் ஜெயிக்க போராடும் ஊர்மிளா காயத்ரி

Posted:

மலையாள தேசத்தில் பிறந்தாலும் ஊர்மிளா காயத்ரி அறிமுகமானது தெலுங்கு படத்தில். சிக்ஸ் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அடுத்து ஷரவணா என்ற கன்னடப் படத்தில் நடித்தார், மூன்றாவது படம் பெங்காலி படம். அடுத்து அவர் கன்னடத்திலேயே நிலை கொண்டு விட்டார்.
தமிழில் மியாவ் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் பெரிய வரவேற்பை ...

அரவிந்த்சாமி படத்தில் செண்டிமென்ட் பாடல் பாடிய கங்கை அமரன்!

Posted:

நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி- திரிஷா ஜோடி சேர்ந்துள்ள படம் சதுரங்கவேட்டை-2. பணம் சம்பந்தப்பட்ட ஒரு கான்செப்டில் இந்த படம் தயாராகியுள்ளது. அரவிந்த்சாமி-த்ரிஷா இருவரும் கணவன்-மனைவி என்றாலும் கதைப்படி எதிரும் புதிருமான கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து ...

ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போன அதர்வா படம் !

Posted:

கணிதன் படத்திற்கு பிறகு செம போதை ஆகாத, இமைக்கா நொடிகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், ஒத்தைக்கு ஒத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இதில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் சூரியுடன் இணைந்து நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா உள்பட பல நடி கைகள் ...

ஸ்பாட்டிலேயே மகளுக்கு பயிற்சி கொடுக்கும் மீனா!

Posted:

மலையாளத்தில் மம்மூட்டி-நயன்தாரா நடித்த படம் பாஸ்கர் தி ராஸ்கல். இந்த படத்தில் அவர்களின் மகளாக குழந்தை நட்சத்திரம் அனிகா நடித்திருந்தார். இவர் என்னை அறிந்தால் படத்தில் அஜீத்தின் மகளாக நடித்தவர். இப்படம் தற்போது தமிழில் அரவிந்த்சாமி-அமலாபால் நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக்காகிக்கொண்டிருக்கிறது. சித்திக் ...

காக்கி சட்டை அணிந்ததும் கம்பீரம் வந்தது - நந்திதா

Posted:

கபாலி ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நந்திதா. முதல் படமே ஹிட்டடித்ததால் அடுத்தடுத்து எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பல படங்களில் நடித்து பிர பலமாகி விட்டார். கவர்ச்சி விசயத்தில் தொடர்ந்து கோடு போட்டு நடித்து வரும் நந்திதா, தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ...

வைரலாக பரவி வரும் அஜித்தின் விவேகம் ஸ்டில்

Posted:

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சிக்ஸ்பேக் கெட்டப்பில் அஜித் போஸ் கொடுத்ததில் இருந்தே அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது. அதையடுத்து விவேகம் படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு புகைப்படங்களையும், தகவல்களையும் அவரது ரசிகர்கள் இணையதளங்களில் டிரன்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். ...

தமிழை கொலை செய்தால் எனக்கு கோபம் வரும் - செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்

Posted:

பாலிமர் சேனலில் செய்தி வாசித்து வருபவர் ரஞ்சித். யாராக இருந்தாலும் தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்புகளை முழுமையாக தெரிந்து கொண்டு செய்தி வாசிக்க வேண்டும். அது இல்லாமல் தமிழை கொலை செய்வது போன்று வாசிப்ப தைக் கேட்டால் எனக்கு கோபம் வந்து விடும் என்கிறார் அவர். தினமலர் இணையதளத்திற்காக ரஞ்சித் அளித்த பேட்டி...

இன்றைக்கு ...

பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த நரசிம்மபாரதி

Posted:

எம்.ஜி,ஆரும், சிவாஜியும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஆளுமைகள். ஆனால் ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த நடிகர் பி.வி.நரசிம்மபாரதி என்பது பலருக்கும் தெரியாது.
பாரதிதாசன் எழுதிய எதிர்பாராத முத்தம் என்று குறுங்காவியத்தை மார்டன் தியேட்டர்ஸ் சினிமாவாக எடுக்க முன்வந்தது. அதனை எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்குவதாக ...

சொகுசு வீட்டை வென்றது யார்?:

Posted:

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சி சரிகமபா சாம்பியன். கடந்த பல மாதங்களாக நடந்து வந்த இந்தப் பாடல் போட்டி நிகழ்ச்சியில் பல இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்டு பாடி வந்தார்கள். ஹிமேஷ் ரேஷ்மையா, ஜாவீத் அலி, நேகா கட்கர், ஆதித்யா நாராயண் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி வந்தனர்.
இதன் இறுதி சுற்றுக்கு விஷ்வ பிரசாத், ரக்ஷத், ...

தமிழில் விட்ட இடத்தை பிடிப்பேன்: ரெஜினா

Posted:

ரெஜினாவுக்கும், சமந்தாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தமிழ் நாட்டில் பிறந்தவர்கள். தமிழ் படங்களில் அறிமுகமாகி இங்கு புறக்கணிக்கப்பட்டு அதன் பிறகு தெலுங்கிற்கு சென்று வெற்றி பெற்றவர்கள். சமந்தா மீண்டும் தமிழுக்கு வந்து வெற்றி பெற்றார். அவர் வழியில் மீண்டும் தமிழுக்கு வந்து வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கிறார் ரெஜினா. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™