Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


யப் டிவியில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் லைவ்

Posted:

பிரபல இணையதள டிவியான யப் டிவியில், மினி உலககோப்பையான சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நேரடி நிகழ்வாக கண்டு ரசிக்கலாம்.
தெற்கு ஆசியாவில் முன்னணி இணையதள டிவி.,யாக உள்ளது யப் டிவி. இந்த டிவி பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதுமட்டுமின்றி சீசனுக்கு தகுந்தபடி அந்த நிகழ்ச்சிகளையும் ஒளிப்பரப்பு செய்து வருகிறது. ...

பொள்ளாச்சியில் நடிகை அனுஷ்காவின் கேரவன் பறிமுதல்

Posted:

தெலுங்கு படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பயன்படுத்தி வந்த நடிகை அனுஷ்காவின் கேரவனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று ...

தாசரி நாராயணராவ் மறைவு - தமிழ் சினிமா இரங்கல்

Posted:

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, தாசரி நாராயண ராவ், 75, உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பெப்சி மற்றும் இயக்குநர்கள் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்சி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "தாசரியின் மறைவு இந்திய சினிமாவிற்கு ஈடு செய்ய ...

80களின் நட்சத்திர சங்கமம்: இந்தமுறை ரஜினி ஆப்சென்ட்..?

Posted:

எண்பதுகளில் பிரபலங்களாக ஜோடி சேர்ந்து நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய நட்சத்திரங்கள் வருடம் தோறும் ஒருநாள் ஒன்றாக கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 2009-ல் இவர்களின் முதல் சந்திப்புக்கான ஏற்பாடுகளை நடிகைகள் லிசியும், சுகாசினியும் செய்தார்கள். அப்போது முதல் வருடத்திற்கு ஒரு பிரபலம் பொறுப்பெடுத்து கொண்டு ஒவ்வொரு ...

தெலுங்கானா முதல்வர் கேரக்டரில் நடிக்கும் விஜய் ஆண்டனி..?

Posted:

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்து தெலுங்கானா என தனி மாநிலமாக மாறி, தற்போது அதன் முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் இருக்கிறார். தெலுங்கானாவை தனியாக பிரித்து புதிய மாநிலமாக மாற்றுவதற்காக பல போராட்டங்களை நடத்தியதில் இவரின் பங்கு அபரிமிதமானது.. சில மாதங்களுக்கு முன் இயக்குனரும் தயாரிப்பாளருமான மதுரா ஸ்ரீதர் என்பவர் சந்திரசேகர் ...

'மகாபாரதம்' பட இயக்குனரின் அதிரடி அறிவிப்பு..!

Posted:

மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தை தழுவி எழுதிய ரண்டமூழம் நாவல், 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. படத்திற்கு 'மகாபாரதம்' என்றே டைட்டிலும் வைத்துவிட்டார்கள்.. பொதுவாக மகாபாரதத்தின் முன்னணி கேரக்டர்களாக இருக்கும் தருமர், அர்ஜூனர், கர்ணன் இந்த கேரக்டர்களை விட ரண்டமூழம் நாவலில் ...

அனன்யாவுக்கு ரீ என்ட்ரி தருமா 'தியான்'...?

Posted:

துறுதுறு நடிப்புக்கு பெயர்போன 'நாடோடிகள்' அனன்யாவுக்கு திருமணத்திற்கு பின் வாய்ப்புகள் சரிவர அமையவில்லை என்பதே கடந்த மூன்று வருட நிலவரம்.. அதிலும் கடந்த வருடம் தெலுங்கில் மட்டும் அவர் நடித்த ஒரே ஒரு படம் வெளியானது அவ்வளவுதான். இந்தநிலையில் மலையாளத்தில் பிருத்விராஜ் - இந்திரஜித் சகோதரர்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'தியான்' ...

படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு காயம்..!

Posted:

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது கத்ரீனா மேரி ஜான் என்கிற படத்தில் நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்தப்படத்தில் கத்ரீனா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க இருக்கிறார்கள். ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள பிரதான ...

கிளாமரை திணிக்க விரும்பவில்லை: ராகுல் பிரீத் சிங்

Posted:

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பரவலாக நடித்து வருபவர் ராகுல் பிரீத் சிங். தற்போது மகேஷ்பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் ஸ்பைடர் மற்றும் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ராகுல் பிரீத் சிங். இதுதவிர, சிம்லா மிர்சி என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் ...

மகள் ஷிவானியை சினிமாவில் அறிமுகம் செய்கிறார் டாக்டர் ராஜசேகர்!

Posted:

1984ல் புதுமைப்பெண் என்ற படத்தில் அறிமுகமானவர் டாக்டர் ராஜசேகர். அதைத் தொடர்ந்து புதிய தீர்ப்பு, இதுதான்டா போலீஸ், மீசைக்காரன் என பல படங்களில் நடித்தவர், பின்னர் தெலுங்கிற்கு சென்று முன்னணி ஹீரோவானார். அதோடு நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா நட்சத்திர தம்பதிக்கு ஷிவானி, ஷிவத்மிகா என்ற ...

பிரதமரை சந்தித்து கண்டனத்திற்கு ஆளான பிரியங்கா சோப்ரா

Posted:

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை சென்றுவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, தனது ஹாலிவுட் படமான பேவாட்ச் பட புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். இதற்காக ஜெர்மனி சென்றிருக்கிறார் பிரியங்கா.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடியை, நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்தார். இந்த புகைப்படத்தை பிரியங்கா ...

மாட்டிறைச்சி சாப்பிட்டால் நீங்கள் ஹீரோவா...? - கஸ்தூரி

Posted:

நாடுமுழுக்க மாட்டிறைச்சி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் ஹீரோ இல்லை என்று கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி.
இறைச்சிக்காக மாடுகள் விற்பதை தடை செய்யவதாக சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆங்காங்கே போராட்டங்கள் ...

இயக்கம் என்பது மிகவும் பொறுப்பான வேலை - அஜித் பட நாயகி பூஜா பத்ரா

Posted:

தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் நடிகை பூஜா பத்ரா. ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் சரத்குமாரின் ஒருவன், அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (நந்தினி வர்மா கேரக்டர்) படங்களிலும் நடித்திருக்கிறார். திருமணம், அதன்பிறகு விவாகரத்து என கொஞ்ச காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் ...

வேகத்தை கூட்டுகிறார் டைரக்டர் ஹரி

Posted:

சிங்கம்-3 படத்தை தொடர்ந்து டைரக்டர் ஹரி தற்போது விக்ரமை கொண்டு இயக்கும் சாமி-2 படத்திற்கான ப்ரீ புரொடக்சன்ஸ் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது ஸ்கெட்ச் படத்தில் நடித்து வரும் விக்ரம், அதையடுத்து கெளதம்மேனனின் துருவநட்சத்திரம் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் ஹரி இயக்கும் சாமி-2வில் நடிக்கப்போகிறார். மேலும், ...

அர்ஜூனின் 150வது படத்தின் மூன்று மொழிகளின் டைட்டீல் வெளியானது!

Posted:

கன்னட நடிகரான அர்ஜூன் நிபுணன் படத்தோடு 150 படங்களில் நடித்து விட்டார். கன்னட, தெலுங்கு படங்களிலும் நடித்திருந்தபோதும் தமிழில்தான் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார் அர்ஜூன். தற்போது அவர் நடித்துள்ள 150 படமான நிபுணனை அருண் வைத்தியநாதன் இயக்கியிருக்கிறார். இதில், அர்ஜூனுடன் வரலட்சுமி, பிரசன்னா, வைபவ் உள்பட பலர் நடித்துள்ளனர். ...

சுவாதி கொலை வழக்கு படம் : தடை கோருகிறார் சுவாதியின் தந்தை

Posted:

சுவாதி கொலை வழக்கு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை டிஜிபி., அலுவலகத்தில் சுவாதியின் தந்தை புகார் அளித்துள்ளார். தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம் நுங்கம்பாக்கம் சுவாதி கொலை. சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி, கடந்த 2016 ஜூன், 24 காலை, 6:30 மணிக்கு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மர்ம நபரால் கொடூரமாக கொல்லப்பட்டார். ...

ராஜ்குமார் முன்னணி இயக்குநராக வருவார் : ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு

Posted:

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் கெளதம் கார்த்திக், சனா உள்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர், விக்ரம் இருவர் இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் ...

உரு ஹாலிவுட் படத்தின் தழுவலா? இயக்குனர் விளக்கம்

Posted:

கலையரசன், தன்ஷிகா நடித்துள்ள படம் உரு. விரைவில் வெளிவர இருக்கிறது. விக்கி ஆனந்த் இயக்கி உள்ளார். இந்தப் படம் சீக்ரெட் விண்டோ என்ற ஹாலிவுட் திகில் படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் விக்கி ஆனந்த் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
உரு என்றால் உருவம், பயம் என்ற இரண்டு பொருள் உண்டு. ரசிகர்களை ...

வில்லன் ஆன ஹீரோ

Posted:

சமீபத்தில் வெளிவந்த திறப்பு விழா படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஜெய் ஆனந்த். அவர் தற்போது வெளிவர இருக்கும் மரகத நாணயம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் கோமல் சுவாமிநாதனின் நாடக குழுவில் இருந்து சினிமாவுக்கு வந்தவன். எங்கள் குழுவைச் சேர்ந்த கே.ஜி.வீரமணி இயக்கிய திறப்பு விழா படத்தில் என்னை ...

டான்ஸ் கில்லாடிகள் இறுதிச்சுற்று ஜுன் 3ந் தேதி ஒளிபரப்பாகிறது

Posted:

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரமாண்ட ரியாலிட்டி ஷோ டான்ஸ் கில்லாடிகள். பல மாதமாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை, பெரிய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ஆடினார்கள். திரைப்பட பாடல்களுக்கு நிகரான அரங்க அமைப்புடன் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. வழக்கமான நிகழ்ச்சி போன்று இல்லாமல் நீரில் நனைந்தபடி, மிதந்தபடி அந்தரத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™