Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இப்படை வெல்லும் : உதயநிதி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட முருகதாஸ்

Posted:

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். இது சினிமாவுக்கும் பொருந்தும். ஏழாம் அறிவு படத்தின் போது முருகதாஸ் - உதயநிதி இடையே மனகசப்பு ஏற்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின. படம் எதிர்பார்த்த லாபம் தராததால், ஏ.ஆர்.முருகதாஸ் மீது செம கடுப்பில் இருந்தாராம் உதயநிதி. ஆனால், கால ஓட்டத்தில் கோபம் ...

லாரன்ஸ் நடிக்கும் சரித்திர படம் : கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கிறது

Posted:

திரிஷா இல்லனா நயன்தாரா, இமைக்க நொடிகள் போன்ற படங்களை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் நிறுவனம், அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் பிரமாண்ட ஆக்ஷன் படத்தை தயாரிக்க இருக்கிறது. இயக்குனர் ராஜமௌலியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மகாதேவ் இந்த சரித்திர படத்தை இயக்குகிறார். 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டு பிண்ணனியில் உருவாக இருக்கும் இந்த படத்தை ஒரு ...

ரஜினி படத்துக்கு இரண்டு மாதம் கால்ஷீட்

Posted:

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 164 படத்தின் படப்பிடிப்பு வருகிற 28-ஆம் தேதி மும்பையில் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஹிமா குரோஷி கதாநாயகியாக நடிக்கிறார்.
நானா படேகர் உட்பட வேறு சில பாலிவுட் நடிகர்களும் நடிக்கும் இப்படத்தில் முக்கியமான ஒரு ...

மம்முட்டியின் 400வது படத்தில் துல்கர் சல்மான்..!

Posted:

கதாநாயகர்களாக இருக்கும் அப்பாவும் மகனும் சேர்ந்து நடிப்பது ரொம்பவே அபூர்வமான நிகழ்வு.. இந்திய திரையுலகை எடுத்துக்கொண்டால் வெகு சிலருக்கே அந்த பாக்கியம் கிடைத்துள்ளது. தமிழில், சிவாஜி-பிரபு, சத்யராஜ்-சிபிராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மலையாள திரையுலகில் கூட இந்த சாதனை நிறைவேற்றப்படாமலே இருக்கிறது. இப்போது மம்முட்டி-துல்கர் ...

எதற்கெடுத்தாலும் உதாரணம் சொல்லும் மஞ்சு வாரியர்..!

Posted:

துல்கர் சல்மான் நடிப்பில் சூப்பர்ஹிட் படமான 'சார்லி'யை இயக்கியவர் மார்ட்டின் பரக்கத். இவரும், நடிகர் ஜோஜூ ஜார்ஜும் இணைந்துதான் அந்தப்படத்தை தயாரித்திருந்தார்கள். அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அவர்கள் தயாரிக்கும் படம் ஹீரோயினை மையப்படுத்தியதாகும். இதில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பெயர் ...

மற்றுமொரு கெட்டப் சேஞ்சிற்கு தயாராகிறார் திலீப்..!

Posted:

கெட்டப் மாற்றி நடிக்கும் விஷயத்தில் மலையாள சினிமாவின் கமல் என நடிகர் திலீப்பை தாராளமாக குறிப்பிடலாம். என்னதான் காமெடி கதைகளில் ஜனரஞ்சகமாக நடித்து வந்தாலும் கூட, பரிசோதனை முயற்சியாக படம் முழுக்க தோற்றத்தை மாற்றி நடிக்க வேண்டி இருந்தால் அதற்கும் திலீப் தயங்குவது இல்லை. அப்படி அவர் தன்னை நிரூபித்த படங்கள் நிறைய உண்டு. ...

எனது அடுத்த படம் மியூசிக்கல் சப்ஜெக்ட் - அல்போன்ஸ் புத்ரன்..!

Posted:

ஒரு சூப்பர், டூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் அடுத்த படத்திற்கு ஆறு மாதம் காத்திருக்கலாம், ஒரு வருடம் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 'பிர்பிமம்' என்கிற மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், அந்தப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் முடியப்போகும் தருவாயில் தான் தனது அடுத்த படம் குறித்தே வாய் திறந்துள்ளார். அதுகூட தனது ...

'புலி முருகன்' பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'பிருத்விராஜின் 'தியான்'..!

Posted:

மலையாளத்தில் மீண்டும் ஒரு பிரமாண்டமான படமாக உருவாகி இருக்கிறது 'தியான்' என்கிற படம். பிருத்விராஜ், இந்திரஜித் சகோதரர்கள் இருவரும் 12வது முறையாக மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள். நடிகரும், கதாசிரியருமான முரளி கோபி இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இந்தப்படத்தை ஜியென் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்குகிறார். வரலாற்று ...

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை

Posted:

கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில், தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard என்ற பிரபல ப்ரெஞ்ச் நாவலை தழுவி உருவாகி வரும் இப்படத்தில் பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் கதை தற்போது வெளியாகி ...

சஞ்சய் தத்தின் புதிய லுக்

Posted:

சிறைவாசத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கும் சஞ்சய் தத், பூமி படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இதில் திக்மான்சு துலியா இயக்கத்தில் சாகிப் பிவி அவுர் கேங்ஸ்டர் 3 படத்தில் நடிக்க உள்ளார். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இப்படத்தில் சஞ்சய் தத், ஒரு கேங்ஸ்டராகவே நடிக்கிறார். ...

டாக்டர் ராஜசேகர் படத்தில் சன்னிலியோன்

Posted:

பாலிவுட் சினிமாவில் கிளாமர் ஹீரோயினாக வலம்வந்து கொண்டிருப்பவர் சன்னி லியோன். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். ஆனால் அந்த பாடல் எதிர்பார்த்தபடி ரசிகர்களை கவரவில்லை.அதனால் அதையடுத்து சன்னி லியோனுக்கு தமிழில் படங்கள் இல்லை. ஆனால், இந்தியில் நாயகியாக நடித்து வரும் அவருக்கு தெலுங்கு, கன்னட படங்களில் ...

பிரியங்கா சோப்ரா படத்திற்கு ஏ சான்று

Posted:

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, குவான்டிகோ என்ற சீரியல் மூலம் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். அந்த சீரியல் அமெரிக்காவில் பெரிய அளவில் பிரபலமானது. அதையடுத்து தற்போது பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. சேத் கோர்டன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிகினி உடை எல்லாம் அணிந்து ...

ரஜினியை விமர்சிக்கவில்லை, ஆதங்கத்தை தான் சொன்னேன் - கஸ்தூரி

Posted:

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்தபோது அரசியல் குறித்த சில விசயங்களையும் பேசினார். ஆனால் இன்னும் அவர் வருவேனா வர மாட்டேனோ என்பதை தெளிவுபடுத்தவில்லை. ஒருவேளை வந்தால்... என்றுதான் பேசினார். அதற்குள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, நல்ல ...

குழந்தைகளுக்கு பிடித்து விட்டால் அந்த படம் ஹிட்: சூரி

Posted:

புரோட்டா காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. தற்போது புஷ்பா புருசனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதோடு, சந்தானம் ஹீரோவாகி விட்டதால், சிம்பு, ஜீவா, சிவகார்த்திகேயன், உதயநிதி உள்ளிட்ட பல நடிகர்களுடன் படம் முழுக்க வரும் காமெடியனாகி விட்டார். தான் நடிக்கும் காமெடி காட்சிகள் ஹிட்டடிக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவே மெனக்கெடும் சூரி, ...

சர்வதேச ஊடகங்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன்

Posted:

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில், தற்போது சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா சரித்திர படத்தில் லீடு ரோலில் நடிக்கிறார். ஜெயம்ரவி, ஆர்யா நாயகர்களாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பாகுபலி படம் போன்று தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக ...

விரைவில் கதார் ஏக் பிரேம் கதா-2

Posted:

அனில் சர்மா இயக்கத்தில் சன்னி தியோல், அமிஷா பட்டேல் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளிவந்த பிளாக்பஸ்டர் சூப்பர் ஹிட் படம் கதார் ஏக் பிரேம் கதா. 16 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்க எண்ணியுள்ளார் அனில் சர்மா. இதிலும் சன்னி தியோலே முதன்மை ரோலில் நடிக்கிறார், இவருடன் அனில் சர்மாவின் மகன் உத்கர்ஷ் சர்மாவும் நடிக்க ...

அண்ணன் சல்மான் மீது அதிருப்தியில் தம்பி அர்பாஸ்

Posted:

நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர். சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங்-2 படத்தை அர்பாஸ் தான் இயக்கினார். இப்படம் சூப்பர் ஹிட்டாக தபாங்-3 படத்தை உருவாக்க எண்ணினார் அர்பாஸ், இதுதொடர்பாக தன் அண்ணன் சல்மானிடம் பேசி ஓகே., வாங்கிவிட்டார். படம் பற்றிய அறிவிப்பும் எப்போதோ ...

சுதந்திர தினத்தில் ரஜினி புது கட்சி

Posted:

சுதந்திர தினத்தன்று, புது கட்சி அறிவிப்பை வெளியிட, நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளார். கட்சிக் கொடியை, இரு தினங்களுக்கு முன் வடிவமைத்துள்ளார். ரஜினி கட்சியில் சேர, நடிகைகள் மீனா, நமீதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி, சமீபத்தில், தன் ரசிகர் களை சந்தித்தார். ...

விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் நடிக்க தீபிகா ஆர்வம்

Posted:

இசையமைப்பாளராக இருந்து இயக்குநரானவர் விஷால் பரத்வாஜ். ஹைடர், ரங்கூன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர், இப்போது இர்பான்கான் - தீபிகா படுகோனையை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஹனி டிரகன் இயக்குகிறார். இது ஒரு கேங்ஸ்டர் படம். தீபிகா, மாபியா குயின் சப்னா தீதி ரோலிலும், இர்பான் கான், இன்னொரு ...

டியூப்லைட் டிரைலர் நாளை ரிலீஸ்

Posted:

சுல்தான் படத்திற்கு பிறகு சல்மான் கான் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் டியூப்லைட். கபீர்கான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சல்மான் உடன் ஓம் புரி, சோகைல் கான் உள்ளிட்ட பலர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். கூடவே இன்னொரு முக்கியமான வேடத்தில் சீன நடிகை சூஜூ நடித்துள்ளார். படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™