Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ராஜமௌலிக்கு கடும் நெருக்கடி !?

Posted:

ஒரு இயக்குனர் மிகப் பெரும் பெற்றியைக் கொடுத்தாலே நமது ஹீரோக்கள் விட மாட்டார்கள். அவர், உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு உலக மகா வெற்றியைக் கொடுத்தால் என்ன ஆகும். அப்படி ஒரு மகா மகா வெற்றியைக் கொடுத்த ராஜமௌலிக்கு தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நெருக்கடியைக் கொடுப்பதே தெலுங்கு ஹீரோக்கள்தான் என்கிறது டோலிவுட் ...

பாக்ஸ் ஆபிசில் தோல்வியடைந்த சர்கார்-3, மேரி பியாரி பிந்து

Posted:

மூன்று வாரங்களை கடந்தும் கூட நாடு முழுக்க பாகுபலி பீவர் இன்னும் குறையவில்லை என்று தான் எண்ண தோன்றுகிறது. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தியிலும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது பாகுபலி-2 படம். பாகுபலி-2வால் பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ள நிலையில் கடந்த வெள்ளியன்று பாலிவுட்டில், சர்கார்-3 மற்றும் மேரி பியாரி பிந்து ...

கதாநாயகன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தனுஷ்

Posted:

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வெற்றியை ருசித்த விஷ்ணு விஷால் அடுத்த நடித்த மாவீரன் கிட்டு படத்தில் தோல்வியை சந்தித்தார். தற்போது காமெடி நடிகரும், புதுமுக இயக்குநருமான முருகானந்தம் என்பவரது இயக்கத்தில் கதாநாயகன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
விஷ்ணு விஷால் ஜோடியாக கேத்தரீன் தெரசா நடிக்கிறார். ...

அரசியல் பிரவேசம் பற்றி பொடி வைத்து பேசிய ரஜினி

Posted:

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற விவாதம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு காரணம்... வேறு யாரோ அல்ல, ரஜினியே தான். இன்று தன்னுடைய ரசிகர்களை சந்தித்த ரஜினி அப்போது நீண்ட உரையாற்றினார். அவரது பேச்சில், விரைவில் அவர் அரசியலுக்கு வருவதாற்கான வாய்ப்பு இருப்பதாக எண்ண வைக்கும் பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. தன்னுடைய ...

சண்டக்கோழி- 2 ட்ராப் இல்லை: ஒளிப்பதிவாளர் தகவல்

Posted:

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக சொல்லப்பட்ட 'சண்டக்கோழி-2' படம் பற்றி திரையுலகத்தினர் மத்தியில் பல்வேறு விதமான தகவல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் சாரம்சம் ஒன்றே ஒன்று தான். அதாவது, சண்டக்கோழி-2 படம் ட்ராப்பாகிவிட்டது. இனி அந்தப் படத்தை எடுக்க வாய்ப்பே இல்லை என்பது தான். இதற்கு காரணமாக பலப்பல காரணங்கள் ...

உண்மை சம்பவத்தை படமாக்கும் சீனுராமசாமி

Posted:

சீனுராமசாமி ஒவ்வொரு படத்தை இயக்கும்போதும் அடுத்தப் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி இல்லை, வேறு ஹீரோதான் என்று சொல்வார். ஆனால் சூழ்நிலை மீண்டும் அவரை விஜய் சேதுபதியிடம் கொண்டுபோய் நிறுத்திவிடும்.
தென்மேற்கு பருவாக்காற்று படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷாலை வைத்து நீர்ப்பறவை படத்தை இயக்கினார். அந்தப் படம் பேசப்பட்ட அளவுக்கு ...

பிரபாஸ் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராணா..!

Posted:

'பாகுபலி-2' படம் இவ்வளவு பெரிய வெற்றிகளை பெற்றது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்தப்படம் குறித்த புதுப்புது தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன. அவற்றில் முக்கியமானவை இந்தப்படத்தில் சிவகாமி கேரக்டரில் நடிக்க ரம்யா கிருஷ்ணனுக்கு முன் ஸ்ரீதேவிக்கு தான் அழைப்பு விடுத்தார்கள் என்றும் தேவசேனா கேரக்டரில் அனுஷ்காவிற்கு ...

நாயக், ரவுடி ரத்தோர்-2-க்கு கதை எழுதும் ராஜமெளலியின் தந்தை

Posted:

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனீஷா கொய்ராலா, ரகுவரன் நடிப்பில் வெளியான படம் முதல்வன். அரசியல் பேசிய இப்படம் வெற்றி பெற்றது. இதையே ஹிந்தியில் நாயக் என்ற பெயரில் ரீ-மேக் செய்தார் ஷங்கர். அனில் கபூர், ராணி முகர்ஜி, அம்ரிஷ் பூரி முக்கிய ரோலில் நடித்திருந்தனர். தமிழ் அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும், அனைவராலும் இப்படம் பாராட்டப்பட்டது. ...

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மிதுன்

Posted:

பாலிவுட்டின் பிரபலமான நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. முன்பு போன்று சினிமாவில் நிறைய படங்களில் நடிப்பது கிடையாது. தேர்ந்தெடுத்து சில படங்களை மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார். இந்நிலையில் அடுத்தப்படியாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அனில் சர்மா இயக்க உள்ள இப்படத்திற்கு ஜீனியஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ...

ஹிருத்திக் ரோஷன் இல்லை, சல்மான் தான் : போனி கபூர்

Posted:

ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதன் இரண்டாம் பாகம் உருவாவது சகஜமாகிவிட்டது. அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நோ என்ட்ரி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து உருவாக இருக்கிறது. போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானே நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது ...

அரசியல் பற்றி ரஜினிகாந்தின் பரபரப்பு பேச்சு - முழு விவரம்

Posted:

நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன் ரசிகர்களுடன் ரஜினிகாந்த் இன்று புகைப்படம் எடுக்கும் நிகழ்வையும், அவர்களைச் சந்திப்பதையும் இன்று காலை சென்னையில் அவருக்குச் சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ஆரம்பித்து வைத்தார். அப்போது ரஜினிகாந்தை வைத்து பல படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் உடனிருந்தார். மண்டபத்தில் ...

வரலட்சுமியை புகழும் மலையாள நடிகர்..!

Posted:

ஏதேது.. விட்டால் மலையாள சினிமா, வரலட்சுமி சரத்குமாரை தங்களது இண்டஸ்ட்ரியிலேயே பிடித்து உட்கார வைத்துக்கொள்ளும்போல தெரிகிறது. அந்த அளவுக்கு அடுத்தடுத்த மலையாளப்படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி.. சரத்குமார் மகள் என்பதாலும், அறிமுகமே மம்முட்டியின் படத்தில் என்பதாலும் மலையாளத்தில் போல்டான கேரக்டர்கள் என்றால் வரலட்சுமியை ...

மெட்ரோ ரயில் பணியில் திருநங்கைகள்: மோகன்லால்-மஞ்சு வாரியார் வரவேற்பு..!

Posted:

இதற்கு முன்புவரை இருந்து வந்த திருநங்கைகள் குறித்த பார்வை மாறி சமீபகாலமாக சினிமாவிலும் பொதுவெளியிலும் ஓரளவுக்கு அவர்களை மரியாதையாக பார்க்கும் எண்ணம் மேலோங்கி உள்ளது. தர்மதுரை படத்தில் ஒரு திருநங்கை கதாபாத்திரம் மூலம் அதை நமக்கு உணர்த்தியிருந்தார் இயக்குனர் சீனு ராமசாமி.. ராம் இயக்கியுள்ள 'பேரன்பு' படத்தில் அஞ்சலி அமீர் ...

தங்கல் படமும் 1000 கோடி வசூல்?

Posted:

பாகுபலி 2 படம் நான்கு மொழிகளில் வெளியாகி 10 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்தது. ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு மட்டும் 450 கோடி ரூபாயை வசூல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான்கு மொழிகளிலும் சேர்த்து 1300 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகச் சொல்கிறார்கள். எப்படியும் வசூல் 1500 கோடியைக் கடக்கும் என்பதுதான் திரையுலக வட்டாரங்களின் தகவலாக ...

ரஜினிகாந்த் பேச்சு, பறக்கும் 'மீம்ஸ்கள்'

Posted:

சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களுக்கு 'அலசி ஆராய்வதற்கு' ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு 'டாபிக்' எப்படியாவது கிடைத்துவிடுகிறது. இன்று அவர்களுக்குக் கிடைத்திருக்கும் 'டாபிக்' அடுத்த சில நாட்களுக்கான 'ஆராய்ச்சி'யில் எந்த குறையையும் வைக்காது.

ரஜினிகாந்த் ரசிகர்களை பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்து, மொத்தமாக ...

ஹிந்தியில் 500 கோடியைத் தாண்டுமா 'பாகுபலி 2' ?

Posted:

'பாகுபலி 2' என்ற ஹிந்தி டப்பிங் படத்திற்கு இப்படி ஒரு வசூல் மழை பெய்து கொண்டிருக்கிறதே என அடுத்த மாதம் வரப்போகும் வழக்கமான மழையை விட இந்த வசூல் மழையை பாலிவுட் திரையிலகத்தினர் ஆச்சரியப்பட்டுப் போயுள்ளனர். 15 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி தற்போது 450 கோடியை இப்படத்தின் ஹிந்தி டப்பிங் வசூல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ...

இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு: இளையராஜா வீடு முற்றுகை

Posted:

இசை அமைப்பாளர் இளையராஜா, இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திராவிட கழகத்தினர் தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
அந்த அமைப்பின் வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை தலைமையில் ஏராளமானவர்கள் இளையராஜா வீட்டு முன் கோஷங்களை ...

தமிழில் வெளிவருகிறது பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் படம்

Posted:

தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா, தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டு பாலிவுட் நடிகை ஆனார். தற்போது ஹாலிவுட் நடிகையாக வளர்ந்திருக்கிறார்.
அவர் தற்போது நடித்திருக்கும் ஹாலிவுட் படம் பேவாட்ச். இதில் அவர் டுவைன் ஜான்சன் ஜோடியாக நடிக்கிறார். ஹெர்குலஸ், பாஸ்டர், பாஸ்ட் அண்ட் பியூரியஸ், ஜி.ஐ.ஜோ உள்ளிட்ட பிரபலமான ஹாலிவுட் ...

100 எபிசோட்களை நிறைவு செய்த நீலி

Posted:

திரைப்படங்கள் 100 நாட்கள் ஓடினால் அதனை கொண்டாடுவதைப்போல இப்போது ஒரு தொலைக்காட்சி தொடரும் 100 எபிசோடை தாண்டினால் பெரிய சாதனையாக கொண்டாடப்படுகிறது. காரணம் இந்த 100 எபிசோட்கள்தான் சீரியலின் பரிசோதனைக் காலம். முதல் 100 எபிசோட்களை தக்க வைத்து விட்டால் அதாவது டி.ஆர்.பி இறங்காமல் பார்த்துக் கொண்டால் அது சீரியலின் வெற்றியாக கருதப்படுகிறது. ...

பிளாஷ்பேக்: மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த முதல் ஹீரோ

Posted:

சமாளிக்க முடியாத அளவிற்கு கடன் தொல்லை நெருக்கும்போது மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பது (திவால் நோட்டீஸ்) கொடுப்பது வழக்கம். அதாவது என்னால் உங்கள் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை என் சொத்துக்களை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று இதன் பொருள். அப்படி ஒரு நோட்டீசை கொடுத்த முதல் ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம்.
மதுரை மாவட்டம் சோழவந்தானைச் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™