Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மிசிசாகா, மில்ரன் இடையேயான நெடுஞ்சாலை 401 விரிவாக்கம்

Posted: 11 Apr 2017 07:25 AM PDT

ஒன்ராறியோ மாநில அரசாங்கம் நெடுஞ்சாலை 401இன் 18 கிலோமீட்டர் தூரமான வீதிப் பகுதியை அகலப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக மிசிசாகாவின் Credit Riverஇல் இருந்து மில்ரனில் உள்ள Regional Road 25 வரையான பகுதிகளை அகலப்படுத்தவுள்ளது. வாகன நெரிசல் மிக்க வேளைகளில் பயன்படுத்துவதற்கான வழித்தடங்கள் இரண்டு பக்கங்களிலும் புதிதாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், ஏற்கனவே உள்ள ஆறு வழித்தட பாதைகள் மேலும் விரிவாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வெளியிடப்பட்டுள்ள அந்த தகவலி்ல் நிர்மானிப்பு பணிகள் எப்போது […]

The post மிசிசாகா, மில்ரன் இடையேயான நெடுஞ்சாலை 401 விரிவாக்கம் appeared first on TamilStar.com.

இரணைமடு நீர் யாழ்ப்பாணத்துக்கு இல்லை! – முதலமைச்சர் திட்டவட்டம்

Posted: 11 Apr 2017 07:22 AM PDT

மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ்.மாவட்டத்துக்கான குடிநீர் தேவை நிவர்த்தி செய்யப்படும் என்றும், இரணைமடு நீர் யாழ்.மாவட்டத்திற்கு வராது. அது கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும் எனவும் வடமாகாண முதலமைச்சர்சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘யாழ்ப்பாணம்- இரணைமடு குடிநீர் திட்டம் வட மாகாணசபை அமைவதற்கு முன்பதாகவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். வடமாகாணசபை அமைந்த பின்னர் இரணைமடு குளத்தை நம்பியிருக்கும் விவசாயிகளுடன் பேசப்பட்டது. மேலும் நிபுணர் குழு ஒன்றை அமைத்து அறிக்கையும் பெறப்பட்டிருந்தது. இவற்றினடிப்படையில் கொழும்பு சென்று ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் […]

The post இரணைமடு நீர் யாழ்ப்பாணத்துக்கு இல்லை! – முதலமைச்சர் திட்டவட்டம் appeared first on TamilStar.com.

இறுதிப் போர் மரணங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்! – பிரித்தானிய எம்.பி

Posted: 11 Apr 2017 07:17 AM PDT

இலங்கையில் நடந்த போரில் இறந்தவர்கள் குறித்து இந்த அரசாங்கம் பொறுப்புக் கூறல் அடிப்படையில் நீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவருமான ஜேம்ஸ் பெரி தெரிவித்துள்ளார். வவுனியா, நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் இராசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் […]

The post இறுதிப் போர் மரணங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்! – பிரித்தானிய எம்.பி appeared first on TamilStar.com.

மகளை பலிகொடுத்து எந்தவொரு தந்தையும் செய்யாத செயலை செய்த விமல்

Posted: 11 Apr 2017 07:13 AM PDT

வாகன முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்டு 87 நாட்களின் பின்னர் பிணை கிடைக்கப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தொடர்பில் பலவகையான விமர்சனங்கள் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போதைய நிலையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக அதிகமாக விமர்சிக்கப்படும் ஓர் அரசியல்வாதியாக விமல் மாறிவிட்டார். இவருடைய கைது, பிணை போன்றன அரசியல் உள்நோக்கங்களுக்காக இடம்பெற்றதாக கூறி சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. விமல் வீரவங்ச 5 முறைகள் பிணை விண்ணப்பித்திருந்தார். அதில் நான்கு முறைகள் அவருடைய […]

The post மகளை பலிகொடுத்து எந்தவொரு தந்தையும் செய்யாத செயலை செய்த விமல் appeared first on TamilStar.com.

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் அதிகாரபூர்வ பணிகளை ஆரம்பித்தார்

Posted: 11 Apr 2017 07:10 AM PDT

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தமது அதிகாரபூர்வ பணிகளை ஆரம்பித்துள்ளார். பிரதமர் உட்பட இலங்கையின் தூதுக்குழுவினர் நேற்று டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்தை சென்றடைந்தனர். ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் ஜப்பான் சென்றுள்ளனர். ஜப்பானின் கியோதோவில் நடைபெறும் ஜப்பானிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் வருடாந்த கூட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார். இதனையடுத்து இரண்டு நாடுகளின் பிரதமர்களுக்கு இடையில், பொருளாதாரம், வர்த்தகம், […]

The post ஜப்பான் சென்றுள்ள பிரதமர் அதிகாரபூர்வ பணிகளை ஆரம்பித்தார் appeared first on TamilStar.com.

இரண்டு வருடங்களில் போர்க்குற்ற விசாரணை நடத்துவதாக வாக்குறுதி கொடுக்கவில்லை! – ஹர்ஷ டி சில்வா

Posted: 11 Apr 2017 07:08 AM PDT

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவை இலங்கைக்கு இரண்டு வருட காலஅவகாசம் வழங்கியுள்ள போதிலும், அந்த இரண்டு வருடங்களுக்குள் போர்க்குற்ற விசாரணையை முடிப்பதாக இலங்கை அரசு வாக்குறுதி வழங்கவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். “ஆட்சி மாற்றத்தின் பின் இலங்கையின் கட்டமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப இன்று ஜனநாயகம் அமைந்துள்ளது. இன, மத பேதங்களுக்கு அப்பால் இலங்கையர் என்ற அடிப்படையிலேயே இன்று இலங்கைக் குடிமக்கள் நடத்தப்படுகின்றனர். இந்த மாற்றத்தை […]

The post இரண்டு வருடங்களில் போர்க்குற்ற விசாரணை நடத்துவதாக வாக்குறுதி கொடுக்கவில்லை! – ஹர்ஷ டி சில்வா appeared first on TamilStar.com.

கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கமும் திரைக்கு பின்னால் செயற்படுகின்றது

Posted: 11 Apr 2017 07:04 AM PDT

நல்லாட்சி அரசாங்கமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து திரைக்கு பின் இருந்து பல்வேறு விடயங்களை செய்வதற்கு திட்டம் தீட்டி வருவதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு தொடர்பில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவ்வாறு எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை […]

The post கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கமும் திரைக்கு பின்னால் செயற்படுகின்றது appeared first on TamilStar.com.

வட,கிழக்கு தமிழ் மக்கள், மஹிந்தவின் நம்பிக்கையை காப்பாற்றுவார்களா?

Posted: 11 Apr 2017 07:01 AM PDT

எதிர்வரும் மேதினத்தை இலக்கு வைத்து பல்வேறு அரசியல் கட்சிகள் தமது செயற்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளன. தமக்கான மக்கள் செல்வாக்கை வெளிக்காட்டும் வகையில் மேதின கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறன. நாட்டின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மேதின பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதில் குறிப்பாக கொழும்பு தேர்தல் தொகுதியில் அதிகளவான உறுப்பினர்களை தமது மேதின கூட்டத்தில் கலந்து கொள்ள செய்வதில் ஐக்கிய தேசிய கட்சி தீவிரமாக செயற்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

The post வட,கிழக்கு தமிழ் மக்கள், மஹிந்தவின் நம்பிக்கையை காப்பாற்றுவார்களா? appeared first on TamilStar.com.

தமிழர்கள் மீளமுடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கும்!

Posted: 11 Apr 2017 06:58 AM PDT

இராஜதந்திரம் என்பது தனித்து குறுகிய வெற்றிகளையும் குறுங்கால நலன்களையும் கொண்டதாக இரு ந்தால் அதனால் எந்தப் பிரயோசனமும் ஏற்படமாட்டாது. அரசியல் இராஜதந்திரம் என்பது எப்போதும் முழுமையான – நிரந்தரமான வெற்றிக்கு வித்திட வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலை என்பது தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டதென்றும், தமிழர்களின் தவறான முடிவு இலங்கை ஆட்சியாளர்களுக்கு சர்வதேச ஆதரவுக்கு வழிவகுத்தது என்றும் விமர்சிப்பவர்கள் உளர். அதாவது மகிந்த ராஜபக்ச­ தரப்பு மீண்டும் ஆட்சி அமைத்திருக்குமாயின் சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பது நூறு வீதம் சாத்தியமாக […]

The post தமிழர்கள் மீளமுடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கும்! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™