Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரொரன்ரோவில் வீடு வாங்கும் வெளிநாட்டவர்களுக்கு 15சதவீத வரி

Posted: 20 Apr 2017 07:49 AM PDT

ரொரன்ரோ பெரும்பாகத்தில் வீட்டு விலைகள் அதிரிப்பதை தணிக்கும் வகையிலான ஒன்ராறியோ அரசாங்கத்தின் செயற்திட்டம் இன்று வெளியிடப்படவுள்ள நிலையில், அந்த செயற்திட்டத்தில் ரொரன்ரோவில் வீடு வாங்கும் நிரந்தரக் குடியுரிமை அல்லாத வெளிநாட்டவர்களுக்கு 15சதவீத வரி விதிக்கும் திட்டமும் உள்ளடக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக முதல்வர் கத்தலின் வின்னும், மாநில நிதி அமைச்சர் சார்ளஸ் சூசாவும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போது, இந்த செயற்திட்டத்தில் சந்தை நிலவர எதிர்வுகூறுநர்கள் விவகாரம், வீடுகளின் நிரம்பலை துரிதப்படுத்தல், கட்டுப்படியான வாடகை […]

The post ரொரன்ரோவில் வீடு வாங்கும் வெளிநாட்டவர்களுக்கு 15சதவீத வரி appeared first on TamilStar.com.

டொன் வெலி பார்க்வேயில் விபத்து- ஐவர் காயம், ஒருவர் கைது

Posted: 20 Apr 2017 07:47 AM PDT

டொன் வெலி பார்க்வேயில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இந்த விபத்தின்போது ஒருவர் வாகனத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், வாகனத்தை வெட்டி அவரை வெளியில் கொண்டு வந்ததாக அவசர மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். டொன் வெலி பார்க்வேயின் தெற்கு நோக்கிய வழித்தடத்தில், பே வியூ மற்றும் பூலர் வீதித் தொடுப்பு பகுதியில் இன்று அதிகாலை 5.45 அளவில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது. இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், […]

The post டொன் வெலி பார்க்வேயில் விபத்து- ஐவர் காயம், ஒருவர் கைது appeared first on TamilStar.com.

கேப்பாப்புலவு போராட்டத்தை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது – கஜேந்திரகுமார்

Posted: 20 Apr 2017 07:44 AM PDT

காணிகளை விடுவிப்போம் என கூறும் இராணுவத்தினர் நம்பிக்கையூட்டும் வகையிலான செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளனர். ஆனால் காணிகளை கையளிக்கும் காலத்தை மாத்திரம் இதுவரையில் அறிவிக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவு போராட்ட இடத்திற்கு சென்ற அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில், கேப்பாப்புலவு மக்களின் ஒன்றுமையான போராட்டத்தினை பிரிக்கும் நோக்கில் சில சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் இராணுவத்தரப்பினர் ஒருபகுதி காணிகள் […]

The post கேப்பாப்புலவு போராட்டத்தை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது – கஜேந்திரகுமார் appeared first on TamilStar.com.

காக்கைவன்னியன் போன்று சதிசெய்வோரால் தமிழர் சமுதாயம் அழிந்து விடும்! – விக்னேஸ்வரன்

Posted: 20 Apr 2017 07:30 AM PDT

காக்கை வன்னியன் போல் சுயநல சிந்தனையுடன் சதி வேலைகளில் எம்முட் சிலர் ஈடுபடுவது முழுத் தமிழர் சமுதாயத்தையும் அழித்து விடும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் அமைக்கப் பெற்ற மாவீரன் குலசேகரம் வயிரமுத்து பண்டாரவன்னியனின் உருவச்சிலை திறப்பு விழா இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். வன்னி இராச்சியத்தின் மாவீரனாக விளங்கிய பண்டாரவன்னியன் அவர்களின் […]

The post காக்கைவன்னியன் போன்று சதிசெய்வோரால் தமிழர் சமுதாயம் அழிந்து விடும்! – விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com.

கிளிநொச்சி காணிகளை விரைவில் விடுவிப்பதாக இராணுவம் உறுதி! – சுமந்திரன்

Posted: 20 Apr 2017 07:26 AM PDT

தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாக, இன்றைய சந்திப்பின் போது தமக்கு தெரிவிக்கப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பிரகாரம் படிபடியேனும் காணிகள் விடுவிக்கப்படும். தனியார் காணிகளை விடுவிப்பதே தமது முதலாவது நோக்கம் என இராணுவம் தெரிவித்துள்ளது. […]

The post கிளிநொச்சி காணிகளை விரைவில் விடுவிப்பதாக இராணுவம் உறுதி! – சுமந்திரன் appeared first on TamilStar.com.

புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் மனைவிமார் மனித உரிமை ஆணைக்குழுவில்

Posted: 20 Apr 2017 07:24 AM PDT

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் மனைவிமார் மற்றும் பெற்றோர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர். சாட்சியங்கள் இன்றி தமது கணவன்மாரும், பிள்ளைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் தாய் நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்னவும் கலந்து கொண்டார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம், மாணவர்கள் கடத்திச் கொலை செய்யப்பட்ட […]

The post புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் மனைவிமார் மனித உரிமை ஆணைக்குழுவில் appeared first on TamilStar.com.

கூட்டமைப்பைச் சிதைக்க விரும்பவில்லை! – அனந்தி

Posted: 20 Apr 2017 07:09 AM PDT

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் எண்ணம் எனக்கில்லை, எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும் அதனை கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே சமாளிக்க தயார் என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகளினால் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்காது, தமிழரசு கட்சியில் இருந்தவாறே மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை […]

The post கூட்டமைப்பைச் சிதைக்க விரும்பவில்லை! – அனந்தி appeared first on TamilStar.com.

மகிந்தவின் பாவமே காரணம் : ஜனாதிபதி சொன்னால் பதவி விலக தயாராக உள்ள அமைச்சர்

Posted: 20 Apr 2017 07:06 AM PDT

மகிந்த ராஜபக்ச செய்த பாவத்தின் பலனையே இப்போது அனுபவித்து கொண்டு வருகின்றோம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், நாடு இப்போது இருக்கும் நிலைக்கு காரணம் மகிந்த ராஜபக்சவே. அவர் அப்போது செய்த பாவமே இப்போது தொடர்ந்து வருகின்றது. அவருடைய ஆட்சியில் 10 வருடங்களுக்கும் மேலாக இந்தக் குப்பை பிரச்சினை தொடர்ந்தது. ஆனால் இது தொடர்பிலான திட்டங்கள் ஆலோசனையில் […]

The post மகிந்தவின் பாவமே காரணம் : ஜனாதிபதி சொன்னால் பதவி விலக தயாராக உள்ள அமைச்சர் appeared first on TamilStar.com.

அரச நிறுவனங்களில் விரைவில் மாற்றம் : ஜனாதிபதி

Posted: 20 Apr 2017 06:52 AM PDT

மாதம்பிட்டி குப்பை மேட்டை அரசுடமையாக்கி, அதனை பலாத்காரமாக கோத்தபாய ராஜபக்ஷவே மீதொட்டமுல்லைக்கு கொண்டு சென்றார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் கோத்தபாயவுக்கு தேவையான முறையில், பிரதம நீதியரசராக இருந்த சரத் என்ற சில்வா இரண்டு ஏக்கர் பகுதியில் குப்பைகளை கொட்டுமாறு உத்தரவிட்டதுடன் எதிர்ப்பவர்களை கைது செய்யுமாறும் தெரிவித்தார் என்றும் […]

The post அரச நிறுவனங்களில் விரைவில் மாற்றம் : ஜனாதிபதி appeared first on TamilStar.com.

அரச நிறுவனங்களில் விரைவில் மாற்றம் : ஜனாதிபதி

Posted: 20 Apr 2017 06:47 AM PDT

எதிர்வரும் இருவாரங்களுக்குள் அரச நிறுவனங்களில் பல மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்க நிறுவனங்கள் மேலும் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்காகவே இவ்வாறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

The post அரச நிறுவனங்களில் விரைவில் மாற்றம் : ஜனாதிபதி appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™