Tamil Star |
- கனடாவில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
- ஹமில்ட்டனில் கடும் மழை – வீதிகள் வெள்ளத்தில்
- மூன்று மாதத்துக்குள் மீள்குடியேற்றம்! – ஜனாதிபதி உறுதி
- நானே கூட்டு எதிர்க்கட்சியினருக்கு காலி முகத்திடலை வழங்கினேன் – ஜனாதிபதி
- மே தினத்தில் பலத்தை நிரூபிப்பாராம் மஹிந்த!
- கொழும்பு துறைமுகத்திற்கு மேலாக பறக்க முடியாத நிலையில் ஜனாதிபதி மைத்திரி!
- இப்படியே போனால் இராணுவப் புரட்சி தான் ஏற்படும்! – எச்சரிக்கிறார் டியூ குணசேகர
- மங்களவுக்கு வாழ்த்து கூறிய இலங்கை அரசியலின் முக்கிய புள்ளி
- குப்பைகளை அகற்ற முடியாமல் போனதற்கு யுத்தம் காரணமா? மஹிந்தவின் புதிய கருத்து
- திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அமைச்சர் சுசில் எதிர்ப்பு!
| கனடாவில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு Posted: 21 Apr 2017 07:42 AM PDT அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக எல்லைகடந்து கனடாவினுள் நுளைந்த நிலையில் கனேடிய மத்திய காவல்த்துறையினரின் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் 658 பேர் இவ்வாறு கனேடிய மத்திய காவல்த்துறையினரால் எதிர்கொள்ளப்பட்ட நிலையில், மார்ச் மாத்தில் இந்த எண்ணிக்கை 887ஆக அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கியூபெக்கில 664பேரும், மனிட்டோபாவில் 170பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 71 பேரும் மார்ச் மாதத்தில் சட்டவிரோதமாக எல்லைகடந்து கனடாவினுள் நுளைந்து காவல்த்துறையினரை எதிர்கொண்டுள்ளனர் என்று பதிவுகள் காட்டுகின்றன. இதேவேளை […] The post கனடாவில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு appeared first on TamilStar.com. |
| ஹமில்ட்டனில் கடும் மழை – வீதிகள் வெள்ளத்தில் Posted: 21 Apr 2017 07:40 AM PDT ஹமில்ட்டன் பகுதியில் கொட்டித் தீர்த்த கடும் மழை காரணமாக, பிராந்தியத்தின் பல பாகங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், வீதிகள் பலவும் மூடப்படும் நிர்ப்பந்தம் தோன்றியுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கு நிலைமையினை அடுத்து, ஹமில்ட்டன் பாதுகாப்பு அதிகாரசபை வெள்ள அனர்த்த அவதானிப்பு நிலையினை பிறப்பித்துள்ளது. அணைக் கட்டுகள், ஆற்றுப் படுகைகள், நீரோட்டங்கள், பாலங்கள், மதகுகள், கல்வெட்டுகள் போற்வற்றுக்கு அருகில் வசிக்கும் மக்கள், தொடர்ச்சியாக அங்கு ஏற்படும் நிலைமையினை கண்காணித்து, அவதானத்துடன் இருக்குமாறும், நீர் வரத்து மற்றும் நீரோட்டத்தின் வேகம் […] The post ஹமில்ட்டனில் கடும் மழை – வீதிகள் வெள்ளத்தில் appeared first on TamilStar.com. |
| மூன்று மாதத்துக்குள் மீள்குடியேற்றம்! – ஜனாதிபதி உறுதி Posted: 21 Apr 2017 07:38 AM PDT வடக்கில் எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் எஞ்சியுள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடகப் பிரதானிகள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுவரையான காலப்பகுதிக்குள் 60 வீதமான இடம்பெயர்ந்த மக்கள், தமது சொந்தக் காணிகளில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் காணாமல் போனோர் மற்றும் நிலமீட்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் போனோர் தொடர்பில் […] The post மூன்று மாதத்துக்குள் மீள்குடியேற்றம்! – ஜனாதிபதி உறுதி appeared first on TamilStar.com. |
| நானே கூட்டு எதிர்க்கட்சியினருக்கு காலி முகத்திடலை வழங்கினேன் – ஜனாதிபதி Posted: 21 Apr 2017 07:35 AM PDT தான் தலையிட்டே கூட்டு எதிர்க்கட்சியினர் மே தினக் கூட்டத்தை நடத்த காலிமுகத்திடல் மைதானத்தை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்ட ஏற்பாட்டு குழுவினரிடம் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். காலி முகத்திடலை கூட்டு எதிர்க்கட்சியினருக்கு வழங்கியதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த தொடர்புமில்லை எனவும், பிரதமருக்கு எதுவும் தெரியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். பிரதமரின் தலையீடு காரணமாக காலி முகத்திடல் வழங்கப்பட்டதாக பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை எனவும் […] The post நானே கூட்டு எதிர்க்கட்சியினருக்கு காலி முகத்திடலை வழங்கினேன் – ஜனாதிபதி appeared first on TamilStar.com. |
| மே தினத்தில் பலத்தை நிரூபிப்பாராம் மஹிந்த! Posted: 21 Apr 2017 07:33 AM PDT கூட்டு எதிர்க்கட்சியின் பலத்தை மே தினக் கூட்டத்தில் நிரூபிக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். " கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு காலி முகத்திடல் மைதானத்தை வழங்கியமை மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த மைதானத்திற்கு அதிகளவான மக்களை அழைத்து எமது பலத்தை நிரூபிப்போம். காலி முகத்திடலில் நடைபெறும் கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்க ஓர் மே தினக் கூட்டமாகும். இந்த அரசாங்கம் குறித்து நாட்டு மக்களுக்கு இருந்த அனைத்து எதிர்பார்ப்புக்களும் கரைந்து போயுள்ளன. இம்முறை […] The post மே தினத்தில் பலத்தை நிரூபிப்பாராம் மஹிந்த! appeared first on TamilStar.com. |
| கொழும்பு துறைமுகத்திற்கு மேலாக பறக்க முடியாத நிலையில் ஜனாதிபதி மைத்திரி! Posted: 21 Apr 2017 07:32 AM PDT கொழும்பு துறைமுக நகரத்துக்கு மேலாக ஜனாதிபதி கூட உலங்கு வானூர்தியில் பறக்க முடியாத சூழ்நிலை தற்போது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால், பாதகமான முறையில் கொழும்பு துறைமுக நகர உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இருப்பினும், இவ்வாறு எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டுக்கு எதிரான உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். […] The post கொழும்பு துறைமுகத்திற்கு மேலாக பறக்க முடியாத நிலையில் ஜனாதிபதி மைத்திரி! appeared first on TamilStar.com. |
| இப்படியே போனால் இராணுவப் புரட்சி தான் ஏற்படும்! – எச்சரிக்கிறார் டியூ குணசேகர Posted: 21 Apr 2017 07:29 AM PDT இந்த அரசாங்கம் இப்படியே பயணித்துக்கொண்டிருந்தால் இந்த நாட்டில் இளைஞர்களின் புரட்சி அல்லது இராணுவப் புரட்சிதான் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர எச்சரித்துள்ளார். "மஹிந்த ஆட்சியைக் கவிழ்த்து நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த ஆட்சி உருவானது. மஹிந்தவின் ஆட்சியில் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு இந்த அரசு தீர்வாக இருக்கும் என்று இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆட்சிப்பீடமேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. எதுவும் நடக்கவில்லை. இருக்கின்ற நிலைமை மேலும் மோசமாகின்றதே தவிர நல்ல விடயங்கள் எதுவும் […] The post இப்படியே போனால் இராணுவப் புரட்சி தான் ஏற்படும்! – எச்சரிக்கிறார் டியூ குணசேகர appeared first on TamilStar.com. |
| மங்களவுக்கு வாழ்த்து கூறிய இலங்கை அரசியலின் முக்கிய புள்ளி Posted: 21 Apr 2017 07:27 AM PDT இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்றைய தினம் தனது 61ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். தற்போது ரோமில் உள்ள வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை அரசியலின் முக்கிய புள்ளி ஒருவர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சருக்கு இன்று காலை அழைப்பினை மேற்கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. தன்னால் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களில் அதிக பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என […] The post மங்களவுக்கு வாழ்த்து கூறிய இலங்கை அரசியலின் முக்கிய புள்ளி appeared first on TamilStar.com. |
| குப்பைகளை அகற்ற முடியாமல் போனதற்கு யுத்தம் காரணமா? மஹிந்தவின் புதிய கருத்து Posted: 21 Apr 2017 07:25 AM PDT நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எமது ஆட்சிக்காலத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதன் காரணமாகவே மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பிலும், குப்பைகளை அகற்றுவதற்கும் எம்மால் முடியாது போனதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அநுராதபுரம், மகா விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை தெரிவித்தார். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போதிலும் குப்பை மேட்டுக்கு முடிவு எடுக்க முடியாமல் போய் விட்டது. […] The post குப்பைகளை அகற்ற முடியாமல் போனதற்கு யுத்தம் காரணமா? மஹிந்தவின் புதிய கருத்து appeared first on TamilStar.com. |
| திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அமைச்சர் சுசில் எதிர்ப்பு! Posted: 21 Apr 2017 07:21 AM PDT திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு தான் எதிர்ப்பை வெளியிடுவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். The post திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அமைச்சர் சுசில் எதிர்ப்பு! appeared first on TamilStar.com. |
| You are subscribed to email updates from TamilStar.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |