Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய கனடா பிரதமர்

Posted: 14 Apr 2017 06:11 AM PDT

தமிழர்களின் வாழ்வியலை கொண்டாடுவதில் வெளிநாடுகளை பொறுத்த வரையில் கனடாவிற்கு முக்கிய இடமுண்டு. ஈழத்தமிழர்கள் முதல் பல்வேறு நாட்டின் அகதிகளுக்கும் மற்ற நாடுகள் குடியேற எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அகதிகளாக வெளியேறுபவர்களை தங்களது நாட்டில் குடியேற அழைப்பு விடுக்கிறது கனடா. தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளில் ஒன்றான கனடாவில் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன விழாக்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் அன்று வாழ்த்துகள் கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடே, இனி வரும் வருடங்களில் ஜனவரி மாதம் […]

The post தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய கனடா பிரதமர் appeared first on TamilStar.com.

அதிகாலையில் ஆலய வழிபாடுகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்!

Posted: 14 Apr 2017 06:08 AM PDT

ஏவிளம்பி வருடப்பிறப்பு இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.48 மணிக்கு பிறந்தது. இதனையொட்டி இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அடியார்கள் புதுவருடத்தை வரவேற்று மருத்து நீர் வைத்து குளித்து புத்தாடைகள் அணிந்து அதிகாலையில் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். வடக்குகிழக்கில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த புத்தாண்டு அமைதியான முறையில் ஆலய வழிபாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

The post அதிகாலையில் ஆலய வழிபாடுகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்! appeared first on TamilStar.com.

வடமாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு அமர்வு நடத்துமாறு கோரிக்கை

Posted: 14 Apr 2017 06:05 AM PDT

வடமாகாணசபை அமைச்சுக்களின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கான சிறப்பு அமர்வு ஒன்றை நடத்துமாறு வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர்சி.தவராசா மற்றும், மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர்அவைத் தலைவர் சீ. வி.கே.சிவஞானத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாணசபை உருவாக்கப்பட்டு மூன்றரை வருடங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இந்த மூன்றரை வருடங்களில் வடமாகாண சபையின் 5 அமைச்சுக்களும் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வு செய்வதற்காகவே சிறப்பு அமர்வு ஒன்றை கூட்டுமாறுகேட்கப்ப ட்டுள்ளது. இது தொடர்பாக வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தகவல் […]

The post வடமாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு அமர்வு நடத்துமாறு கோரிக்கை appeared first on TamilStar.com.

தமிழ் மக்கள் துன்பங்கள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள், ஒதுக்கல்களில் இருந்து மீள வேண்டும்! – சம்பந்தனின் புத்தாண்டு செய்தி

Posted: 14 Apr 2017 06:02 AM PDT

சிங்கள தமிழ் மக்களுக்கிடையில் நல்லுறவு சகஜ நிலையும் தோன்றி, இன நல்லிணக்கம் ஏற்பட இந்த புத்தாண்டு வழிசமைத்து கொடுக்கட்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமன்றி, பகுதிகளில் வாழும் எம் தமிழ் உறவுகளுக்கும் எம்மோடு இணைந்து புத்தாண்டினை கொண்டாடும் சிங்கள சகோதரர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் மக்களை […]

The post தமிழ் மக்கள் துன்பங்கள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள், ஒதுக்கல்களில் இருந்து மீள வேண்டும்! – சம்பந்தனின் புத்தாண்டு செய்தி appeared first on TamilStar.com.

நாமல் விடுத்துள்ள விஷேட வேண்டுகோள்

Posted: 14 Apr 2017 06:00 AM PDT

பிறந்துள்ள புது வருடத்தில் புது ஆட்சி ஒன்றினை அமைக்க அனைவரும் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாமல் ராஜபக்ச முகநூல் ஊடாக கூறியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் நாட்டின் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் காப்பதோடு அரச சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும். அத்துடன் எமது கலாச்சார பாரம்பரியத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு விட்டு வைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று நாம் நம்பிக்கை […]

The post நாமல் விடுத்துள்ள விஷேட வேண்டுகோள் appeared first on TamilStar.com.

நல்லிணக்கம், சகவாழ்வு ஆகியவற்றை பேணும் நாடாக எழுச்சி பெறுவோம் உறுதி கொள்வோம்! – ஜனாதிபதி

Posted: 14 Apr 2017 05:58 AM PDT

பிற்போக்குச் சிந்தனைகளிலிருந்தும் பழைமைவாதப்போக்கிலிருந்தும் விடுபட்டு, புதிய மனிதனாக உருவாக வேண்டும் என்பதே சித்திரைப் புத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். அவ்வாறு புதிய சிந்தனைகளுடன் புதுப்பிக்கப்படுவதனாலேயே புத்தாண்டு எமது வாழ்வின் புதியதொரு ஆரம்பமாக கருதப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புவியில் உயிரினங்கள் தோன்றிய காலம் முதல் மானிட சமுதாயம் இயற்கையோடு கொண்டிருக்கும் பௌதிக மற்றும் ஆன்மீக பந்தத்தினை அடுத்த தலைமுறைக்கு […]

The post நல்லிணக்கம், சகவாழ்வு ஆகியவற்றை பேணும் நாடாக எழுச்சி பெறுவோம் உறுதி கொள்வோம்! – ஜனாதிபதி appeared first on TamilStar.com.

ஹெய்ட்டியில் பாலியல் குற்றம் புரிந்த இலங்கைப் படையினர் தண்டிக்கப்பட வேண்டும்- ஐ.நா.சபை

Posted: 14 Apr 2017 05:55 AM PDT

ஹெய்ட்டியில் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இலங்கையின்அமைதி காப்பு படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையும்அமெரிக்காவும் தெரிவித்துள்ளன. பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவர்கள் எங்கிருந்துசென்றிருந்தாலும் அவர்கள் பொறுப்புக்களை ஏற்க வேண்டியவர்களாக உள்ளனர் என்று ஐக்கியநாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குதரப்படவில்லை. இந்தநிலையில் இலங்கையுடன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தொடர்பு கொண்டு உண்மைவிடயத்தை அறியுமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், வலியுறுத்தியுள்ளதாக பேச்சாளர்குறிப்பிட்டுள்ளார். இதேவேளை […]

The post ஹெய்ட்டியில் பாலியல் குற்றம் புரிந்த இலங்கைப் படையினர் தண்டிக்கப்பட வேண்டும்- ஐ.நா.சபை appeared first on TamilStar.com.

ஆசிய நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்த நாடு இலங்கை!

Posted: 14 Apr 2017 05:52 AM PDT

ஆசிய நாடுகளின் நாடாளுமன்ற அரசியலில் பெண்களின் பங்கு குறைவாக உள்ள நாடாக இலங்கை உள்ளதென சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்தையும், பாகிஸ்தான் மூன்றாம் இடத்தையும், இந்தியா ஐந்தாம் இடத்தையும், பூட்டான் ஆறாவது இடத்தையும், மாலைதீவு ஏழாவது இடத்தையும் வகிக்கின்றன. இலங்கை எட்டாவது இடத்தில் உள்ளது. சர்வதேச ரீதியில் நேபாளம் 48, ஆப்கானிஸ்தான் 54, பாகிஸ்தான் 70, பங்களாதேஸ் 91, இந்தியா 148, பூட்டான் […]

The post ஆசிய நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்த நாடு இலங்கை! appeared first on TamilStar.com.

ஏழு மாடிகள் அல்ல பத்து மாடிகள் கொண்ட ஹோட்டல் அமைக்கின்றேன்: சாமர சம்பத்

Posted: 14 Apr 2017 05:49 AM PDT

ஏழு மாடிகள் அல்ல பத்து மாடிகள் கெண்ட ஹோட்டல் ஒன்றையே தாம் அமைப்பதாக ஊவா மாகண முதலமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார். மக்கள் பணத்தில் ஹோட்டல் அமைப்பதாக சுமத்தும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஆம் நான் ஹோட்டல் ஒன்றை அமைக்கின்றேன், அது ஏழு மாடிகளைக் கொண்டதல்ல, பத்து மாடிகளைக் கொண்டது. நான் எவ்வாறு ஹோட்டல் அமைக்கின்றேன் என்பதனை வங்கிகளிடம் கேட்டறிந்து கொள்ள […]

The post ஏழு மாடிகள் அல்ல பத்து மாடிகள் கொண்ட ஹோட்டல் அமைக்கின்றேன்: சாமர சம்பத் appeared first on TamilStar.com.

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்! – ரணிலிடம் ஜப்பான் வலியுறுத்தல்

Posted: 14 Apr 2017 05:46 AM PDT

இந்து சமூத்திர பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் பொதுவான செயற்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் தோமோமோ இனதாவை சந்தித்த போதே அவர் இந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார். ஆறு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கம் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் தோமோமோ இனதாவிற்கும் இடையிலான சந்திப்பு டோக்கியோவிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது ஸ்ரீலங்காவிற்கும் – ஜப்பானுக்கும் இடையிலான […]

The post இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்! – ரணிலிடம் ஜப்பான் வலியுறுத்தல் appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™