Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


தெலுங்கில் 'டப்பிங்' ஆகும் 'பைரவா'

Posted:

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கத்தில் இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்த படம் 'பைரவா'. 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்ததாகச் சொல்லப்பட்ட இந்தப் படம் அதன் பின் நஷ்டத்தைக் கொடுத்த படங்களின் பட்டியலிலும் இடம் பிடித்தது. இருந்தாலும் மோசமான தோல்வி எல்லாம் இல்லாமல் விஜய்யின் இமேஜை இந்தப் படம் தக்க வைத்துக் கொண்டது. ...

என்னை மட்டும் விமர்சிப்பது ஏன் ? பிரியதர்ஷன் காட்டம்

Posted:

64வது தேசிய விருதுகள் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்து நேற்று தேசிய விருதுகளை அறிவித்தார் பிரியதர்ஷன். அறிவிக்கப்பட்ட உடனேயே விருதுகள் பற்றி பலரும் பல விதமான கருத்துக்களைப் பகிர ஆரம்பித்தனர். இவருக்கு விருது இல்லையா, அவருக்கு விருது இல்லையா என சமூக வலைத்தளங்களில் தங்களையே தேர்வுக் குழுவாக நினைத்து பலரும் பலருக்கு விருது ...

'சங்கமித்ரா' - சண்டைப் பயிற்சியை ஆரம்பித்த ஸ்ருதிஹாசன்

Posted:

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படம் 'சங்கமித்ரா'. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. ஜெயம் ரவியும், ஆர்யாவும் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ...

தேசிய விருது, ஏ.ஆர்.முருகதாஸ் விமர்சனம் தேவையா ?

Posted:

64வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் அறிவிப்பு வரும் போதெல்லாம் விமர்சனங்கள் வருவது வழக்கம். அது போல இந்த ஆண்டும் அப்படி ஒரு விமர்சனம் எழுந்துள்ளது. சிறந்த நடிகருக்கான விருது 'தங்கல்' படத்தில் நடித்ததற்காக ஆமீர்கானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்தார்கள். ...

தேசிய விருது ஸ்டண்ட் கலைஞர்களுக்கான கவுரவம் - பீட்டர் ஹெய்ன்

Posted:

63 ஆண்டுகால தேசிய விருது வரலாற்றில் முதன்முறையாக இந்தாண்டு ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்டண்ட் மாஸ்டருக்கான முதல் தேசிய விருதை இந்தியா முழுக்க பிரபலமான ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் பெறுகிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான புலி முருகன் படத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக இந்த ...

இளையராஜாவை ரொம்பவே மிஸ் செய்கிறேன் - மணிரத்னம்

Posted:

பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னம். தனது முதல் படமான பகல் நிலவு தொடங்கி தளபதி வரை அவர் இயக்கிய அத்தனை தமிழ் படங்களுக்கும் இளையராஜா தான் இசையமைத்தார். இவர்களது கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகின. இப்போதும் இவர்களது பாடல்கள் திகட்டாத இன்ப ராகமாக ஒலித்து ...

தெலுங்கில் வரவேற்பை பெறாத 'காற்று வெளியிடை'

Posted:

மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு தெலுங்கில் எப்போதும் ஒரு வரவேற்பு உண்டு. தமிழில் அவர் இயக்கி வெளிவரும் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவது வழக்கம். மணிரத்னம் இதற்கு முன் இயக்கி வெளிவந்த 'ஓ காதல் கண்மணி' படம் தெலுங்கில் 'ஓகே பங்காரம்' படம் கூட நல்ல வசூலைப் பெற்றது.

ஆனால், நேற்று தமிழில் வெளிவந்த ...

தேசிய விருது எதிர்பார்த்தது தான் : அஜய் தேவ்கன்

Posted:

64வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்த ‛சிவாய்' படத்திற்கு சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ்க்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகழ்ச்சியில் இருக்கும் அஜய், தேர்வு குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஜய் தேவ்கன் கூறியதாவது... ...

செப்., 8-ல் ‛போஸ்டர் பாய்ஸ்' ரிலீஸ்

Posted:

2014-ம் ஆண்டு மராத்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‛போஸ்டர் பாய்ஸ்'. இந்தப்படம் தற்போது ஹிந்தியில் அதேபெயரில் ரீ-மேக்காகி வருகிறது. நடிகரும், இயக்குநருமான ஷ்ரேயாஸ் இயக்குகிறார். சன்னி தியோல், பாபி தியோல் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற போஸ்டர் பாய்ஸ் படக்குழு, படத்தின் ...

பெண்களுக்கு தற்காப்பு பயற்சி மையம் அமைக்கிறார் பிபாஷா

Posted:

பாலிவுட்டின் பிரபலமான நடிகை பிபாஷா பாசு. இவர் கடந்தாண்டு கரண் சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார். சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெண்கள் தங்களை தாங்களே தற்காத்து கொள்ளும் வகையில் தற்காப்பு கலை பயில புதிய பயிற்சி மையம் தொடங்க இருக்கிறார் பிபாஷா. முதற்கட்டமாக டில்லி மற்றும் கோல்கட்டாவில் ...

தேசிய விருது : அமீர்கானுக்கு சைரா வாசிம் நன்றி

Posted:

அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் அவரது இளம் வயது மகளாக நடித்தவர் சைரா வாசிம். இப்படத்தில் சிறப்பாக நடித்தற்காக இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதற்காக அமீர்கான் உள்ளிட் தங்கல் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சைரா. இதுதொடர்பாக சைரா கூறியிருப்பதாவது... ‛‛மிகவும் மகிழ்ச்சியாக ...

பாட்ஷா இரண்டாம் பாகத்துக்கு ரஜினி கிரீன் சிக்னல்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எவர்கிரீன் ஹிட் படம் பாட்ஷா. தொலைக்காட்சியில் அதிகமுறை ஒளிபரப்பான படம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முதல் பாகத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா முயற்சித்தார். இது தொடர்பாக அவர் ரஜினியிடம் பேசினார். ஆனால் ரஜினி "பாட்ஷா என்றால் ஒரே பாட்ஷா தான். இனி அப்படி ஒரு படத்தில் என்னாலும் நடிக்க ...

தேசிய விருதில் பாரபட்சம்: முருகதாஸ் விமர்சனம்

Posted:

தமிழ் சினிமாவையும் தாண்டி, தெலுங்கு, ஹிந்தி வரை சென்று வெற்றி பெற்றவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது மகேஷ்பாபுவை வைத்து தமிழ்-தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நேற்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஜோக்கர், 24 படங்கள் தலா 2 விருதுகளும், எழுத்தாளர் தனஞ்செயன் மற்றும் சிறந்த பாடலாசிரியர் ...

ரசிகர்கள் சந்திப்பை ரத்து செய்தார் ரஜினி

Posted:

ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுக்கும் நிகழ்ச்சியை நடிகர் ரஜினிகாந்த் ரத்து செய்துள்ளார். நடிகர் ரஜினி, ஒவ்வொரு மாதமும், இரண்டாவது ஞாயிறு அன்று ரசிகர்களை சந்திப்பது வழக்கம். 1998ல், சந்திப்பு முடிந்து திரும்பிய சில ரசிகர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால், ரசிகர்கள் சந்திப்பை நிறுத்தினார். பின், பிறந்தநாளின் போது மட்டும், ...

சமுத்திரகனியின் இலவச ஆம்புலன்ஸ்!

Posted:

தொண்டன் படத்தில், சமூக சேவை செய்யும் தொண்டனாக நடிக்கிறார், சமுத்திரகனி. கதைப்படி, இப்படத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்பவராக நடித்துள்ளவர், இப்படம் வெளியாகும் போது, சில அரசு மருத்துவமனைகளுக்கு, இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி தரவும் முடிவு செய்துள்ளார். அதேபோல், இப்படத்தின் ஆம்புலன்ஸ் கார் கிளீனராக நடித்துள்ள நடிகர் கஞ்சா கருப்பும், ...

பறக்கும் பலூனில் ஜெய்க்கு பிறந்த நாள் கேக்: அஞ்சலி நெகிழ்ச்சி

Posted:

நடிகர் ஜெய்க்கு நேற்று முன்தினம் 32வது பிறந்த நாள். அவர் தற்போது அஞ்சலியுடன் பலூன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிஷ் இயக்கும் இந்தப் படத்தை சண்டை இயக்குனர் திலீப் சுப்பாராயன் தனது நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு ...

நயன்தாராவுக்கான கதையில் காஜல் அகர்வால்!

Posted:

தற்போது, இமைக்கா நொடிகள், அறம், வேலைக்காரன் மற்றும் கொலையுதிர் காலம் என, பல படங்களில் நடித்து வருகிறார், நயன்தாரா. இந்நிலையில், கவலை வேண்டாம் படத்தை இயக்கிய, டி.கே., நயன்தாராவுக்காக, ஒரு திகில் கதையை தயார் செய்து, அவரிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால், பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருவதை சுட்டிக்காட்டி, அப்படத்தை ஏற்க மறுத்து ...

காஷ்மீர் பனிப்பொழிவில் சிபிராஜ், நிகிலா விமல்

Posted:

கட்டப்பாவ காணோம் படத்திற்கு பிறகு சிபிராஜ் நடித்து வரும் படத்தை வி.இசட்.துரையின் உதவியாளர் வினோத் இயக்கி வருகிறார். சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் நடிக்கிறார். பாஸ் மூவீஸ் சார்பில் விஜய்.கே.செல்லையா தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
இதன் படப்பிடிப்புகள் கடந்த 6ம் தேதி முதல் காஷ்மீரில் தொடங்கி நடந்து ...

இமேஜ் பற்றி கவலைப்படாத ஜி.வி.பிரகாஷ்குமார்!

Posted:

பாலா இயக்கும், நாச்சியார் படத்தில், பச்சிளம் குழந்தை உட்பட, ஒன்பது பேரை கொலை செய்யும் கொடூர வில்லனாக நடிக்கிறார், ஜி.வி.பிரகாஷ். கதாநாயகனாக நடித்து வரும் நேரத்தில், இம்மாதிரி வில்லனாக நடித்தால், இமேஜ் பாதிக்குமே... என்று அவரிடம் சினிமா நண்பர்கள் கேட்டதற்கு, இயக்குனர் பாலா படத்தில் வில்லனாக நடித்தாலும், நடிப்பில் பட்டை ...

நிஜமாகவே கழுத்தை நெறித்தார் நயன்தாரா: டோரா வில்லன் சொல்கிறார்

Posted:

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் டோரா. இதில் 3 வடநாட்டு ஆசாமிகள்தான் வில்லன். அந்த வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கிறார் வெற்றி. பாணிபூரி விற்பவராக வந்து 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து நயன்தாராவால் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்படுகிற கேரக்டர். கடந்த 17 ஆண்டுகளாக சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™