Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


வினுசக்கரவர்த்தியின் உடல் தகனம்

Posted:

நடிகர் வினுசக்கரவர்த்தியின் உடல், சென்னை, போரூரில் உள்ள மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் நடிகர் வினுசக்கரவர்த்தி. தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் 1003 படங்களில் நடித்த வினுசக்கரவர்த்தி, உடல்நலக்குறைவால் நேற்று(ஏப்., 27-ம் தேதி) காலமானார். அவருக்கு திரையுலகினர் சார்பில் ...

பாகுபலி -2 :ஒரே நாளில் ரூ.100 கோடி வசூல்

Posted:

சென்னை: உலகம் முழுவதும் இன்று வெளியான பாகுபலி-2 ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு வசூல் சாதனை படைத்துள்ளது. தமிழ் தெலுங்கு உட்பட 4 மொழிகளில் தயாராகி இன்று ஏப் 28 உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. படம் வெளியான இன்று முதல்நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கு வசூலாகி உள்ளது. இது வரை எந்த இந்திய படமும் ஒரே நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய வில்லை என்பது ...

5000 பேர் 'கிராஃபிக்ஸ்' உழைப்பில் 'பாகுபலி 2'

Posted:

'பாகுபலி 2' படத்தைப் பற்றித்தான் இன்னும் இரண்டொரு நாளைக்கு அனைவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்பா விஜயேந்திர பிரசாத்தின் கதையை, திரையில் எப்படிக் கொடுக்க வேண்டும் என்று பிரமிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. அவர் எதிர்பார்த்த காட்சி அமைப்பை தொழில்நுட்பக் கலைஞர்கள் அவருடைய கற்பனைக்கும் சிறிதும் ...

பாகுபலி 2 - முதல் நாள் வசூல் கணக்கு - ரூ.100 கோடி உறுதி

Posted:

பாகுபலி 2 திரைப்படம் தமிழ்நாட்டில் சிறப்புக் காட்சிகளைத் தவிர வழக்கமான காலை காட்சியில் வெளியாகிவிட்டது. உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பற்றி இந்தியத் திரையுலகில் உள்ள பலரும் ஒட்டு மொத்தமாக பாராட்டி வருகிறார்கள். இந்திய சினிமா வரலாற்றில் இந்தப் படம் ஒரு புதிய சாதனையைப் படைக்கப் போவது உறுதி என்பது ...

சிக்கிம்மில் படம் தயாரிக்கும் பிரியங்கா சோப்ரா

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா, தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மொழிவாரியான படங்களை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா, சிக்கிம்-ல் படம் தயாரிக்க இருக்கிறார். இதுகுறித்து பிரியங்கா கூறியிருப்பதாவது... "சிக்கிம்மில் படம் எடுப்பது தொடர்பாக அம்மாநில அரசோடு பேசியிருக்கிறேன், நான் எடுக்க ...

நோ என்ட்ரி-2வில் இரண்டு வேடத்தில் சல்மான்

Posted:

அனீஸ் பாஸ்மி இயக்கத்தில், சல்மான், அனில் கபூர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த காமெடி படம் நோ என்ட்ரி. இப்படத்தின் இரண்டாம் பாகம் நோ என்ட்ரி மெயின் என்ட்ரி என்ற பெயரில் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுப்பற்றிய அறிவிப்போடு சரி, வேறு எந்த தகவலும் இல்லை. இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதை இயக்குநர் ...

பிரபுதேவா படத்தில் சூரஜ் பஞ்சோலி

Posted:

ஹீரோ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூரஜ் பஞ்சோலி. சல்மான் தயாரித்த இப்படம் வெற்றி பெறவில்லை. இருந்தாலும், தற்போது பரூக் கபீரின் படம், ரெமோ டிசோஷாவின் படம் என பிஸியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சூரஜ். இந்த படங்களை தொடர்ந்து அடுத்தப்படியாக பிரபுதேவா படத்தில் நடிக்க உள்ளார். பிரபுதேவா சொன்ன கதை, சூரஜ் ...

பேவாட்ச் நடிகர்கள் இந்தியா வர மாட்டார்கள் - பிரியங்கா சோப்ரா

Posted:

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது முதல் ஹாலிவுட் படமாக பேவாட்ச் என்ற படத்தில் நடித்துள்ளார். பிரியங்காவுடன் டுவைன் ஜான்சன், ஜாக் எப்ரான் உள்ளிட்ட பல ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ரொடக்ஷ்ன்ஸ் பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது. தீபிகா நடித்த ஹாலிவுட் படமான டிரிபிள் எக்ஸ் ...

புரொமோஷனுக்காக இந்தியா வரும் பாக்., நடிகை

Posted:

சாகேத் சவுத்ரி இயக்கத்தில் இர்பான் கான், பாகிஸ்தான் நடிகை சபா ஓமர் ஆகியோர் முதன்மை ரோலில் நடித்துள்ள படம் ஹிந்தி மீடியம். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. வருகிற மே 12-ம் தேதி படம் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் புரொமோஷன் வேலைகளை துவங்கியுள்ளனர். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ...

அஜித் பிறந்தநாளுக்கு கேரள ரசிகர்களின் அசத்தல் கிப்ட்..!

Posted:

மே-1ஆம் தேதி அஜித் பிறந்தநாள் என்பதால் இங்கே ரசிகர்கள் வழக்கம்போல கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் 1999ல் அஜித்-ஷாலினி நடித்த அமர்க்களம்' படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி அஜித்தின் பிறந்தநாள் பரிசாக இன்று ரிலீஸ் செய்துள்ளார்கள்.. இதே கேரளாவை பொறுத்தவரை அஜித்தைவிட விஜய்க்குத்தான் ரசிகர்கள் அதிகம் ...

வெளியானது 'வில்லன்' டீசர் ; ஸ்டைலிஷ் ஆக்சனுக்கு திரும்பிய மோகன்லால்..!

Posted:

'புலி முருகன்' படத்திற்கு பிறகு வெளியான மோகன்லாலின் இரண்டு படங்களும் ரசிகர்களை பெரிய அளவில் திருப்திப்படுத்தவில்லை.. காரணம் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' அக்மார்க் குடும்ப படம்.. அடுத்து வெளியான '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' படமோ ராணுவ பின்னணியுடன் ஆக்சனுக்கு நிறைய வாய்ப்பிருந்தும் 'சப்'பென சாதாரணமாக கடந்துபோய் ...

வினுசக்கரவர்த்திக்கு திரையுலகினர் அஞ்சலி

Posted:

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினுசக்கரவர்த்தி, நேற்று காலமானார். அவருக்கு வயது 72. 1003 படங்களில் நடித்துள்ள வினுசக்கரவர்த்தி, கதாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.
மண்சார்ந்த கதையில் இவரை விட வேறு யாராலும் ...

வினுசக்கரவர்த்திக்கு நடிகர் சங்கம் இரங்கல்

Posted:

தமிழ் சினிமாவின் மண்ணின் மைந்தனான நடிகர் வினுசக்கரவர்த்தியின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சங்கம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியருப்பதாவது....

போலீஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் ...

பாகுபலி-2-க்கு பிரமாண்ட வரவேற்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted:

எதிர்பார்த்ததை போலவே பாகுபலி-2 படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

2015ம் ஆண்டில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படம் ஒரு சரித்திர சாதனையை ஏற்படுத்தியது. முதல்பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற சஸ்பென்ஸ் உடன் முடித்தார் ராஜமெளலி. ...

பாகுபலி-2 தமிழில் ரிலீஸாக ரூ.2 கோடி விட்டு கொடுத்த ராஜமெளலி

Posted:

தமிழகத்தில் பாகுபலி-2 படத்திற்கு கடைசிநேரத்தில் ஏற்பட்ட சிக்கலை, இயக்குநர் ராஜமெளலி, ரூ.2 கோடியை விட்டு கொடுத்து தீர்த்து வைத்துள்ளார். பாகுபலி என்ற படத்தின் மூலம் உலக சினிமாவை இந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜமெளலி. இப்போது அதன் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரமாண்டமாய் இயக்கி, இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ...

மறைக்கப்பட்ட நாளை நமதே ரகசியம்

Posted:

மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன், புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்து வரும் விஷால், புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
இயக்குநர் பொன்ராமிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கடேசன் ...

மாநகரம் 50-வது நாள்

Posted:

'மாயா' படத்தை தொடர்ந்து 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக சமீபத்தில் வெளிவந்த படம் - 'மாநகரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன் ரெஜினா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. ஆனால் ...

பாகுபலி-2 ரிலீஸ் ; வழிவிட்ட மலையாள திரையுலகம்..!

Posted:

மிகப்பெரிய நடிகர்களின் படங்களோ, அல்லது மிகப்பெரியதாக எதிர்பார்க்கப்படும் படங்களோ வெளியாகும்போது வேறு எந்த படங்களும் ரிலீஸாகி ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் மற்றவர்கள். 'பாகுபலி' படத்திற்கு முன் தமிழ்நாட்டிலும் சரி, மலையாளத்திலும் சரி, பிரபாஸ் என்கிற நடிகரா.. யார் அவர் என கேள்வி கேட்கும் நிலை தான் இருந்தது... ஆனால் ...

3 பாதுகாவலர்களை அதிரடியாக நீக்கிய சல்மான் கான்..!

Posted:

கடந்த சில நாட்களுக்கு முன் தனது மேனேஜரான ரேஷ்மா ஷெட்டியை அந்த பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். அதற்கு காரணம் ரேஷ்மா ஷெட்டி, சல்மான் கானின் நிகழ்ச்சி நிரல்களை தனது வசதிப்படி தனிச்சையாக அமைத்து வந்தார் என்றும், இதன்மூலம் சல்மானை அவரது குடும்பத்தினரிடம் இருந்து ...

'பாகுபலி-2'வுக்காக 500 டிக்கெட்டுகள் வாங்கிய கலெக்டர்..!

Posted:

இன்று உலகமெங்கும் 'பாகுபலி-2' படம் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியிருக்கிறது.. இந்தப்படத்தை முதல் நாளே பார்க்கவேண்டும் என்பதற்காக சுமார் 3 கி.மீ தூரம் க்யூவில் நின்று ரசிகர்கள் டிக்கெட் வாங்கிய அதிசயமெல்லாம் நடந்தது. வசதி படைத்த ரசிகர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண பாமர மக்களுக்கு முதல்நாளே 'பாகுபலி-2' பார்ப்பது என்பது கானல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™