Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


சட்டங்களை மாற்றும் வரை குற்றங்கள் குறையாது : ரவீணா டாண்டன்

Posted:

தமிழில் கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்தில் நடித்த ரவீணா டாண்டனை அவ்வளவு ஈஸியாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தமிழில் இரண்டு படங்களில் தான் இவர் நடித்தார் ஆனால் பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மாத்தர் என்ற படத்தில் நடித்துள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படமாக ...

'பாகுபலி 2' - 2 மணி நேரம் 45 நிமிடப் படம்

Posted:

ராஜமௌலி இயக்கியுள்ள 'பாகுபலி 2' படத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்சார் முடிவடைந்து 'யுஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது வழங்கப்பட்ட படத்தின் நீளம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் இருந்ததாகச் சொல்கிறார்கள். சென்சார் தரப்பில் சில காட்சிகளை நீக்கச் சொல்லியிருக்கிறார்களாம். அந்தக் காட்சிகளை நீக்கிய பின்தான சான்றிதழ் ...

'ஏஏஏ' ஜுன் மாதம் வெளியீடு - இரண்டு பாகங்களாக ரிலீஸ்.?

Posted:

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருட ஆரம்பத்திலேயே ஆரம்பமானது. அவ்வப்போது படப்பிடிப்பு நடப்பதும், கேன்சல் ஆவதும், தள்ளிப் போவதும் என படமாக்கிக் ...

பாகுபலி 2-க்கு தடை கோரி மீண்டும் ஒரு வழக்கு

Posted:

பாகுபலி 2 படத்திற்கு தடை கோரி மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகுபலி படத்தின் சரித்திர வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகி இருக்கிறது. வருகிற ஏப்.,28-ம் தேதி, பாகுபலி-2 படம் உலகம் முழுக்க சுமார் 6000 தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கும் நிலையில், பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்னை காரணமாக ...

'வட சென்னை' - அமலா பால் நீக்கம் ஏன் ?

Posted:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பமானது. ஆனால், படப்பிடிப்பு ஆரம்பமான ஒரு வாரத்திற்குள் படத்தின் நாயகி மாற்றப்பட்டுள்ளார். அமலா பால் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவரும் படப்பிடிப்பில் ...

'ஸ்பைடர்' ரிலீஸ் தள்ளிப் போகும் ?

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படம், தலைப்பு அறிவிப்பதற்கு முன்பாகவே ஜுன் 23ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போக வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

ஜுலை அல்லது ஆகஸ்ட் ...

டிவிக்களுக்கு செக் வைக்கும் தயாரிப்பாளர் சங்கம்

Posted:

தனியார் தொலைக்காட்சிகளுக்கு பாடல்கள், காட்சிகள், டிரைலர்கள் ஆகியவற்றை இலவசமாக தயாரிப்பாளர்கள் வழங்கக் கூடாது என புதிதாக பொறுப்பேற்றுள்ள தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று ஒரு தகவலை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்களுக்கு, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அனுப்பியுள்ளதாகவும் ...

விஜய்சேதுபதி படத்தில் இயக்குநர் மகேந்திரன்

Posted:

'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தின் வெற்றி தான் விஜய்சேதுபதிக்கு வணிக மதிப்பை தேடிக்கொடுத்தது. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு லாபம் ஈட்டித்தந்த படம். அதன் பிறகே அவரை நம்பி தயாரிப்பாளர்கள் படம் எடுக்க முன் வந்தனர்.
இந்தப்படத்தைத் தொடர்ந்து தற்போது ...

அஜித் ஓகே சொன்னால் தான் மே-1ஆம் தேதி விவேகம் டீசர்

Posted:

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது! அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், அஜித்தின் உதவியாளராக கமல்ஹாசனின் மகள், அக்ஷரா ஹாசனும் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகரும், ஐஸ்வர்யாராயின் முன்னாள் ...

நெப்போலியன் படத்தலைப்பில் விஜய்சேதுபதி

Posted:

தற்போது நடிப்பைவிட்டு விலகி இருக்கும் நடிகர் நெப்போலியன் ஹீரோவாக நடித்து வந்த காலகட்டத்தில், 1995 ஆம் வருடம் நடித்த படம் மாமனிதன். அந்தப் படத்தில் வினிதா கதாநாயகியாக நடித்திருந்தார். பழைய படங்களின் தலைப்பை மீண்டும் சூட்டும் தற்போதைய டிரெண்டின்படி மாமனிதன் என்ற தலைப்பில் புதிய படம் தயாராக உள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று, ...

மம்முட்டி படத்தில் மட்டம் தட்டப்பட்ட இனியா..!

Posted:

கடந்த வாரம் மலையாளத்தில் ரஞ்சித் டைரக்சனில் மம்முட்டி நடித்த புத்தன் பணம் என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக இனியா நடித்துள்ளார்.. மம்முட்டிக்கு ஜோடியாக மனைவி கேரக்டரில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வரும் கேரக்டரில் வேறு சிறிய நடிகை நடித்திருந்தார். இன்னும் சில காட்சிகளில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக ஷீலு ...

கேரளாவில் விஜய் ரசிகர்கள் வீடுவீடாக இலவச குடிநீர் சப்ளை...!

Posted:

தமிழ்நாட்டைப்போல கேரளாவிலும் இப்போது தண்ணீர் தட்டுபாடு அதிகம் நிலவுகிறது.. அங்கேயும் பல இடங்களில் லாரி தண்ணீருக்காக மக்கள் காத்திருப்பதும், குடங்களை தூக்கிக்கொண்டு சற்று தூரம் போய் தண்ணீர் பிடித்து வருவதும் வாடிக்கையாகி விட்டது.. கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்டோட்டி பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் அந்தப்பகுதி ...

மம்முட்டி படத்தில் இணைந்த மஹிமா நம்பியார்..!

Posted:

சாட்டை' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான மஹிமா நம்பியார் இப்போது சமீபத்தில் வெளியான 'குற்றம்-23' படத்தின் வெற்றிமூலம் தமிழ்சினிமாவில் சில படிகள் முன்னேறி வந்துள்ளார். இந்தநிலையில் தான் மம்முட்டி நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு மஹிமாவை தேடி வந்துள்ளது.. ஏற்கனவே திலீப் நடித்த 'கார்யஸ்தன்' ...

ஆடுஜீவிதம் படத்திற்கு பிருத்விராஜ் 18 மாதம் ஒதுக்கியதன் பின்னணி..!

Posted:

மலையாள இயக்குனர் பிளஸ்சி டைரக்சனில் 'ஆடுஜீவிதம்' என்கிற படத்தில் பிருத்விராஜ நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக அதுபற்றி அறிவிப்பு எதுவும் இல்லாமல் வெறும் செய்தியாகவே இருந்தது. அதனால் இந்தப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் சமீபத்தில் வெளியாக ஆரம்பிக்கவே, தனது மௌனம் களைத்த பிருத்விராஜ் இந்தப்படம் ...

அக்டோபரில் சமந்தா திருமணம்

Posted:

நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா இருவரது திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவருக்கும் நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் ...

தனுஷ் படத்தில் அமலாபால் நீக்கம், ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம்

Posted:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது. அதற்கு பிறகு சமந்தா நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதில் அந்த கேரக்டரில் அமலாபால் நடிப்பதாக ...

குல்பூஷண் பற்றி நான் கருத்து கூற முடியாது - பரிணிதி

Posted:

நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணிதி சோப்ரா. தற்போது இவர் மேரி பியாரி பிந்து என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஆயுஸ்மான் குராணா நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு மும்பையில் நேற்று நடந்தது. இதில் பரிணிதி சோப்ரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பரிணிதியிடம், பாகிஸ்தானில் தூக்கு ...

தமிழுக்கு வரும் மற்றுமொரு மலையாள புது வரவு

Posted:

தமிழ் சினிமாவில், தமிழ் நடிகைகள் புகழ் பெற்றதை விட பிற மாநில நடிகைகள் தான் அதிகளவில் புகழ் பெற்றுள்ளனர். இதனால் நிறைய புதுமுகங்கள் பிற மாநிலங்களில் இருந்து தமிழில் அறிமுகமாகின்றனர். குறிப்பாக மலையாளத்திலிருந்து ஏகப்பட்ட நடிகைகள் தமிழில் நடித்து புகழ் பெற்றுள்ளனர். அந்தவகையில் இப்போது புதிதாக ஒருவர் தமிழ் சினிமாவில் ...

ஜங்கி பாண்டேயின் நிஜப்பெயர் என்ன.?

Posted:

வித்யாபாலன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேகம் ஜான் படத்தில் நடித்திருந்தவர் ஜங்கி பாண்டே. இவரது நடிப்பிற்கு நிறைய பாராட்டுகள் வந்துள்ளன, இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஜங்கி. சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜங்கி, தனது உண்மையான பெயர் ஜங்கி பாண்டே இல்லை என்று கூறினார்.
இதுப்பற்றி அவர் மேலும் கூறுகையில்..., ...

ஆக்ஷ்ன் படம் இயக்கும் அசுதோஷ் கெளரிகர்

Posted:

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான மொகஞ்சதரோ என்ற சரித்திர தோல்வி படத்தை கொடுத்தவர் இயக்குநர் அசுதோஷ் கெளரிகர். இவர் அடுத்தப்படியாக பிரபல பாடகி கவுகர் ஜானின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் இயக்க போவதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. நாமும் அந்த செய்தியை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அசுதோஷ் அந்த முடிவை தள்ளி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™