Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


வரலட்சுமியின் கடத்தல் நாடகம் - சமூக வலைத்தளங்களில் கண்டனம்

Posted:

ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பல வழிகள் இருக்க, ஒரு சீப்பான விளம்பரத்தை இன்று நடத்தியிருக்கிறார்கள். வரலட்சமி சரத்குமார் கடத்தப்பட்டதாக இன்று காலை ஒரு புகைப்படத்தை பதிவிட்டார் ஒரு பிஆர்ஓ. அவர்கள் நினைத்தது போலவே சமூக வலைத்தளங்களில் அது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், பதிலுக்கு வலைத்தளவாதிகளிடம் கடுமையாக வாங்கிக் ...

சரத்குமார் நடிக்கும் சென்னையில் ஒரு நாள் -2

Posted:

மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் ‛டிராபிக்'. இப்படம் தமிழில், சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீ-மேக்கானது. மலையாளம் அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் சுமாரான வெற்றியை பெற்றது. இந்நிலையில் சரத்குமார் நடிக்கும் புதிய படத்திற்கு சென்னையில் ஒரு நாள் -2 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது முதல்பாகத்தின் தொடர்ச்சி கிடையாது. ...

ஒரு பக்கம் மகிழ்ச்சி, மறுபக்கம் வலி : ராஜமௌலி நெகிழ்ச்சி

Posted:

'பாகுபலி 2' படம் அடுத்த வாரம் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கு நேற்று சென்சார் முடிவடைந்து யு-ஏ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு தன்னுடைய அடுத்த படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்கப் போகிறார் என ராஜமௌலி அறிவித்தார்.
2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தன்னுடைய படத்தின் பெயர் 'பாகுபலி' என்று அறிவித்த ராஜமௌலி ...

பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய பேகம் ஜான்

Posted:

வித்யாபாலன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியாகியுள்ள படம் பேகம் ஜான். பெங்காலி மொழியில் வெளியான ராஜ்காஹினி படத்தின் ரீ-மேக்காக இப்படம் வெளிவந்துள்ளது. பாலியல் தொழில் செய்யும் வித்யாபாலன் உள்ளிட்ட 11 பெண்கள், தாங்கள் வசிக்கும் இடத்தை காப்பாற்ற போராடும் கதை. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் ...

மீண்டும் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி

Posted:

'மொழி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனி பெயரைப் பெற்றவர் இயக்குனர் ராதாமோகன். அந்தப் படத்திற்குப் பின் அவர் இயக்கிய 'அபியும் நானும்' படம் மட்டுமே ஒரு சிறந்த படமாக அமைந்தது. அதன் பின் அவர் இயக்கிய 'பயணம், கௌரவம், உப்பு கருவாடு' ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை எற்படுத்தவில்லை. தற்போது அருள்நிதி நாயகனாக ...

சினிமாவாகும் பொக்ரான் அணுகுண்டு சோதனை

Posted:

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சினிமாவில் எப்படி எப்படியோ படங்கள் இயக்கி வருகிறார்கள். கிரிக்கெட், கல்வி, உலகப்போர், வரலாற்று காவியம் என பல உதாரணங்களை சொல்லலாம். அந்தவகையில் இப்போது 1998-ம் ஆண்டு இந்தியா சார்பில் பொக்ரானில் நிகழ்த்தப்பட்ட அணுகுண்டு சோதனையை மையமாக வைத்து பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க உள்ளார்கள். இதில் ஜான் ...

'பாகுபலி 2' சென்சார் நிறைவு, ரிலீசுக்குத் தயார்

Posted:

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ள 'பாகுபலி 2' படத்தின் சென்சார் நிறைவடைந்துவிட்டது. படத்திற்கு யு-ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சென்சார் வேலைகள் நிறைவடைந்ததால் படத்தின் வெளியீட்டு வேலைகளை தற்போது வேகப்படுத்தியுள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் ...

மே வரை செல்லும் 'ஸ்பைடர்' படப்பிடிப்பு

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீதி சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடித்து வரும் 'ஸ்பைடர்' படம் ஜுன் மாதம் 23ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். ஆனால், படத்தின் படப்பிடிப்பு மே மாதம் வரை செல்லும் என்கிறார்கள். சில திருப்தியில்லாத காட்சிகளை மீண்டும் படம் பிடிக்க முருகதாஸ் முடிவு செய்துள்ளாராம். ...

என் படத்தில் ஆலியாவா...? - சுஜாய் மறுப்பு

Posted:

கஹானி, கஹானி-2 படங்களை இயக்கியவர் சுஜாய் கோஷ். இவர் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதில் நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க அவர் முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை சுஜாய் மறுத்துள்ளார். இதுப்பற்றி சுஜாய் கூறியிருப்பதாவது... "என்னுடைய ஆரம்பம் முதல் ஆலியாவை எனது படத்தில் நடிக்க கேட்டதில்லை, இப்போதும் அவரை ...

தன் வாழ்க்கை படத்திற்கு குரல் கொடுக்கும் சஞ்சய் தத்

Posted:

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய் தத் ரோலில் ரன்பீர் நடிக்க, அவருடன் தியா மிர்ஸா, பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சஞ்சய் தத்தின் நண்பரும், பிரபல இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். சமீபத்தில், சஞ்சய் தத் போன்று ரன்பீர் தோற்றமளிக்கும் ...

தீபிகாவிற்கு பதில் அனுஷ்காவா.?

Posted:

ரயீஸ் படத்திற்கு பிறகு ஷாரூக்கான், ஆனந்த் எல்.ராய் படத்தில் நடிக்கிறார். இதில், அவர் குள்ள மனிதராக நடிக்க இருக்கிறார். படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக கத்ரீனா கைப் நடிப்பது உறுதியான நிலையில், மற்றொரு நடிகையாக தீபிகா படுகோனே நடிப்பதாக இருந்தது. ஆனால் பத்மாவதி படத்திற்கு கால்ஷீட் கொடுத்ததால், இந்தப்படத்தில் அவரால் கால்ஷீட் கொடுக்க ...

தங்கையின் கணவரை அறிமுகம் செய்யும் சல்மான்

Posted:

நடிகர் சல்மான்கானின் குடும்பத்திலிருந்து அவரது சகோதரர்கள் உட்பட பலர் சினிமாவில் இருக்கின்றனர். இந்நிலையில் அவரது குடும்பத்திலிருந்து மற்றொரு நடிகர் உருவாக இருக்கிறார். அது வேறுயாருமல்ல அவரின் தங்கை அர்பிதா கானின் கணவர் ஆயுஷ் சர்மா தான். ஆயுஷ் சர்மாவை, தனது சொந்த பேனரில் அறிமுகம் செய்கிறார் சல்மான். இப்படம் பக்கா அதிரடி ...

ரஜினி, அமீருடன் மோதும் அஜய்

Posted:

வருகிற தீபாவளிக்கு இந்திய அளவில் ஏகப்பட்ட போட்டிகள் உருவாகும் என தெரிகிறது. ஆனால் அப்படி போட்டி போடும் படங்கள் அனைத்தும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகி வரும் ‛2.O'-க்கு ஈடு கொடுக்குமா...? என்று தெரியவில்லை. இருந்தாலும் அன்றைய தினம் ஏற்கனவே, அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் சீக்ரெட் ...

சமாதானம்... பாகுபலி-2க்கு சிக்கல் தீர்ந்தது

Posted:

பாகுபலி-2க்கு தடை கோரிய வழக்கில் இருதரப்பும் சமாதானம் ஆனதால் படத்திற்கான சிக்கல் தீர்ந்ததோடு, படம் ரிலீஸாவதற்கான தடை நீங்கியது. இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரமாண்ட படம் ‛பாகுபலி-2. பாகுபலி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
தமிழ், ...

ரித்து வர்மாவுக்கு வெளிச்சம் தருமா துருவ நட்சத்திரம்?

Posted:

தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகை ரித்து வர்மா. பாட்ஷா தெலுங்கு படத்தில் அறிமுகமான ரித்து, அதன்பிறகு மளமளவென தெலுங்கு படங்களில் நடித்தார். அவர் நடித்த பெல்லி சூப்புலு படத்தை பார்த்துவிட்டுத்தான் கவுதம் மேனன் ரித்துவை துருவநட்சத்திரம் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க வைத்துள்ளார்.
துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் ஜோடியாக ...

இதை செய்தால் மும்பை நகரம் உலகதரத்திற்கு உயரும் : சோனாக்ஷி சின்ஹா

Posted:

சோனாக்ஷி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் நூர். சுனில் சிப்பி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சோனாக்ஷி பத்திரிகையாளராக நடித்திருக்கிறார். வரும் வெள்ளியன்று படம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் பணிகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்த சோனாக்ஷி, நமது தினமலர் இணையதளத்திற்காக அளித்த பேட்டியின்போது, நூர் படம் பற்றியும், ...

ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார் ஆலியா பட்

Posted:

30 வயதுக்குட்பட்ட ஆசிய சாதனையாளர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. தொழில், வியாபாராம், விளையாட்டு, சினிமா துறையை சேர்ந்தவர்கள் 300 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து மட்டும் 53 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் நடிகை ஆலியா பட்டும் ஒருவர்.
குறுகிய காலத்தில் கலைத்துறையில் ...

விஜய் டி.வியின் புதிய தொடர் மெளனராகம்

Posted:

குழந்தைகளை மையமாக கொண்ட தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தொடர்ந்து விஜய் டி.வியும் குழந்தையை மையமாக கொண்ட கதையுடன் களம் இறங்குகிறது. கிராமத்து பெண் குழந்தையின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது மெளனராகம் தொடர்.
கிராமத்தில் பாடித் திரியும் அந்த குழந்தையின் தந்தை அதற்கு நினைவு வரும் முன்பே காணாமல் போகிறார். ...

பிளாஷ்பேக்: அவ்வையாரை இயக்கிய கொத்தமங்கலம் சுப்பு

Posted:

கொத்தமங்கலம் சுப்பு என்றாலே தில்லானா மோகனாம்பாள் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியவர் என்று தான் நினைவுதான் வரும். ஆனால் குறுகிய காலத்தில் நிறைய சாதித்தவர் அவர். அவர் சாதனையின் உச்சம் எதுவென்றால் அது தமிழ் சினிமாவின் பிரமாண்ட படங்களில் ஒன்றான அவ்வையார் படத்தை இயக்கியது. அதோடு ஜெமினி கணேசன் அறிமுகமான மிஸ்.மாலினி படத்தை ...

குடிதண்ணீர் சீசனுக்கு ஏற்ற படம்

Posted:

மார்க்ஸ் என்ற புதுமுகம் இயக்கி உள்ள படம் நகர்வலம். எம்.நடராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு பவன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் தென்றல் இசை அமைத்துள்ளார். யூகன் பாலாஜி, தீக்ஷிதா மாணிக்கம் (அறிமுகம்), யோகிபாபு, பால சரவணன், நமோ நாராயணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் மார்க்ஸ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™