Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


14,000 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றிய கனேடிய போர்க் கப்பல்

Posted: 29 Mar 2017 06:10 AM PDT

சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள HMCS சாஸ்காட்டூன் எனப்படும் கனேடிய கடற்படை கப்பல், 14,000 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன வகை போதைப் போருட்களை கைப்பற்றியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் அமெரி்கக கப்பலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே இந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தகவலை வெளியிட்டுள்ள அமெரிக்க கடலோர காவற்படை அதிகாரியான கப்டன் மார்க் ஃபேடர், சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனேடிய கடற்படைக் கப்பலான HMCS சாஸ்காட்டூன், […]

The post 14,000 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றிய கனேடிய போர்க் கப்பல் appeared first on TamilStar.com.

கட்டுபடியான விலைகளில் வீடுகள் – ஒன்ராறியோ அரசாங்கம்

Posted: 29 Mar 2017 06:07 AM PDT

எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் கட்டுபடியான விலையில் வீடுகள் வழங்குவது தொடர்பிலான திட்டமும் உள்ளடக்கப்பட இருப்பதாக ஒன்ராறியோவி்ன நிதி அமைச்சர் சார்லெஸ் சூசா தெரிவித்துள்ளார். ரொரன்ரோ உள்ளிட்ட ரொரன்ரோ பெரும்பாகம் மற்றும் ஹமில்ட்டன் பிராந்தியங்களில் வீடுகளின் விலைகள் மற்றும் வீட்டு வாடகை என்பன என்றுமில்லாத அதிகரிப்பைக் கண்டுள்ள நிலையிலேயே ஒன்ராறியோவி்ன் நிதி அமைச்சர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இவ்வாறு தெரிவித்துள்ளார். அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பில் சிறந்த திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள […]

The post கட்டுபடியான விலைகளில் வீடுகள் – ஒன்ராறியோ அரசாங்கம் appeared first on TamilStar.com.

கடவுளாக வழிபடப்படும் மகிந்த : தெய்வமாக போற்றப்படும் மாமன்னன்

Posted: 29 Mar 2017 06:05 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கடவுளுக்கு நிகராக வழிபட்டு வரும் மக்களும் இருப்பதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் மகிந்தவின் புகைப்படத்தை கடவுள்களின் புகைப்படமாக ஒப்பிட்டு, வழிபட்டு வருவதாக கூறப்படும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பம் ஒன்று இவ்வாறு மகிந்தவின் புகைப்படத்தைக் கொண்டு வழிபட்டு வருவதாக கூறப்படுகின்றது. ஒரு பக்கம் மகிந்த மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டாலும், அடிமட்ட ஆதரவாளர்களும் அவருக்கு இன்றும் இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும் […]

The post கடவுளாக வழிபடப்படும் மகிந்த : தெய்வமாக போற்றப்படும் மாமன்னன் appeared first on TamilStar.com.

நாட்டிற்குள் அதிகாரம் பகிர்ந்தளிப்பு : பிரதமர் ரணில்

Posted: 29 Mar 2017 06:01 AM PDT

ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மருதானை சுதுவெல்ல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த சிலை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிகாரத்தை பரவலாக்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்தவகையில், நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post நாட்டிற்குள் அதிகாரம் பகிர்ந்தளிப்பு : பிரதமர் ரணில் appeared first on TamilStar.com.

யாழில் முக்கொலை நடைபெற்ற இடத்தில் காணப்பட்ட இரத்தம் : நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் சாட்சியம்

Posted: 29 Mar 2017 05:59 AM PDT

யாழ். அச்சுவேலியில் முக்கொலை இடம்பெற்ற இடத்தில் இருந்து இரத்தப் படிவுகள், தலைமுடி, நைலோன் கயிறு என்பவற்றை மீட்டுள்ளதாக யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. குறித்த முக்கொலை வழக்கு விசாரணை நேற்று யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே வழக்கின் யாழ்.பொலிஸ் நிலைய தடயவியல் பிரிவு உப பரிசோதகர் ஜெயவம்ச மேற்கண்டவாறு சாட்சியம் அளித்துள்ளார். மேலும் குறிப்பிடுகையில், 2014.05.04ஆம் திகதி நடைபெற்ற முக்கொலை தொடர்பாக தடயப்பொருட்களை சேகரிக்க சென்றிருந்த போது, உடலில் இருந்து வந்த […]

The post யாழில் முக்கொலை நடைபெற்ற இடத்தில் காணப்பட்ட இரத்தம் : நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் சாட்சியம் appeared first on TamilStar.com.

மக்களின் காணிப் பிரச்சினையை வருடக்கணக்கில் இழுத்தடிக்க முடியாது! – சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted: 29 Mar 2017 05:56 AM PDT

மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர், அவற்றை மீள வழங்காமல்,மக்களின் நிலப் பிரச்சினையை வருடக்கணக்கில் இழுத்தடிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம், நேற்று 6ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் முன்னெடுக்கப்படும் முள்ளிக்குளத்துக்கு வருகைதந்த அவர், அப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, போராட்டக்காரர்களுடன் காணி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினார். அதன் பின்னர் கருத்து தெரிவித்தபோதே, அவர் […]

The post மக்களின் காணிப் பிரச்சினையை வருடக்கணக்கில் இழுத்தடிக்க முடியாது! – சுரேஸ் பிரேமச்சந்திரன் appeared first on TamilStar.com.

ஆபத்தான நிலையில் வீரவங்ச : தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

Posted: 29 Mar 2017 05:43 AM PDT

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் நிலை மோசமடைந்துள்ளமையால், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விமல் வீரவங்ச, சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளமையால், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 70இற்கும் மேற்பட்ட நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து விமல் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் இது பிணை கோரிய […]

The post ஆபத்தான நிலையில் வீரவங்ச : தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் appeared first on TamilStar.com.

ஜெனிவாவில் 47 நாடுகளின் ஆதரவு சர்வதேச ரீதியில் கிடைத்த வெற்றி! – மங்கள சமரவீர

Posted: 29 Mar 2017 05:40 AM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு 47 உறுப்பு நாடுகளும் ஏக மனதாக ஆதரவு வழங்கியமை சர்வதேச ரீதியில் இலங்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். மேலைத்தேய நாடுகள் மாத்திரமன்றி சகல நாடுகளும் இலங்கையுடன் நட்புடன் செயற்படுவதுடன், உலகில் எந்தவொரு எதிரி நாடும் இலங்கைக்கு இல்லையென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மங்கள சமரவீர, 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட […]

The post ஜெனிவாவில் 47 நாடுகளின் ஆதரவு சர்வதேச ரீதியில் கிடைத்த வெற்றி! – மங்கள சமரவீர appeared first on TamilStar.com.

பிராந்திய மோதலால் இலங்கையில் ஆட்சியை மாற்றிய இந்தியா! கோத்தபாய வெளியிட்ட ரகசியம்

Posted: 29 Mar 2017 05:36 AM PDT

இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் இலங்கைக்கு மிகவும் நெருக்கமாக செயற்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அந்த நிலை முற்றிலும் மாறிப்போனதாகவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பா.ஜ.க அரசாங்கத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் டோவல் நியமிக்கப்பட்டார். அஜித் டோவல் சீனா தொடர்பில் இறுக்கமான நிலைப்பாட்டை […]

The post பிராந்திய மோதலால் இலங்கையில் ஆட்சியை மாற்றிய இந்தியா! கோத்தபாய வெளியிட்ட ரகசியம் appeared first on TamilStar.com.

3 மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு தயாராகும் படி ஜனாதிபதி அழைப்பு!

Posted: 29 Mar 2017 05:32 AM PDT

இந்த ஆண்டில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் உள்ளூராட்சி தேர்தலும் நடத்தப்படும். ஆகையினால், தேர்தல்களுக்கு முகங்கொடுப்பதற்குத் தயாராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி அதிகாரத்தின் கீழுள்ள ஏழு மாகாண சபைகளின் முதலமைச்சர்களை, தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், திங்கட்கிழமை இரவு சந்தித்தபோதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல்களில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பலமிக்கதொரு கட்சியாகக் களத்தில் இறங்கவேண்டும் என்றும் பலவீனமான தொகுதி அமைப்பாளர் சகலரும் […]

The post 3 மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு தயாராகும் படி ஜனாதிபதி அழைப்பு! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™