Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சிறந்த ஆசிரியர் சேவைக்கான உலகளாவிய விருதைப் பெற்ற கனேடியர்

Posted: 20 Mar 2017 06:56 AM PDT

சிறந்த ஆசிரியர் சேவைக்கான உலகளாவிய விருதை கடாவைச் சேர்ந்த ஆசிரியரான மாகீ மக்டோனெல் பெற்றுக்கொண்டுள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து இந்த விருதுக்காக ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுள் கனடா, பாக்கிஸ்தான், பிரித்தானியா, ஸ்பெய்ன், யேர்மனி, சீனா, கென்யா, அவுஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டனர். டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் தேர்ததெடுக்கப்பட்ட குறித்த பத்துப்போகளில் வெற்றியாளராக கனடாவின் மாகீ மக்டோனெல் அறிவிக்கப்பட்டதுடன், […]

The post சிறந்த ஆசிரியர் சேவைக்கான உலகளாவிய விருதைப் பெற்ற கனேடியர் appeared first on TamilStar.com.

இம்முறை அதிக வெப்பமான வசந்தகாலம்

Posted: 20 Mar 2017 06:53 AM PDT

கனடாவின் அனேகமான பாகங்களிலும் இந்த வசந்த காலமானது வழக்கத்தினை விடவும் அதிக அளவான வெப்பத்துடன் காணப்படும் என்று கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் முன்னுரைத்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக், நோவா ஸ்கொட்ஷியா, நியூ பிரவுன்ஸ்விக், பிரின்ஸ் எட்வேர்ட் ஆகிய பகுதிகள் பனிக் காலத்தின் தாக்கத்திலிருந்து விடுபடும் முதல் பிராந்தியங்களாக காணப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது. அவ்வாறே ஏனைய பிராந்தியங்களிலும் பனிக் காலத்தின் தாக்கம் மிக விரைவில் குறைவடைந்து விடும் எனவும் அது கூறியுள்ளது. அந்த வகையில் தற்போது […]

The post இம்முறை அதிக வெப்பமான வசந்தகாலம் appeared first on TamilStar.com.

அரசாங்கத்தில் இணைய மாட்டேன் – சமல் ராஜபக்ச

Posted: 20 Mar 2017 06:48 AM PDT

முக்கியமான பதவியை பெற்றுக்கொண்டு தான் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதாக பரவி வரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அங்குகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு நான் சென்றது பெரிய கதையாக பேசப்படுகிறது. நான் அமைச்சு பதவிகளை பெற அங்கு செல்லவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் நான் மாநாட்டுக்கு சென்றேன்" என […]

The post அரசாங்கத்தில் இணைய மாட்டேன் – சமல் ராஜபக்ச appeared first on TamilStar.com.

சர்வதேச நீதிமன்றமோ, சர்வதேச சட்டமோ எமக்கு அவசியமில்லை -பிரதமர்

Posted: 20 Mar 2017 06:46 AM PDT

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை தீர்மானிப்பது இலங்கையர்களின் பொறுப்பு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக சர்வதேச நீதிமன்றமோ சட்டமோ அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய இனங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான உயிர்களை இழக்க நேரிட்டது. இந்த நிலையில் 40 ஆண்டுகளாக எம்முடன் போராடிய நாட்டு மக்களை ஒன்றிணைப்பது இலகுவான விடயமல்ல. அரசியல் […]

The post சர்வதேச நீதிமன்றமோ, சர்வதேச சட்டமோ எமக்கு அவசியமில்லை -பிரதமர் appeared first on TamilStar.com.

படையினரிடம் சரணடைந்ததை கண்டவர்கள் யாருமில்லை! – கோத்தா கூறுகிறார்

Posted: 20 Mar 2017 06:43 AM PDT

போரின் இறு­திக் கட்­டத்­தில் படை­யி­ன­ரி­டம் சர­ணடை­ந்ததைப் பார்த்தவர்கள் எவரும் இல்லை என்று முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்­கி­ல பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, இலங்கை அரசு உரு­வாக்­க­வுள்ள காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கம் யதார்த்­த­பூர்­வ­மற்­றது. காணா­மற்­போ­ன­வர்­கள் குறித்து பல சம்­ப­வங்­கள் உள்­ளன. அதில் ஒரு விட­யத்­தையே நான் நவ­நீ­தம் பிள்­ளை­யி­டம் சுட்­டிக்­காட்­டி­னேன். போரில் தங்­கள் குடும்­பத்­த ­வர்­கள் உயி­ரி­ழந்­ததை ஏற்­ப­தற்கு எப்­படி பெற்­றோர்­கள் தயா­ரில்லை என்­ப­தை­யும் அவர்­கள் […]

The post படையினரிடம் சரணடைந்ததை கண்டவர்கள் யாருமில்லை! – கோத்தா கூறுகிறார் appeared first on TamilStar.com.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆஜராகாததால் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted: 20 Mar 2017 06:40 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போலி ஆவணம் தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு திஸ்ஸ அத்தநாயக்க மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதி மன்றுக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கு முற்றாக முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்களை அடிப்படையாக கொண்டுள்ளதால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்ற காரணத்தினால் வழக்கை விசாரிக்க வேறு ஒரு திகதியை வழங்குமாறு கோரினர். […]

The post ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆஜராகாததால் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு appeared first on TamilStar.com.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக புதனன்று விவாதம்!

Posted: 20 Mar 2017 06:38 AM PDT

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக முன்வைத்த எழுத்துமூல அறிக்கை தொடர்பான விவாதம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இதன்போது விவாதத்தின் ஆரம்பத்தில் இலங்கை தொடர்பான அறிக்கையை உத்தியோகப்பூர்வமாக வெளியிடவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார். அதன்பின்னர் பதிலளிக்க உரிமை உள்ள நாடு என்ற வகையில் இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க ஹுசைனின் உரைக்கு பதிலளித்து உரையாற்றுவார். தொடர்ந்து மனித உரிமை […]

The post ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக புதனன்று விவாதம்! appeared first on TamilStar.com.

தீர்க்க முடியாத பிரச்சினைகள் தான் எங்களிடம் வருகின்றன : சிவசக்தி ஆனந்தன்

Posted: 20 Mar 2017 06:35 AM PDT

கிராம சேவையாளர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபரிடம் சென்று தீர்க்க முடியாத பிரச்சினைகள் தான் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எங்களிடம் வருகின்றது என வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அரச அலுவலர்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டமாகிய "நில மெஹெவர" தேசிய வேலைத்திட்டம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியாவில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் பொது மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது […]

The post தீர்க்க முடியாத பிரச்சினைகள் தான் எங்களிடம் வருகின்றன : சிவசக்தி ஆனந்தன் appeared first on TamilStar.com.

எனது அரசியல் குரு சண்முகதாஸன்! – ஜனாதிபதி

Posted: 20 Mar 2017 06:13 AM PDT

எனது அரசியல் குரு தோழர் சண்முகதாஸன் ஆவார். அவரது பாசறைக்குள்ளேயே அவருக்கெதிராக கேள்வி கேட்டு கட்சியை விட்டு வெளியேறியவன் நான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். லெனின், கார்ல் மாக்ஸ், மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தல மாநாட்டு அறையில் இன்றும் உள்ளன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

The post எனது அரசியல் குரு சண்முகதாஸன்! – ஜனாதிபதி appeared first on TamilStar.com.

விமலின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

Posted: 20 Mar 2017 06:10 AM PDT

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விமலுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், விமல் வீரவங்ச ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post விமலின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™