Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


முதியோர் இல்லத்தில் தீ

Posted: 15 Mar 2017 09:22 AM PDT

நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இன்று அதிகாலை 12.40 அளவில் தீபரல் ஏற்பட்டுள்ளது. Sheppard Avenue மற்றும் Jane Street பகுதியில் அமைந்துள்ள அந்த முதியோர் ஓய்வு இல்லத்தில் ஏற்பட்ட அந்த தீபரவலில் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து பெருமளவு புகை வெளியேறியவாறு காணப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அந்த பாதிக்க்பபட்ட பகுதினுள் தீயணைப்பு வீரர்கள் நுளைந்த […]

The post முதியோர் இல்லத்தில் தீ appeared first on TamilStar.com.

ஒன்ராறியோ நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி, 28பேர் மருத்துவமனையில்

Posted: 15 Mar 2017 09:17 AM PDT

ஒன்ராறியோவின் கிழக்குப் பிராந்தியத்தில் நெடுஞ்சாலை 401 பகுதியில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஒன்ராறியோ காவல்த்துறையினர் தகவல் வெளியிடுகையில், நேற்று செவ்வாக்கிழமை கிங்ஸ்டனுக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் இரண்டு விபத்துக்கள் இடம்பெற்றதாகவும், காற்றுடன் கூடிய கடுமையான பனிப்பொழிவான நேற்றைய வானிலை காரணமாக வீதிகள் வழுக்கும் தன்மையுடன் இருந்தமையால் இந்த விபத்துக்கள் சம்பவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் முதலாவது விபத்து நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதாகவும், அதில் […]

The post ஒன்ராறியோ நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி, 28பேர் மருத்துவமனையில் appeared first on TamilStar.com.

முன்னாள் ஜனாதிபதி கலந்து கொண்ட கூட்டத்தில் குழப்பம்

Posted: 15 Mar 2017 09:11 AM PDT

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான தேசிய அமைப்பின் முதலாவது கூட்டம் இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று ஆரம்பமானது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட சிலர் வந்த போது அங்கிருந்த ஒருவர் " ஊ" சத்தம் இட்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ராவய பத்திரிகையின் ஆசிரியர் ஜனரஞ்சன முதலாவதாக உரையாற்ற சட்டத்தரணி பீட்டோ பெர்னாண்டோவை அழைத்தார். இந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி கூட்டம் நடக்கும் மேடைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் ஊ சத்தம் இட்டார். […]

The post முன்னாள் ஜனாதிபதி கலந்து கொண்ட கூட்டத்தில் குழப்பம் appeared first on TamilStar.com.

கலப்பு நீதிமன்றத்துக்கோ, கண்காணிப்பு பணியகத்துக்கோ இடமில்லை! – இலங்கை அரசு அறிவிப்பு

Posted: 15 Mar 2017 09:07 AM PDT

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்ய சர்வதேச மற்றும் கலப்பு நீதிமன்றங்களுக்கு இடமளிக்கமாட்டோம் என பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவித்த அவர், இலங்கைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச நீதிபதிகள் வருவதற்கு இடமளிக்கமாட்டோம். அவர்கள் பலவந்தமாக வருவதற்கும் இடமளிக்கமாட்டோம். உள்ளக விசாரணை மூலம் நீதி வழங்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு எமது நாட்டின் நீதிபதிகளுக்கு திறமை உள்ளது. […]

The post கலப்பு நீதிமன்றத்துக்கோ, கண்காணிப்பு பணியகத்துக்கோ இடமில்லை! – இலங்கை அரசு அறிவிப்பு appeared first on TamilStar.com.

150 அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றிய நல்லாட்சி

Posted: 15 Mar 2017 09:04 AM PDT

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வரும் நேரத்தில் சுமார் 200 அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வந்தாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது அந்த எண்ணிக்கை 50 ஆக குறைந்துள்ளதாகவும் தேவையற்ற விரயங்களை குறைத்ததால்தான் இந்த பலன் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நிதியமைச்சில் இன்று நடைபெற்ற 5 அரச நிறுவனங்களுடனான கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போது நஷ்டத்தில் இயங்கி வரும் மீதமுள்ள 50 அரச நிறுவனங்களையும் […]

The post 150 அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றிய நல்லாட்சி appeared first on TamilStar.com.

பசில் ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Posted: 15 Mar 2017 09:01 AM PDT

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாக பசில் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி குற்றச்சாட்டில் முதலாவது குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ள பசில், இன்று ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் 5 லட்சம் ரூபாய் சரீரப் பிணைகள் இரண்டில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி […]

The post பசில் ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! appeared first on TamilStar.com.

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் : பகிரங்கமாக வெளியே வருவார்..! பழநெடுமாறன்

Posted: 15 Mar 2017 08:58 AM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார். 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் நடத்திய விடுதலைப் போராட்டம் ஒருபோதும் ஓய்ந்து விடாது. அவர் தன்னுடைய மக்களுக்கு ஊட்டியிருக்கம் உணர்வு, அந்த மக்களை தொடர்ந்தும் போராடவே செய்யும். அதனை ஒருபோதும் அடக்க முடியாது. எப்போது…? எந்த கட்டத்தில்..? அவர் பகிரங்கமாக வெளியில் வந்து அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்துவர் என்று அவரால் மட்டுமே சொல்ல முடியும். வேறு யாராலும் சொல்ல முடியாது. தன்னை […]

The post பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் : பகிரங்கமாக வெளியே வருவார்..! பழநெடுமாறன் appeared first on TamilStar.com.

கோத்தா ஒரு நேரம் புலிகளை ஏசுவார், இன்னொரு நேரம் அவர்களுடன் கொஞ்சுவார்! – சுஜீவ சேனசிங்க

Posted: 15 Mar 2017 08:47 AM PDT

கோத்தபாய ராஜபக்ஷ ஒரு நேரத்தில் புலிகளை ஏசுவார். இன்னொரு நேரத்தில் புலிகளுடன் கொஞ்சிக்கொண்டிருப்பார் என சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கோத்தபாய ராஜபக்ஷ ஒரு நேரத்தில் புலிகளை ஏசுவார். இன்னொரு நேரத்தில் புலிகளுடன் கொஞ்சிக்கொண்டிருப்பார். அப்படியாயின் அவர் பதவியில் இருந்தபோது இந்த விடயங்களை செய்திருக்கலாமே. கே.பி. கோத்தாவுடன்தான் […]

The post கோத்தா ஒரு நேரம் புலிகளை ஏசுவார், இன்னொரு நேரம் அவர்களுடன் கொஞ்சுவார்! – சுஜீவ சேனசிங்க appeared first on TamilStar.com.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளை முன்னிலையாகும் முன்னாள் ஜனாதிபதி

Posted: 15 Mar 2017 08:41 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளைய தினம் பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழு அழைத்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரங்களுக்கு பணம் செலுத்தப்படவில்லை என்பதால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து […]

The post ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளை முன்னிலையாகும் முன்னாள் ஜனாதிபதி appeared first on TamilStar.com.

சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைய புதிய பயங்கரவாத தடைச் சட்டம்!

Posted: 15 Mar 2017 08:31 AM PDT

சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைய புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள அனைத்தும் மக்களும் பயமின்றி வாழும் உரிமையை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான பயங்கரவாதத்தை தடுக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதில் இந்த நிகழ்வில் இந்திய துணை ஜனாதிபதி கமீட் அன்சாரி, நேபால் துணைப் பிரதமர் பிம்லேந்திரன் நிதி, […]

The post சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைய புதிய பயங்கரவாத தடைச் சட்டம்! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™