Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எதிரணியினரின் தொடர் அஸ்திரத்தால் சசி அணியினர்... கலக்கம் :அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை கைப்பற்ற பன்னீர் இலக்கு

Posted: 25 Mar 2017 06:14 AM PDT

இரட்டை இலை சின்னத்தை முடக்கியது போல, அ.தி.மு.க., அலுவலகத்தை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணி முடிவு செய்துள்ளதால், சசி அணியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப்பின், அ.தி.மு.க., சசிகலா, பன்னீர் என, இரண்டு அணிகளாகச் செயல்படுகிறது. சசி அணிக்கு, 122 எம்.எல்.ஏ.,க் கள், 37 எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள் ஆதரவு உள்ளது. பன்னீர் அணிக்கு, 11 எம்.எல்.ஏ.,க்கள், 12 எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளது.
சிறு குழு
சசிகலா குடும்பத்தினர் மீதுள்ள வெறுப்பு காரண மாக, தொண்டர்கள், பன்னீர் அணிக்கு ஆதரவாக உள்ளனர். 'பன்னீர் அணியினர் சிறு குழு; அவர்களால் எதுவும் செய்ய ...

சொதப்பிய மந்திரிகளால் விரக்தியில் எம்.எல்.ஏ.,க்கள்!

Posted: 25 Mar 2017 06:21 AM PDT

சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், தி.மு.க.,வினர் ஏறி அடிக்க, அமைச்சர்கள் பின்வாங்கியதும், நிதி அமைச்சர் ஜெயக்குமார் தவறான தகவல்களை கூறி சிக்கிக் கொண்டதும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது குறித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறியதாவது:
முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், முதன் முறையாக, நிதி அமைச்சர் ஜெயக் குமார், பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை மெதுவாக படித்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள், 'சற்று வேகமாக படியுங்கள்' என்றதும், மிக வேகமாக படித்தார்; பின், மெதுவாக படித்தார். மாநிலத்தின் ...

கறுப்பு பண முதலைகளுக்கு வருமான வரித்துறை... எச்சரிக்கை ..! தண்டனையிலிருந்து தப்பிக்க மார்ச் 31 வரை அவகாசம்

Posted: 25 Mar 2017 06:57 AM PDT

புதுடில்லி,:'சட்ட விரோதமாக பணம், 'டிபாசிட்' செய்துள்ளவர்களை கண்காணித்து வருகி றோம்; மார்ச் 31ம் தேதிக்குள், பிரதம மந்திரி வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், கறுப்பு பணம் பற்றிய விபரங்களை தெரிவித்து, கூடுதல் அபராத விதிப்பு மற்றும் தண்டனையை தவிர்க்கலாம்,' என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, கறுப்பு பண ஒழிப்பில், தீவிரம் காட்டி வருகிறது.கறுப்பு பணம் குறித்த தகவல்களை, தானாக முன் வந்து அறிவிக்கும் திட்டத்தை, கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம், 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல், ...

ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்; அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

Posted: 25 Mar 2017 08:24 AM PDT

சென்னை, 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பனீந்தர ரெட்டி, வழக்கு செலவு தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி அதிகாரியான லாரன்சுக்கு, சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக, 'மெமோ' வழங்கப்பட்டது. அதன்பின், எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
அடிப்படை உத்தரவு
ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்ப தால், அதன் மீது உத்தரவு பிறப்பிக்கும்படி, உயர் நீதிமன்றத்தில் லாரன்ஸ் மனு தாக்கல் செய்தார். தகுதி அடிப்படையில் ...

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும்... சேட்டை ...! 271 இந்தியர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

Posted: 25 Mar 2017 09:41 AM PDT

புதுடில்லி, :டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், அங்கு பணி யாற்றும் இந்தியர்களுக்கு வழங்கப்படும், 'எச்1 பி' விசாக்களுக்கு கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது, அங்கு பணியாற் றும், 271 இந்தியர்கள் சட்டவிரோத மாக பணி யாற்றுவதாக கூறி, அவர்களை திருப்பி அனுப்ப போவதாக, டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமை யிலான அரசு பதவியேற்ற பின், அங்கு பணிபுரியும் இந்தியர்களுக்கு எதிராக, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின் றன. பிப்ரவரியில், இந்தியாவைச் சேர்ந்த, தகவல் தொழில்நுட்ப ஊழியர், சுட்டு ...

ராமர் பாலத்தை கட்டியது யார்? அக்டோபரில் துவங்குகிறது ஆய்வு

Posted: 25 Mar 2017 09:45 AM PDT

புதுடில்லி, : ராமேஸ்வரத்தில், 'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கையாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக் கப்பட்டதா என்பதை கண்டறிய, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம், ஆய்வு மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது. ஐ.சி.எச்.ஆர்., எனப் படும், இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய தலைவர் சுதர்ஷன் ராவ் கூறியதாவது:

'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கை யாகஅமைந்ததா அல்லது மனிதர்களால் உரு வாக்கப்பட்டதா என்பதை கண்டறிய, ஐ.சி.எச். ஆர்., திட்டமிட்டுஉள்ளது. வரும் அக்டோபர் முதல் நவம்பர் வரை, இந்த ஆய்வு . மேற் கொள்ளப்படும்.இந்த திட்டத்துக்கு நிதி தேவைப்பட்டால், ...

கங்கை நீரால் சுத்தப்படுத்துவோம் ஆதித்யநாத் பற்றி அகிலேஷ் கிண்டல்

Posted: 25 Mar 2017 09:52 AM PDT

லக்னோ, :''உ.பி., முதல்வர் ஆதித்ய நாத், என்னை விட வயதில் ஒரு வயது மூத்தவர். ஆனால், திறமையில், என்னை விட மிகவும் சிறியவர்,'' என, முன்னாள் முதல்வரும், சமாஜ் வாதி தலைவருமான அகிலேஷ் கூறினார்.

உ.பி.,யில், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், லக்னோ அமைத்து போட்டியிட்ட சமாஜ்வாதி வில், நிருபர் களி டம், அகிலேஷ் யாதவ் கூறிய தாவது: சமாஜ் வாதிக்கு புதிய தலைவர், செப்டம்ப ருக்குள் தேர்வு செய்யப் படுவார். சட்டசபை தேர்தல் தோல்விக் கான காரணங்கள் பற்றி ஆய்வு ...

உ.பி., வாக்குறுதியை காப்பாற்றுமாறு முதல்வர் யோகி மீதான பிடி... இறுகுகிறது!

Posted: 25 Mar 2017 10:32 AM PDT

புதுடில்லி:பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்ய நாத், உ.பி., முதல்வராக பதவியேற்று, ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், தேர்தலின் போது அளித்த, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி, அவருக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

உ.பி., சட்டசபைத் தேர்தலில், மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், பா.ஜ., 312 தொகுதிகளை கைப்பற்றி, வரலாற்றுச் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து, யோகி ஆதித்யநாத், அந்த மாநில முதல்வராக பதவியேற்றார். தேர்தல் பிரசாரத்தின்போது, 'சட்டசபை முதல் கூட்டத் தொடரில், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, பா.ஜ., சார்பில் வாக்குறுதி ...

இலங்கை பயணம்: ரத்து செய்தார் ரஜினி

Posted: 25 Mar 2017 10:36 AM PDT

இலங்கை பயணத்தை ரத்து செய்த நடிகர் ரஜினி, 'நான் ஒரு கலைஞன் மட்டுமே; என்னை அரசியலாக்க வேண்டாம்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும், 2.0 படத்தை, 'லைக்கா' நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அங்கமான, ஞானம் அறக்கட்டளை சார்பில், இலங்கையில் உள்ள வவுனியாவில், 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இந்த வீடுகள், இலங்கைதமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான விழா, ஏப்., 9ல், இலங்கையில் நடக்க உள்ளது. இதில், ரஜினியும் பங்கேற்க இருந்தார். அவர் இலங்கை செல்ல, தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், தன் இலங்கை ...

அடுத்த ஜனாதிபதி யார்?: ஆலோசிக்க உத்தவ் தாக்கரேவுக்கு மோடி அழைப்பு

Posted: 25 Mar 2017 12:06 PM PDT

புதுடில்லி: அடுத்த ஜனாதிபதியாக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து விவாதிக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்குபிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என பா.ஜ., ஆலோசனை நடத்தி வருகிறது. மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள், பார்லி.லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.கள் ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர்.உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள பா.ஜ. தங்களது ஆதரவு வேட்பாளரே ...

இரட்டை இலை முடக்கத்தால் தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்

Posted: 25 Mar 2017 01:13 PM PDT

அ.தி.மு.க.,வில், 'சின்னம்' பிரச்னை எழுந்துள்ளதால், உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில், மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட, 1.50 லட்சம் உள்ளாட்சி பதவிகளை நிரப்ப, 2016 அக்., மாதம் தேர்தல் நடக்க இருந்தது. தி.மு.க., தொடர்ந்த வழக்கால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின், தேர்தலை நடத்த, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட, அரசியல் சூழ்நிலைகளால், தேர்தல் கமிஷன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால், ...

13 வயது மாணவியை சீரழித்த வக்கிர ஆசிரியர்கள்:ராஜஸ்தானில் கொடூரம்

Posted: 25 Mar 2017 01:51 PM PDT

பைகனூர்: ராஜஸ்தானில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 13 வயது பள்ளி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மிரட்டி 8 ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கர்ப்பம்
ராஜஸ்தானின் பைகானூரி்ல உள்ள நோஹா என்ற பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, உடல் நலம்பாதிக்கப்பட்டு நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஏற்கனவே அந்த மாணவி கடந்த சில வருடங்களாக ரத்த புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் அவர் கர்ப்பமாகியிருப்பது தெரியவந்தது. விசாரணையில் ...

தினகரனுக்கு எதிராக திரளும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

Posted: 25 Mar 2017 02:50 PM PDT

ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரனுக்கு எதிராக, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும், மீனவர்களும் ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து, மீனவர் சங்க வட்டாரங்கள் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதியில், வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு, மீனவர்களின் ஓட்டுகள் உள்ளன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மெரினாவில், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
அவர்கள், சசிகலாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், குளிக்கவும், பாத்ரூம் போகவும், மீனவர்கள் உதவினர்.
அந்த போராட்டம், கலவரமாக மாறிய போது, சமூக விரோதிகளால், மீனவர்களின் ...

விவசாயிகள் தற்கொலை பட்டியல் தமிழகத்துக்கு எட்டாவது இடம்

Posted: 25 Mar 2017 03:58 PM PDT

ஆமதாபாத்: வறட்சி காரணமாக தற்கொலை செய்த விவசாயிகள் எண்ணிக்கையில், மஹாராஷ்டிர மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் எட்டாவது இடத்திலும் இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சக பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பொய்த்ததால், விவசாய நிலங்கள் நீரின்றி வறண்டன. விவசாயத்திற்காக கடன் வாங்கிய, விவசாயிகள், அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். வறட்சி, வறுமை, கடன் சுமையால் தத்தளித்த விவசாயிகள் பலர், தற்கொலை செய்தனர்.
முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலம், ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™