Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


வக்கில்களுடன் கமல் ஆலோசனை - ஏன்.?, எதற்கு...?!

Posted:

நடிகர் கமல்ஹாசன், நாளை ஞாயிறன்று முக்கிய வக்கில்களுடன் ஆலோசனை செய்ய உள்ளார். ஜல்லிக்கட்டு, தமிழக அரசியல் என அடுத்தடுத்து டுவிட்டரில் தனது குரல்களை ஓங்கி ஒலிக்க செய்த நடிகர் கமல்ஹாசன், இந்தியா-பிரிட்டன் கலாச்சார விழாவிற்காக லண்டன் சென்றிருந்தார். தற்போது சென்னை திரும்பியுள்ள கமல் நாளை வக்கில்களுடன் திடீர் சந்திப்பு நடத்த ...

அது நான் இல்லை - சஞ்சிதா ஷெட்டி

Posted:

பிரபல பின்னணிப் பாடகியான சுசித்ராவின் டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான பல அதிர்ச்சிகரமான வீடியோக்கள், போட்டோக்கள் திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல இன்னும் பல பிரபலங்களின் லீலைகள் வெளியாகும் என அதிர்ச்சி தகவலும் வெளியாகின. ஆனால் இது எல்லாவற்றையும் சுசித்ரா மறுத்துள்ளார். தனது டுவிட்டர் ...

தென்னிந்திய படங்களில் நடிக்காதது ஏன்.? - கரீனா

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகை கரீனா கபூர். பாலிவுட்டில் இருக்கும் பல நடிகைகள், தென்னிந்தியாவில் ஒரு மொழியிலாவது நடித்து விடுவார்கள். ஆனால் பாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக இருக்கும் கரீனாவோ, இதுவரை ஒரு தென்னிந்திய படங்களில் கூட நடித்தது கிடையாது. இதற்கு என்ன காரணம்.? என்று நடிகை கரீனாவே கூறியிருக்கிறார்.
அதில், ‛‛தென்னிந்திய ...

அவதூறுகளை சந்திக்க வேண்டும் - அமிதாப்

Posted:

பாலிவுட்டின் ‛பிக் பி'- ஆன அமிதாப் பச்சன், டுவிட்டரில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர். இவரை தற்போது வரை சுமார் 2.5 கோடி பேர் பாலோ செய்கிறார்கள். தற்போது ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ‛சர்கார்-3' படத்தில் முதன்மை ரோலில் நடித்திருக்கிறார். சர்கார் படத்தின் டிரைலவர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமிதாப்பிடம், சமூக வலைதளங்களில் ...

பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட சஞ்சய் தத்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத். சிறைவாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கும் சஞ்சய் தத், முதலாவதாக ‛பூமி' என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஆக்ரா அருகே நடக்கிறது. இருதினங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பின் போது அங்கு பாதுகாப்பு நின்றிருந்த சஞ்சய் தத்தின் பாதுகாவலர்கள், ...

சுசித்ரா மீது அனுதாபப்படும் பிரபலங்கள், ஆதரவு பெருகுமா ?

Posted:

திரையுலகில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் சில விஷயங்களைப் பார்த்தால் திரையுலகத்திற்குள்ளேயே பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் எப்படிப்பட்ட விதத்தில் அமைந்துள்ளன என்பது புரிய வரும். கேரளாவில் நடிகை பாவனாவை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்திருக்கிறார்கள். தமிழ் நடிகையான வரலட்சுமி சரத்குமார், ஒரு தொலைக்காட்சி நிறுவன ...

அருணாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவிக்கு சென்ற தந்தி டிவி ஹரி

Posted:

பிரபல வட இந்திய சேனலான ‛டைம்ஸ் ஆப் இந்தியா'-வில் மூத்த செய்தி அதிகாரியாக பணியாற்றியவர் அருணாப் கோஸ்வாமி. இவரின் விவாத பேச்சுகள் பிரபலங்கள். பல வருடங்களாக அந்த சேனலில் பணியாற்றியவர், பின்னர் அந்த சேனலுடன் ஏற்பட்ட மனகசப்பால் அதிலிருந்து வெளியேறினார். இப்போது ‛ரிபப்ளிக்' என்ற புதிதாக சேனலை ஆரம்பித்துள்ளார். விரைவில் இந்த சேனல் ...

ஜாக்கிசான் படங்களுக்கு நிகராக டிஜிட்டல் பாட்ஷாவிற்கு வரவேற்பு - லதா ரஜினி

Posted:

ஜாக்கிச் சானின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட டிஜிட்டல் பாட்ஷாவிற்கு அமோக வரவேற்பு இருக்கிறது என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினியின் திரையுலக வரலாற்றில் மிக முக்கியமான படம் ‛பாட்ஷா'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது 22 ஆண்டுகள் கழித்து டிஜிட்டல் ...

வில்லன் வேடத்தில் அர்ஜூன்!

Posted:

நடிகர் அர்ஜுனுக்கு, கதாநாயகன் மார்க்கெட் இறங்கி விட்டதால், தன் மகள், ஐஸ்வர்யா அர்ஜுனை வைத்து, காதலின் பொன்வீதியில் என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். மேலும், சில படங்களில், குணசித்திர வேடங்களில் நடித்து வரும் அவர், விஷால் நடிக்கும், இரும்புத்திரை படத்தில், வில்லனாக நடிக்கயிருந்த ஆர்யா, விலகி விட்டதை அடுத்து, அப்படத்தில் ...

ஆக் ஷன் படத்தில் ராதிகா ஆப்தே!

Posted:

ரஜினியுடன், கபாலி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த ராதிகா ஆப்தேவுக்கு, அதன்பின் தமிழில் படங்கள் இல்லாததால், பாலிவுட்டுக்கே திரும்பி விட்டார். இந்நிலையில், தற்போது, சவரக்கத்தி என்ற படத்தை இயக்கியுள்ள ஆதித்யா, தன் அடுத்த ஆக் ஷன் படத்திற்கு, ராதிகா ஆப்தேயை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்திற்காக, ...

கவுதம்மேனன் படத்தில் தமன்னா!

Posted:

தெலுங்கில் தமன்னா நடித்த படம், பெல்லி சூப்புலி. இப்படத்தை, தமிழில் தயாரிக்கிறார் இயக்குனர், கவுதம்மேனன். இதில், நாயகியாக நடிக்க, நயன்தாரா மற்றும் காஜல் அகர்வால் உள்ளிட்ட சில நடிகைகளிடம், பேச்சுவார்த்தை நடத்தி வந்ததை அறிந்த தமன்னா, அவரை நேரில் சந்தித்து, குறைந்த சம்பளத்தில், நடித்து தருவதாக சொல்லி, ஒப்பந்தமாகி விட்டார். இதனால், ...

இயக்குனர்களை காக்க வைத்த தனுஷ்!

Posted:

வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் நடித்த தனுஷ், ராஜ்கிரண் நடிப்பில், பவர்பாண்டி என்ற படத்தை இயக்கும் வேலையில் இறங்கியிருப்பதால், அவர் நடித்து வந்த, கவுதம் மேனனின், என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் வெற்றிமாறனின் வடசென்னை படங்கள் பாதியில் நிற்கின்றன. இதில், கவுதம்மேனன், தனுஷுக்காக காத்திருக்காமல், விக்ரம் நடிப்பில், துருவ ...

விஜய சேதுபதியின் வில்லன் ஆர்வம்!

Posted:

ரம்மி, புறம்போக்கு மற்றும் இறைவி உட்பட, சில படங்களில், மல்டி கதாநாயகன் கதைகளில் நடித்துள்ள விஜயசேதுபதி, தற்போது, மாதவனுடன் நடிக்கும், விக்ரம் வேதா படத்தை தொடர்ந்து, மல்டி கதாநாயகன் கதைகளில் நடிக்க, ஆர்வமாக இருப்பதாக கூறி வருகிறார். அத்துடன், விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறி ...

குறும்பட இயக்குனராக ஜோதிகா!

Posted:

மகளிர் மட்டும் படத்தில், குறும் படமெடுக்கும் இயக்குனர் வேடத்தில் நடித்துள்ளார், ஜோதிகா. ஒரு உண்மை சம்பவத்தை, அவர் படமாக்கும் போது, சந்திக்கும் பிரச்னைகள் தான், இப்படம். இதில், ஜோதிகாவுக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், அவரை, 'டப்பிங்' பேச வைத்துள்ளார், இயக்குனர் பிரம்மா. இதற்கு முன், மாயாவி படத்தில் சொந்தக்குரலில், ...

பாலா படத்துக்கு தேர்வானது எப்படி?: ஜி.வி.பிரகாஷ்

Posted:

ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பெண்டா நடித்துள்ள புரூஸ்லீ படம் வருகிற 10ந் தேதி வெளிவருகிறது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி வருமாறு: தன்னை புரூஸ்லீ ரேன்ஞ்சுக்கு நினைத்துக் கொள்ளும் ஒரு இளைஞனின் கதை. நான் நடித்துள்ள பிளாக் ஹியூமர் வகை காமெடி படம். கதை சீரியசாகத்தான் இருக்கும், ஆனால் ரசிகர்கள் சிரிப்பார்கள். ஒரே மாதிரியான காமெடி ...

கடுகு படத்துக்காக புலியாக மாறினேன்: ராஜகுமாரன்

Posted:

விஜய்மில்டன் இயக்கும் கடுகு படத்தில் நடிக்கிறார் தேவயானியின் கணவரும், இயக்குனருமான ராஜகுமாரன். இதில் அவருக்கு ஜோடியாக குற்றம் கடிதல் ராதிகா பிரதிஷ்டா நடிக்கிறார். இதில் ராஜகுமாரன் புலிவேஷ கலைஞராக நடிக்கிறார். இதற்காக அவர் புலிவேஷ கலைஞர்களிடம் 3 மாத பயிற்சி பெற்றார். இதுகுறித்து ராஜகுமாரன் கூறியதாவது:
இந்த கதையை விஜய் ...

முழுநேர நடிகர் ஆன ஆர்ட் டைரக்டர் கரண்

Posted:

இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குனர்கள் இப்படி சினிமாவில் உள்ள அனைவரும் நடிகர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது கலை இயக்குனர் கரணும் முழுநேர நடிகர் ஆகியிருக்கிறார். திருதிரு துறுதுறு படத்தின் மூலம் ஆர்ட் டைரக்டராக அறிமுமான இவர் கோ, அனேகன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகப்போர், போடா போடி உள்பட நூற்றுக்கும் ...

தணிக்கை குழுவினர் உடனடியாக வெளியிட சொன்ன நிசப்தம் படம்

Posted:

சமீபகாலமாக குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. அப்படியான ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது நிசப்தம். சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினரே கண்கலங்கி உள்ளனர். "படத்தை உடனே ரிலீஸ் பண்ணுங்க நாலு பேராவது திருந்துவாங்க" என்று சொல்லி யூ சான்றிதழ் ...

சுசித்ரா டிவிட்டர் கணக்கு முடக்கம்..காரணம் என்ன ?

Posted:

பிரபல பின்னணிப் பாடகியான சுசித்ரா அவருடைய டிவிட்டர் வலை தளத்தில் கடந்த பத்து நாட்களாக வெளியிட்டு வந்த கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தின. அதிலும் நேற்றிரவு முதல் அந்தக் கணக்கில் இருந்து வெளிவந்த ஒவ்வொரு விஷயமும் திரையுலகத்தை அதிரச் செய்யும் விஷயங்களாக இருந்தன. தன்னுடைய கணக்கு மீண்டும் ...

சகாதேவன்-மகாதேவனாக மிரட்டும் மோகன்லாலின் 1971 டீசர்..!

Posted:

ராணுவ பின்னணி சார்ந்த படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டான மேஜர் ரவி இயக்கிய கீர்த்தி சக்ரா, குருசேத்ரா, காந்தகார் என மூன்று படங்களிலுமே மேஜர் மகாதேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன்லால். ராணுவத்தில் பணியாற்றும் மேஜர் மகாதேவன் என்பவர் தன் வாழ்வில் எதிர்கொண்ட ஒவ்வொரு சம்பவமும் ஒரு படமாக மாறியது. இப்போது 1971-பியாண்ட் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™