Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விஷாலுக்கு எதிராக களம் இறங்கும் மூவரணி

Posted:

நடைபெற உள்ள தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் விஷாலை தோற்கடிக்கும் விதமாக மூன்று அணி, ஓர் அணியாக இணைய உள்ளனர்.

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி 2017-19 ஆண்டுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் சங்கத்தை போன்று தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் ஏகப்பட்ட ...

நல்லாசானாய் தகப்பனுமாய் பெற்றதால் உற்றது நல்வாழ்வு: கமல்

Posted:

சென்னை: நடிகர் கமலஹானின் சகோதரர் சந்திரஹாசன் (82) லண்டனில் காலமானார். லண்டனில் உள்ள அவரது மகள் அனு வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானார். சகோதரரின் மறைவு குறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் இரங்கல் செய்தி விடுத்துள்ளார்,

அதில் கூறியிருப்பதாவது: நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. ...

என் கணவரை நான் விவாகரத்து செய்யபோவது இல்லை ஆலியா சித்திக்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் நவாசுதீன் சித்திக்கும் ஒருவர். சில தினங்களுக்கு முன் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் அவரின் மனைவி ஆலியா சித்திக் இடையில் பிரச்சனை என்று இருவரும் விவாகரத்து செய்ய போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் ஆலியா சித்திக் இந்த செய்தியை முழுமையாக மறுத்து இருக்கிறார். இவ்வாறான வதந்தியான செய்திகளை ...

டிசம்பர் 8ஆம் தேதி ரிலீசாகும் பக்ரே ரிட்டர்ன்ஸ்

Posted:

பாலிவுட்டில் ஹிட் கொடுத்த காமெடி படங்களில் பக்ரே படமும் ஒன்று. இப்படம் 2013-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது . முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது . இப்படத்தை எக்செல் எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது . இயக்குநர் மிரிக்தீப் சிங் லம்பா இப்படத்தை இயக்கிவருகிறார் . ...

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்..!

Posted:

சினிமாவை பொறுத்தவரை வளர்ந்து வரும் நடிகர்கள் ரசிகர்களுடன் போட்டோ எடுப்பது, செல்பி எடுப்பது நின்று நிதானமாக அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வது என அனைத்து வேலைகளையும் பொறுப்பாக செய்வார்கள்.. ஆனால் ஒரு படம் ஓடிவிட்டாலோ பெரும்பாலான நடிகர்களிடம் வான்டட் ஆக பந்தா வந்து ஒட்டிக்கொள்கிறது.. ஆனால் நியாயமாக நடக்கும் ஒரு சில ...

தனுஷின் மலையாளப்பட ஷூட்டிங் துவங்கியது..!

Posted:

விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் ஒப்பிட்டால் தனுஷுக்கு மலையாள திரையுலகில் ரசிகர்களின் வரவேற்பு ஒரு படி கமிதான். ஆனால் தனுஷுக்கும் மலையாள திரையுலகுக்குமான உறவு இந்த மூவரின் பங்களிப்பை விட கொஞ்சம் அதிகம் என்றே சொல்லலாம்.. காரணம் மற்ற மூவரும் செய்யாத விஷயத்தை மலையாளத்தில் தனுஷ் செய்துள்ளார். ஆம்.. இவர்கள் மூவரும் இன்னும் ...

ஆதரவற்ற வயதான பெண்மணியின் ஏக்கம் தீர்த்த மோகன்லால்..!

Posted:

கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் வயதான ஒரு பெண்மணி பேசும் வீடியோ ஒன்று வைரலாக உலா வந்தது.. அந்த வீடியோவில் பேசிய பெண்மணி, தனக்கு மோகன்லாலை மிகவும் பிடிக்கும் என்றும் அவரை நேரில் பார்க்க ஆவலாக இருப்பதாகவும், திருவனந்தபுரத்தில் இருக்கும் தன்னை நேரம் இருந்தால் மோகன்லால் வந்து சந்திப்பாரா என்றும் ஏக்கத்துடன் பேசியிருந்தார்.. ...

தமிழனானேன்: தற்காப்பு கலை பற்றிய படம்

Posted:

புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் தமிழனானேன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கி நடித்திருக்கிறார் சதீஷ் ராமகிருஷ்ணன், அவருக்கு ஜோடியாக வந்தனா வரதராஜன், நடித்துள்ளார். சரவணன், பிரித்தா, திருலோகச்சந்தர், அத்விக், ஷக்தி, ஜான் என்ற புதுமுகங்களும் நடித்துள்ளனர்.

விக்னேஷ் அருள் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரகு ...

மிக மிக அவசரத்தில் பெண் கான்ஸ்டபிள்களின் வாழ்க்கை

Posted:

கங்காரு, அமைதிப்படை படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கி வரும் படம் மிக மிக அவசரம். இதில் கோரிப்பாளையம் ஹரீஷ், ஸ்ரீப்ரியங்கா, வழக்கு எண் முத்துராமன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படம் ஒரு பெண் கான்ஸ்டபிளின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதுகுறித்து இயக்குனரும், ...

அது இது எதுவில் கவனம் செலுத்தும் மா.கா.பா

Posted:

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி அது இது எது. சிவகார்த்திகேயன் மூலம் புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியை இப்போது மா.கா.பா.ஆனந்த் நடத்தி வருகிறார். சிவகார்த்திகேயன் போலவே மா.கா.பாவும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். வானவராயன் வல்லவராயன் படத்தில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு நவரச திலகம், கடலை, அட்டி ...

மக்களை சிரிக்க வைத்தவரை சினிமா சிரிக்க வைக்கவில்லை

Posted:

சமீபத்தில் மறைந்த நடிகர் தவக்களை பற்றிய செய்திகள் ஒரு சிறிய செய்தியாக கடந்து போய்விட்டது. ஆனால் மக்களை சிரிக்க வைத்த அந்த கலைஞனை சினிமா சிரிக்க வைக்காமல் போய்விட்டது என்பதே உண்மை. அவரைப் பற்றி ஒரு சிறிய பிளாஷ்பேக்...

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நவாப்பேட்டைதான் சொந்த ஊர். 1975ம் ஆண்டு பிறந்த தவக்களையின் இயற்பெயர் ...

எஸ்பிபிக்கு தனது பாட்டை பாட தடைப்போட்ட இளையராஜா

Posted:

அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி நடத்தும் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தி: கடந்த வாரம் அமெரிக்காவின் சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் ...

ஏப்ரல் 14ல் ரஜினியின் புதிய படம் ஆரம்பம் ?

Posted:

'கபாலி' படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் '2.0' படத்தின் சில காட்சிகள் மட்டுமே படமாக வேண்டியுள்ளது. அது எப்படியும் இந்த மாதத்தில் முடிந்துவிடும் ...

யு-டியுப்பில் வெளியானது பாம்புசட்டை டிரைலர் !

Posted:

ஆடம்தாசன் இயக்கத்தில் பாபிசிம்ஹா-கீர்த்தி சுரேஷ், தாமிரபரணி பானு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் பாம்புசட்டை. அனைத்துகட்ட பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான இப்படம், சூர்யாவின் சிங்கம்-3 வெளியானபோதே திரைக்கு வர இருந்தது. ஆனால் அப்போது சரியானபடி தியேட்டர் கிடைக்காததால் பின்வாங்கியது. இந்த நிலையில், மார்ச் ...

3வருடத்துக்கு கிட்டே வராதீங்க!- ஜி.வி.பிரகாஷ்

Posted:

50 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டவர் ஜி.வி.பிரகாஷ். முன்னணி இசையமைப்பாளரான நேரத்தில் திடீரென்று டார்லிங் படம் மூலம் ஹீரோவாக ரசிகர்களை சந்தித்த அவர், தற்போது கோடம்பாக்கத்தில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.

பகலில் நடிப்பு, இரவில் இசையமைப்பு என பிசியாக செயல்பட்டு வருகிறார் ...

சசிகுமார் படத்தில் வில்லனாக நடிக்கிறார் அர்ஜூன்!

Posted:

சசிகுமார் நடித்த குட்டிப்புலி படத்தை இயக்கியவர் முத்தையா. அதையடுத்து கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கியவர் மீண்டும் சசிகுமார் நடிப்பில் கொடிவீரன் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படமும் கிராமத்து மண்வாசனைக்கதையில் உருவாகிறது. மேலும், சசிகுமார் நடித்த படங்களில் இப்படம் அதிக பட்ஜெட்டில் மெகா படமாக உருவாகிறது. இப்படத்தில் பல ...

ரம்யாகிருஷ்ணன், ஸ்ரேயாரெட்டிக்கு பிறகு நான்தான்! -சொல்கிறார் மைனா சூசன்

Posted:

பிரபுசாலமன் இயக்கத்தில் விதார்த்-அமலாபால் நடித்த படம் மைனா. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்த தம்பி ராமைய்யாவுக்கு தேசிய விருது கிடைத்து. மேலும், இந்த படத்தில் அதிரடியான வில்லியாக நடித்தவர் சூசன். அந்த படத்தில் அவரது வில்லி வேடம் பெரிய அளவில் ரீச் ஆனது. முக்கியமாக, வெளியிடங்களில் சூசனை பார்க்கும் ...

கதையின் நாயகனாகிறார் மைம் கோபி!

Posted:

பல படங்களில் வில்லன் உள்பட பலவேறு கேரக்டர்களில் நடித்தவர் மைம்கோபி. தற்போது திரைக்கு வந்துள்ள கட்டப்பாவை காணோம் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர், தற்போது வேலைக்காரன், நெடுநெல்வாடை உள்பட பல படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில், விரைவில் ஒரு படத்தில் தான் கதையின் நாயகனாக நடிக்கப்போவதாக சொல்கிறார் ...

சினிமாவில் நடித்து சம்பாதித்து கார் வாங்கிய சுரபி!

Posted:

விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தில் நாயகியாக நடித்தவர் டெல்லி அழகி சுரபி. அந்த படத்திற்கு பிறகு வேலையில்லா பட்டதாரி, புகழ் படங்களில் நடித்தவர் தற்போது அடங்காதே படத்தில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ள சுரபிக்கு எல்லா படங்களுமே ஹிட்டாக அமைந்திருப்பதால் அங்கு பேசப்படும் ...

கன்னட சீரியல்களில் தமிழன் போய் நடிக்க முடியுமா?- நடிகர் அசோக் கேள்வி

Posted:

சின்னத்திரைகளில் நூற்றுக்கணக்கான சீரியல்களில் நடித்தவர் அசோக். டப்பிங் சீரியல்களின் ஆதிக்கத்தினால் தமிழ் சீரியல்களில் நடிப்பவர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு இல்லை. இந்தநிலையில், தமிழில் உருவாகி வரும் சீரியல்களுக்கு சமீபகாலமாக வேற்று மொழி நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து வருகிறார்கள். இதனால் தமிழ் சீரியல் நடிகர் நடிகைகளின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™