Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாலியல் பலாத்காரம் செய்பவர்களை துாக்கில் போட வேண்டும்: ரெஜினா

Posted:

சென்னை பெண்ணாக இருந்தாலும், தமிழை விட, தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. நீண்ட இடைவெளிக்கு பின், தமிழில் இவர் நடித்து வெளி வர உள்ளது, மாநகரம் படம்; இதுகுறித்த தன் அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ரெஜினா.

மாநகரம் படம் பற்றி சொல்லுங்க ?
இந்த படத்தை, புதுமுக இயக்குனர், லோகேஷ் கனகராஜ் ...

கரைசேருவாரா ஜி.வி.பிரகாஷ்?

Posted:

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, தன் துள்ளலான இசையின் மூலம், தமிழக இளைஞர்களை கவர்ந்த, ஜி.வி.பிரகாஷ், தன் அடுத்த படமான, புரூஸ்லியை ரொம்பவே எதிர்பார்க்கிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சில படங்கள், சரியாக போகவில்லை. இதனால், தன் முழு கவனத்தையும் புரூஸ்லி படத்தில் செலுத்தி வருகிறார். இந்த படம், நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் ...

திருப்புமுனை வருமா?

Posted:

கோலிவுட்டின் பிரபலமான இயக்குனர், பாக்யராஜின் மகனாக இருந்தபோதும், தனக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற வருத்தம், சாந்தனுவுக்கு உண்டு. ஆனால், தற்போது, சிருஷ்டி டாங்கேவுடன் நடிக்கும் முப்பரிமாணம் படம், தன் நீண்ட நாள் வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் போக்கும் என, நம்பிக்கையுடன் இருக்கிறார் சாந்தனு. இதுவரை, 'சாக்லேட் ...

வில்லத்தனத்தால் வாய்ப்பு போச்சே!

Posted:

சகுனி படத்தில் நடித்தபோது, பிரணிதாவின் அழகில், கோலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்கள் சொக்கிப்போனது உண்மை. இதனால், தமிழில் பெரிய இடத்தை பிடிப்பார் என பேசப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. 'ராசியில்லாத ஹீரோயின்' என, அழுத்தமாக முத்திரை குத்தி விட்டனர். கன்னட படங்களில் நடித்து, காலத்தை ஓட்டி வந்த அவர், சமீபத்தில் எனக்கு ...

மீண்டும் ஹீரோ அவதாரம்!

Posted:

அறிமுகமானபோது, ஹீரோவாக நடித்த அருண் விஜய், அதற்குபின், போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், தானே சொந்தமாக படம் தயாரித்து, அதில் நடித்தார். இதன்பின், கவுதம் மேனனின், என்னை அறிந்தால் படத்தில், கொடூர வில்லனாக அவதாரம் எடுத்து, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 'இனிமேல், வில்லனாகத் தான் நடிப்பார்' என, அனைவரும் கூறினர். ஆனால், தற்போது, ...

கோலிவுட்டில் திடீர் கிராக்கி!

Posted:

தடையற தாக்க, புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்து, ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாததால், கோலிவுட்டிலிருந்து காணாமல் போனவர், ரகுல் ப்ரீத்சிங். சற்று இடைவெளிக்கு பின், என்னமோ ஏதோ என்ற படத்தில் தலைகாட்டினார். ஆனால், அந்த படமும் வெற்றிப்பெறவில்லை. இதற்கு இடையில், தெலுங்கின் முன்னணி ரசிகர்களின் ஆஸ்தான நடிகை என்ற அந்தஸ்தை பெற்று, அங்கு, ...

இளையராஜாவுக்கு ஆந்திர அரசின் நந்தி விருது

Posted:

விசாகப்பட்டினம்: ,ஆந்திர அரசின் நந்தி விருது 'எட்டோ வெள்ளிப்போயிந்தி மனசு' படத்தில் சையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் வெளியாகும் படங்களை கௌரவிக்கும் விதமாக ஆந்திர மாநில அரசால் 1964-ல் இருந்து நந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது.நந்தி விருதுகள். 2011-க்குப் பிறகு ஆந்திரா, ...

ஏப்.,2-ல் தயாரிப்பாளர் சங்க தேர்தல் : இறுதிப்பட்டியில் வெளியீடு

Posted:

சென்னை:தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் தலைவர் பதவிக்கு டி, சிவா, விஷால் , கேயார் உட்பட 5 பேர் போட்டியிடுகின்றனர்

2017_19 ம் ஆண்டுக்கான தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் ஏப்ரல்2 ல் சென்னை அண்ணா நகர் கந்தசாமி கல்லூரியில் நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் தேர்தல் அதிகாரியாக இரு ந்து தேர்தலை ...

‛போலீஸ் அடிச்சா திருப்பி அடி... - இது என் கூற்றல்ல : கமல்

Posted:

இதோ வருகிறேன் நெடுவாசல் என்ற பெயரில் கமல் எழுதியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது, ஆனால் இது தனது கூற்று அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சமீபகாலமாக தமிழகத்தில் நிலவும் அசாத்திய சூழ்நிலைகளுக்கு கமல் குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு, அரசியல் மாற்றம்... என ஒவ்வொரு பிரச்னையிலும் தனது கருத்தை தைரியமாக ...

ரஜினிகாந்த்திற்கு ஜோடி, வித்யா பாலன் பதில் என்ன ?

Posted:

'கபாலி' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த், பா.ரஞ்சித் இருவரும் மீண்டும் இணையும் படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகள் படம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே நடந்து வருகின்றன. ரஜினிகாந்த் நாயகன் என்றதும் அடுத்த உடனே அவருடைய கதாபாத்திரம் என்னவாக இருக்கும், 'கபாலி' படம் போலவே வயதான ...

கைவசம் 10 படங்கள்.... ஜிவி பிரகாஷின் கால்ஷீட் புல்

Posted:

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகன் ஜிவி பிரகாஷ் குமார். வசந்தபாலன் இயக்கிய ‛வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் அதன்பின்னர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து குறுகிய காலத்திலேயே நம்பர்-1 இசையமைப்பாளராக உயர்ந்தார். இசைப்பயணம் நன்றாக சென்று கொண்டிருக்கும்போதே திடீரென நடிகராக உருவெடுத்தார். ...

ஆர்யாவுக்கு உதவும் சூர்யா, மாதவன்

Posted:

கதாநாயக நடிகர்களுக்குள் போட்டியும் பொறாமையும் மலிந்திருந்த கோடம்பாக்கத்தில், சக நடிகர்களுடன் நட்பாக இருக்க முடியும் என இளம் நடிகர்களுக்கு கற்றுக் கொடுத்தவர் ஆர்யாதான். சக ஹீரோக்களை மாமன், மச்சான் என்று அழைத்து இளம் நடிகர்கள் மத்தியில் நட்புப்பாலத்தை அமைத்தவர் ஆர்யாதான்.

சிசிஎல் என்கிற நட்சத்திர கிரிக்கெட் போட்டி ...

‛பாகுபலி-2'வை கண்டு அஞ்சிய சல்மான்

Posted:

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் பாகுபலி. ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில், சரித்திர படமாக வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவே இப்படத்தை ஆவலாய் எண்ணி காத்திருக்கிறது. ...

மீண்டும் புயலைக் கிளப்புமா 'பாட்ஷா'

Posted:

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படங்களிலேயே மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் 'பாட்ஷா'. 1995ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளிவந்த இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. 1991ம் ஆண்டு வெளிவந்த ஹிந்திப் படமான 'ஹம்' படத்தின் கதையை மையமாக வைத்து ரீமேக் செய்யப்பட்ட படம். ரஜினியின் ஆக்ஷன் நடிப்பும், சென்டிமென்ட் நடிப்பும், ...

விஜய் 'செயின்' கொடுத்தார், வினியோகஸ்தர் 'செயின்' விற்றார்...

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த ஒரு வாரமாக ஒரே ஒரு 'வாட்ஸ் அப்' வீடியோ பெரும் புயலைக் கிளப்பிவிட்டுவிட்டது. பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் 7 ஹீரோக்களின் படங்களின் வசூல் நிலைமை இதுதான் என்று சொன்ன விஷயங்கள் சலசலப்பை அதிகப்படுத்திவிட்டன.

வியாபாரம், வசூல் என்றாலே எவ்வளவு என்று தெரிந்து கொள்ள ஆசைப்படும் ...

‛சர்கார்-3' பர்ஸ்ட் லுக் வெளியானது

Posted:

பிரபல சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ‛சர்கார்' படங்களின் வரிசையில் தற்போது இதன் மூன்றாம் பாகமான ‛சர்கார் 3' உருவாகி வருகிறது. முதல் இரண்டு படங்களில் நடித்த அமிதாப் பச்சன், மூன்றாம் பாகத்திலும் தொடருகிறார். அவருடன் ஜாக்கி ஷெரப், யாமி கவுதம், மனோஜ் பாஜ்பாய், ரோனித் ராய், அமித் சாத் உள்ளிட்ட பலர் ...

விலகிய தடை ; முதல் ஆளாக நுழைந்த அஜித் படம்..!

Posted:

கர்நாடகாவில் தமிழ்ப்படங்கள் நேரடியாகவோ அல்லது டப்பிங் செய்யப்பட்டோ ரிலீஸாகி செமத்தியாக கல்லா கட்டிவந்தன. இதனால் கன்னடப்படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நீண்ட நாட்களாக டப்பிங் படங்கள் கர்நாடகாவில் திரையிடப்பட கூடாது என தடைவிதிக்கப்பட்டிருந்தது.. அந்த தடை இந்த வாரத்தில் இருந்து விலகுகிறது.. தடையை ...

அல்லு அர்ஜுன் 'டிஜே' டீசர் டிஸ்லைக் பின்னணியில் பவன் கல்யான் ரசிகர்கள்..!

Posted:

தெலுங்கு திரையுலகில் ஹீரோக்களின் ரசிகர்கள் எந்த அளவுக்கு இறங்கி எதிரி நடிகரை அட்டாக் செய்வார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் அல்லு அர்ஜுனின் 'டிஜே' படத்தின் டீசர் அதிக அளவில் டிஸ்லைக்குகள் பெற்ற விவகாரம்.. இத்தனைக்கும் இந்த டீசர் தற்போதைய நிலவரப்படி 63 லட்சத்துக்கும் அதகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, சுமார் 129053 ...

லிட்டில் ஜானாக மாறிய தைமூர் அலிகான்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகையான கரீனா கபூருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு தைமூர் அலிகான் என்று பெயர் வைத்துள்ளார். இப்பெயர் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆனால் இதைப்பற்றி கரீனா-சைப் தம்பதியர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் தனது மகனுக்கு செல்லப்பெயர் ஒன்றை ...

ஹாட்ரிக் ஹிட் ;50 கோடி கிளப்பில் இணைந்த மோகன்லால் படம்..!

Posted:

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு கடந்த வருடம் பொன்மழையாய் வசூல் கொட்டும் வருடமாக அமைந்தது.. கடந்த வருடத்தின் இறுதி மாதங்களில் மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான 'ஒப்பம்' மற்றும் புலி முருக' என இரண்டு படங்களும் சூப்பர்ஹிட்டாகின. இதில் 'ஒப்பம்' 100 கோடியை தாண்டியது.. புலி முருகன் 150 கோடியை வசூலித்து சாதனை பட்டியலில் புதிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™