ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அன்றாட நிகழ்வுகளை அறிவியல் பூர்வமாக அணுக பயன்படும் வீடியோ பதிவுகள்
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
- பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
- மரகதக் கல்லால் ஆன மீனாட்சி அம்மன் சிலை
- மார்ச் 1 முதல் 15 வரை ஜோதிடப் பலன்கள் !
- ஜோதிடம் என்பது அறிவியலா?
- new india insurance company
- வாழ்த்துகள் – ராஜா.
- வேலன்:-அனிமேஷன் பிளேயர்.
- தில்லியில் வின்டேஜ் கார் அணிவகுப்பு
- நான் தேடும் இதழ்கள்
- சரிவர பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளை (எம்.பி.,எம்.எல்.ஏ.) திருப்பி அழைக்க வகை செய்யும் மசோதா
- சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்
- கொடுப்பதால் புண்ணியம் வருமா…?
- திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா
- சுய அறிமுகம்
- எல் நினோவின் தாக்கம் இவ்வாண்டில் 50% அதிகமாக இருக்கும்: ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவிப்பு
- உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4–வது பதக்கம் 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் ஜிதுராய் வெண்கலம் வென்றார்
- பொருளாதார பிரச்சினை காரணமாக ஒலிம்பிக் பதக்கத்தை ரூ.2¼ கோடிக்கு விற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை
- தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!
| அன்றாட நிகழ்வுகளை அறிவியல் பூர்வமாக அணுக பயன்படும் வீடியோ பதிவுகள் Posted: 01 Mar 2017 11:17 AM PST நாம் வாழும் இந்த "அவசர" வாழ்க்கையில், நம்மை நேரடியாகவே மறைமுகவாகவோ பாதிக்க கூடிய விசியமானலும் "நேரம் இல்லை " என்ற "காரணத்தினால் " நாம் கவனிக்க மறந்தவைகளை பற்றி எளிய முறையில் அறிந்துகொள்ள உதவும் வீடியோக்களை இந்த தொடர் பதிவுகளில் பார்ப்போம். நாம் புரிந்துகொள்ளாத அல்லது தவறாக புரிந்து கொண்டவைகளுக்கான தெளிவுக்கு இவை உதவும் என நம்புகிறேன் |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III Posted: 01 Mar 2017 11:03 AM PST வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் ! |
| பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! Posted: 01 Mar 2017 11:02 AM PST பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108 நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் ! ![]() |
| மரகதக் கல்லால் ஆன மீனாட்சி அம்மன் சிலை Posted: 01 Mar 2017 10:27 AM PST - அம்மனின் சக்தி பீடங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். – இந்த பீடத்திற்கு 'ராஜமாதங்கி சியாமள பீடம்' என்று பெயர். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலையானது மரகதக் கல்லால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. – அன்னை மீனாட்சிக்கு பல பெயர்கள் இருந்தாலும், அங்கயற்கண்ணி என்ற திருநாமம், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது – . மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால், அம்மனுக்கு இந்தப் பெயர் வந்ததாக கூறுகிறார்கள் |
| மார்ச் 1 முதல் 15 வரை ஜோதிடப் பலன்கள் ! Posted: 01 Mar 2017 10:25 AM PST மேஷம் மார்ச் 1 முதல் 15 வரை தன்னம்பிக்கைக்கு மதிப்பளித்து அதனால் வெற்றி பெறும் உங்களுக்கு, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். எனவே மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். குருவின் பார்வையால் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதியே பார்க்கிறார். மேலும் லாபஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில், வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். ... |
| Posted: 01 Mar 2017 10:16 AM PST ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ... |
| Posted: 01 Mar 2017 09:42 AM PST மோட்டார்இன்சூரன்ஸ் கம்பெனியில் ஏஜென்ட்டாக சேர வழிமுறைகள் பற்றிய விளக்கம் வேண்டும் |
| Posted: 01 Mar 2017 09:38 AM PST இங்கு லீப் வருடத்தில் பிறந்த ஒரு மாணவர் பிறந்ததினம் கொண்டாடுகிறார். அழைப்பு வந்தது. நான்கு வருடத்திற்கு ஒரு முறை ஏன் கொண்டாட வேண்டும். 29 இல்லையென்றால் மார்ச் ஒன்றில் பிறந்திருப்பேன், அதனால் கொண்டாடுகிறேன் என்றார். அதனால் ராஜா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். பெப் 29 ஐ மறந்து மார்ச் ஒன்றில் பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும்…………….. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்த நாள் நல் வாழ்த்துகள் |
| Posted: 01 Mar 2017 08:14 AM PST அனிமேஷன் படங்கள் எனப்படும் GIF பைல்களை பிளே செய்து பார்க்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். வரும் விண்டோவில் அனிமேஷன் படங்களை தேர்வு செய்தோ அல்லது டிராக் அன்ட்டிராப் செய்யுங்கள். படம் உங்களுக்கு ஓட ஆரம்பிக்கும. இதில் உள்ள பிளே மற்றும் ஸ்டாப் பட்டனை அடுத்து உள்ள பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் அனிமேஷனின் ... |
| தில்லியில் வின்டேஜ் கார் அணிவகுப்பு Posted: 01 Mar 2017 08:13 AM PST - -- தில்லியில் நடைபெற்ற வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. ஆண்டுக்கொரு முறை வின்டேஜ் அண்ட் கிளாசிக் கார் என்ற பெயரில் நடைபெறும் பேரணியில் தங்கள் பழைய காலத்து காருடன் கலந்து கொள்வதில் பெருமிதம் கொண்டனர். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட கார்கள் ஒருசேர நின்றது, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிட தக்கது. - -------------------------------------- |
| Posted: 01 Mar 2017 08:09 AM PST நான் தேடும் இதழ்கள் இந்த சுட்டியை தட்டினால் இந்த வார இதழ்கள் கிடைக்குமாம். மற்றுமோர் லிங்கை கொடுத்து மாத இதழ்கள் பெறலாமாம். தினசரிகள் வேண்டுமெனில் திறக்கவேண்டுமாம் குறிப்பிட்ட தளங்களை. நான் தேடும் இதழ்கள் நாள்தோறும் என்னிடம் வர நானென்ன செய்யவேண்டும், நவின்றிடுவீர் நல்லவர்களே!! ரமணியன் |
| சரிவர பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளை (எம்.பி.,எம்.எல்.ஏ.) திருப்பி அழைக்க வகை செய்யும் மசோதா Posted: 01 Mar 2017 05:04 AM PST சரிவர பணியாற்றாத மக்கள் பிரதிநிதிகளை (எம்.பி.,எம்.எல்.ஏ.) திருப்பி அழைக்க வகை செய்யும் மசோதாவை மக்களவையில் பாஜக எம்.பி. வருண் காந்தி கொண்டு வந்துள்ளார். 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை (எம்.பி., எம்.எல்.ஏ.) வாக்காளர்கள் திருப்பி அழைத்துக் கொள்ள வழிவகை செய்யப்படவில்லை. இந்நிலையில், பாஜக எம்.பி.யும், மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தி மக்களவையில் தனிநபர் மசோதா பிரிவின்கீழ் ஒரு மசோதாவைக் கொண்டு வந்துள்ளார். அதில் ... |
| சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் Posted: 01 Mar 2017 04:53 AM PST - - சாதாரணமாக ஆலயங்களில் வழிபடப்படும் சிவமூர்த்தம், லிங்க மூர்த்தம் என அழைக்கப்படுகிறது. ஈசனுக்கும் பார்வதிக்கும் நடுவில் விநாயகப் பெருமான் வீற்றுள்ள வடிவம், சோம கணபதி மூர்த்தம் என்ற வழங்கப்படுகிறது. பாசுபசு அஸ்திரத்தைப் பெற கடுந்தவம் செய்த அர்ஜூனனுக்கு வேடுவ வடிவில் காட்சியளித்த ஈசனை கிராம மூர்த்தி என்பர். பார்வதிக்கும் ஈசனுக்கும் இடையே முருகப்பெருமான் இருக்கும் வடிவம் சோமாஸ் சுந்தர மூர்த்தம் என்று வணங்கப்படுகிறது. அன்னை பார்வதி விநாயகர், முருகனுடன் ஈசன் எருதில் அமர்ந்தருளும் ... |
| Posted: 01 Mar 2017 04:43 AM PST பிச்சை யெடுத்தே வாழ்வ தென்றுயிர் பேணிடு பலரைப் பார்க்கின்றோம் – அவர் இச்சை யுடனதைச் செய்கிறா ரென்றால் இவர்களை யந்நிலை விட்டவர்யார் ? அமைதியை வேண்டிக் கோயிலே சென்றால் அங்கவர் கைகளை நீட்டுகின்றார். – நாம் அமைதி யுடனெதோ போடுகின் றோமதை ஆங்கவர் வாங்கி அமைகின்றார். கொடுக்குங் கைமேல் இருப்பதும் பெறுங்கை கீழே இருப்பதும் இயல்நிலையாம்; –இந்தக் கொடுப்பவர் பெறுபவர் இருப்பது நலமா ? கோவிலுள் போவோர் நினைப்பதில்லை. கல்வியில் யாசகம் சிறந்ததொன் றெனவே கழறுதல் கற்றோம்; அதுசரிதான்; — உண்ண இல்லையே ... |
| திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா Posted: 01 Mar 2017 04:39 AM PST - பிப்ரவரி-28 – திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்: 10-ந்தேதி தேரோட்டம் – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு இத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருக்கோவில் செப்புக் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது. மாலையில் ... |
| Posted: 01 Mar 2017 03:03 AM PST பெயர்: குலோத்துங்கன் சொந்த ஊர்: மதுரை / திருச்சி ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் பொழுதுபோக்கு: படித்தல், பாடல் கேட்டல், மிமிக்ரி, தாள வாத்தியங்களில் ஆர்வம், நடத்தல் தொழில்: நூலகர் மேலும் என்னைப் பற்றி: ரமணரின் போதனைகளில் ஈடுபாடு, இந்திய வரலாறு, தத்துவம், இந்திய மட்டும் பன்னாட்டு மொழிகள் அறிந்து கொள்வதில் ஆர்வம் |
| எல் நினோவின் தாக்கம் இவ்வாண்டில் 50% அதிகமாக இருக்கும்: ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவிப்பு Posted: 28 Feb 2017 09:25 PM PST சிட்னி: 2017-ம் ஆண்டில் 'எல் நினோ'வின் தாக்கம் 50% அதிகமாக இருக்கும் என ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 'எல் நினோ' எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக மழை காலத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவதுடன், கோடை காலத்தில் தீவிரமான வெயில் வாட்டி வதைக்கும். இதனால் அளவுகடந்த வறட்சி, வெயில், மழை ஆகியவை ஏ ற்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில் "கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடந்த 15 நாட்களாக வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ... |
| Posted: 28 Feb 2017 06:51 PM PST - - புதுடெல்லி, உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று இந்திய வீரர் ஜிதுராய் வெண்கலப்பதக்கம் வென்றார். இது இந்தியா பெற்ற 4–வது பதக்கமாகும். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தில் 35 பேர் கலந்து கொண்டனர். தகுதி சுற்று முடிவில் வியட்நாம் வீரர் சுயாங் வின் ஹோயாங், சீன வீரர்கள் கிபெங் பு, வெய் யாங், ஜப்பான் வீரர் தோமோயுகி மட்சுடா, சீன வீரர் ஜான்யி ... |
| பொருளாதார பிரச்சினை காரணமாக ஒலிம்பிக் பதக்கத்தை ரூ.2¼ கோடிக்கு விற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை Posted: 28 Feb 2017 06:45 PM PST - Olympic gold medal gymnast Olga Korbut in 2017. - அரிசோனா, பெலாரஸ் நாட்டில் பிறந்தவர் ஒல்கா கோர்பட். ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான இவர் ஒலிம்பிக் போட்டியில் சோவியத் யூனியனுக்காக பங்கேற்றார். 1972–ம் ஆண்டு முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தனது 17 வயது வயதில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்று கலக்கினார். 1976–ம் ஆண்டு மான்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளியும் வென்றார். சோவியத் யூனியன் உடைந்த பிறகு 1991–ம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து ... |
| தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு! Posted: 28 Feb 2017 04:58 PM PST - தமிழகத்தில் 2001 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 1,135 காட்டு யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் வேட்டையாடப்பட்டதன் மூலம் 28 யானைகளும், மின்வேலி மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக 65 யானைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இந்தத் தகவல்கள், வனத் துறையிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்கப்பட்டதில் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 2013-ஆம் ஆண்டில் மட்டும் 126 யானைகள் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உயிரிழந்துள்ளன. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
