Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஐநாவில் சமர்ப்பிக்க மகஜர் தயாரிக்கும் வடமாகாண சபை

Posted: 25 Feb 2017 08:31 AM PST

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு சமர்ப்பிப்பதற்கான மகஜர் ஒன்றினை வடமாகாண சபை தயாரித்து வருவதாக கூறியிருக்கும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா எதிர்வரும் மார்ச் மா தம் 9ம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில் அங்கீகரிக்கப்பட்டு மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். வடமாகாண சபையின் சமகால நிலமைகள் தொடர்பாக இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், […]

The post ஐநாவில் சமர்ப்பிக்க மகஜர் தயாரிக்கும் வடமாகாண சபை appeared first on TamilStar.com.

பின்னோக்கி செல்வோம் எனக்கூற எந்தக் கட்சிக்கும் உரிமை இல்லை: சுசில்

Posted: 25 Feb 2017 08:26 AM PST

தொகுதி முறைமைக்கு அமைய தேர்தலை நடத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முழு ஒத்துழைப்பையும் வழங்கும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொகுதி முறைமை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வர்த்தமானில் அது அறிவிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சில திருத்தங்கள் மாத்திரம் செய்யப்படவுள்ளது. அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியே தொகுதி முறைமை அடிப்படையிலான தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், இம்முறை மட்டும் விகிதாசார முறைப்படி தேர்தலுக்கு […]

The post பின்னோக்கி செல்வோம் எனக்கூற எந்தக் கட்சிக்கும் உரிமை இல்லை: சுசில் appeared first on TamilStar.com.

தமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கு வலைவீசும் மஹிந்த! சந்திப்புகளுக்கும் ஏற்பாடு

Posted: 25 Feb 2017 08:17 AM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் முஸ்லிம் சமூகங்களின் தலைவர்களைச்சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் 7ம் திகதியளவில் இடம்பெறக்கூடும் எனக்குறிப்பிடப்படுகின்றது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஆதரவைப்பெற்றுக் கொள்வதற்காகவே மஹிந்த ராஜபக்ச இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். சிறுபான்மை மக்களின் வாக்குகளே தமது தோல்விக்குக் காரணம் என கடந்த ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் மஹிந்த குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காகசிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெரும் […]

The post தமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கு வலைவீசும் மஹிந்த! சந்திப்புகளுக்கும் ஏற்பாடு appeared first on TamilStar.com.

முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரின் கணக்கில் வைப்பிலிடப்பட்ட மில்லியன் கணக்கான ரூபா பணம்! – விசாரணையில் அம்பலம்

Posted: 25 Feb 2017 08:14 AM PST

தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரின் வங்கிக் கணக்கில் 3.2 மில்லியன் ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளதாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இலங்கை வங்கியில் உள்ள மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் நடப்புக் கணக்கிலேயே பல பிரதேசங்களில் இருந்து பணம் வைப்பிலிடப்பட்டமை தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை, அக்கரைப்பற்று, தம்பிலுவில், நுகேகொட, கொள்ளுப்பிட்டி, திருநெல்வேலி, பம்பலப்பிட்டி ஆகிய இடங்களில் இருந்து இவரது கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளது. இவ்வாறு வைப்பிலிட்ட பணம் மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரண, மற்றும் ஐ.எம்.ஜி.குமார, […]

The post முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரின் கணக்கில் வைப்பிலிடப்பட்ட மில்லியன் கணக்கான ரூபா பணம்! – விசாரணையில் அம்பலம் appeared first on TamilStar.com.

தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் எமது சடலத்தை புதைத்திருப்பார்கள்..!

Posted: 25 Feb 2017 08:11 AM PST

கடந்த தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் எமது சடலத்தை புதைத்திருப்பார்கள் அல்லது சமாதி கட்டியிருப்பார்கள் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கலுக்கு இலக்காகியவர்களின அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வருடாந்தக் கூட்டம் இன்றைய தினம் காலை கொழும்பு விஹாரமகாதேவி வெளியரங்கு மைதானத்தில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தலில் வழங்கப்படுகின்ற அத்தனை வாக்குறுதிகளும் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பொய்யானவைகளாகும். அப்படியான வாக்குறுதிகளை நாங்கள் ஜனவரி 8 ஆம் திகதி வழங்கவில்லை. நாங்கள் […]

The post தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் எமது சடலத்தை புதைத்திருப்பார்கள்..! appeared first on TamilStar.com.

மத்திய அரசுக்கு மாகாணசபைகளைக் கலைக்கும் அதிகாரம்! – வழிநடத்தல் குழுவில் இணக்கம்

Posted: 25 Feb 2017 08:07 AM PST

மாகாண சபைகளை கலைக்க அல்லது அவற்றின் அதிகாரங்களை மீளப்பெற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில் அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இணக்கம் தெரிவித்திருக்கிறதென அரசியலமைப்புச் சட்டத்தரணியும் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பியுமான ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் சுதந்திரம் என்பவற்றுக்ெகதிராக செயற்படும் எந்தவொரு மாகாண சபையையும் கலைப்பதற்கோ அல்லது அதன் அதிகாரங்களை மீளப் பெறுவதற்கோ ஏற்ற வகையில் மத்திய அரசுக்கு வலு சேர்க்கக்கூடிய […]

The post மத்திய அரசுக்கு மாகாணசபைகளைக் கலைக்கும் அதிகாரம்! – வழிநடத்தல் குழுவில் இணக்கம் appeared first on TamilStar.com.

தனது பெயரில் நிதிமோசடி : மஹிந்த ஆலோசனை

Posted: 25 Feb 2017 08:05 AM PST

எனது பெயரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் நிதியமைச்சிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறையில் உள்ள விகாரை ஒன்றிக்கு வழிபாட்டிற்கு சென்ற மஹிந்த ராஜபக்ஸ ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இதுமிகப்பெரிய மோசடியாகும். எனவே நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது பற்றி எனது சட்டத்தரணியிடம் சட்ட ஆலோசனைப் […]

The post தனது பெயரில் நிதிமோசடி : மஹிந்த ஆலோசனை appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™