Tamil Star |
- யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! – கட்டுப்படுத்துமாறு சிவிகே அவசர கோரிக்கை
- அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது குறித்து பேச வேண்டும்! கிழக்கு முதல்வர்
- வடக்கு- கிழக்கு இணைப்பு, சமஷ்டியை அடைய முடியாமைக்கு கூட்டமைப்பே காரணம்! – ஆனந்தசங்கரி
- பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் விரைவில் கையளிக்கப்படும் சாத்தியம்! விக்னேஷ்வரன்
- இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவில் நாமல்..!
- சுமந்திரனை கொலை செய்ய திட்டம் : 2ஆவது சந்தேகநபரிடம் விசேட விசாரணை
- சுதந்திரக் கட்சியின் வாக்குகளை சிதறடிக்கவே கருணாவின் புதிய கட்சி! – சாந்த பண்டார
| யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! – கட்டுப்படுத்துமாறு சிவிகே அவசர கோரிக்கை Posted: 15 Feb 2017 06:31 AM PST யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக மீண்டும் உருவெடுத்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் போன்ற சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் சமீப காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. வாள்வெட்டுச் சம்பவங்கள், கஞ்சா கடத்தல்கள் போன்றன மீண்டும் தலைதூக்கியுள்ளன. வடக்கு மாகாண சபை இயங்கினாலும் இந்த விடயத்தில் சட்டம் சம்பந்தமான அதிகாரிகள் […] The post யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! – கட்டுப்படுத்துமாறு சிவிகே அவசர கோரிக்கை appeared first on TamilStar.com. |
| அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது குறித்து பேச வேண்டும்! கிழக்கு முதல்வர் Posted: 15 Feb 2017 06:29 AM PST தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும்; எங்களுடைய இனத்துக்கிடையே உள்ள அதிகாரங்களை எவ்வாறு முரண்படாமல் பகிர்ந்து கொள்ளலாம் என்பதை தெளிவாக பேச வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். கல்குடாத் தொகுதியில் குடிநீர் விநியோகம் சம்பந்தமான கலந்துரையாடல் ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது இதில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! அரசியல் பரவலாக்கல் அல்லது இனப் […] The post அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது குறித்து பேச வேண்டும்! கிழக்கு முதல்வர் appeared first on TamilStar.com. |
| வடக்கு- கிழக்கு இணைப்பு, சமஷ்டியை அடைய முடியாமைக்கு கூட்டமைப்பே காரணம்! – ஆனந்தசங்கரி Posted: 15 Feb 2017 06:26 AM PST வடக்கு – கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி என்பன அடைய முடியாத காரியங்களல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் பேச்சுக்களிலும் அறிக்கைகளிலும் நடவடிக்கைகளிலும் சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகமே அதனை எட்ட முடியாதிருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்த சங்கரி, தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தரப்பினர் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகம் முற்றுமுழுதாக நீக்கப்படும் வரை எதுவும் செய்யமுடியாதென அவர் மேலும் தெரிவித்தார். கடந்த […] The post வடக்கு- கிழக்கு இணைப்பு, சமஷ்டியை அடைய முடியாமைக்கு கூட்டமைப்பே காரணம்! – ஆனந்தசங்கரி appeared first on TamilStar.com. |
| பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் விரைவில் கையளிக்கப்படும் சாத்தியம்! விக்னேஷ்வரன் Posted: 15 Feb 2017 06:23 AM PST பிலக்குடியிருப்பு மக்களுடைய பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கு சென்றிருக்கும் நிலையில், ஜனாதிபதி மக்களுடைய காணிகளை மக்களிடமே கையளிக்கும்படி கூறியுள்ளதாக நாம் அ றிகிறோம். இந்நிலையில் பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் மக்களிடம் விரைவில் கையளிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். பிலக்குடியிருப்பு மக்கள் 16ம் நாளாக இன்றைய தினம் வரையில் தமது காணிகளை வழங்ககோரி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக முதலமைச்சரிடம் இன்றைய தினம் கேள்வி எழு ப்பபட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். முதலமைச்சர் […] The post பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் விரைவில் கையளிக்கப்படும் சாத்தியம்! விக்னேஷ்வரன் appeared first on TamilStar.com. |
| இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவில் நாமல்..! Posted: 15 Feb 2017 06:21 AM PST இலஞ்ச ஊழல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம், இலஞ்ச ஊழல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தற்போது நாமல் ராஜபக்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து நாமல் ராஜபக்ச மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. எனினும் குறித்த வழக்கு விசாரணைகளுக்கு நாமல் ராஜபக்ச சமூகமளிக்காததன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த […] The post இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவில் நாமல்..! appeared first on TamilStar.com. |
| சுமந்திரனை கொலை செய்ய திட்டம் : 2ஆவது சந்தேகநபரிடம் விசேட விசாரணை Posted: 15 Feb 2017 06:19 AM PST பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரை ரி.ஐ.டி பொறுப்பில் எடுத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஐவரில் இரண்டாவது சந்தேகநபரான வேலாயுதம் விஜேய் குமார் என்பவரையே பயங்கரவாத புலனாய்வாளர்கள் (ரி.ஐ.டி) விசாரணை செய்ய உள்ளனர். எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு வெளியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர்களால் அழைத்துச் செல்லப்பட்டு […] The post சுமந்திரனை கொலை செய்ய திட்டம் : 2ஆவது சந்தேகநபரிடம் விசேட விசாரணை appeared first on TamilStar.com. |
| சுதந்திரக் கட்சியின் வாக்குகளை சிதறடிக்கவே கருணாவின் புதிய கட்சி! – சாந்த பண்டார Posted: 15 Feb 2017 06:16 AM PST சிறிலங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கருணா புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார். சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு வடக்கு கிழக்கில் கிடைக்கும் வாக்குகளை சிதறடிப்பதற்காவே இந்தக் கட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா சுதந்திர இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். இலங்கையில் யாரும் அரசியல் கட்சிகளை ஸ்தாபிப்பதற்கு ஜனநாயக உரிமை உள்ளது, ஆனால் வடக்கு கிழக்கில் வளர்ந்து வரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அணியை வீழ்த்துவதற்கு யாருக்கும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்தார். The post சுதந்திரக் கட்சியின் வாக்குகளை சிதறடிக்கவே கருணாவின் புதிய கட்சி! – சாந்த பண்டார appeared first on TamilStar.com. |
| You are subscribed to email updates from TamilStar.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |