Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


அமெரிக்காவின் வரிவிதிப்பு எண்ணத்திற்கு கனடா எச்சரிக்கை

Posted: 09 Feb 2017 10:08 AM PST

கனடாவுடனான எல்லை தாண்டிய வர்த்தக நடவடிக்கைகளுக்கு புதிதாக வரிவிதிக்கும் அமெரிக்காவின் எண்ணம் தொடர்பில் கனடா தனது முன்னெச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் எல்லை தாண்டிய வர்த்த நடவடிக்கைகளுக்கு புதிதாக வரி விதிப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றனர். அமெரிக்காவின் முன்னைய அரசாங்கங்கள் நீண்ட காலமாக விவாதித்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வரிவிதிப்பு விடயங்களை மீளாய்வு செய்யும் விவாதங்களையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அரசாங்கத்தின் […]

The post அமெரிக்காவின் வரிவிதிப்பு எண்ணத்திற்கு கனடா எச்சரிக்கை appeared first on TamilStar.com.

தீயிலிருந்து தப்பிக்க யன்னல் ஊடக குதித்தவர்!!

Posted: 09 Feb 2017 10:02 AM PST

இன்று அதிகாலை ஒஷாவா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, தீயிலிருந்து தப்பிப்பதற்காக யன்னல் ஊடாக குதித்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Simcoe street மற்றும் King street பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவல் ஏற்பட்ட வேளையில் குறித்த அந்த வீட்டின் மாடிப் பகுதியில் நான்கு ஆண்கள் இருந்ததாகவும், தீயில் இருந்து தப்பிப்பதற்காக யன்னல் ஊடாக குதித்த ஒருவரின் மீது பற்றியிருந்த […]

The post தீயிலிருந்து தப்பிக்க யன்னல் ஊடக குதித்தவர்!! appeared first on TamilStar.com.

சுதந்திர தின நிகழ்வில் முன்வரிசை ஆசனத்துக்காக சண்டையிட்ட சரத் பொன்சேகா!

Posted: 09 Feb 2017 09:57 AM PST

இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தினம் காலிமுகத்திடலில் நடைபெற்ற போது, விருந்தினருக்கான ஆசனங்களை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் வஜித அபேவர்தன, அமைச்சர் சரத் பொன்சேகாவினால், பாரிய பிரச்சினை ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. முன் வரிசையில் தனக்கு ஆசனம் ஒன்றை வழங்கவில்லை என்றால் சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்கப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அழுத்தம் பிரயோகித்தமையாலேயே நெருக்கடி ஏற்பட்டது. அரசாங்க நிகழ்வின் போது ஆசனம் வழங்கும் […]

The post சுதந்திர தின நிகழ்வில் முன்வரிசை ஆசனத்துக்காக சண்டையிட்ட சரத் பொன்சேகா! appeared first on TamilStar.com.

அன்று தேசத் துரோகிகள் இன்று தேசிய வீரர்கள் : ஐவரடங்கிய குழு நியமனம்

Posted: 09 Feb 2017 09:41 AM PST

ஐரோப்பியர்கள் இலங்கையை கையகப்படுத்தி ஆட்சி செய்த காலத்தில், தேசத் துரோகிகளாக பெயர் குறிப்பிடப்பட்டவர்களை, தேசிய வீரர்களாக பரிந்துரை செய்ய ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவானது நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவானது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதன் தலைவராக பேராசிரியர் மாலனி அந்தகம நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் குறித்த குழுவில், பேராசிரியர் கே.என்.ஓ தர்மதாஸ, களனி பல்கலைக்கழக தொல்பொருள் கல்வித் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் […]

The post அன்று தேசத் துரோகிகள் இன்று தேசிய வீரர்கள் : ஐவரடங்கிய குழு நியமனம் appeared first on TamilStar.com.

திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டு விட்டார் மஹிந்த! – இரங்குகிறார் சுப்பிரமணிய சுவாமி

Posted: 09 Feb 2017 09:36 AM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்ட வகையில் தோற்கடிக்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்தவர்கள் இன்று அரசியல் தலைமைத்துவத்தில் வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிபிசி உலக சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலில் போது இதனைத்தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தமிழ் மக்கள் தற்போது பயங்கரவாத அச்சமின்றி வாழ்கின்றனர். நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை தோற்கடித்து மஹிந்த ராஜபக்ஷ சமாதானத்தை ஏற்படுத்தினார். மஹிந்த ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட […]

The post திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டு விட்டார் மஹிந்த! – இரங்குகிறார் சுப்பிரமணிய சுவாமி appeared first on TamilStar.com.

32 வருடங்களுக்கு முன் வழங்கிய அதிகாரங்களை மீளப்பெற நினைப்பது ஏற்க முடியாது – சீ.வி.விக்னேஸ்வரன்

Posted: 09 Feb 2017 07:57 AM PST

உள்ளூராட்சி மன்றங்களுக்கு 1985.03.01ம் ஆண்டு 01ம் இலக்க சுற்று நிரூபம் ஊடாக கையளிக்கப்பட்ட அதிகாரங்களை மீள பெறுவதற்கு பாரிய நகர மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தை தடைசெய்ய வேண்டும் எனக்கோரும் பிரேரணையை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மாகாண சபையின் 84ம் அமர்வில் சமர்ப்பித்திருக்கின்றார். வடமாகாண சபையின் 84ம் அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே முதலமைச்சர் மேற்படி பிரேரணையை சபைக்கு சமர்ப்பித்திருக்கின்றார். இந்த பிரேரணையை சபைக்கு சமர்ப்பித்து முதலமைச்சர் கருத்து […]

The post 32 வருடங்களுக்கு முன் வழங்கிய அதிகாரங்களை மீளப்பெற நினைப்பது ஏற்க முடியாது – சீ.வி.விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com.

புதிய அரசியலமைப்புச் சட்டம் – சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார்

Posted: 09 Feb 2017 07:55 AM PST

புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக 13வது அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் தீர்வை வழங்குவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியுடன் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் தயாராக இருக்கின்றது. எனினும் புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் இதுவரை ஒரு பந்தி கூட எழுதப்பட்டு […]

The post புதிய அரசியலமைப்புச் சட்டம் – சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் appeared first on TamilStar.com.

வடக்கு, கிழக்கில் இன்னமும் இராணுவ ஆட்சியா? – நாடாளுமன்றில் கேள்வி

Posted: 09 Feb 2017 07:51 AM PST

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தைப் போல, இந்த ஆட்சியிலும் வடக்கு, கிழக்கில் இன்னமும் இராணுவ ஆட்சியா தொடர்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பினார். நிதி அமைச்சின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிவசக்தி ஆனந்தன் எம்.பி இந்தக் கேள்விக்கணைகளை முன்வைத்தார். முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராமத்தைச் சேர்ந்த 84 குடும்பங்கள் தமது காணிகளை மீண்டும் வழங்குமாறு கோரி கடந்த 8 நாட்களாக தொடர் […]

The post வடக்கு, கிழக்கில் இன்னமும் இராணுவ ஆட்சியா? – நாடாளுமன்றில் கேள்வி appeared first on TamilStar.com.

முன்னாள் ஜனாதிபதியிடம் இழப்பீடு கோரும் முன்னாள் ஜனாதிபதியின் மகன்

Posted: 09 Feb 2017 07:42 AM PST

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் 25 கோடி ரூபாவை இழப்பீடாக கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனக்கு சொந்தமான டுபாய் வங்கிக் கணக்கில் ஒரு பில்லியன் டொலர் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறியிருந்தமை தொடர்பாகவே இந்த இழப்பீட்டை கோரி தான் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுக்கு என்ன நடக்கின்றது என்பதை சிறிகொத்த மற்றும் அலரி மாளிகையில் வைத்தே தீர்மானிப்படுகிறது. சந்திரிக்கா அம்மையாரும் […]

The post முன்னாள் ஜனாதிபதியிடம் இழப்பீடு கோரும் முன்னாள் ஜனாதிபதியின் மகன் appeared first on TamilStar.com.

இரணைதீவில் மீளக்குடியேற முடியாது! – ரணில் அறிவிப்பு

Posted: 09 Feb 2017 07:38 AM PST

கடற்படைக்கு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால், இரணைதீவில் மீளக்குடியேற பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமரிடம் இருந்து நேரடியான பதில்களைப் பெற்றுக்கொள்வதற்கான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான எஸ். சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் விக்கிரமசிங்க இதனைத் குறிப்பிட்டார். பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இரணைதீவு பகுதியில் இருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள் 26 […]

The post இரணைதீவில் மீளக்குடியேற முடியாது! – ரணில் அறிவிப்பு appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™