Tamil News | Online Tamil News |
- உ.பி., தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள்... மிரட்சி!:ஓட்டு சதவீத மாற்றம் வெற்றியை பாதிக்குமா?
- சிறை உணவு: சசிகலா அடம்
- நீதி பயணம் செல்ல பன்னீர் அணி முடிவு : சசி குடும்பத்திற்கு எதிராக மக்களை திரட்டுகின்றனர்
- தமிழகத்தில் ஆரம்பித்தது மன்னார்குடி கும்பலின்... பினாமி ஆட்சி!: 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வரானார் இடைப்பாடி பழனிச்சாமி: தலையாட்டி பொம்மைகளாக 30மந்திரிகள் நியமனம்
- இடைப்பாடி வசம் ஏராளமான துறைகள்!
- தினகரன், வெங்கடேஷ் மீதான வழக்குகள் விரைந்து முடிக்க மத்திய அரசு உத்தரவு
- சொத்து குவிப்பில் தீவிரமாக செயல்பட்ட சசிகலா, இளவரசி: சுதாகரன் திருமண செலவு கணக்கிலும் குளறுபடி
- பதவியேற்ற அரை மணி நேரத்தில் அராஜகம்; பன்னீர்செல்வம் வீடு மீது கல் வீசி தாக்குதல்
- தமிழகத்தின் புதிய முதல்வராக இடைப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு
- 'ரூ.10 கோடி கட்டாமல் சசி தப்ப முடியாது'
- எம்.எல்.ஏ.,க்களுக்கு வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு?
- சசிகலாவின் மூன்று நிபந்தனைகள்; முதல்வர் பழனிச்சாமி கலக்கம்
- சிறையில் சசி ஜாமீன் குறித்து ஆலோசனை
- அரசு பங்களாவை காலி செய்யுங்க!: பன்னீருக்கு பறந்தது 'நோட்டீஸ்'
| உ.பி., தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள்... மிரட்சி!:ஓட்டு சதவீத மாற்றம் வெற்றியை பாதிக்குமா? Posted: 16 Feb 2017 08:37 AM PST லக்னோ:ஓட்டு சதவீதத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களும், கட்சிகளின் தேர்தல் வெற்றியை பெரிய அளவில் பாதிக்கும் நிலையில், உ.பி., தேர்தல் களம் அமைந்துள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமை யிலான ஆட்சி நடக்கும், உ.பி.,யில், 403 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து வருகிறது. ஏழு கட்டங்களாக நடக்க வுள்ள தேர்தலில், இரண்டு கட்டம் முடிந்துள்ளது.உ.பி., சட்டசபைக்கு, கடந்த இரு முறை நடந்த, தேர்தல் புள்ளி விபரங்களை ஆய்வு செய்யும் போது, ஓட்டு சதவீதத்தில் ஏற்படும் சிறிய மாற்றமும், கட்சிகளின் வெற்றி வாய்ப்பில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது தெரிய ... |
| Posted: 16 Feb 2017 08:54 AM PST பெங்களூரு : சிறை உணவை சாப்பிட மறுத்து, சசிகலா அடம் பிடித்ததால், தனியார் ஓட்டலில் இருந்து உணவு எடுத்துச் செல்லப்படுகிறது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வட்டாரங்கள் கூறியதாவது: சிறையில் அடைக் கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகியோர், ஒரே அறையில் தான் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, நீண்ட நேரம், இரு வரும் துாங்காமல் பேசிக் கொண்டிருந்தனர். சசிகலா, சிறையில் கொடுத்த உணவை சாப்பிட மறுத்து, பழங்களை மட்டும் சாப்பிட் டார். நேற்று காலை, 5:30 மணிக்கு, இருவரும் எழுந்தனர். தரையில் படுத்திருந்ததால், இருவரும் மன உளைச்சல் அடைந்தனர். இதனால், சிறப்பு ... |
| நீதி பயணம் செல்ல பன்னீர் அணி முடிவு : சசி குடும்பத்திற்கு எதிராக மக்களை திரட்டுகின்றனர் Posted: 16 Feb 2017 09:01 AM PST 'எம்.ஜி.ஆர்., நீதி கேட்டு பயணம் சென்றது போல, இரண்டாவது நீதிப் பயணத்தை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் துவக்க உள்ளார்' என, அவரது ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்தனர். அதன் விபரம்: கே.பி.முனுசாமி: ஜெ., ஆன்மா, இன்று துயரத்தில் ஆழ்ந்துள்ளது. யாரால், ஜெ.,க்கு இவ்வளவு பெரிய சோதனை வந்ததோ, அந்த குடும்பத்தால், ஆட்சி நடக்க வேண்டும் என, கவர்னர் அழைப்பு விடுத்து உள்ளார். ஜெயலலிதாவின் உண்மை தொண்ட னுக்கும், அவருக்கு துணை நிற்கும் தொண்டர் களுக்கும், சோதனை ஏற்பட்டுள்ளது. அந்த சோதனையை, பன்னீர்செல்வம் தலைமையில், நிச்சயம் ... |
| Posted: 16 Feb 2017 09:03 AM PST தமிழகத்தில் மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சி நேற்று துவங்கியது. அதன் 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வராக இடைப்பாடி பழனிச் சாமி பொறுப்பேற்றார். சசி சொந்தங்கள் போடும் உத்தரவுகளை ஏற்று, தலையாட்டி பொம்மை களாக செயல்பட 30 மந்திரிகளும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம் புதிய முதல்வராக பொறுப் பேற்றார். அவரது ஆட்சியில் அரசு நிர்வாகம் வேகமாக செயல்பட துவங்கியது. மத்திய - மாநில உறவும் மேம்பட ஆரம்பித்தது. இதற்கிடையில், 'வர்தா' புயல் நிவாரண பணிகள், ஜல்லிக்கட்டு போராட்டம், அதை முறியடிக்க அவசர சட்டம், ... |
| இடைப்பாடி வசம் ஏராளமான துறைகள்! Posted: 16 Feb 2017 09:07 AM PST முதல்வராக பொறுப்பேற்ற, இடைப்பாடி பழனிச்சாமிக்கு, இன்றைய நிலவரப்படி, இரண்டு அமைச்சர்கள் வகித்த, அத்தனை துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. நிதி, உள்துறை, பொதுப்பணி, நெடுஞ்சாலை என, முக்கியத்துவம் வாய்ந்த எல்லா துறை களும், இடைப்பாடி வசம் உள்ளன. ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, உள்துறை மட்டும், அவர் வசம் இருந்தது. பன்னீர்செல்வம் நிதியை கவனிக்க, பொதுப்பணித் துறை ,நெடுஞ்சாலையை இடைப்பாடி கவனித்தார். பின்னர், பன்னீர் முதல்வரானதும், நிதியையும் சேர்ந்து கவனித்து வந்தார். பொதுவாக, முதல்வருக்கு என்று இயல்பாகவே பொதுத்துறை, பொது நிர்வாகம், உள்துறை போன்ற ... |
| தினகரன், வெங்கடேஷ் மீதான வழக்குகள் விரைந்து முடிக்க மத்திய அரசு உத்தரவு Posted: 16 Feb 2017 09:22 AM PST ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் அதிகார மையங்களாக உருவெடுத்துள்ள, சசிகலா உறவினர்கள் தினகரன், வெங்கடேஷ் மீதான வழக்கு விசாரணை வேகம் பெறுகிறது. கிடப்பில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு, அமலாக்கத் துறைக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி காலங்களில், சசிகலாவுடன் சேர்ந்து, அவரது உறவினர்கள், அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டனர். கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்குடன் வலம் வந்தனர். அவர்களின் ஆட்டம் எல்லை மீறியதும், 2011ல், அவர்களை, ஜெயலலிதா ஓரங்கட்டினார்.சசிகலாவை தவிர, அவரின் மற்ற உறவினர் களின் தலையீடு இல்லாமல் ... |
| சொத்து குவிப்பில் தீவிரமாக செயல்பட்ட சசிகலா, இளவரசி: சுதாகரன் திருமண செலவு கணக்கிலும் குளறுபடி Posted: 16 Feb 2017 09:29 AM PST சொத்து குவிப்பு வழக்கில், செலவு கணக்காக, 11.56 கோடி ரூபாய் காட்டப்பட்டுள்ளது. இதில், பெரிய செலவு தொகை, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் தொடர்பானது. சுதாகரன் திருமணம், 1995 செப்டம்பரில் நடந்தது. 6.45 கோடி ரூபாய், திருமண செலவு என, லஞ்ச ஒழிப்பு துறை கூறியுள்ளது. வழக்கு விசாரணையின் முடிவில், செலவு தொகையை, மூன்று கோடி ரூபாயாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் குறைத்து விட்டது. ஆனால், கர்நாடக உயர் நீதி மன்றமோ, 28.68 லட்சம் ரூபாய் தான் என, முடிவுக்கு வந்தது.திருமணத்துக்கான பந்தல், உணவு, மினரல் தண்ணீர், தாம்பூலம், டைட்டன் கடிகாரங்கள், சில்வர் பிளேட்டுகள், திருமண ஆடை ... |
| பதவியேற்ற அரை மணி நேரத்தில் அராஜகம்; பன்னீர்செல்வம் வீடு மீது கல் வீசி தாக்குதல் Posted: 16 Feb 2017 09:35 AM PST சென்னை:புதிய முதல்வராக, சசிகலா ஆதரவா ளர் இடைப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற அரை மணி நேரத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீட்டின் மீது, ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியது; இதில், அ.தி.மு.க., தொண்டரின் மண்டை உடைந்தது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, அமைச்சர்களுக்கான பங்களா ஒன்றில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே, அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீடு உள்ளது. நேற்று மாலை, புதிய அமைச்சரவையில், அவரும் பதவியேற்றார்.புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற அரை மணி நேரத்தில், சி.வி.சண்முகம் வீட்டிற்கு வெளியே ... |
| தமிழகத்தின் புதிய முதல்வராக இடைப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு Posted: 16 Feb 2017 09:39 AM PST பத்து நாட்கள் இழுபறிக்கு பின், தமிழகத்தின், புதிய முதல்வராக, இடைப்பாடி பழனிச்சாமி நேற்று பதவியேற்றார். அவருடன், 30 அமைச் சர்களும் பொறுப்பேற்றனர். பதவியேற்பு விழாவில், சசிகலா குடும்பத்தினரும் பங்கேற்றனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 டிச., 5ல் இறந்ததை தொடர்ந்து, முதல்வராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார்; இரண்டு மாதங்கள் சிறப்பாக செயல்பட்டார். கட்சியிலும், பொது மக்களிடத்திலும் அவருக்கு செல்வாக்கு அதிகரித்தது. அதனால், பிப்., 5ல், சசிகலா அவரை பதவி விலக வைத்தார். சட்டசபை கட்சி தலைவராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எதிராக, முதல்வர் ... |
| 'ரூ.10 கோடி கட்டாமல் சசி தப்ப முடியாது' Posted: 16 Feb 2017 11:01 AM PST
கோவை : 'சசிகலா உள்ளிட்ட மூவரும், தலா, 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த தவறினால், வழக்கில் காட்டப்படாத சொத்துக்களை ஜப்தி செய்வதற்கு, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்' என, சீனியர் வக்கீல்கள் கூறினர். சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, நான்காண்டு சிறை, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், 10 கோடி ரூபாய் அபராத தொகையை, கோர்ட்டில் உடனடியாக ... |
| எம்.எல்.ஏ.,க்களுக்கு வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு? Posted: 16 Feb 2017 12:10 PM PST
கூவத்தூர்: கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர் அணிக்கு தப்பி செல்வதை தடுக்க சசி தரப்பில் இருந்து வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக ஏற்பட்ட அரசியல் பரபரப்பு சூழ்நிலையில் முக்கிய திருப்பமாக நேற்று மாலை சசிகலா தரப்பு அ.தி.மு.க., சார்பில் இடைப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். கவர்னர் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ... |
| சசிகலாவின் மூன்று நிபந்தனைகள்; முதல்வர் பழனிச்சாமி கலக்கம் Posted: 16 Feb 2017 01:09 PM PST
சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு, உள்துறை, போலீஸ், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நிதி நிர்வாகம், பொதுப் பணி, நெடுஞ்சாலை என, முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆலோசனை: எடப்பாடி பழனிச்சாமியை கவர்னர் பதவியேற்க அழைப்பு விடுத்ததும், அவர், அ.தி.மு.க., பொதுச் செயலர் தினகரனுடன், அமைச்சரவையில் இடம் பெற வேண்டியவர்கள் குறித்து, ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் பொதுச் செயலர் கொடுத்திருக்கும் பட்டியல் இதுதான். இதில் மாற்றம் செய்ய வேண்டும் ... |
| சிறையில் சசி ஜாமீன் குறித்து ஆலோசனை Posted: 16 Feb 2017 02:13 PM PST பெங்களூரு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை ஜாமீனில் எடுப்பது குறித்து வக்கீல்கள் சிறையில் சசியை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஜாமீன்: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதி மன்ற உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சசியின் வக்கீல்கள் செந்தில், மற்றும் அசோகன் ஆகியோர் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது சசியின் ஜாமீன் குறித்து பேசப்பட்டதாகவும் தெரிகிறது. ... |
| அரசு பங்களாவை காலி செய்யுங்க!: பன்னீருக்கு பறந்தது 'நோட்டீஸ்' Posted: 16 Feb 2017 02:58 PM PST புதிய முதல்வராக, இடைப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற சிறிது நேரத்தில், 'அரசு பங்களாவை உடனே காலி செய்ய வேண்டும்' என, 'நோட்டீஸ்' அனுப்பி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, நெருக்கடி தரப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக, நேற்று(பிப்.,16) வரை இருந்த, பன்னீர்செல்வம், 2011 முதல், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இங்கு இருந்தபடியே, சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைகளை, மேற்கொண்டார். நெருக்கடி: தமிழகத்தின் புதிய முதல்வராக, இடைப்பாடி பழனிச்சாமி நேற்று பொறுப்பேற்றார். இதனால், முதல்வர் பதவி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 17,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |