Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஷால் உதவி

Posted:

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நேதாஜி நகர் மக்களுக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஷால் செய்துள்ளார். கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை சென்னை, எண்ணூர் அருகே உள்ள நேதாஜி நகரில் தீ விபத்து ஏற்ப்பட்டது. இதனால் அங்கே வசித்து வரும் 25 குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. உதவியின்றி தவித்து வந்த அந்த குடும்பங்கள் பற்றி அறிந்த நடிகர் விஷால் உடனே ...

நடிகை ரோகினிக்கு வனிதா விருது

Posted:

சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்துக்காக புகழ்பெற்ற வனிதா விருதை நடிகை ரோகினி பெற்றுள்ளார்.
மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‛ஆக்சன் ஹீரோ பிஜு'. இப்படத்தில் ரோகினி முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இதைப்போன்று ஜான் பால் ஜார்ஜ் இயக்கத்தில் வெளிவந்த கப்பி படத்திலும் ரோகினி ...

ஜனநாயகத்திற்கே வெட்ககேடான நாள் - சித்தார்த்

Posted:

தமிழக அரசியல் நிலவி வரும் பதட்டமான சூழலில் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறார். இதுதொடர்பாக திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக அனைவரும் இதை ஏற்கும் மனநிலையில் இல்லாமல் தான் உள்ளனர். இது தொடர்பாக நடிகர் சித்த்தார்த் டுவிட்டரில் தனது காட்டமான பதிவை ...

மன உளைச்சலை கவர்னருக்கு மெயில் அனுப்புங்க... - கமல் வேண்டுகோள்

Posted:

நம் மன உளைச்சலை கவர்னருக்கு இ-மெயில் மூலம் தெரிவியுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசியல் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வரும் கமல்ஹாசன், சசிகலா அணியினர் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளார், அதேசமயம் பன்னீர் செல்வம் ஆட்சியை தொடரலாம் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். ...

ரங்கூன்-ல் என்ன கேரக்டர்.? - ஷாகித்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஷாகித் கபூரும் ஒருவர். தற்போது இவர் ரங்கூன் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். ‛ரங்கூன்' படம் அடுத்த வாரம் 24ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தில் தனது ரோல் எப்படிப்பட்டது என்பதை கூறியுள்ளார் ஷாகித்.
அதில், "‛ரங்கூன்' படத்தில் ஒரு ராணுவ வீரராக, நவாப் மாலிக் என்ற ரோலில் நடிக்கிறேன். ...

திருமணம் செய்ய கங்கனா முடிவு

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் கங்கனாவும் ஒருவர். தற்போது இவர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ‛ரங்கூன்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இவருடன் ஷாகித் கபூர், சைப் அலிகான் கபீர்கான், உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நடிகை கங்கனா, தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் ...

ரஜினி படத் தலைப்புக்கு ஆசைப்படும் ஹீரோக்கள்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு இல்லை என்று அரசாங்கம் என்று அறிவித்ததோ அன்றிலிருந்தே படங்களுக்குத் தலைப்பு வைப்பதில் இயக்குனர்களுக்கு கடும் சிக்கல் வந்துவிட்டது. இன்றைய ரசிகர்களைக் கவர வேண்டும் என்ற எண்ணத்தில் எதை எதையோ தலைப்பாக வைக்கிறார்கள். இல்லையென்றால், பழைய படங்களின் ...

சல்மான் ஒரு அற்பமான நடிகர் - சபா ஓமர்

Posted:

பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சபா ஓமர், மீடியம் ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். சமீபத்தில் இவர் ஒரு டாக் ஷோவில் பங்கேற்றார். அப்போது நடிகை சபா ஓமரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒரு கேள்வியாக நடிகர் இம்ரான் ஹாஸ்மியின் போட்டோவை காண்பித்து இவரைப்பற்றி உங்கள் கருத்து என கேட்க, அதற்கு சபா ஓமர், எனக்கு வாய்ப்பு ...

கோவிந்தா மீது மரியாதை வைத்துள்ளேன் - வருண் தவான்

Posted:

கோவிந்தா மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக நடிகர் வருண் தவான் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் வருண் தவான், கோவிந்தாவை போன்று இருப்பதாகவும், அவரை மாதிரியே சினிமாவில் நடப்பதாக செய்திகள் வந்தன. இதைப்பற்றி கேள்விப்பட்ட கோவிந்தா, வருண் மற்றும் அவரது தந்தை டேவிட்டை மறைமுகமாக சாடி பேசினார். இந்நிலையில் வருண் அளித்த ...

கலிபோர்னியா திரைப்பட விழாவில் ஒரு நாள் கூத்து

Posted:

அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய படம் ஒரு நாள் கூத்து. ‛அட்டக்கத்தி' தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரித்விகா, ரமேஷ் திலக், கருணாகரன் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்திருந்தார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருந்தார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே.சிவகுமார் தயாரித்திருந்தார்.
திருமணம் என்பது ...

மார்ச் 3ல் பாட்ஷா மறு வெளியீடு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் பாட்ஷா. 1995ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரஜினி கேரியரில் மிகப்பெரிய வெற்றிப் படம். இதன் உரிமத்தை வாங்கியுள்ள தொலைக்காட்சி நிறுவனம் வாரம் ஒரு முறை பாட்ஷாவை ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு முறையும் பாட்ஷா ஒளிபரப்பாகும்போது அதன் டிஆர்பி ரேட்டிங் உயர்கிறது. அந்த அளவிற்கு பாட்ஷா படத்தை பார்க்க உட்கார்ந்தால் ...

பிளாஷ்பேக்: திடீர் இயக்குனர் ஆன சிவாஜி

Posted:

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் அவர் நடிப்பை தாண்டி சினிமாவில் எதையும் செய்யவில்லை என்பார்கள். ஆனால் சில படங்களை அவர் இயக்கினார் என்பது பலருக்கும் தெரியாது. அதில் முக்கியமான படம் ரத்தபாசம். 1980ல் வெளிவந்த இந்தப் படத்தை சிவாஜி தயாரித்தார். ஏ.எல்.நாராயணன் வசனம் எழுதினார். சிவாஜியுடன் ஸ்ரீப்ரியா, ...

விருதை சமர்ப்பித்த சிவகார்த்திகேயன்!

Posted:

சிவகார்த்திகேயன் நடித்த, ரெமோ படம், 90 கோடி ரூபாய் வரை, வசூல் சாதனை செய்தது; அதனால், அவரை கவுரவப்படுத்தும் விதமாக, 'யூத் ஐகான்' என்ற விருது, அவருக்கு வழங்கப்பட்டது. விருது வாங்கிய நிகழ்ச்சியிலேயே, 'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு, உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழக இளைஞர்களுக்கு, அவ்விருதை சமர்ப்பிக்கிறேன்...' என்று ...

மதுரைப்பெண்ணாக மாறிய அதிதி மேனன்!

Posted:

பட்டதாரி படத்தில் நடித்த, அதிதிமேனன், அப்படத்தை அடுத்து, ஆர்யா நடிக்கும், சந்தனத்தேவன் படத்தில் நடிக்கிறார். மதுரை மண் வாசனை கதையில் உருவாகும் இப்படத்தில் நடிப்பதற்கு முன், பாரதிராஜா இயக்கிய, கிழக்கு சீமையிலே மற்றும் கருத்தம்மா உள்ளிட்ட சில படங்களை பார்த்து, பக்கா மதுரைக்கார பெண்ணாக, தன்னை மாற்றி களமிறங்கியுள்ளதாக கூறுகிறார். ...

தமிழ் படங்களில் சாய் பல்லவி!

Posted:

மலையாளத்தில், துல்கர் சல்மான் நடித்த, சார்லி படம், தமிழில், மாதவன் நடிப்பில், ரீ - மேக் ஆகிறது. இப்படத்தில், மலையாளத்தில், பார்வதிமேனன் நடித்த கதாபாத்திரத்தில், பிரேமம் சாய் பல்லவி நடிக்கிறார். இதேபோல், விக்ரம் நடிக்கும் புதிய படத்திலும் நடிப்பவர், 'இந்த இரண்டு படங்களிலுமே துளியும், கவர்ச்சி காண்பிக்க மாட்டேன்...' என்று, கண்டிஷன் ...

ஜாக்கிசானுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய ரசிகர்!

Posted:

குங்பு யோகா படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது, ஹாலிவுட் நடிகர், ஜாக்கிசான் மற்றும் இந்தி நடிகர், சோனு சூட் இணைந்து சைக்கிளில் சென்றனர். அதன்பின், ஒரு இந்தி சேனல் நிகழ்ச்சியில், ஜாக்கிசான் கலந்து கொண்ட போது, அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர், அந்த சைக்கிளை ஏலம் விட்டார்; அப்போது, ஜாக்கிசானின் ரசிகர் ஒருவர், அந்த சைக்கிளில், ...

லண்டன் நாடக நடிகருடன் ஸ்ருதிஹாசன் காதலா.?

Posted:

நடிகை ஸ்ருதிஹாசனை சுற்றி எப்போதும் காதல் செய்திகள் சிறகடித்து பறந்து கொண்டே இருக்கும். இப்போது புதிய செய்தியொன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.
லண்டனை சேர்ந்த பிரபல மேடை நாடக நடிகர் மைக்கேல் கார்செல், சமீபத்தில் மும்பை வந்தார். அவரை மும்பை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற ஸ்ருதிஹாசன் 3 நாட்கள் அவருடன் இருந்திக்கிறார். அதன் ...

வெல்லப்போவது நல்மக்களின் மந்திரமா... சொக்கனின் தந்திரமா... கமல்

Posted:

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற, ஓ.பி.எஸ்., - இடைப்பாடி அணியினர் இடையே, இன்று சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறுகிறது. தமிழகத்தில் நிலவும் அரசியல் அசாதாரண சூழல் குறித்து அவ்வப்போது தொடர்ந்து டுவிட்டரில் பதிவிட்டு வரும் கமல், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஒரு பதிவை டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் கமல் ...

இரண்டு வித காலகட்டங்களுக்கு காதலை பரிமாறும் பிருத்விராஜ்-பார்வதி..!

Posted:

மொய்தீன்-காஞ்சனமாலா என வரலாற்று காதல் ஜோடியாக 'என்னு நிண்டே மொய்தீன்' படம் மூலம் நம்மை கவர்ந்த பிருத்விராஜ்-பார்வதி இருவரும் மீண்டும் ஜெய்-தாரா என புதிய ஜோடியாக 'மை ஸ்டோரி' என்கிற புதிய படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.. இந்தப்படத்தை ரோஷிணி தினகர் என்கிற பெண் இயக்குனர் இயக்குகிறார். இவர் காஸ்ட்யூம் டிசைனர், ...

கமலை தொடார்ந்து மஞ்சு வாரியருக்கு கைகொடுத்த மோகன்லால்..!

Posted:

மலையாள திரையுலகில் செகண்ட் இன்னிங்க்ஸில் களம் இறங்கி கடந்த மூன்று வருடங்களாக நடித்து வரும் மஞ்சு வாரியாருக்கு தற்போது இறங்குமுகம் என்றே தெரிகிறது.. கடந்த வருடத்தில் அவர் நடித்த 'கரிங்குன்னம் சிக்சஸ்' படம் மட்டுமே அவருக்கு சொல்லிகொள்ளும்படியாக அமைந்தது.. மற்ற படங்களில் வந்தோம் நடித்தோம் என்பதாகவே இருந்தது அவரது கேரக்டரும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™