Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மலையாளத்தில் வலுவாக காலூன்ற முயற்சிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Posted:

துல்கர் சல்மானை வைத்து பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' என்கிற படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்த 'பிரேமம்' புகழ் அனுபமா பரமேஸ்வரனை விட ஐஸ்வர்யா ராஜேஷின் கேரக்டர் அதிக நேரம் ...

அமெரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்ற சாக்ஷி அகர்வால்

Posted:

யூகன், திருட்டு விசிடி, ஆத்யன்,கககாபோ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். தற்போது ஜீவன் நடித்து வரும் ஜெயிக்கிற குதிரை என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பியிருக்கும் இவர் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது...

சினிமா தான் ...

இந்திய சினிமா உன்னை மறக்காது - கமல்

Posted:

இந்திய சினிமா உன்னை மறக்காது என்று நடிகர் கமல்ஹாசன், பாலுமகேந்திராவை நினைவு கூர்ந்துள்ளார். தனது தனித்துவமான ஒளிப்பதிவால் ரசிகர்களை மிளிர செய்தவர் பாலுமகேந்திரா. ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாது அழியாத கோலங்கள், மூடு பனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, வீடு, ரெட்டை வால் குருவி, சதி லீலாவதி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். ...

நாகார்ஜுனாவை முந்திய சூர்யா

Posted:

தமிழில் கடந்த வாரம் சூர்யா நடித்த 'சி 3' படத்திற்குப் போட்டியாக வேறு எந்த படமும் இல்லாமல் போனது. இருந்தாலும் அரசியல் நிலவரம் காரணமாக மிகப் பெரிய வசூலை இந்தப் படம் வசூலிக்கவில்லை என்றாலும் மோசமான வசூலாக இல்லாமல் இருந்தது. முதல் நாளில் சுமார் 17 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்த 'சி 3' படம் நேற்றுடன் முடிந்த முதல் வார இறுதியில் ...

பிரபாஸின் அடுத்த படம் தமிழிலும்...

Posted:

தெலுங்குத் திரையுலகின் ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவரான பிரபாஸ் வழக்கமான கமர்ஷியல் சினிமாக்களில் நடித்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. 2013ம் ஆண்டில் வெளிவந்த 'மிர்ச்சி' படம்தான் பிரபாஸ் கடைசியாக நடித்த ஒரு கமர்ஷியல் படம். அதன் பின் 'பாகுபலி' படத்தில் நடிக்க தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். முதல் பாகம், இரண்டாம் பாகம் என ...

மொட்ட சிவா கெட்ட சிவா ரிலீஸாவதில் சிக்கல்

Posted:

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி உள்ள படம் மொட்ட சிவா கெட்ட சிவா. சாய்ரமணி இயக்கியுள்ள இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி செளத்ரி தயாரித்துள்ளார். வேந்தர் மூவிஸ் மற்றும் சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறது. வருகிற 17-ம் தேதி படம் வெளியாவதாக இருந்தது.
ஆனால், மொட்ட சிவா கெட்ட ...

நாகார்ஜூனாவின் நடிப்பைப் பார்த்து மெய்மறந்த அமலா

Posted:

நாகார்ஜூனா ஹாத்தி ராம் பாபா எனும் பெருமாள் பக்தராக நடித்து வெளிவந்ததுள்ள பக்தி திரைப்படம் ஓம் நமோ வெங்கடேஷாய. பிரபல பக்தி பட இயக்குனர் கே.எஸ் ராகவேந்திர ராவ் இயக்கிய இப்படத்தில் நாகார்ஜூனாவுடன் அனுஷ்கா, விமலா ராமன், ப்ரக்யா ஜெய்ஸ்வால், ராவ் ரமேஷ், சௌரப் ராஜ் ஜெயின் மற்றும் பலர் நடித்திருந்தனர். கடந்த வாரம் வெளிவந்த ...

ஜூனியர் என்.டி.ஆரின் நடனத்திற்கு ரசிகனான பிரபுதேவா

Posted:

இந்தியாவின் மைக்கில்ஜாக்சன் என பெயரெடுத்தவர் நடிகர் பிரபுதேவா. பிரபுதேவாவின் நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளம். மேலும் பல மொழி படங்களிலும் நடன இயக்குனராக முன்னணி நடிகர்களை ஆட வைத்துள்ளார் பிரபுதேவா. கூகுள் இணையதளத்தில் இந்தியாவின் சிறந்த நடனக்கலைஞர்களில் பிரபுதேவாவை பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் முந்திவிட்டார். இது ...

விஜய் பட ஷுட்டிங்கில் நித்யா மேனன்

Posted:

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது. மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜோதிகா கடைசி நிமிடத்தில் படத்திலிருந்து திடீரென விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக உடனடியாக வேறு நடிகையைத் தேடுவதில் மும்முரமாக ஈடுபட்ட படக்குழுவினர் நித்யா மேனனை ...

பாகுபலி நாயகன் பிரபாஸின் புதிய பட பூஜை

Posted:

பாகுபலி படத்தின் வாயிலகாக பல மொழி ரசிகர்களையும் கவர்ந்த நாயகன் பிரபாஸ் அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகளை நிறைவு செய்து விட்டார். நான்கு வருடங்களாக பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்காக உழைத்து வந்த பிரபாஸ் பாகுபலி தவிர வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் ...

மூன்று நாளில் ரூ.50 கோடி வசூலித்த ‛ஜாலி எல்எல்பி-2'

Posted:

பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில் ‛மோஸ்ட் வாண்டட்' ஹீரோவாக இருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். சில தினங்களுக்கு முன் இயக்குநர் சுபாஷ் கபூர் இயக்கத்தில் இவர் நடித்த ‛ஜாலி எல்.எல்.பி 2' படம் வெளியானது. ரசிகர்களிடத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெளியான மூன்று நாளில் ரூ.50 கோடி வசூலித்து பாக்ஸ் ...

நடிகரானார் பின்னணி பாடகர் எம்.ஜி.ஸ்ரீகுமார்..!

Posted:

மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் எம்.ஜி.ஸ்ரீகுமார். மோகன்லாலின் மிக நெருங்கிய நண்பரும் கூட. சமீபகாலமாக மலையாள சினிமாவில் இறங்குமுகத்தில் இருந்த இவரை மோகன்லால் நடித்த 'ஒப்பம்' படம் கொஞ்சம் மேலே தூக்கிவிட்டுள்ளது. இவருக்காக மோகன்லால் ஒரு படத்தில் நடித்து தர இருக்கிறார் என்றும் இந்தப்படத்தை ஸ்ரீகுமார் ...

ஒரே கதையில் போட்டியாக உருவாகும் படங்கள் ; பிருத்விராஜ் விளக்கம்..!

Posted:

தெரிந்தோ தெரியாமலோ.. இல்லையில்லை தெரிந்தேதான் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிருத்விராஜ் என்றே தோன்றுகிறது.. ஆம்.. ஒரே கதையில் இரண்டு படங்கள் உருவாகி, படம் வெளியாகும் சமயத்தில் தெரிய வந்தால் தான் அது தெரியாமல் மேற்கொண்ட நடவடிக்கை என சொல்லலாம். ஆனால் இரண்டு படங்களின் கதையும் ஒன்றுதான் என தெரிந்தே ஷூட்டிங் கிளம்பினால் அதை வேறு ...

தமிழக அரசியல் களத்தை பிரதிபலிக்கிறதா லிபர்ட்டி பஷீரின் நிலைமை..!

Posted:

மலையாள தியேட்டர்கள் கூட்டமைப்பின் தலைவர் என்கிற முறையில் சினிமா இண்டஸ்ட்ரிக்கு மட்டும் தெரிந்த நபராக இருந்த லிபர்ட்டி பஷீர் என்பவர் இன்று மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் பாப்புலராகிவிட்டார்.. ஆனால் அதெல்லாம் அவரது நல்ல செயல்களால் அல்ல.. எதேச்சதிகார போக்கை கடைபிடித்து அதனால் இன்று செல்லாக்காசாக ...

ஏப்ரல் 14-ல் ரிலீசாகிறது ‛பேகம் ஜான்'

Posted:

நடிகை வித்யாபாலன் தற்போது ‛பேகம் ஜான்' படத்தில் நடித்து வருகிறார். படத்தில் பேகம் ஜானாகவே அவர் நடிக்கிறார். பாலியல் தொழில் செய்யும் 11 பெண்களை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. வித்யாபாலன் உடன் நஸ்ருதீன் ஷா மற்றும் கலாஹா கானும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள் . ஸ்ரீஜித் முகர்ஜி இயக்குகிறார், மகேஷ் மற்றும் முகேஷ் ...

‛பாகுபலி 2'-வில் ஷாரூக்கான் சர்ப்ரைஸ்

Posted:

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் ‛பாகுபலி'. சரித்திர பின்னணியில் உருவான இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸையே திரும்பி பார்க்க வைத்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. சமீபத்தில் தான் படப்பிடிப்புகள் முடிந்தது. சுமார் 30 ஸ்டுடியோக்களில் பாகுபலி படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் ...

வீட்டிலேயே பயிற்சி எடுக்கும் சகோதர - சகோதரி

Posted:

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பாலிவுட்டில் ஒரு படம் உருவாகி வருகிறது. இதில் ஹசீனாவாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். கூடவே ஸ்ரத்தாவின் சகோதரருமான சித்தாந்த் கபூரும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இருவருக்கும் இடையே உணர்ச்சிகரமான, உணர்வுப்பூர்வமான காட்சிகள் அதிகம் உள்ளதாம். ...

‛வீரே தி வெட்டிங்' - கரீனா கேரக்டர் மாற்றம்

Posted:

பாலிவுட்டில் முன்னணி நடிகையான கரீனா கபூருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பால் சிலகாலம் சினிமாவை விட்டு விலகியிருந்த கரீனா, மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார். அவர் அடுத்தப்படியாக ‛வீரே தி வெட்டிங்' படத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. வீரே தி வெட்டிங் படத்தில் ...

இந்திய கப்பற்படையை ‛காஸி' பெருமைப்படுத்தும் - ராணா

Posted:

1971ல் இந்தியாவிற்க்கும் பாகிஸ்தானிற்க்கும் இடையே நடந்த போரின் போது, இதுவரையாரும் அறிந்திராத போர்க்கதைதான் இந்த காஸி. ப்ளூ ஃபிஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படமானது இதுவரை இந்திய சினிமாவில் எடுக்கப்பட்ட தேசப்பற்று படங்களில் தனித்துவம் பெற்ற படமாகும். முழுக்க முழுக்க கடலுக்கடியில் நடக்கும் யுத்தத்தினை நவீன ...

பாப்டா விருது பெற்ற ‛ஸ்லம்டாக்' புகழ் தேவ் பட்டேல்

Posted:

ஸ்லம்டாக் மில்லினியர் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் இந்தியரான தேவ் பட்டேல். தொடர்ந்து பல ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு பாப்டா என்ற சொல்லப்படும் பிரிட்டன் அகடாமி விருது வழங்கும் விழாவில் தேவ்விற்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. லயன் என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்த விருது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™