Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மொபைல் இன்டர்நெட் கட்டணம்; பி.எஸ்.என்.எல்., அதிரடி சலுகை

Posted: 04 Feb 2017 03:33 PM PST

தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் விதமாக, 'மொபைல் போன் இன்டர்நெட்' பயன்பாட்டு கட்டணத்தை, பி.எஸ்.என்.எல்., இன்று முதல் அதிரடியாக குறைக்கிறது. பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., 'ஜியோ' போன்ற புதிய நிறுவனங்களின் வரவை சமாளிக்க, வாடிக்கையாளர்களுக்கு, பல சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது, 'மொபைல் இன்டர்நெட்' கட்டணத்தில், புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, பி.எஸ்.என்.எல்., 'சிறப்பு விலை வவுச்சர்'களுக்கு, கூடுதல், 'டேட்டா' வழங்குகிறது. • வழக்கமாக, 291 ரூபாய் திட்டத்தில், ...

மத்திய பட்ஜெட்டில் மராட்டியத்துக்கு 7 புதிய ரெயில் வழித்தடம்

Posted: 04 Feb 2017 03:27 PM PST

மும்பை, மத்திய பட்ஜெட்டில் மராட்டியத்துக்கு புதியதாக 7 ரெயில் வழித்தட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மத்திய பட்ஜெட் மத்திய பொது பட்ஜெட் உடன் ரெயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து மத்திய மந்திரி அருண் ஜெட்லி கடந்த 1–ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், மராட்டியத்தில் புதிய ரெயில் வழித்தடங்கள் ஏற்படுத்த மட்டும் ரூ.31 ஆயிரத்து 196 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் 7 புதிய ரெயில் வழித்தட திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மும்பை சி.எஸ்.டி.– பன்வெல் ...

காளஹஸ்தி கோயில் யாக சாலையில் திடீர் தீ விபத்து

Posted: 04 Feb 2017 03:27 PM PST

- ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி இடிந்து விழுந்தது. இதனையடுத்து புதிய ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்ததையொட்டி 8-ந்தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் புதிய ராஜகோபுரத்திற்கு முன்னதாகவே 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி,  வியாழக்கிழமை புதிய ராஜகோபுரத்திற்கு காலை 8 மணியில் இருந்து 9.30 மணிக்குள்ளாக காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ...

தடைகளை தகர்த்து ஜெயலலிதா வழியில் பணிகளை தொடருவேன் தொண்டர்கள் மத்தியில் ஜெ.தீபா பேச்சு

Posted: 04 Feb 2017 03:20 PM PST

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24–ந்தேதி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அதிகார பூர்வமாக அறிவிக்க இருக்கிறார். இதற்காக அவர் தன்னுடைய ஆதரவாளர்களிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் என தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமானோர் சென்னை தியாகராயநகரில் உள்ள ஜெ.தீபா வீட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வருகிறார்கள். வீட்டின் முன்பு திரண்டு கோ‌ஷம் எழுப்பும் அவர்கள் மத்தியில் ஜெ.தீபாவும் உற்சாகமாக ...

ஆந்திராவில் இருந்து சொகுசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்க கட்டிகள் சிக்கின

Posted: 04 Feb 2017 03:17 PM PST

கும்மிடிப்பூண்டி, இது தொடர்பாக சென்னையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் சோதனை ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சென்னை நோக்கி தனியார் சொகுசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை முதல் தமிழக-ஆந்திர எ ல்லையான ஆரம்பாக்கம் சோதனைச்சாவடி அருகே மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு அருண்குமார் தலைமையில், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சுடலைமணி ...

7 நாடுகளுக்கு விசா மறுப்பு கோர்ட்டு தடை உத்தரவை நிராகரித்தார், டிரம்ப்

Posted: 04 Feb 2017 03:14 PM PST

வாஷிங்டன், 7 நாடுகளுக்கு அமெரிக்கா விசா மறுத்ததை கோர்ட்டு தடை செய்துள்ளது. இதை டிரம்ப் நிராகரித்தார். கோர்ட்டு தடை அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவி ஏற்றதுமுதல் தனது நிர்வாக உத்தரவுகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளுக்கு 3 மாத காலம் விசா வழங்குவதை மறுத்து பிறப்பித்த உத்தரவு, உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் ...

நேரம்

Posted: 04 Feb 2017 11:50 AM PST

நேரம் இன்று நாளையின் நேற்றாகும் இதுவே நேரத்தின் கூற்றாகும் நன்கு அறிந்தால் பயனாகும் நாளை உந்தன் வசமாகும் இறந்த நொடிகள் உனதில்லை திரும்பப் பெறவும் வழியில்லை இருப்பில் வைக்க வாய்ப்பில்லை பொறுப்பாய் இருந்தால் தோற்பில்லை நொடிதான் செல்வம் உணர்ந்துவிடு நேரம் கிடைத்தால் உழைத்துவிடு படிகள் கடந்து பாய்ந்துவிடு பாரம் இறக்கி ஓய்ந்துவிடு காலத்தோடு நீ வந்தால் காலம் உந்தன் கைவசமே காலம் கடந்து வந்தாலோ காலம் இல்லை உன்வசமே கவலை தன்னில் இருந்தாலே காலம் ஆமை வேகத்திலே ...

முதல்வர் கனவில் இருக்கும் சசிகலாவுக்கு செக்: தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Posted: 04 Feb 2017 11:45 AM PST

- புதுடெல்லி: தமிழக முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் முனைப்பாக இருக்கும் சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலர் பதவி நியமனம் குறித்து விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க., பொதுக்குழு கூடி, சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அ.தி.மு.க., பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும், அ.தி.மு.க.,வில் 1.5 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். கட்சி ...

பஞ்சாப், கோவா சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல்

Posted: 04 Feb 2017 11:44 AM PST

பஞ்சாப், கோவா சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பஞ்சாப் சட்டப் பேரவையில் உள்ள 117 தொகுதிகளுக்கும், கோவா சட்டப் பேரவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. கோவாவை பொறுத்தவரை காலை 7 மணிக்கும், பஞ்சாப்பில் காலை 8 மணிக்கும் வாக்குப்பதிவு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி, கோவாவில் 34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல் பஞ்சாபில் 11.30 மணி வரை 14 சதவீதம் வாக்குகள் பதிவாகி ...

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

Posted: 04 Feb 2017 10:31 AM PST

படம் : சூரியகாந்தி இசை : MS விஸ்வநாதன் பாடியவர் : TM சௌந்தர்ராஜன் பாடல் வரிகள் : கண்ணதாசன் – ————————– – பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது.. – உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை ...

கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு !

Posted: 04 Feb 2017 10:22 AM PST



இடுக்கண் வருங்கால் நகுக…………..மற்றவர் துன்பம் கண்டு சிரிப்பதல்ல,நம் துன்பம் மறக்க சிரிப்பது…….



பேராசிரியர் சண்முகவடிவேலுவின் அனுபவங்கள்.

இத்தாலியத் தமிழறிஞர் வீரமா முனிவர் இறந்த தினம் இன்று!

Posted: 04 Feb 2017 08:59 AM PST

- வீரமா முனிவர் நவம்பர் 8, 1680 அன்று இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். - இவரின் இயற்பெயர் கான்ச்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பதாகும். இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். - கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் 1709ஆம் ஆண்டு இயேசுசபை குருவானார் . பின்னர் சமயப்பணிக்காக 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். - இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிருத்துவின் ...

சாதிய சாயம்

Posted: 04 Feb 2017 08:57 AM PST

சாதீயம் பேசித் திரியும் சமூகத்தின் சாபமே .. உனக்கு காமத்தீயின் போது சாதி என்ன பொசுங்கி போய்விட்டதா? புணர்வதற்கு எந்த சாதியிலிருந்தாலும் யோனி வேண்டும் உனக்கு ! பெண் என்ன பிண்டமா ? உறுப்பையும் உணர்வையும் உருக்குலைத்து உள்ளிருக்கும் உயிரையும் சிதைத்து ஒன்றுமில்லாமல் செய்து விட்ட சாதிய காவலனே நீ சமூகத்தின் சாபக்கேடு! நெளியும் புழுவும் சகதியும் சாதிய சாயத்தால் நாற்றெமெடுக்கிறது உன் மனதின் வன்மத்தை போல! இந்துவும் இந்துந்துவா கொள்கையும் நாற்றமெடுக்கிறது உன்னைப்போல்! சாதிய ...

நரை கூறிய அறிவுரை

Posted: 04 Feb 2017 08:53 AM PST

கோசல நாட்டு மன்னன், திருமால் அவதாரமாம் இராமனைத் திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன் தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான். - அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது; இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,  -  மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ  பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்  கன்ன மூலத்தினில் கழற வந்தென  மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!  -  என்றார் கம்பர். "மன்னா! நீ கானகம் சென்று தவம் புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை மகனிடம் ஒப்படைப்பாய்' ...

கோவாவில் முதல் முறையாக வாக்களிக்க வந்த பெண்களுக்கு கரடி பொம்மை பரிசு

Posted: 04 Feb 2017 08:51 AM PST

பானாஜி: கோவாவில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க வந்த பெண்களுக்கு பிங்க் நிற கரடி பொம்மை பரிசாக வழங்கப்பட்டது. பஞ்சாப், கோவா மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாபில் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் தலைமையில் அகாலிதளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடை பெறுகிறது. கோவாவில் மொத்தம் 40 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு முதல்வர் பர்சேகர் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில், முதல் முறையாக வாக்களிக்க ...

புதுச்சேரியில் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் : மீறினால் கடும் நடவடிக்கை

Posted: 04 Feb 2017 08:51 AM PST

புதுச்சேரி: புதுச்சேரியில் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். பைக்கில் செல்வோர் ஹெல்மெட் அணியா விட்டால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் ஹெல்மெட் அணியும் சட்டம் ஏற்கனவே அமலில் இருந்தாலும், தற்போது வரை கட்டாயமாக்கபடாமல் இருந்தது. ...

கற்பனைக்கு அப்பாற்பட்ட டைட்டில் ஒண்ணு..

Posted: 04 Feb 2017 08:50 AM PST

கற்பனைக்கு அப்பாற்பட்ட டைட்டில் ஒண்ணு சொல்லு! – ஏடி.எம்.ல கூட்டம் இல்லை!! – —————————————— – தலைவர் ஓர் எளிமையான அரசியல்வாதின்னு திரும்பவும் நிரூபிச்சுட்டார்! – எப்படி? – நாலே நாலு தொண்டர்களை வெச்சு பொதுக்கூடம் நடத்தினாரே…!! – அ.ரியாஸ் – ——————————————- – கட்சியில ஒற்றுமை இல்லைன்னு எப்படி சொல்றீங்க தலைவரே? – வீட்டில ரெய்டு நடக்கிறப்போ, என்கிட்டே கடன் வாங்கியவன் எல்லாம் வீடு தேடி வந்து பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறான்! – அம்பை தேவா – —————————————- – அந்தச் சம்பந்தம் ...

உ.பி., தேர்தல்: 302 கோடீஸ்வரர்கள் போட்டி

Posted: 04 Feb 2017 08:38 AM PST

லக்னோ: உ.பி.,யில் முதல்கட்டமாக நடக்கும் சட்டசபை தேர்தலில் 302 கோடீஸ்வரர்கள், 168 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்கள் போட்டியில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. உ.பி., சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வரும் 11ம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில், வேட்பாளர்கள் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர். வேட்பாளர்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பான தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது. கோடீஸ்வரர்கள்: இதில், ...

பட்டாம்பூச்சி ஸ்டிக்கர்

Posted: 04 Feb 2017 07:03 AM PST


ஒரே வெட்டுதான்
துண்டான ஆட்டின் தலையை
குனிந்துகூட பார்க்கவில்லை அய்யனார்
–
விற்றுத் தீர்ந்த கூடையில்
வீடு வந்தும் போகவில்லை பூவாசம்
–
சக்கரத்தில் நசுங்கிய பட்டாம்பூச்சியை
கண்டு கொள்ளாமலேயே போகிறான்
வாகனத்தில் பட்டாம்பூச்சி ஸ்டிக்கர் ஒட்டிய
லாரிக்காரன்
–
—————————
-பிரபு
நனறி-ஆனந்தவிகடன்

25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம்

Posted: 04 Feb 2017 06:54 AM PST

புதுடில்லி: நாட்டில் 25 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதாக லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான கேள்விக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே லோக் சபாவில் அளித்த விளக்கம்: பஞ்சாப் முதலிடம் பிப்.,1 ம் தேதி கணக்கின்படி, நாடு முழுவதும் 25,00,631 முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்புத் துறையின் கீழ் ராணுவ ஓய்வூதியம் பெறுகின்றனர். இதில், அதிக ராணுவ ஓய்வூதியதாரர்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாப் மாநிலம் 2,77,985 ஓய்வூதியதாரர்களுடன் ...

அரசு ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகல்?

Posted: 04 Feb 2017 06:53 AM PST

சென்னை: தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் ஷீலா பாலகிருஷ்ணன். இவர் 1976 ஆண்டு இந்திய ஆட்சி பணிக்கு தேர்வானார். கடந்த 2012-ல் தமிழக அரசின் தலைமை செயலராக நியமிக்கப்பட்டார். ஓய்விற்கு பிறகு 2014-ல் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவருடைய பதவி காலம் மார்ச் மாதம் 31-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், அவர் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி ...

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி

Posted: 04 Feb 2017 06:50 AM PST

புதுடில்லி : - விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. - புதிய 100 ரூபாய் நோட்டுகள்: - கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த நவ.,8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதிய 500 மற்றும் 2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. - அம்சங்கள்: - இதுகுறித்து ...

சென்னை மெரினாவில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது: ஆணையர் ஜார்ஜ்

Posted: 04 Feb 2017 06:45 AM PST

- சென்னை மெரினாவில் பொதுமக்கள் கூடுவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கடந்த மாதம் 18-ம் தேதி ஒன்று கூடி தொடர்ச்சியாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து மாணவர்களை கலைந்து செல்லும்ப்டி போலீசார் கேட்டுக் கொண்டனர், ஆனால் இதில் திடீர் குழப்பம் ...

பஞ்ச பூதங்களும் நமக்குச் சாதகமானவையே!

Posted: 04 Feb 2017 06:10 AM PST

பாட்டி படுத்திருந்த திண்ணையின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள் பேத்தி… திடீரென வானில் மேகம் சூழ்ந்து, மழை கொட்டியது. – பாட்டி, பேத்தியிடம், "" அடியே, எவ்வளவு தண்ணீர் வீணாய்ப் போகுது. அண்டாவை முற்றத்தில் கொண்டு வந்து வச்சு மழை தண்ணீரை நிரப்புடி என் ராசாத்தி" என்றாள். – "போ.. பாட்டி" என மறுத்தாள் பேத்தி. ""அடியே அடுக்களையில் இருக்கிற பாத்திரத்தை அப்படியே கொண்டு வந்து முற்றத்தில் வைக்கிறது பெரிய வேலையா? போய் அண்டாவைக் கொண்டு ந்து அப்படியே வை". என உத்தரவிட்டாள் பாட்டி. – வெறுப்பாய் ...

டிரம்ப் கொண்டு வந்துள்ள எச்-1 பி விசா கட்டுப்பாடுகளை சமாளிக்கும் வழி: இன்போசிஸ் நாராயணமூர்த்தி பதில்!

Posted: 04 Feb 2017 06:02 AM PST

- நியூயார்க்:  அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்துள்ள எச்-1 பி விசா கட்டுப்பாடுகளை சமாளிக்க எச்-1 பி விசா பயன்படுத்துவதையும், அதன் மூலம் அதிக அளவில் இந்தியர்களை பணிக்கு அனுப்புவதையும் இந்திய தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் நிறுத்த வேண்டும் என்று 'இன்போசிஸ்' நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.   புதிதாக பதவி ஏற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகமானது எச்-1 பி விசா வழங்கும் நடைமுறைகளில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி எச்-1 பி விசாவில் பணி அமர்த்தப்படும் ...

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்

Posted: 04 Feb 2017 06:00 AM PST

இந்த தளத்திற்கு  சென்று உங்களுக்கு தேவையானதை படிக்கவும்.


http://tamilpdfworld.blogspot.in

அன்புடன்


அருள்

2,804 கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 04 Feb 2017 12:59 AM PST

சென்னை: தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் (எம்ஆர்பி) மூலம் நேரடி நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பத்தை http://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டும், வரும் 24 -ஆம் தேதிக்குள் (பிப்.24) சமர்ப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வங்கிகளில் விண்ணப்ப ...

ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கமா?: மத்திய அரசு மறுப்பு

Posted: 04 Feb 2017 12:43 AM PST

புது தில்லி: ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக உறுதியான தகவல் எதுவும் வரவில்லை என்று மத்திய அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசுக்கோ அல்லது ரிசர்வ் வங்கிக்கோ, வங்கிகளிடம் இருந்து ரூ.2,000 கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டதாக எந்த உறுதியான தகவலும் வரவில்லை. நாடு முழுவதும் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் சீராக ...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு

Posted: 03 Feb 2017 07:48 PM PST

- நியூயார்க், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு பேசினார். அவர் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். உக்ரைன் விவகாரம் உக்ரைன் நாட்டில் கிரிமியா தீபகற்ப பகுதி, பொது வாக்கெடுப்பு நடத்தி ரஷியாவுடன் இணைந்து விட்டது. இதே போன்று உக்ரைனின் கிழக்கு பகுதியில் வசிக்கிற ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், தனி நாடு கோரிக்கையை எழுப்பி கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ரஷியா ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. அங்குள்ள டோன்ட்ஸ்க் ...

மிஸ்டர் சாத்தான்

Posted: 03 Feb 2017 07:17 PM PST

- ஒரு கோப்பை மதுவில் போதை இல்லையென சாத்தானுக்கு முன் மண்டியிட்டு இறைஞ்சுகிறான் கிழவன் போதை தலைக்கேறி மது போத்தலை சாத்தானின் மண்டையில் உடைக்கிறான் யுவன் மிருதுவான போதையில் சாத்தானுக்கு முத்தமிடுகிறாள் யுவதி – சாத்தான் நெகிழ்ந்து பயந்து மயங்கிச் சரிகிறார் சாத்தானின் முகத்தில் மது தெளித்து தெளிய வைக்கிறார்கள் – அன்றிலிருந்து சாத்தானாக, தான் வாழத் தகுதியற்று திரிந்து தன்னை மீட்டெடுக்கும் யுக்தியைத் தேடுகிறார் தேடித் தேடி ஓர் இரவில் மூன்று பெண்களுடன் உல்லாசமாக இருந்த சாத்தான் பரிபூரணத்தையும் அரைகுறையையும் ஏமாற்றத்தையும் ...

திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!

Posted: 03 Feb 2017 06:40 PM PST

- எப்போதுமே ஈரானியத் திரைப்படங்களுக்குப் பெருத்த வரவேற்பு உண்டு; அந்த வகையில் வெளியான "லண்டௌரி' என்ற இந்தப் படம் சென்னைத் திரைப்பட விழாவில் மிகப் பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. - வளரும் நாடுகளில் இன்னும் பெண்களின் நிலை தாழ்ந்தே உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. இத்தகைய சூழலே இப்படத்தின் கரு. - பெண்களுக்கு எதிரான திராவக வீச்சை மையமாகக் கொண்டதாகும். - இக்கதையில் வரும் மரியம் என்ற நடுத்தர வயதுடைய பெண், சமூகச்சேவையில் நாட்டமுள்ள ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™