ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
- காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
- கடவுளின் அபார சக்தி
- தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
- ஜோதிடம் என்பது அறிவியலா?
- கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை!
- ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார்- துணிவுடன் ஆவணப்படம் வெளியிட்ட கன்னட தொலைக்காட்சி.
- வீடியோ கம்ப்ர்ஸ் சாப்ட்வேர் தேவை.
- நீர் போராட்டக் கதைகள் - முருங்கத்தொழுவு
- சிங்கம் - 3 படம் உண்மையை வெளிக்கொண்டு வந்தது.
- ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை
- என்ன தொடாம காதலிங்க சுரேஷ்...!!
- ஐஸ்கிரீம் வகைகள் -ஃபலூடா ! - போட்டோவுடன்
- உணவுகளின் போட்டோகள் ! :) - ஃபலூடா !
- தலைவி கால்ல விழுந்து கும்பிடறப்ப...
- ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
- இந்திய விமானத்தை ஜெர்மன் போர் விமானங்கள் சுற்றி வளைத்தன.
- 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து
- நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு
- எம்.எல்.ஏ.,வுக்கு சேலை வழங்கும் போராட்டம்
- ந.க.துறைவன் கட்டுரைகள்
- குறுக்கு கோடு
- வீடு -கவிதை
- கறுப்பு வெள்ளை
| சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள் Posted: 20 Feb 2017 03:51 PM PST -- தானே: மஹாராஷ்டிர மாநிலம், தானேயில் உள்ள ஒரு பள்ளியில், 60 வயதுக்கு மேற்பட்ட பாட்டிகள், சீருடை அணிந்து, மற்ற மாணவர்களை போன்று தினமும் பள்ளி சென்று வருவது, அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. - மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. தானேக்கு அருகில் உள்ள, பங்கனே மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளியில், யோகேந்திர பங்கட், 45, என்பவர், ஆசிரியராக பணிபுரிகிறார். இந்த மாவட்டத்தில் ... |
| காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர் Posted: 20 Feb 2017 03:37 PM PST புதுடில்லி : காவிரி நதிநீர் தீர்ப்பாய தலைவராக இருந்த பல்பீர் சிங் சவுகான், 1990 ம் ஆண்டு ஜூன் 2 ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து இந்த பதவி காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் இப்பதவிக்கு புதிய தலைவரை நியமிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பரிந்துரை செய்தார். இதனையடுத்து காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட் நீதிபதி அபய் மனோகர் சப்ரே நியமிக்கப்பட்டுள்ளார். --------------------------- தினமலர் - |
| Posted: 20 Feb 2017 03:34 PM PST - * புல்லைப் படைக்கும் சக்தி கூட நமக்கு இல்லை. ஆனால் கடவுள் இவ்வளவு பெரிய உலகத்தை படைத்து தன் சக்தியை நிரூபித்திருக்கிறார் * பக்தியால் மனதிலுள்ள அழுக்கு எண்ணங்களைப் போக்க முடியும். அலையும் மனதை ஒருமுகப்படுத்தவும் முடியும். * வருமானம் குறைவாக இருந்தாலும், அதில் தர்மத்திற்காக சிறுபங்கு ஒதுக்குவது அவசியம். * செலவில் மட்டும் சிக்கனம் இருந்தால் போதாது. பேச்சிலும் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும். - ------------------------------------ - காஞ்சிப் பெரியவர் |
| Posted: 20 Feb 2017 11:02 AM PST - ரசிக்க நேரமில்லை நாற்று பறிக்கும் அவளின் கரங்கள் – கவித்துவன் – ————————- – ஒரு குமட்டலோடுதான் முதல் மடக்கு ஆரம்பம் இன்று அதுவே தேவபானம் – கழனியூரான் – ————————– – தள்ளாடும் குடிமகன் தவணை முறையில் வாழ்நாள் இழப்பு – இரா.இரவி – ———————— சுமைதாங்கியின் சுமையை உணர்வதேயில்லை வழிப்போக்கர்கள் – ராஜநிலா – ————————– – நள்ளிரவு தாண்டியும் ஊர் அடங்கவில்லை அடிக்குழாய் முற்றுகை – ———————— |
| Posted: 20 Feb 2017 11:01 AM PST ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ... |
| கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வை! Posted: 20 Feb 2017 10:53 AM PST கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு. 1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்? 2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்? 3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது? 4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா? போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு. பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம். சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக ... |
| ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார்- துணிவுடன் ஆவணப்படம் வெளியிட்ட கன்னட தொலைக்காட்சி. Posted: 20 Feb 2017 10:08 AM PST tv9 கன்னடா (தமிழிலும் காணலாம்.) Public TV கன்னடா |
| வீடியோ கம்ப்ர்ஸ் சாப்ட்வேர் தேவை. Posted: 20 Feb 2017 08:11 AM PST 4 GB உள்ள மூவியை 700 MB ஆக மாற்றும் போது வீடியோ குவாலிட்டி தெளிவாகவும், அதே சமயம் மிக விரைவாக மூவியை கம்ப்ர்ஸ் செய்ய வேண்டும். |
| நீர் போராட்டக் கதைகள் - முருங்கத்தொழுவு Posted: 20 Feb 2017 07:51 AM PST ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம் முருங்கத்தொழுவு கிராமத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தினை நபார்டு வங்கி துணையுடன் மக்கள் தூர் வாரி சாதனை புரிந்துள்ளனர். தண்ணீருக்காகத் தினமும் தெருச்சண்டையில் ஆரம்பித்து, மாநிலங்களுக்கு இடையேயான சண்டைகள் வரை அரங்கேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டில், குளங்களைப் பராமரித்துப் பாதுகாக்கவில்லையென்றால், நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இன்று இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக விவசாயம் மற்றும் ... |
| சிங்கம் - 3 படம் உண்மையை வெளிக்கொண்டு வந்தது. Posted: 20 Feb 2017 07:30 AM PST வெளிநாடுகளிலிருந்து வரும் அபாயகரமான கழிவுகள் இந்தியாவில் கொட்டப்படுவதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் அபாயகரமான கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பது தொடர்பாக, அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தது. அதை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளிலிருந்து ... |
| ஒரு படத்தின் ஆயுள் 3 நாள் தான் : பரத் வேதனை Posted: 20 Feb 2017 06:54 AM PST - பரத், கதிர், சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள படம் 'என்னோடு விளையாடு'. அருண் கிருஷ்ணசுவாமி இயக்கி உள்ளார். படத்தில் நடித்திருப்பது பற்றி பரத் கூறியதாவது: சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. 9 மாதங்கள் வரை கையில் படம் இல்லாமல் இருந்தேன். இது எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்ட இடைவெளி. பல புதிய இயக்குனர்கள் நல்ல கதையோடு வருகிறார்கள். அவர்களை நம்பி நடிக்கிறேன். ஆனால் அவர்களால் சொன்ன கதையை சுவாரஸ்யமாக எடுக்கத் தெரியவில்லை. அதனால் பல தோல்விகளை சந்தித்திருக்கிறேன். இப்போது ஒரு ... |
| என்ன தொடாம காதலிங்க சுரேஷ்...!! Posted: 20 Feb 2017 06:30 AM PST -- உங்க இதயத்துல ஒரு உருவம் உக்கார்ந்திருக்கிர மாதிரி எக்ஸ்ரேல தெரியுது. ஒரு பொண்ணு என் இதயத்துல இடம் பிடிச்சுட்டானு சொன்னேல, அவளா இருக்கும் டாக்டர்.- -------------------------------------- - அரசியல்வாதியின் மகளைக் காதலித்தது தப்பாப் போச்சு ! ஏன்? காதலை வாபஸ் வாங்கிக் கொள்வேன் என்று அடிக்கடி மிரட்டுகிறாள்! - ----------------------------------.---------- - என்ன தொடாம காதலிங்க சுரேஷ் ! சரி சுதா கோவிச்சுக்காத, சுண்டல் வாங்கித் தர்றேன! அப்ப சரி ! - -------------------------------------- ... |
| ஐஸ்கிரீம் வகைகள் -ஃபலூடா ! - போட்டோவுடன் Posted: 20 Feb 2017 06:23 AM PST ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல் நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம் இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன் |
| உணவுகளின் போட்டோகள் ! :) - ஃபலூடா ! Posted: 20 Feb 2017 05:45 AM PST நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ... |
| தலைவி கால்ல விழுந்து கும்பிடறப்ப... Posted: 20 Feb 2017 03:14 AM PST நிறைய மாத்திரைகளை எழுதிக்கொடுத்து வாங்கி சாப்பிட சொல்றீங்களே...ஏன் டாக்டர்? - ஏதாவது ஒரு மாத்திரையில உங்க நோய் சரியாயிடலாம்ங்குற நம்பிக்கையில தான்! - எஸ்.காயத்ரி - --------------------------------------- - டாக்டர் பட்டம் கிடைச்சதுல இருந்து நம்ம தலைவர் லஞ்சம், அன்பளிப்பு கமிஷனெல்லாம் கேட்காமல், பீஸ் குடுங்கன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாரே...!! - வி.ரேவதி - -------------------------------------- - என்னண்ணே இது...வேட்டிக்குப் பதிலா கொளாய் போட்டுக்கிட்டு இருக்கீங்க?? - தலைவி கால்ல ... |
| ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம் Posted: 20 Feb 2017 02:13 AM PST வாஷிங்டன் : ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய தொலைபேசி ரூ. 1.62 கோடிக்கு ஏ லம் விடப்பட்டுள்ளது. ஹிட்லர் தனது தனிப்பட்ட உபயோகத்திற்காக பயன்படுத்தி வந்த தொலைபேசி மூலம் தான் கடைசி 2 ஆண்டுகள் பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார். முதலில் கறுப்பு நிறத்தில் இருந்த இந்த தொலைபேசிக்கு, பின்னர் செங்கல் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஹிட்லரின் பெயர் பொறிக்கப்பட்ட இந்த தொலைபேசி, ஹிட்லரின் மரணத்திற்கு பிறகு, 1945ம் ஆண்டு பதுங்கு குழி ஒன்றில் ... |
| இந்திய விமானத்தை ஜெர்மன் போர் விமானங்கள் சுற்றி வளைத்தன. Posted: 20 Feb 2017 02:11 AM PST இந்திய விமானத்தை ஜெர்மன் போர் விமானங்கள் சுற்றி வளைத்தன. லண்டன் சென்ற இந்திய விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து இந்திய விமானத்தை ஜெர்மன் போர் விமானங்கள் சுற்றி வளைத்தன. மும்பை: 330 பயணிகளுடன் லண்டன் சென்ற இந்திய விமானத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நடுவானில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானத்தை ஜெர்மனி போர் விமானங்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமை 330 பயணிகளுடன் மும்பையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் லண்டன் ... |
| 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து Posted: 19 Feb 2017 11:53 PM PST சென்னை: முதல்வராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு, பணிகளை துவக்கினார். ஏழை கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பெறு உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை, 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 18 ஆயிரம் ரூபாயாக உயர்வு; தமிழகத்தில் மேலும், 500 டாஸ்மாக் மதுகடைகள் மூடல்; வேலை இல்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை, இரண்டு மடங்காக உயர்வு; வேலைக்கு செல்லும் மகளிருக்கு வாகன கடன் வழங்க, 50 சதவீத மானியம்; மீனவர்களுக்கு ... |
| நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் தி.மு.க., முறையீடு Posted: 19 Feb 2017 11:52 PM PST சென்னை : சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி முதல்வராக இடைப்பாடி வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்துள்ளது. அவசரவழக்கு : சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டது, சட்டசபைக்குள் போலீசார் முறை கேடாக நுழைந்தது ஆகியவை தொடர்பாகவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை மனுவாக தாக்கல் செய்தால், அவசர வழக்காக எடுத்து நாளை விசாரிக்கிறோம் என திமுக.,வின் முறையீட்டை கேட்ட ஐகோர்ட் நீதிபதிகள், தெரிவித்துள்ளனர். - தினமலர் |
| எம்.எல்.ஏ.,வுக்கு சேலை வழங்கும் போராட்டம் Posted: 19 Feb 2017 11:51 PM PST பொள்ளாச்சி : தொகுதி பக்கம் வராமல் கூவத்தூர் சொகுசு விடுதியில் 10 நாட்கள் தங்கி இருந்ததுடன், சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்ததற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளப்பு உள்ளது. சேலை வழங்கும் போராட்டம் : இந்நிலையில் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்ததற்காக பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.,வும், சட்டசபை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சேலை வழங்கும் போராட்டத்தை திமுக அறிவித்திருந்தது. திமுக நகர செயலாளர் செல்வராஜின் ... |
| Posted: 19 Feb 2017 10:35 PM PST உடைந்து வரும் பிம்பங்கள்…!! * அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஆட்சியாளர்கள், மன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றுகிறார்கள். அவர்களே அதனை மீறுகிறார்கள். சட்டசபையில் கலவரம் கலாட்டா செய்கிறார்கள். ஊழல் லஞ்சம் என்று பல்வேறு குற்ற செயல்பாடுகளால் தண்டனை பெற்றும் சந்தோஷமாக உலா வருகிறார்கள். ஜாமினில் வெளியே வந்துவிடுகிறார்கள். இவர்கள் தான் சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கிறார்கள் என்பதை என்னும்போது வெட்கமாகவே இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் அக்காட்சிகளை ஊடகங்களில் காண்கிறார்கள். வாக்காளர்களாகிய ... |
| Posted: 19 Feb 2017 10:25 PM PST – விருப்பமான பாடலொன்றின் இடையிசையில் இருந்து மெல்ல முன்னேறி முதல் வரியைப் பிடிப்பது போலன்றி, வழி தவறிய கன்றுக்குட்டியை தாய்ப்பசுவிடம் சேர்த்திட வளைந்து நெளிந்த பாதைகளில் பயணித்து நெருங்கும் வேளையில் – தடையென வரும் குறுக்குக்கோட்டின் முன் திகைத்து நிற்கும் சிறுவனின் நகரும் பென்சில் முனையென உன் மீதான வெறுப்பின் எந்தவோர் இழையின் தொடர்ச்சியும் உனது பேரன்பின் சாகசத்தில் முடிவது கண்டு திகைக்கிறேன்! – ———————————– கே.ஸ்டாலின் |
| Posted: 19 Feb 2017 06:19 PM PST - வாடகையில் 500 ரூபாய் உயர்த்தி கேட்கிறார் வீட்டுக்காரர் அதிகம்தான் என்றாலும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் - பரணில் நிலத்தை அடகு வைத்து கடன் வாங்கிய பத்திரங்கள் இருக்கும் பெட்டிக்குப் பின்னே கூடுகட்டி குஞ்சு பொரித்திருக்கும் சிட்டுக் குருவிக்காகவாவது! - -------------------------- -கி.ரவிக்குமார் |
| Posted: 19 Feb 2017 06:10 PM PST கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் கனவின் வண்ணம் நூறு! கறுப்பு வெள்ளை திரைப்படத்தில் காவியங்கள் நூறு! – கறுப்பு வெள்ளை கனவுகள்தான் காணுகின்றோம் நாமும்! கறுப்பு வெள்ளை சித்திரங்கள் காலம் தாண்டி வாழும்! – வண்ண வண்ணப் பூக்கள் உண்டு வேரின் வண்ணம் என்ன? கண்கள் ரெண்டும் கறுப்பு வெள்ளை ஆன போதும் என்ன? – விண்ணில் என்றும் கறுப்பு வெள்ளை வந்து போவதென்ன? எண்ணிப் பார்த்தால் சதுரங்கத்தில் இருக்கும் நிறங்கள் என்ன? – வயது போக மனிதன் தலையில் வண்ணம் கறுப்பு வெள்ளை! உயர்வு தாழ்வு பேதம் விட்டால் உலகம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |