Cinema.tamil.com |
- பணத்துக்காக மட்டும் நடிக்க வரவில்லை: பார்வதி நாயர்
- இதிலும் கறுப்பு பணமா?
- வயதானாலும் நயன் தான் டாப்!
- 'ஆஜானுபாகு' அழகன்!
- சவால்களை சந்திக்க தமன்னா ரெடி!
- யார் இந்த பெண்?
- காதல் திருமணம் தான் செய்வேன் - ‛புரூஸ் லீ' கிர்த்தி கர்பந்தா
- நமீதாவின் வாடகை வீட்டை காலி செய்ய தடை - கோர்ட் உத்தரவு
- நம்பர் 1 இடத்தில் தனுஷ்
- கம்மலில் காதலை வைத்த நயன்தாரா !
- 'துருவங்கள் 16' இயக்குனரைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்
- 6 மாதமாக நடந்து வரும் சங்கமித்ரா கிராபிக்ஸ் பணி: ஜெயம்ரவி, ஆர்யா 18 மாதம் கால்ஷீட்
- சல்மான்கான் நிகழ்ச்சியில் ஷாரூக்கான்
- பெபிகர் வாய்ப்பு வந்திருந்தாலும் நடித்திருக்க மாட்டேன் - சுசாந்த் சிங்
- ராகேஷ் ரோஷன் பிடிவாதமாக இருப்பது ஏன் ?
- மம்முட்டியுடன் மீண்டும் பிருத்விராஜ்-ஸ்ரேயா..?
- பெண் தயாரிப்பாளரை அறைந்த 'தெறி' பட விநியோகஸ்தர்..!
- பிளாஷ்பேக் - 'சந்திரமுகி' 'லகலகலக' எங்கிருந்து வந்தது?
- இனி வருடத்திற்கு 2 படம் தான் ; மோகன்லால் முடிவு..!
- சல்மான் கான் படத்தில் இஷா தல்வார்..!
| பணத்துக்காக மட்டும் நடிக்க வரவில்லை: பார்வதி நாயர் Posted: படித்தவர்கள், சினிமாவுக்கு வரும் வரிசையில் வந்த இன்னொரு நடிகை, பார்வதி நாயர். பார்த்திபனின், கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்காக, தன் நடிப்பால் ரசிகர்களின் மனதை நிரப்ப காத்திருக்கும், பார்வதியுடன் ஒரு சந்திப்பு: என்னை அறிந்தால் படத்துக்கு பின், உங்களை அதிகம் எதிர்பார்த்தோமே? சினிமாவில் தான் இருக்கிறேன்; ஒரு சில ... |
| Posted: கறுப்பு பணத்தை ஒழிப்பது குறித்து, நாடு முழுவதும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், விஜயின் பைரவா படத்தின் கதையும், கறுப்பு பணம் ஒழிப்பதை மையமாக வைத்து தான், தயாராகி உள்ளதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரெய்லரில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்வது போன்ற ... |
| Posted: கோலிவுட்டை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவுடன் தான், நயன்தாரா இருக்கிறார் போலிருக்கிறது. இந்தாண்டில், தமிழை தவிர, வேறு எந்த மொழியிலும் நடிப்பது இல்லை என்ற பாலிசியை பின்பற்றுகிறாராம். அறம், இமைக்கா நொடிகள், டோரா, கொலையுதிர்காலம் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். அவர், திரையுலகிற்கு அறிமுகமாகி, 13 ஆண்டுகள் ... |
| Posted: போகன் படத்தில், ஜெயம் ரவி வில்லனாகவும், அரவிந்த் சாமி ஹீரோவாக நடிப்பதாகவும், ஏற்கனவே செய்திகள் வெளியாகின. தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாம். அரவிந்த் சாமி நடிக்கும் பாடல் காட்சி, பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளதாக, பெருமையுடன் கூறுகிறது படக்குழு. இதற்காக, ரஷ்யாவைச் சேர்ந்த, 50 நடன கலைஞர்கள் ... |
| சவால்களை சந்திக்க தமன்னா ரெடி! Posted: 'இரண்டாவது ரவுண்டில் இப்படி ஒரு விஸ்வரூபம் எடுப்பார்' என, யாருமே நினைத்துப் பார்க்காத வகையில், ரவுண்டு கட்டி அடிக்கிறார் தமன்னா. தமிழிலும், தெலுங்கிலும், தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்வரை, நடித்தோமா, துட்டு வாங்கினோமா, வீட்டுக்கு போனோமா என, அமைதியாக இருந்த இவர், தற்போது, ... |
| Posted: நடித்த முதல் படம் வெளிவருவதற்கு முன்பே, பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, அதுவும், முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி, கோலிவுட்டில் அனைவரது கவனத்தையும் திரும்ப வைத்துள்ளார், ஆஷா. இவர், கவுதம் கார்த்திக் ஜோடியாக, இவன் தந்திரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்ஜினியரிங் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவியான ... |
| காதல் திருமணம் தான் செய்வேன் - ‛புரூஸ் லீ' கிர்த்தி கர்பந்தா Posted: இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛புரூஸ் லீ'. ஜிவி பிரகாஷ் ஜோடியாக புதுமுகம் கிர்த்தி கர்பந்தா நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்களில் நடித்து பெயர் பெற்றிருக்கிறார். தற்போது ‛புரூஸ் லீ' மூலம் ... |
| நமீதாவின் வாடகை வீட்டை காலி செய்ய தடை - கோர்ட் உத்தரவு Posted: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை நமீதா, சென்னை நுங்கம்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் உரிமையாளர் கருப்பையா நாகேந்திரனுக்கும், நமீதாவுக்கும் வாடகை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசில் நமீதா புகார் செய்தார். நடவடிக்கை எதுவும் ... |
| Posted: செய்தித் தலைப்பைப் பார்த்ததும் தமிழ்த் திரையுலகத்தில் நம்பர் 1 இடத்தை தனுஷ் பிடித்துவிட்டார் என்று நினைக்க வேண்டாம். 2016ம் ஆண்டில் தனுஷ் நடித்த படங்கள் சரியாகப் போகாத போது அவரால் எப்படி முதலிடத்தைப் பிடிக்க முடியும். இந்த முதலிடம் என்பது வேறு. சமூக வலைத்தளங்களில் டிவிட்டரில் அதிக ஃபாலோயர்களைப் பெற்றுள்ளதில் தனுஷ் நம்பர் 1 ... |
| கம்மலில் காதலை வைத்த நயன்தாரா ! Posted: பெண்கள் காதுகளில் அணியும் ஆபரணத்திற்குப் பெயர் கம்மல். இந்தக் காலத்தில் ஆண்கள் கூட அணிய ஆரம்பித்துவிட்டார்கள். விதவிதமான கம்மல் டிசைன்களை நாளுக்கு நாள் நகைக் கடைக்காரர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் எந்த ஒரு டிசைனும் திரைப்படங்களில் நடிகைகள் அணிந்த பிறகுதான் பிரபலமாகிறது. அதிலும் சிலர் எப்படி ... |
| 'துருவங்கள் 16' இயக்குனரைப் பாராட்டிய சிவகார்த்திகேயன் Posted: இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்துள்ள 'துருவங்கள் 16' படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. ஒரு இளம் இயக்குனரிடமிருந்து இப்படி ஒரு படமா என திரையுலகினரும் படத்தைப் பார்த்துப் பாராட்டி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகின் முதன்மை இயக்குனரான ஷங்கர் இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டியிருந்தார். இப்போது ... |
| 6 மாதமாக நடந்து வரும் சங்கமித்ரா கிராபிக்ஸ் பணி: ஜெயம்ரவி, ஆர்யா 18 மாதம் கால்ஷீட் Posted: ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் படம் சங்கமித்ரா. ஜெயம்ரவி, ஆர்யா நடிக்கிறார்கள், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். சதீஷ் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் கலை இயக்குனர், கமலகண்ணன் ஸ்பெஷல் எபெக்டை கவனிக்கிறார். சங்கமித்ரா படத்திற்காக ஜெயம்ரவியும், ஆர்யாவும் ஒண்னறை ஆண்டுகள் கால்ஷீட் ... |
| சல்மான்கான் நிகழ்ச்சியில் ஷாரூக்கான் Posted: பிரபல வட இந்திய சேனல் ஒன்றில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான் ‛பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இது 10வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களின் படத்தின் புரொமோஷன்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் தில்வாலே படத்தை தொடர்ந்து நடிகர் ஷாரூக்கான், தனது ரயீஸ் படத்தையும் இந்த ... |
| பெபிகர் வாய்ப்பு வந்திருந்தாலும் நடித்திருக்க மாட்டேன் - சுசாந்த் சிங் Posted: கை போ சே, ஷுத் தேசி ரொமான்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ‛தோனி' படம் தான் சுசாந்த் சிங் ராஜ்புட்டை மிகவும் பிரபலமாக்கியது. கான் நடிகர்களின் படங்களுக்கு சமமாக தோனி படம் வசூலை குவித்து உள்ளது. தற்போது ராப்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சுசாந்த் சிங். இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் பெபிகர் படத்தில் நடிக்க ... |
| ராகேஷ் ரோஷன் பிடிவாதமாக இருப்பது ஏன் ? Posted: பிரபல நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷன், தற்போது ஹிருத்திக் ரோஷன் நடித்து வெளியாக இருக்கும் ‛காபில்' படத்தை தயாரித்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் வெளியீட்டு தேதியில் மோதல் எழுந்தது. ‛காபில்' படம் ஷாரூக்கான் நடித்துள்ள ‛ரயீஸ்' படத்துடன் ஜன., 25-ம் தேதி மோத இருக்கிறது. இதனால் ஷாரூக், ராகேஷ் ... |
| மம்முட்டியுடன் மீண்டும் பிருத்விராஜ்-ஸ்ரேயா..? Posted: 'புலி முருகன்' பட இயக்குனரான வைசாக் இனி வரும் நாட்களில் பெரிய நடிகர்களின் நான்கு படங்களை அடுத்தடுத்து இயக்கவுள்ளதாக புத்தாண்டு தினத்தில் அறிவித்தார்.. அதில் மம்முட்டியும் பிருத்விராஜும் இணைந்து நடித்த, வைசாக் இயக்கத்தில் வெளியான 'போக்கிரி ராஜா' படத்தின் இரண்டாம் பாகமான 'ராஜா-2'வும் ஒன்று.. முதல் பாகத்தில் மம்முட்டிக்கு ... |
| பெண் தயாரிப்பாளரை அறைந்த 'தெறி' பட விநியோகஸ்தர்..! Posted: மலையாள சினிமாவில் உள்ள தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான ஒன்றுதான் பிரைடே பிலிம் ஹவுஸ்.. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருப்பவர்கள் குணச்சித்திர நடிகரான விஜய்பாபுவும் நடிகை சான்ட்ரா தாமஸும் தான்.. குழந்தை நட்சத்திராமாக சினிமாவில் அறிமுகமான சான்ட்ர, பின்னாளில் மீண்டும் 'பியிடே' என்கிற படஹ்தின் மூலம் தயாரிப்பாளராக ... |
| பிளாஷ்பேக் - 'சந்திரமுகி' 'லகலகலக' எங்கிருந்து வந்தது? Posted: தமிழ்த் திரையுலகில் இப்போது தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் பேய்ப் படங்களுக்குக் காரணம் 2005ம் ஆண்டு வெளிவந்த 'சந்திரமுகி' படம்தான். அதற்கு முன் தமிழ்த் திரையுலகில் பேய்ப் படங்கள் வருவது மிகவும் குறைவு. 'சந்திரமுகி' படம் மாபெரும் வெற்றி பெற்று சென்னை, சாந்தி தியேட்டரில் 891 நாட்கள் ஓடியது. அப்படிப்பட்ட ஒரு மகத்தான வெற்றிப் ... |
| இனி வருடத்திற்கு 2 படம் தான் ; மோகன்லால் முடிவு..! Posted: மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை பொறுத்தவரை வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறு படங்களில் நடித்துவிடுவதை இதுநாள் வரை வாடிக்கையாக கொண்டுள்ளார். மலையாள திரையுலகில் படப்பிடிப்பை குறைந்த நாட்களிலேயே முடித்துவிடுவதால் ஐந்து படங்களில் நடிப்பதும் சாத்தியமாக இருந்தது. ஆனால் கடந்த வருடம் மலையாளத்தில் மோகன்லாலின் நடிப்பில் வெளியான 'புலி ... |
| சல்மான் கான் படத்தில் இஷா தல்வார்..! Posted: 2012ல் தேசியவிருதுகளை பெற்ற படமான 'தட்டத்தின் மறயத்து' மூலம் ரசிகர்களை கிறங்கடித்தவர் தான் இஷா தல்வார். ஆனால் மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் அறிமுகமானது இந்திப்படத்தின் மூலம் தான். ஆனால் அதன்பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு என மும்மொழிகளில் மட்டுமே நடித்துவந்த இஷா தல்வார் கடந்த வருடம் 'தட்டத்தின் மறயத்து' தமிழ் ரீமேக்கான ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-01-04. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |