Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமின்

Posted:

பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவிஸ் மதன், நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். வேந்தர் மூவிஸ் சார்பில் பல படங்களை விநியோகம் செய்தும், பல படங்களை தயாரித்தும் வந்தவர் மதன். சில மாதங்களுக்கு முன்னர், கங்கைக்கு செல்கிறேன், காசியில் சமாதியாகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார். அதன்பின்னர் ...

நடிகர் தனுஷ் வழக்கு: பிப்ரவரி 8 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted:

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி ஆகியோர் மேலூர் கோர்ட்டில், நடிகர் தனுஷ் தங்களது மகன் எனவும், தங்களுக்கு உதவி செய்ய உத்தரவிட வேண்டும் என மேலூர் மாஜீஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், தனுசை நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ...

‛காற்று வெளியிடை' ஆடியோவை வாங்கிய சோனி

Posted:

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி' படம் வர்த்தக ரீதியில் வெற்றியடைந்தது. அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னம் தற்போது இயக்கி வரும் படம் 'காற்று வெளியிடை'. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்க இருந்தார். அவர் போட்ட கண்டிஷன் ...

பிப்ரவரி 9-க்கு தள்ளிப்போன சிங்கம் - 3

Posted:

ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம் சிங்கம்-3. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஐந்தாவது முறையாக தற்போது சிங்கம்-3 படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எஸ்-3 என்ற பெயரில் தொடங்கப்பட்ட இப்படம் கடந்த நவம்பர் ...

ரசிகருக்கு ஜெயராம் மகன் கொடுத்த பதிலடி..!

Posted:

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் சினிமாவில் ஹீரோவாக நுழைந்து ஒரு படமும் வெளியாகிவிட்டது.. தமிழில் அவர் முதன்முதலாக அறிமுகமான ஒருபக்க கதை இன்னும் விடுகதையாகவே இருக்கிறது.. அதேசமயம் மலையாளத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். காளிதாசிடம் உள்ள ஒரு குணம் என்னவென்றால் பெரும்பாலான விழாக்களில் கலந்துகொள்ளும்போது அவரது ...

மீண்டும் மோகன்லாலுடன் நடிக்க விரும்பும் விவேக் ஓபராய்..!

Posted:

விவேக் ஓபராய் பாலிவுட்டில் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமான படம் 'கம்பெனி'.. ராம்கோபால் வர்மா டைரக்சனில் உருவான இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் மோகன்லாலும் நடித்திருந்தார்.. தனது அறிமுகப்படத்திலேயே ஒரு சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் பாக்கியம் பெற்றதாக கருதிய விவேக் ஓபராய், அதன்பின் மோகன்லால் நடித்த மலையாள படங்களை ...

காப்பியில்லை.. தழுவல் தான் ; துல்கர் பட கதாசிரியர் விளக்கம்..!

Posted:

சமீபத்தில் துல்கரின் நடிப்பில் 'ஜோமோன்டே சுவிசேஷங்கள்' என்கிற படம் ரிலீஸாகி ஓடிக்கொண்டு இருக்கிறது..பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள இந்தப்படத்தை பார்த்த பலரும் கடந்த வருடம் வெளியாகி நிவின்பாலி நடிப்பில் ஹிட்டான 'ஜேக்கப்பிண்டே சுவர்க்கராஜ்யம்' படத்தின் அப்பட்டமான சாயல் படத்தின் கதையிலும் காட்சிகளிலும் ...

என் தவறை தன்மீது சுமத்திக்கொண்டார் ரஜினி ; ஹ்ரித்திக் ரோஷன்

Posted:

சமீபத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் 'காபில்' என்கிற படம் வெளியானது.. பலரது பாராட்டுக்களை இந்தப்படம் பெற்றாலும் கூட ஹ்ரித்திக் ரோஷனை மிகவும் சந்தோஷப்படுத்தியது சூப்பர்ஸ்டார் ரஜினியின் பாராட்டுதான். 'காபில்' படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார், அதில் ஹ்ரித்திக்கின் நடிப்பை விலாவாரியாக பாராட்டியுள்ளார்.. இதனை சந்தோஷமாக ...

‛காந்த குரலோன் யேசுதாஸ்க்கு பத்மவிபூஷண் விருது

Posted:

காந்த குரலோனான கேஜே யேசுதாஸ்க்கு இந்திய அரசின் இண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சாதித்தவர்ளுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது இந்திய அரசு. அதன்படி 2017-ம் ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பிரபல ...

ஆஸ்கர் ரேஸிலிருந்து ஏஆர்.ரஹ்மான் வெளியேறினார்

Posted:

இந்தாண்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஆஸ்கர் ரேஸ்க்கான இறுதிபட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. சினிமாவில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர். 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி ...

பிரியங்காவுடன் என்னை ஒப்பிடுவது சரியல்ல - தீபிகா

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகாவும், பிரியங்காவும் ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துவிட்டனர். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்ததிலிருந்தே இருவரையும் ஒப்பிட்டு பேசும் செய்திகள் அதிகம் வெளிவர துவங்கிவிட்டன. சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த தீபிகா, அங்கு நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன்னை ...

படப்பிடிப்பை பாதியில் விட்டு வெளியேறிய அஜய்

Posted:

சிவாய் படத்திற்கு பிறகு இருக்குநர் மிலன் லூதிரா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்து வரும் படம் ‛பாத்சாகோ. இதன்படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்து வந்த நிலையில் திடீரென அஜய், ஷூட்டிங்கை பாதியில் விட்டுவிட்டு அவசர அவசரமாக மும்பை திரும்பினார். இதுப்பற்றி விசாரித்தபோது... அஜய்யின் அம்மாவிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. ...

அப்பாவுக்கு சூப்பர் வெற்றி, மகனுக்கு சுமார் வெற்றி

Posted:

திரையுலகத்தில் அப்பாவும் மகனும் ஒரே கால கட்டத்தில் நாயகர்களாக வலம் வருகிறார்கள் என்றால் அது ஒரு சாதனைதான். அந்த சாதனையை தெலுங்குத் திரையுலகத்தில் சிரஞ்சீவியும், ராம் சரணும் கூட நிகழ்த்தியுள்ளார்கள். அப்பா, மகன் சாதனை புரிந்ததையெல்லாம் சிவாஜிகணேசனும், பிரபுவும் 80களிலேயே நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள் என்பது இன்றைய ...

ரொமான்ட்டிக் படங்களில் நடிக்கும் வயதை தாண்டிவிட்டேன் - ஷாரூக்கான்

Posted:

இயக்குநர் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‛ரயீஸ்'. இப்படத்தின் புரொமோஷன் தொடர்பாக சமீபத்தில் டிவி நகிழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷாரூக்கிடம், நீங்கள் ஏன் ரொமான்ட்டிக் படங்களில் நடிப்பது இல்லை என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து ஷாரூக் கூறியதாவது... "எனக்கு வயது ஆகி கொண்டே ...

ஹிந்தியிலும் சிங்கம்-3 வருகிறது : 2019-ல் ரிலீஸ்

Posted:

ஹரி - சூர்யா கூட்டணியில் வெற்றியடைந்த சிங்கம் படம் தற்போது மூன்றாம் பாகம் வரை வந்துவிட்டது. விரைவில் சிங்கம்-3 தமிழில் ரிலீஸாக இருக்கிறது. சிங்கம் படம் ஹிந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட்டது. ரோகித் ஷெட்டி - அஜய் தேவ்கன் கூட்டணியில் வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து சிங்கம்-2 படத்தை இயக்கினார் ரோகித். தற்போது சிங்கம்-3யை ...

அமீன் ஹாஜி படத்தில் சன்னி லியோன்

Posted:

ஆபாச நடிகையாக இருந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். சில படங்களில் ஹீரோயினாகவும், அதிகமான படங்களில் ஒரு பாட்டுக்கும் ஆடி வருகிறார். இந்நிலையில் நடிகையாக இருந்து இயக்குநராக மாறியிருக்கும் அமீன் ஹாஜி, ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு ‛கோய் ஜானே நா' என்று பெயரிட்டுள்ளார். இப்படத்தில் ...

சல்மானை போன்று டுவைன் உள்ளார் - புகழும் பிரியங்கா சோப்ரா

Posted:

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். தற்போது இவர் குவாண்டிகோ என்ற ஹாலிவுட் தொடரிலும், ‛பேவாட்ச்' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரியங்கா ‛காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடத்தில் பேவாட்ச் படத்தில் ஹீரோ டுவைன் ஜான்சன் உடன் நடித்த அனுபவம் ...

ஆபாச வீடியோ.... யார் இதையெல்லாம் செய்யறீங்க ? - அனிருத் கோபம்

Posted:

அனிருத்தையும் சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது. இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகி முதல் படத்திலேயே உலகப் புகழ் அடையும் அளவிற்கு உச்சிக்குப் போனவருக்கு, அடுத்தடுத்த சர்ச்சைகளால் அவருடைய இமேஜிற்கும் சரிவு ஏற்பட்டது. திரையுலகத்தைப் பொறுத்தவரையில் யாராவது ஒருவர் சீக்கிரமே வளர்கிறார் என்றால் அவரை ...

நடிகை இலியானா நிர்வாண போஸ்

Posted:

நடிகை இலியானா, குளியலறையில் நிர்வாண போஸ் கொடுத்து, அதை சமூக வலை தளத்திலும் பதிவேற்றியுள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் நடித்தவர், இலியானா. தமிழில் நண்பன் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கை தொடர்ந்து ஹிந்திக்கு போனவர், சரியான வாய்ப்பு கிடைக்காததால், வெளிநாடுகளில், நண்பர்களுடன் பொழுதை ...

ஹிந்தி படங்களுக்கு வழிவிடும் தமிழ்த் திரையுலகம்

Posted:

தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடுவதற்கே தியேட்டர்கள் கிடைக்காமல் பல பெரிய தயாரிப்பாளர்கள், சிறிய தயாரிப்பாளர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கடந்த சில வருடங்களாக ஆங்கிலத் திரைப்படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். சில படங்கள் நேரடித் தமிழ்ப் படங்களை விட நல்ல ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™