Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


டான் 3-க்கு பர்கானிடம் கதையில்லை - ஷாரூக்கான்

Posted:

ஷாரூக்கான் - பர்கான் அக்தர் கூட்டணியில் வெளிவந்த ஆக்ஷ்ன் படங்கள் ‛டான்' மற்றும் ‛டான்-2'. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. டான்-3 படம் உருவாக இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தனது ரயீஸ் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கும் ஷாரூக்கானிடம் டான் 3 பற்றி கேட்டபோது, ஷாரூக் ...

ஹிந்தி மீடியம் - மே 12-ல் ரிலீஸ்

Posted:

சாகேத் சவுத்ரி இயக்கத்தில் இர்பான் கான், பரிணீதி சோப்ரா, பாகிஸ்தான் நடிகை சபா ஓமர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ஹிந்தி மீடியம்'. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அதன் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார்கள். கூடவே படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‛ஹிந்தி மீடியம்' படம் வருகிற மே ...

சஞ்சய் தத்தின் மனைவியாக நடிக்கும் நேகா பாஜ்பாய்

Posted:

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. சஞ்சய்யாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். சஞ்சய்யின் நண்பரும், பிரபல இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இப்படத்தை இயக்க உள்ளார். தற்போது படத்திற்கு முந்தை பீரி-புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடக்கிறது, விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு ...

‛செப்' ஹாலிவுட் ரீ-மேக்கில்லை - சைப் அலிகான்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகரான சைப் அலிகான், தற்போது ‛செப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஹாலிவுட்டில் வெளியான செப் படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறது. இதனை இயக்குநர் ராஜா மேனனே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ஆனால் நடிகர் சைப் அலிகானோ இது ஹாலிவுட் படத்தின் ரீ-மேக் இல்லை என்று கூறியுள்ளார்.
இதுப்பற்றி சைப் ...

இளைஞர்களின் போராட்டத்தால் பெருமை கொள்கிறேன் - ஏஆர்.ரஹ்மான்

Posted:

இளைஞர்களின் போராட்டம் பெருமை கொள்ள செய்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக போராட்டம் வலுப்பெற்ற நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அதன்படி நேற்று ...

தமிழர்களின் உணர்வுக்காக சட்டத்தை மாற்று - லாரன்ஸ் உணர்ச்சிகர பேச்சு

Posted:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் துவக்கி வைத்த அமைதி போராட்டம் இன்று ஒட்டுமொத்த தமிழர்களின் எழுச்சி போராட்டமாக மாறியிருக்கிறது. தொடர்ந்து 5வது நாளாக, வெயில், குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே உதவி வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். குறிப்பாக களத்தில் இறங்கி போராடி ...

அவதூறு செய்தி : பீட்டாவிற்கு சூர்யா நோட்டீஸ்

Posted:

சி3 படத்தை விளம்பரப்படுத்தவே நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடுகிறார் என்று பீட்டா கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டாவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் சூர்யா.
நடிகர் சூர்யா தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஆதரித்து வருகிறார். ஆனால் பீட்டா அமைப்பின் நிர்வாகி நிகுஞ்ச் சர்மா என்பவர், பட ...

உலகம் நம்மை பார்க்கிறது, வணங்குகிறேன் - கமல்

Posted:

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உலகமே நம்பை பார்க்கிறது, பனித்த கண்களுடன் நான் பார்பது மாணவர்கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம், வணங்குகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டம் தமிழகத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கொளுத்தும் வெயிலையும், பனியையும், மழையையும் பொருட்டப்படுத்தாமல் இரவு ...

மீண்டும் “மெகா” ஹீரோவை இயக்கும் விவி விநாயக்

Posted:

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தை இயக்கிய இயக்குனர் விவி விநாயக் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார். தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தை தெலுங்கில் கைதி நம்பர் 150 என்ற தலைப்பில் இயக்குனர் விவி விநாயக் இயக்கி வெற்றி கண்டார். இப்படத்தைத் ...

தியேட்டர்களில் வெளிநாட்டு குளிர்பானம் விற்பதில்லை: முடிவெடுக்கிறது தியேட்டர் சங்கம்

Posted:

ஜல்லிகட்டுக்கு எதிரான போராட்டம் புரட்சியாக மாறி உள்ள நிலையில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான உணர்வும் தலைதூக்கி உள்ளது. போராட்ட களத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். எவ்வளவு தாகமாக இருந்தாலும் அதை குடிக்க மறுத்து வருவதோடு அதை கொண்டு வருபவர்களையும் ...

பிரமாண்டத்தில் குதிக்கிறது மலையாள சினிமா

Posted:

ஒரு காலத்தில் மலையாள சினிமா ஒரு கோடிக்குள் எடுக்கப்படும், அது 3 கோடி வசூலித்தாலே வெற்றி என்பார்கள். ஆனால் இன்றைக்கு மலையாள சினிமாவின் லெவலே வேற. துணிச்சலாக 35 கேடி செலவில் புலிமுருகன் எடுத்தார்கள். 150 வசூலித்து சாதனை படைத்ததோடு மலையாள சினிமாவின் வியாபார தளத்தை விரிவுப்படுத்தியது. அதைத் தொடர்ந்து மலையாள சினிமா தற்போது பிரமாண்ட ...

49 லட்சம் மின்சார மோசடி செய்த மாஜி ஹீரோயின் ரதி

Posted:

இயக்குனர் பாரதிராஜாவால் புதிய வார்ப்புகள் படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் ரதி. அதன்பிறகு நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, கழுகு உள்பட பல படங்களில் நடித்தார். பின்பு ரதி அக்னிகோத்ரி என்ற பெயரில் பாலிவுட்டில் முன்னணி நடிகை ஆனார்.
சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் மும்பை தொழில் அதிபர் அனில் ...

மெரினாவை நோக்கிச் செல்லும் நடிகர்கள் - கார்த்தி பங்கேற்பு

Posted:

மெரினா கடற்கரை, தமுக்கம் மைதானம், வஉசி மைதானம், அலங்காநல்லூர் என ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடைபெறும் இடங்களை நோக்கி நாம் போகாமல் இருந்தால் எப்படி, என தங்கள் மனதில் எந்த குற்ற உணர்வும் வந்துவிடக் கூடாது என மக்கள் அனைவரும் சென்று கொண்டிருக்கிறார்கள். இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல, நம் எதிர்காலத்திற்கான போராட்டம், ...

போராட்டாக்காரர்கள் மீது 1000 காளைகளை ஏவிவிட வேண்டும் - ராம்கோபால் வர்மா திமிர் பேச்சு

Posted:

சிவா என்ற இளைஞன் ஒரு சிறிய ஊரிலிருந்து படிப்பதற்காக விஜயவாடா வருகிறான். கல்லூரியில் அரசியல்வாதிகள், ரவுடிகளின் ஆதரவைப் பெற்று தேர்தலில் நிற்காமலேயே மாணவர் தலைவனாக இருக்கும் ஜே.டி. என்பவனை எதிர்க்க ஆரம்பிக்கிறான் சிவா. நடைபெற இருக்கும் கல்லூரித் தேர்தலில் தன் நண்பனை நிறுத்துகிறான் சிவா. இதனால் ஆத்திரமடைந்த ஜே.டி. ரவுடி பவானி ...

முதல்வன், ரமணா காட்சிகளை நேரில் உணரும் மக்கள்

Posted:

திரைப்படங்களில் மட்டுமே பார்த்து மெய் சிலிர்த்த காட்சிகளை இன்று சென்னையில், மதுரையில், கோவையில், நெல்லையில், திருச்சியில், மற்ற ஊர்களில் என தமிழ் மக்கள் நேரில் உணர்ந்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த உணர்வும், உத்வேகமும், பொறுமையும், அமைதியும், அறவழியும் இத்தனை நாட்களாக எங்கிருந்தது என அரசியல்வாதிகளும், ...

நடிகர் சங்கம் பக்கம் செல்லாமல், மெரீனாவுக்குச் சென்ற விஜய்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நேற்று கதவை மூடிக் கொண்டு, நிழலுக்கு பந்தல் அமைத்துக் கொண்டு, உட்கார மேடை, அதன் மேல் நாற்காலிகள் என சொகுசாக மாணவர்களின் அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரில் நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வந்து ...

தமிழர்களின் போராட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு: மம்முட்டி

Posted:

தமிழக மக்களின் போராட்டம் இந்தியாவுக்கே எடுத்துக் காட்டு என்று மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல், எந்த ஜாதி மதத்தையும் பாராமல், ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல், எந்த வன்முறையுமின்றி லட்சக்கனக்கான மக்கள் ...

ரா...ரா...ராஜசேகர்: ஆணவக்கொலை பற்றிய படம்

Posted:

காதல் படத்தில் ஜாதி வெறியையும், கல்லூரி படத்தில் அரசியல் வெறியையும், வழக்கு எண் படத்தில் பணக்கார திமிரையும் பதிவு செய்த பாலாஜி சக்திவேல் அடுத்து இயக்கி வரும் படம் ரா...ரா...ராஜசேகர். லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. லிங்குசாமியின் சகோதரி மகன் விஜய் முருகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். கன்னடப் படமான லூசியா, தமிழ் படமான ...

பெண்களுக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் ஆர்வமாக உள்ளேன் - நிவேதா

Posted:

சின்னத்திரையில் கல்லூரி காலம், செந்தமிழ் பெண்ணே ஆகிய நிகழ்ச்சிகளை தற்போது தொகுத்து வழங்கி வருபவர் நிவேதா. இந்த நிகழ்ச்சிகள் மூலம் நவீன பெண்களின் சீறிய சிந்தனை, விழிப்புணர்வு உள்ளிட்ட அவர்களின் அசாத்திய திறமையைப்பார்த்து அசந்து போகிறேன் என்கிறார் தொகுப்பாளினி நிவேதா.

மேலும் அவர் கூறுகையில், இன்றைக்கு பெண்கள் எல்லா ...

மீண்டும் சினிமாவுக்கு வந்த சீரியல் இயக்குனர் எஸ்.என்.சக்திவேல்

Posted:

சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி சீரியலை இயக்கி வருபவர் எஸ்.என்.சக்திவேல். சீரியலில் தனது காமெடி திறமையை பல வருடங்களாக வெளிப்படுத்தி வந்த அவர், இவனுக்கு தண்ணியில கண்டம் படம் மூலம் சினிமாவில் என்ட்ரியானார். சின்னத்திரை நடிகர் தீபக், நேகா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்த அந்த படமும் பெரிய அளவில் அவருக்கு வெற்றியாக அமைந்தது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™