Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'பைரவா' படத்தின் முதல் நாள் வசூல் என்ன ?

Posted:

பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது முதல் நாள் என்ன வசூல், முதல் வாரம் என்ன வசூல், மற்ற நடிகர்களின் படங்களை விட வசூல் அதிகமா என்ற எதிர்பார்ப்பு சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களிடம் எழுவது வழக்கம்தான். விஜய் நடித்து நேற்று வெளிவந்த 'பைரவா' படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விஜய் ரசிகர்கள் மிகவும் ...

'பாகுபலி' முதல் நாள் சாதனையை முந்திய 'கைதி நம்பர் 150'

Posted:

சாதனைகள் படைக்கப்படுவதே முறியடிக்கப்படுவதற்காகத்தான் என்று சொல்வார்கள். தென்னிந்தியத் திரையுலகில் அதிக வசூலைப் பெற்ற முதல் படமாக 'பாகுபலி' படம் இதுவரை இருந்து வந்தது. அந்த சாதனையை சிரஞ்சீவி நடித்து நேற்று முன்தினம் வெளிவந்த 'கைதி நம்பர் 150' படம் முறிடியத்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களையும் ...

கௌதம் மேனன்-விக்ரம் படத்தில் இணைந்த நிவின்பாலி ஹீரோயின்..!

Posted:

கௌதம் மேனன் படங்களில் எல்லாம் கதாநாயகிகளுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. அதனால் அவரது படங்களில் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் அனைவருமே ஆவலாக இருப்பார்கள் தான். ஆனால் கதைக்கு தேவைப்பாட்டால் மட்டுமே அவர்களை அழைக்கும் கௌதம், மற்றபடி புதிய நாயகிகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் வேலையை சரியாக செய்து வருகிறார். ...

கமல் படத்திலிருந்து விலகினார் வித்யாபாலன்..!

Posted:

பிரபல மலையாள இயக்குனர் கமல் பாலிவுட் நடிகை வித்யாபாலனை வைத்து இயக்குவதற்காக தயாரான படம் தான் 'ஆமி'. மலையாள சினிமாவுக்கு வரமாட்டேன் என அடம்பிடித்த வித்யாபாலனையே நடிக்க ஒப்புக்கொள்ள வைத்த இந்த 'ஆமி' படத்தின் கதையின் நாயகி தான் கமலா சுரையா.. யார் இந்த கமலா சுரையா..? கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் கமலா தாஸ் ஆக ...

அல்போன்ஸ் புத்ரனை மேடையேற்றி கௌரவித்த மோகன்லால்..!

Posted:

மலையாளத்தில் வெளியாகி நூறு நாட்களை கடந்த 'ஒப்பம்' படம் மோகன்லால் மற்றும் அவரது திக் பிரண்ட் ஆன பிரியதர்ஷன் கூட்டணியில் உருவான படைப்பு. அதனாலேயே ரிலீஸுக்கு முன்பாக கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்பு இந்தப்படத்துக்கு ரசிகர்களிடம் எழுந்தது. படத்தின் ட்ரெய்லர் அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது. ஆம்.. இந்தப்படத்தின் மிக ...

3 நாள் ஓடும் படத்திற்கு 300 நாள் இசையமைப்பதா ? வைரமுத்து வேதனை

Posted:

இளையராஜா - வைரமுத்து இணைந்திருந்த காலம் தமிழ்த் திரையிசை உலகில் ஒரு பொற்காலம் என்பதை அனைத்து இசை ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள். ஒரு படத்திற்கு பாடல்களுக்காக டியூன்கள் உருவாக்குவதை இளையராஜா ஒரே நாளில் முடித்த சம்பவங்கள் உண்டு. ஹார்மோனியத்தைத் தொட்டால் அவர் டியூனை முடிக்காமல் எழுந்ததாக வரலாறே கிடையாது என வைரமுத்து ...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரஜினி, விஜய், அஜித் குரல் கொடுப்பார்களா ?

Posted:

தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக இருக்கும் ஜல்லிக்கட்டு விவகாரத்திற்காக தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பலரும் ஆதரவுக் குரல் கொடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தங்களது ஆதரவை வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள்.

தமிழ் கலாச்சாரத்தின் குரலாக எழுந்துள்ள ...

ஆக்ஷ்ன் அவதாரத்துக்காக த்ரிஷா பயிற்சி

Posted:

ரஜினியின் படத்தலைப்புகளை ஹீரோக்கள் மட்டும்தான் மீண்டும் பயன்படுத்த முடியுமா? ஹீரோயின் பயன்படுத்தினால் என்னவாம் என்பதுபோல், த்ரிஷாவின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படம் ஒன்றுக்கு 'கர்ஜனை' என்று பெயர் சூட்டியுள்ளனர். சமீபகாலமாக கதாநாயகி கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா, ...

சிவபெருமானை கைது செய்ய முடியுமா...? - ஜல்லிக்கட்டு விஷயத்தில் வைரமுத்து கேள்வி

Posted:

அமீர் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் ‛சந்தனதேவன்'. ஆர்யா, அவரது தம்பி சத்யா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஹீரோயினாக அதிதி மேனன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவும் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, ஜல்லிக்கட்டு பற்றிய ...

சிக்கன் 65-க்கு ஏன் போராடவில்லை.? - பீட்டாவிற்கு ராஜேஷ் கேள்வி

Posted:

ஜல்லிக்கட்டிற்கு எதிராக போராடும் பீட்டா, சிக்கன் 65, ஆம்லேட் போன்றவற்றுக்கு எதிராக ஏன் போராடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டு கிடக்கிறது. இந்தாண்டாவது நடைபெறுமா...? என்று கடைசி நிமிட வரை தமிழர்கள் காத்திருக்கின்றனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக மாநிலம் ...

ஜல்லிக்கட்டு... இனி கொல விழ போகுது - சற்குணம் கோபம்

Posted:

தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்ற மனநிலைக்கு தமிழகம் வந்துவிட்டது. ஜல்லிக்கட்டு நடத்த அரசியல் கட்சியினரும், மாணவர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், திரையுலகினரும்... என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் களவாணி, வாகை சூட வா படங்களின் இயக்குநர் ஜல்லிக்கட்டு தொடர்பாக வீடியோ வடிவில் ஒரு கவிதை ...

தமிழில் வெளியாகிறது காஸி

Posted:

இரண்டாம் உலகம், 'பெங்களூர் டேஸ்' 'இஞ்சி இடுப்பழகி', 'தோழா' முதலான படங்களை தயாரித்த 'பிவிபி சினிமாஸ்' நிறுவனம் 'மேட்னி என்டர்டெயின்மென்ட்' என்ற நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் 'காஸி'. ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகிய இப்படத்தை தமிழிலும் 'காஸி' என்ற பெயரில் டப் செய்து வெளியிட உள்ளது பிவிபி ...

பொங்கல் ரேஸிலிருந்து வெளியேறிய 'புரியாத புதிர்'

Posted:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த 'பைரவா', விஜய் சேதுபதி நடித்த 'புரியாத புதிர்', ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த ஷின் 'புரூஸ்லீ', பார்த்திபன் நடித்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய படங்கள் வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இந்த பட்டியலில் இருந்து 'புரூஸ்லீ' படம் முதலில் பின் வாங்கியது. பிப்ரவரி மாத ரிலீசாக ...

வெளிநடப்பு வீடியோ நாடகமா...?

Posted:

கமலிடமிருந்து பிரிந்த கௌதமி அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்தார். பின்னர் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதை எல்லாம் வைத்து, வாஜ்பாய் காலத்திலிருந்து பா.ஜ.க. உறுப்பினராக உள்ள கௌதமி, மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்தான் கடந்த வாரம் கௌதமி ...

பீட்டாவிற்கு ஆதரவு : த்ரிஷாவிற்கு கடும் எதிர்ப்பு, படப்பிடிப்பு நிறுத்தம்

Posted:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கான ஆதரவு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆங்காங்கே தடையை மீறி ஜல்லிக்கட்டும் நடந்து வருகிறது. இதுதொடர்பாக சிலர் கைதும் செய்யப்பட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் அதேவேளையில் பீட்டாவிற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் ...

ஹாலிவுட்டில் ஆர்வம் இல்லை - அமீர்கான்

Posted:

சமீபத்தில் வெளியான தங்கல் படம் கொடுத்த வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அமீர்கான். இப்படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை எட்டியிருக்கிறது. அமீர்கான் அடுத்தப்படியாக ‛தக் ஆப் ஹிந்துஸ்தான்' படத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார். இதில் அமீருடன், அமிதாப்பச்சனும் நடிக்க உள்ளார். தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா ...

ஆக்ஷ்ன் அசத்த விரும்பும் ஆதித்யா ராய் கபூர்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஆதித்யா ராய் கபூர். தொடர்ந்து இவர் சாக்லேட் பாயான ரோலிலேயே நடித்து வருகிறார். தற்போது ஓகே ஜானு படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனிடையே அவருக்கு ஆக்ஷ்ன் படத்தில் நடிக்க ஆசையாக உள்ளதாக கூறியுள்ளார். இதுப்பற்றி ஆதித்யா கூறியிருப்பதாவது... ‛‛வித்தியாசமான ...

சஞ்சய் தத் மகளாக நடிக்க ஆலியா பட் மறுப்பு

Posted:

சிறைவாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டார் நடிகர் சஞ்சய் தத். அவரது முதல்படமாக ‛பூமி' படம் வருகிற ஜன., 29-ம் தேதி ஆக்ராவில் பிரமாண்டமாய் துவங்குகிறது. இதில் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளார்கள். சஞ்சய்யின் மனைவி மான்யா தத் படப்பிடிப்பை துவக்கி வைக்க உள்ளார். ‛பூமி' படம் அப்பா - மகள் இடையேயான உறவை ...

‛நாயக்-2' விற்கு கதை எழுதும் பாகுபலி கதாசிரியர்

Posted:

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், வடிவேலு, லைலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து பிரமாண்டமாக வெளிவந்த படம் ‛முதல்வன்'. அரசியல் பேசிய இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஹிந்தியில் ‛நாயக்' என்ற பெயரில் ரீ-மேக்கானது. அர்ஜூன் ரோலில் அனில் கபூர் நடித்திருந்தார். நாயக் படமும் ...

வரிவடிவில் பைரவா பாடல்கள்

Posted:

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளிவரும்போது அதனுடன் இணைந்து பாட்டு புத்தகங்களும் வெளிவரும் 10 பைசா முதல் 25 பைசா வரை விலை இருக்கும். அதன் பிறகு சிடி வந்தது. பாட்டு புத்தகம் நின்றது. இப்போது சிடி வருவதும் குறைந்து இணையதளம், செல்போன் வழியாக வருகிறது. இதனால் பாடல்களின் குரல் வடிவம்தான் கிடைக்கிறதே தவிர வரிவடிவம் கிடைப்பதில்லை. பைரவா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™