Cinema.tamil.com |
- கபாலி இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பாளராகிறார்
- படமாகிறது தங்க மாரியப்பனின் வாழ்க்கை :பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் ஷாரூக்கான்
- பாட்ஷா, கபாலியை மிஞ்சும் ரஜினியின் அடுத்த கேங்ஸ்டர் படம்!
- மீண்டும் தனுசுடன் இணையும் காஜல்அகர்வால்!
- வடிவேலுவுக்காக திரைக்கதையில் திருத்தம் செய்த அட்லி!
- கோலிவுட்டில் சிம்பு-தனுஷ் பெயரில் ஒரு படம்!
- 2017 -ல் எதிர்பார்க்கப்படும் படங்கள்
- 8 பேக் ஹீரோவாகும் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி!
- செட்டுக்கு வெளியே படமாகும் ராமானுஜர் தொடர்!
- கிரைம் திரில்லர் கதையில் பா.விஜய்!
- கவலைப்படாத கயல் ஆனந்தி!
- ரஜினி பட தலைப்பில் நடிப்பது அவருடன் நடிக்கிற திருப்தி: ஐஸ்வர்யா மேனன்
- மோ பட ஹீரோவின் அடுத்த படம் அதிமேதாவிகள்
- சினிமாவானது லைட்மேன்களின் வாழ்க்கை
- நந்திதாவை ஏமாற்றிய 2016
- விருதுகளை குவிக்கும் லட்சுமி பிரியாவின் குறும்படம்
- புத்தாண்டு சிறப்பு திரைப்படங்கள்
- தமிழ் நாட்டில் 100 நாள் ஓடிய முதல் கன்னடப்படம்
- குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடும் ராகவா லாரன்ஸ்
- பைரவா' டிரைலர், ஒரே இரவில் 1 மில்லியன் ஹிட்ஸ், 1 லட்சம் லைக்ஸ்
| கபாலி இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பாளராகிறார் Posted: |
| படமாகிறது தங்க மாரியப்பனின் வாழ்க்கை :பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் ஷாரூக்கான் Posted: நடிகர் ரஜினியின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமாக ஐஸ்வர்யா தனுஷ் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 3 படம் மூலம் இயக்குனர் ஆனவர் நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா. அதன் பிறகு வை ராஜா வை படத்தை இயக்கினார். இந்நிலையில் ... |
| பாட்ஷா, கபாலியை மிஞ்சும் ரஜினியின் அடுத்த கேங்ஸ்டர் படம்! Posted: ரஜினியின் கேரியில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் அவர் நடித்த பாட்ஷா முக்கியமான படம். வசூல்ரீதியாக மட்டுமின்றி, ரஜினிக்கும், அவரது ரசிகர் களுக்கும் பெரிய திருப்தியை கொடுத்த படம். அதனால்தான் இப்போது வரை தான் நடித்த படங்களில் பிடித்த முதல் படமாக பாட்ஷாவை குறிப்பிட்டு வருகிறார் ரஜினி. மேலும், அந்த படம் பாணியில் அதன்பிறகு பாட்ஷா-2 ... |
| மீண்டும் தனுசுடன் இணையும் காஜல்அகர்வால்! Posted: சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி, துல்கர்சல்மான் நடித்த வாயை மூடி பேசவும், தனுஷ் நடித்த மாரி ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இதில், மாரி படம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும், தனுசுக்கு மிகவும் பிடித்தமான படமானது. அதனால் அந்த படம் வெளியானதும் மாரி-2 படத்திற்கான ... |
| வடிவேலுவுக்காக திரைக்கதையில் திருத்தம் செய்த அட்லி! Posted: தெறியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல்அகர்வால், சமந்தா நடிப்பதாக தெரிகிறது. மேலும், இந்த படத்திற்கான கதையை ரெடி பண்ணியபோது அதில் காமெடியனாக வடிவேலு இடம்பெறவில்லை. தெறியில் நடித்த மொட்டை ராஜேந்திரன்தான் நடிப்பதாக இருந்தது. ... |
| கோலிவுட்டில் சிம்பு-தனுஷ் பெயரில் ஒரு படம்! Posted: இதுவரை எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் நடித்த ஹிட் படங்களின் டைட்டீல்களில் இப்போதைய சில இளவட்ட ஹீரோக்கள் நடித்து வருகின்றனர். அதேபோல் முன்னணி நடிகர்களின் ரசிகராகவும் சில நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது கோலிவுட்டில், காதலில் சிம்புவும் தனுசும் -என்ற பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது. புதுமுக நடிகர்கள் லோகேஷ், ... |
| 2017 -ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் Posted: 2016 ம் ஆண்டு இனிதே நிறைவுகிறது. வழக்கம் போலவே நல்லது நடந்தவர்களும், வெற்றி கிடைத்தவர்களும் இந்த ஆண்டை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். தோல்வியடைந்தவர்களும், எதிர்பார்த்தது நடக்கவில்லையே என்று நினைப்பவர்களும் இந்த ஆண்டை மறக்க நினைப்பார்கள். எப்போதும் போல புது வருடம் பிறக்கும் போது வரும் ஆண்டாவது ... |
| 8 பேக் ஹீரோவாகும் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி! Posted: பாலிவுட்டில் பரவியிருந்த 6 பேக் கலாச்சாரம் அதன்பிறகு தெற்கு நோக்கி வந்து தென்னிந்திய அளவிலும் பரவியது. சில இளவட்ட ஹீரோக்கள் மாதக்கணக்கில் வாயை வயித்தைக்கட்டி 6 பேக் உடல்கட்டுக்கு மாறி நடித்தனர். அப்படி தமிழ் சினிமாவில் சூர்யா, சிம்பு, விஷால், அதர்வா என பல ஹீரோக்கள் சில படங்களில் சிக்ஸ்பேக் உடல்கட்டுடன் நடித்தனர். ஆனால், அதுவும் ... |
| செட்டுக்கு வெளியே படமாகும் ராமானுஜர் தொடர்! Posted: கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராமானுஜர். இதற்கு கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதுகிறார். பெரும்பாலும், சரித்திர தொடர்கள் என்றாலே செட்டுக்குள்தான் படமாக்குவார்கள். ஆனால் இந்த தொடரை செட்டுக்கு வெளியே படமாக்கி வருகிறார்கள். அதற்காக சென்னை மட்டுமின்றி பல வெளி யூர்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தி ... |
| கிரைம் திரில்லர் கதையில் பா.விஜய்! Posted: தமிழ்ப்படங்களில் அதிகமான பாடல்களை எழுதி வந்தவர் பா.விஜய். அதோடு ஆட்டோகிராப் என்ற படத்தில், ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ் வென்றால் போராடும் போர்க்களமே -என்ற பாடலுக்கு தேசிய விருது பெற்றார். பின்னர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கிய இளைஞன் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தார். அதன்பிறகும் சில படங்களில் நடித்தவருக்கு எதிர்பார்த்தபடி வெற்றி ... |
| Posted: பிரபுசாலமன் இயக்கிய மைனா படத்தில் நடித்து பிரபலமானவர் அமலாபால். அதன்பிறகு அவரது கும்கியில் நடித்து பிரபலமானவர் லட்சுமிமேனன். அதனால் அதன்பிறகு அவரது கயல் படத்தில் ஆனந்தி நடித்தபோது, இவரும் அமலாபால், லட்சுமி மேனனைப்போன்று ஒரே படத்தில் முன்னணி நடிகையாகி விடு வார் என்றுதான் கருதப்பட்டது. அதோடு கயல் என்கிற டைட்டில் வேடத்திலேயே ... |
| ரஜினி பட தலைப்பில் நடிப்பது அவருடன் நடிக்கிற திருப்தி: ஐஸ்வர்யா மேனன் Posted: காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, மற்றும் சில கன்னட, தெலுங்கு படங்களில் சின்ன சின்ன கேரக்டர்ளில் நடித்து வந்தவர் ஐஸ்வர்யா மேனன். தற்போது வீரா என்ற படத்தின் மூலம் சோலோ ஹீரோயின் ஆகியிருக்கிறார். கிருஷ்ணா ஹீரோவாகவும், கருணாகரன் காமெடியனாகவும் நடிக்கிறார்கள். ராஜாராமன் இயக்குகிறார். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் ... |
| மோ பட ஹீரோவின் அடுத்த படம் அதிமேதாவிகள் Posted: ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையில் வெளியாகி பரவலான கவனம் ஈர்த்திருக்கிற மோ படம். யாமிருக்க பயமே, டார்லிங் படங்களின் வரிசையில் காமெடி பேய் படமாக வெளிவந்திருக்கிறது. இதில் சின்னத்திரை தொகுப்பாளர் சுரேஷ் ரவி ஹீரோவாக நடித்துள்ளார். மோ படத்தின் வரவேற்பை தொடர்ந்து அதிமேதாவிகள் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு ... |
| சினிமாவானது லைட்மேன்களின் வாழ்க்கை Posted: சினிமாவின் முக்கியமான ஒரு அங்கமாக இருப்பவர்கள் லைட்மேன்கள். கடுமையாக உழைப்பவர்களும் அவர்கள்தான். ஆனால் சினிமாவில் குறைவான ஊதியம் வாங்குகிறவர்களும் அவர்கள்தான். அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து லைட்மேன் என்ற படம் தயாராகியுள்ளது. ஸ்டூடியோ 18 புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜி.வெங்கடேஷ் இயக்கி ... |
| Posted: அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர்கள் ஐஸ்வர்யா ராஜேசும், நந்திதாவும். ஆனால் ஐஸ்வவர்யா ராஜேஷ் ஜெட் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார். நந்திதா தடுமாறிக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் மோ, தர்மதுரை, ஹலோ பேய் பேசுகிறேன், குற்றமே தண்டனை, மனிதன், ஆறாது சினம், கடலை, பறந்து செல்ல வா, என 8 படங்களில் நடித்திருக்கிறார். ... |
| விருதுகளை குவிக்கும் லட்சுமி பிரியாவின் குறும்படம் Posted: முன்தினம் பார்த்தேனே படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி பிரியா. கவுரவம், சுட்டகதை, கள்ளப்படம், யாகாவாராயினும் நாகாக்க, மாயா, களம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள லட்சுமி என்ற குறும்படம் சர்தேச படவிழாக்களில் விருகளை குவித்து வருகிறது. உலக நாடுகளில் நடந்த பட விழாக்களில் இதுவரை10க்கும் மேற்பட்ட ... |
| புத்தாண்டு சிறப்பு திரைப்படங்கள் Posted: இன்று ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. இதையட்டி தமிழ் சேனல்கள் சிறப்பு திரைப்படங்களை ஒளிபரப்புகிறது. விஜய் தொலைக்காட்சி இன்று இரவு 10 மணிக்கு பாங் பாங் என்ற இந்திப் படத்தை தமிழில் டப் செய்து ஒளிபரப்புகிறது. 2014ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன், கத்ரினா கைப் நடித்துள்ளனர். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ ... |
| தமிழ் நாட்டில் 100 நாள் ஓடிய முதல் கன்னடப்படம் Posted: இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவின் முதல் படம் கோகிலா. இது கன்னடத்தில் தயாரான படம். 1977ம் ஆண்டு வெளிவந்தது. கமலஹாசன், மோகன், ஷோபா, ரோஜா ரமணி, உள்பட பலர் நடித்திருந்தனர். கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் தமிழ்நாட்டில் கன்னட மொழியிலேயே வெளியாகி 100 நாட்கள் ஓடியது. பொதுவா தெலுங்கு படங்கள்தான் தமிழ்நாட்டில் ... |
| குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடும் ராகவா லாரன்ஸ் Posted: நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அம்பத்தூரில் ஸ்ரீராகவேந்திரா கோவில் கட்டி பராமரித்து வருகிறார். பொதுமக்களிடையே அந்த கோவில் மிகவும் பிரபலமாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இன்று தனது கோவிலில் ஏழை குழந்தைகளுடன் புத்தாண்டை கொண்டடி வருகிறார். அந்த கோவிலை கட்டி இன்றோடு 8 ஆண்டுகள் ஆகிறது. புத்தாண்டு இன்று ... |
| பைரவா' டிரைலர், ஒரே இரவில் 1 மில்லியன் ஹிட்ஸ், 1 லட்சம் லைக்ஸ் Posted: 2017ம் ஆண்டின் முதல் அதிரடி வசூல் படமாக இருக்கம் என அனைவராலும் எதிர்பார்க்கப்படும் படம் 'பைரவா'. விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் நேற்று இரவு 10 மணி அளவில் வெளியிடப்பட்டது. டிரைலவர் வெளியான சிறிது நேரத்திலேயே டிரைலரைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-01-01. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |