Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சொன்னதும் கேட்டதும் - உணவு-

Posted: 01 Jan 2017 09:09 AM PST

முக்கா லுணவின்றி யெத்தேகி கட்கு முழுவுணலி லக்கா ரணமன்ன சாகாதிகூடி யரையதிற்பால் சிக்கா வமுதம்பு தக்கிரங் காலுண்டிச் சேடம்வெளி வைக்கா விடிலுண்டி வேகா தனலும் வளியுமின்றே யாராக இருந்தாலும் முக்கால் வயிறு அளவுக்கே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது சோறு, பலாகாரம் போன்ற உணவை அரை வயிறும், பால், மோர், நீர் போன்றவை கால்வயிறு அளவுக்கும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு போதும் முழுவயிறு உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி முழு வயிறு உணவு உட்கொண்டால் சாப்பிட்ட உணவைச் சீரணிக்கத் தக்க அக்கினியும் ...

உமா அவர்களை அவர் பிறந்த தினத்தில் வாழ்த்துவோம் 01 ஜனவரி .

Posted: 01 Jan 2017 09:02 AM PST

[b]உமா அவர்களை அவர் பிறந்த தினத்தில் வாழ்த்துவோம் 01 ஜனவரி .
[/b]

கிழக்கில் இருந்து
மேற்கு வரை
வடக்கில் இருந்து
தெற்கு வரை
உலகமே
உங்கள் 21 ம் பிறந்த தினத்தின்
பத்தாமாண்டு கொண்டாடும் வேளையில்
எந்தன் வாழ்த்துக்கள் உங்களுக்கும் .



ரமணியன்  

ஆண்களின் கலையான சமையல்!

Posted: 01 Jan 2017 07:16 AM PST

- காலப் பெருவெளியில் கணக்கற்ற ரக சாத்தியங்களை உள்ளடக்கிய சமையற் கலையில் எனக்கு முத்தான மூன்று பணிகள் மட்டும் செவ்வனே செய்ய வரும். அவையாவன: – வெந்நீர் வைத்தல். பால் காய்ச்சுதல். மோர் தயாரித்தல். – கொஞ்சம் மெனக்கெட்டு அரிசி களைந்து குக்கரில் வைத்துவிட முடியும் என்றே தோன்று கிறது. ஆனால் ஒரு தம்ளர் அரிசிக்கு மூன்று தம்ளர் தண்ணீரா, இரண்டரைதானா என்பது குழப்பும். உதிர்சாத வகையறாக்க ளுக்கென்றால் தண்ணீரைச் சற்றுக் குறைத்து வைக்கவேண்டுமென்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் எவ்வளவு குறைத்து? தவிரவும் ...

குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு...

Posted: 01 Jan 2017 06:29 AM PST

துறவி ஒருவர் குடில் ஒன்று அமைத்து, பல சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்து வந்தார். சாஸ்திரங்களை நன்றாக கற்றிருந்த அந்த குருவால் வாழ்க்கைத் தத்துவங்களை புரிந்து கொண்ட சீடர்கள் ஆன்மிகப் பாதையில் சென்றனர். அந்த துறவியிடம், ஒரு சீடனுக்கு பிடிப்பு இல்லாமல் போனது. 'சாஸ்திரங்களைப் படித்து, அதில் இருப்பதைத்தானே குரு நமக்கு கற்றுத்தருகிறார். சாஸ்திரங்களைப் படித்து நாமே அதைக் கற்றுக்கொள்ளலாமே.. இடையில் குரு எதற்கு?' என்ற எண்ணம் அந்த சீடனுக்குத் தோன்றியது. அவனது எண்ணத்தை மறுநாளே செயல்படுத்தினான். ...

புத்தாண்டும் சில நம்பிக்கைகளும்!

Posted: 01 Jan 2017 05:13 AM PST

ஆடல் -பாடல்! - நல்ல திறந்தவெளி - பசுமையான திறந்தவெளி. அப்படிப்பட்ட திறந்தவெளியில் புத்தாண்டு தினத்தன்று மரத்தை சுற்றி நடனம் ஆடினால், உடல் நலம், அன்பு ஆகியவை அடுத்த, 12 மாதங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஜன்னல் கல்யாணம்! - மக்களின் முக்கியமான விஷயங்களில் ஒன்று கல்யாணம். மணமாகாத பெண்கள் காலை எழுந்தவுடன், ஜன்னல் வழியாக முதலில் ஒரு ஆணை பார்த்தால், அந்த ஆண்டுக்குள் திருமணம் நடந்து விடும். காசு... தங்கக்காசு! - காசை வெளியே வைத்தாலே காணாமல் போய்விடும். அதிலும் தங்க காசை வைத்தால் ...

வெல்கம் நியூ இயர்! 2017

Posted: 01 Jan 2017 05:08 AM PST

- புத்தாண்டு நம்மளை வைத்து காமெடி செய்வது குறைவுதான். நாம்தான் அதை வைத்து நிறைய காமெடி செய்வோம். தடபுடலா வரவேற்று, தடாலென கீழே தள்ளி விடுவோம். - புத்தாண்டின் முன் தினம், அன்று, அடுத்த தினம் என அலம்பல் பண்ணுவோம். அத்தோடு அம்பேல். முக்கியமாக, 'புத்தாண்டு சபதம்' என்ன? - உங்கள் முகத்தில் சிரிப்பு முளைக்கிறதே! முதல் நாளே சபதமெடுத்து, அன்றே முறிப்பது என, பெரும்பாலானோர் புத்தாண்டை கூட்டி வந்து, காமெடி பீஸாக்கி விடுவர். - பிரபலமான புத்தாண்டு சபதங்கள்! - * காலையில் சீக்கிரம் ...

எல்லா வேலையும் மருமகதான் பார்ப்பா...

Posted: 01 Jan 2017 05:06 AM PST

ஆட்டோவுல எதுக்குப்பா ரகசிய கேமரா...?

Posted: 01 Jan 2017 05:05 AM PST


-

வாழ்த்துங்கள் உறவுகளே !

Posted: 01 Jan 2017 05:04 AM PST

நீண்ட நாட்களாக இடது கண்ணில் பார்வை மங்கலாக இருந்துவந்தது . டாக்டரிடம் காண்பித்ததில் , கண்ணில் புரை இருப்பதாகவும் , கூடிய விரைவில் அறுவைசிகிசசை செய்துகொள்வது நல்லது என்றும் கூறினார் .

அதன்படி இன்று அறுவை சிகிசசை வெற்றிகரமாக நடந்து முடிந்தது . புண் விரைவில் ஆறவும் , பார்வையில் தெளிவு ஏற்படவும் , ஈகரை உறவுகளை வாழ்த்த வேண்டுகிறேன் .

நன்றி .

ஒரு விநாடி தாமதமாக பிறக்கிறது புத்தாண்டு

Posted: 01 Jan 2017 05:00 AM PST

டிசம்பர் 30 - பூமியின் ஒருநாள் சுழற்சியை அடிப்படை யாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படு கிறது. இது வானியல் நேரம் என்று அழைக்கப்படுகிறது. இதேபோல உலகம் முழுவதும் 400 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அணு கடிகாரம் மூலமும் நேரம் கணக்கிடப்படு கிறது. இது மிகவும் துல்லியமானது. தற்போது அணு கடிகாரத்தை பின்பற்றியே உலகின் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக பூமி ஒரே வேகத்தில் சுற்று வது இல்லை. நிலவின் ஈர்ப்பு விசை, நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் சில நேரங்களில் வேகமாகவும் சில நேரங்களில் மெதுவாகவும் ...

ஒரு பக்க காலண்டர் – 2017

Posted: 01 Jan 2017 04:59 AM PST

புத்தாண்டில் மகிழ்ச்சியும் சோகமும்.

Posted: 01 Jan 2017 04:58 AM PST

புத்தாண்டில் மகிழ்ச்சியும் சோகமும். இதே சமயம் துருக்கி இஸ்தான்புலில் கிறிஸ்மஸ் தாத்தா உடையில் வந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 39 பேர் கொல்லப்பட்டனர்,70 ற்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

WhatsApp தந்த புதுவருட அதிர்ச்சி.

Posted: 01 Jan 2017 04:58 AM PST

இன்று முதல் Android 2.1 and 2.2,Windows Phone 7, iPhone 3GS/iOS 6  கருவிகளில் பயன்படுத்த முடியாது என்றும்,சூன் மாதம் முதல் BlackBerry,Nokia S40,Nokia Symbian S60 கருவிகளிலும் பயன்படுத்த முடியாது என்று அறிவித்துள்ளது. அதே சமயம் இதுவரை வாட்ஸாப் சேவையில் பதிவு செய்தவற்றை நீக்கும் வசதியற்ற நிலையில்,ஒருவர் பதிவு செய்த தகவலை நீக்க வசதி செய்யப்பட்டுள்ளது. WhatsApp Messenger சேவையை 2014 இல் முக நூல் நிறுவனம் வாங்கியது. இதை உருவாக்கியவர்கள் யாகூ நிறுவனத்தில் பணியாற்றிய Jan Koum ,Brian Acton என்ற ...

வட்டியும் முதலும் புத்தகம்

Posted: 01 Jan 2017 03:44 AM PST

வட்டியும் முதலும் மென்புத்தகம்

லிங்க் :

கடைசி நேரத்தில் காலியாக உள்ள ரயில் டிக்கெட்களுக்கு 10 % கட்டண சலுகை: ஜனவரி 1ம் தேதி அமல்

Posted: 31 Dec 2016 10:01 PM PST

புதுடெல்லி : ரயில் புறப்படுவதற்கு முன்பு காலியாக உள்ள இருக்கைகளுக்கு முன்பதிவு செய்தால், அடிப்படை கட்டணத்தில் 10 சதவீத சலுகை வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இது ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரம் முன்னதாக முன்பதிவு விவரங்களுடன் சார்ட் தயாரிக்கப்படும். இதன்பிறகும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கை கிடைக்காதவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் சில வழித்தடங்களில் சார்ட் தயாரித்த பிறகும் முன்பதிவு பிரிவில் இருக்கைகள் காலியாக ...

தண்டனைக்குள்ளான ஈரான் பெண்ணுக்கு உதவ இயலாது: சுஷ்மா

Posted: 31 Dec 2016 06:53 PM PST

- ஆதரவற்றோர் இல்லத்தின் அலட்சியத்தால் குழந்தை இறந்த விவகாரத்தில் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஈரான் பெண்ணுக்கு மத்திய அரசு சார்பில் உதவி செய்ய இயலாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். ஈரான் வம்சாவளியைச் சேர்ந்தவர் நர்கீஸ் அஷ்டாரி. பிரிட்டனுக்கு சிறுவயதில் புலம் பெயர்ந்த அவர், அங்கிருந்து இந்தியாவுக்கு வந்தார். சமூக சேவகரான அஷ்டாரி, ஒடிஸா மாநிலத்தில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த இல்லத்தில் இருந்த குழந்தை ஒன்று ...

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Posted: 31 Dec 2016 06:50 PM PST


-
புத்தாண்டு தினத்தைக் கொண்டாட பிரிட்டன் தலைநகர்
லண்டனுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி
சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
------------------------------------------
தினமணி

அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக

Posted: 31 Dec 2016 06:45 PM PST

- அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியைச் சேர்ந்த 43 எம்எல்ஏக்களில் 32 பேர், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பாஜகவில் இணைந்தனர். இதையடுத்து, அங்கு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. - முன்னதாக, முதல்வர் பெமா காண்டு, துணை முதல்வர் சோவ்னா மிய்ன் மற்றும் 5 எம்எல்ஏ-க்கள் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து வியாழக்கிழமை இரவு நீக்கப்பட்டனர். இதையடுத்து, மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 4 எம்எல்ஏக்கள் அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் ...

வாழ்வை புதிதாய் பாருங்கள்!

Posted: 31 Dec 2016 05:57 PM PST

- --- கடந்த சில தினங்களாய், பூமி பல பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. இது கொஞ்ச காலம் தொடரும். உத்தராயணம் தொடங்கும் இவ்வேளையில், பூமியும் அதிலுள்ள உயிர்களும் சூரியனுடன் தங்களுக்கு உண்டான தொடர்பில் மாற்றங்களை சந்தித்து வருகின்றன. பனிகாலத்து கதிர்திருப்பம் புதிய தொடக்கமாகவும், புதிய சாத்தியமாகவும் இருக்கிறது. உயிரோட்டத்தை புது தவணையாய் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது. வருடத்தின் இந்தக் காலகட்டத்தில், நாம் வசந்தத்தை வரவேற்க காத்திருக்கிறோம். இந்த பூமியும் அதிலுள்ள உயிர்களும் ...

இந்தியாவின் புதிய ராணுவத் தளபதி!

Posted: 31 Dec 2016 05:37 PM PST

- ராணுவத்தளபதி தல்பீர் சிங் இன்று ஓய்வுப் பெற்றதைத் தொடர்ந்து, லெப்டினன்ட் பிபின் ரவாத் புதிய ராணுவத்தளபதியாக பதவி ஏற்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் ரவாத், ராணுவ துணைத் தளபதியாக இருந்தவர். தென்பிராந்திய ராணுவ கமாண்டராக இருந்து, அதன் பின்னர் துணைத்தளபதியாக பதவி உயர்த்தப்பட்டார். இவர் கடந்த ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பியவர் என்பது கூடுதல் தகவல். விதிகளுக்கு மாறாக புதிய ராணுவத் தளபதியாக பிபின் அறிவிக்கப் பட்டதாக கூறி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ...

பிறந்தது 2017 புத்தாண்டு:நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

Posted: 31 Dec 2016 05:01 PM PST

- - - புதுடில்லி: நாடு முழுவதும் உற்சாகமாக 2017 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தலைநகர் டில்லியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் ஏராளமானோர் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். உலகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பட்டாசு வெடித்தும் புத்தாடை உடுத்தியும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். - நாடு முழுவதும் களை கட்டிய புத்தாண்டு - புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆடல், பாடல் கொண்டாட்டம் களைகட்டியது. வட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™