Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காங்கிரசுடன் கூட்டு வைக்க அ.தி.மு.க., வியூகம்? ராவ் 'ரெய்டு' விவகாரத்தை முறியடிக்க முயற்சி

Posted: 31 Dec 2016 06:40 AM PST

பா.ஜ.,விடம், சில ஆண்டுகளாக நெருக்கம் காட்டி வந்த, அ.தி.மு.க., மெதுவாக தன் பாதையை, காங்., பக்கம் திருப்பத் துவங்கி உள்ளது. தமிழகத்தில், கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி மற்றும் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையை யும், அது தொடர்பான வழக்குகளையும், காங்கிரசில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் மூலம் முறியடிக்கவும், அ.தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ், காங்., தலைவராக இருந்த போது, தமிழகத்தில், அ.தி.மு.க., - காங்., இடையேயான கூட்டணி நன்றாக இருந்தது. ஜெ., - ராஜிவ் இடையே, நல்ல நட்புறவும் நிலவியது. ஆனால், ராஜிவ் மறைவுக்கு ...

ஜெ., மரணத்திற்கு நீதி கேட்டு நெடும் பயணம்: மக்களை சந்தித்த பின் முடிவெடுக்கிறார் தீபா

Posted: 31 Dec 2016 06:50 AM PST

'கட்சியும், ஆட்சியும் உங்களோடு; மக்களும், தொண்டர்களும் எங்களோடு' என்ற கோஷத் துடன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், அண்ணன் மகள் தீபா, மக்களிடம் நீதி கேட்கும் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.

சென்னையில், நேற்று முன்தினம் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழுவில், 'சசிகலா தலைமை ஏற்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, எதிர் பார்த்த படியே,சசிகலா, பொதுச்செயலராகி உள்ளார். எனினும், தனி அதிகாரியை நியமித்து, முறைப்படி தேர்தல் நடத்த, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. கட்சி விதிப்படி, பொதுச்செயலரை, அதன், 1.54 கோடி தொண்டர்கள் தேர்வு செய்ய வேண்டும். ...

ஜெ., கார், அறையை பயன்படுத்த சசிகலாவுக்கு கட்சியினர் எதிர்ப்பு

Posted: 31 Dec 2016 06:53 AM PST

'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கார் களையும், அ.தி.மு.க., தலைமை அலுவலகத் தில் உள்ள அவரது அறையையும், சசிகலா பயன்படுத்தக் கூடாது' என, அ.தி.மு.க., தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான, சென்னை, போயஸ் கார்டன் வீடு, சிறுதாவூர் பங்களா, கோடநாடு பங்களா, ஐதராபாத் தோட்டம் உள்ளிட்ட இடங்களில், அவருக்காக, ஆறு சொகுசு கார்கள் உள்ளன. அவற்றை, ஜெ., நினைவு இல்லத்தில், காட்சிப்பொருளாக வைக்க வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.மறைந்த முதல்வர், எம்.ஜி.ஆரின், அம்பாசிடர் கார்,தற்போது, தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள, ...

மதச்சார்பற்ற கூட்டணி அமையுமா? கட்சிகளின் தூக்கத்தை கெடுக்கும் காங்.,

Posted: 31 Dec 2016 08:42 AM PST

உ.பி., சட்டசபை தேர்தலில், காங்., அமைக்கப் போகும் கூட்டணியை, மற்ற முக்கிய கட்சிக ளான, பா.ஜ., - பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி ஆகிய கட்சிகள், மிகுந்த ஆர்வத்துடன் உற்று நோக்கும் புதிய சூழல் உருவாகியுள்ளது.

உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. தேசிய அரசியலின் போக்கையே முடிவு செய்யும் ஆற்றல் படைத்த இந்த மாநிலத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.உ.பி.,யில், தேர்தல் வெற்றியை நிர்ணயிப்ப தில், ஜாதி, மதம் ஆகிய விஷயங் கள் தான், பெரும் பங்கை வகிக்கின்றன. முஸ்லிம் ஓட்டு வங்கி, ஒவ்வொரு தேர்தலிலும், முக்கிய பங்கை வகிக்கிறது. இதை ...

சசிகலாவுக்கு எதிரான போராட்டம் மாநிலத்தின் பல பகுதிகளிலும்...தீவிரம்! :பொதுச்செயலராக எதிர்ப்பு தெரிவித்து தொண்டர் தற்கொலை முயற்சி:கொடும்பாவி எரித்து ஜெ., விசுவாசிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 31 Dec 2016 09:20 AM PST

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா பொறுப்பேற்றதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு, மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பரவியுள்ளது.

சசிகலாவை ஏற்றுக்கொள்ள முடியாமல், கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள, இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பதவியை ராஜி னாமா செய்து வருகின்றனர். சென்னையில் நேற்று, கட்சித் தொண்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மற்ற சில பகுதி களில், கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நேற்று பொறுப்பேற்றார். 'தனக்கு சாதகமான பொதுக் குழு உறுப்பினர்களை மட்டும் அழைத்து, சசிகலா பொதுச்செயலராகி உள்ளார். முன் ...

சமாஜ்வாதியில் மீண்டும் அகிலேஷ் சேர்ப்பு முடிந்தது நாடகம்!: சமரச பேச்சால் முலாயம் திடீர் மன மாற்றம்

Posted: 31 Dec 2016 09:30 AM PST

லக்னோ:உ.பி.,யில், தன் மகனும், முதல்வருமான அகிலேஷ் யாதவுடனான மோதலில், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், 'பல்டி' அடித்துள்ளார். கடைசி நேர சமரச பேச்சால், அகிலேஷ் யாதவை மீண்டும் கட்சியில் சேர்ப்பதாக, நேற்று அவர் அறிவித்தார். இதனால், சமாஜ்வாதி கட்சி உடைவது தவிர்க்கப்பட்டுள்ளது.

உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அகிலேஷுக்கும், அவர் சித்தப்பாவும், உ.பி., மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவருமான சிவ்பால் யாதவுக்கும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. சிவ்பால் யாதவின் பின்னணியில், முலாயமின் இரண்டாவது ...

ஏழைகள் வீடு கட்ட சலுகை புத்தாண்டு பரிசாக மோடி அசத்தல் அறிவிப்பு

Posted: 31 Dec 2016 09:41 AM PST

புதுடில்லி:புத்தாண்டு தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு, பிரதமர், நரேந்திர மோடி நேற்று ஆற்றிய உரையில், ஏழைகளுக்கு வீட்டு வசதி, கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல, அசத்தல் சலுகைகளை அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, புத்தாண்டு தினத்தையொட்டி, நேற்று, 'டிவி' மூலமாக, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை:கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், மத்திய அரசு அமல்படுத்திய, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்திற்கு, அமோக ஆதரவு அளித்த பொதுமக்களுக்கு பாராட்டுக்கள். கறுப்புப் பணத்தை குவித்துள்ள, நேர்மையற்ற நபர்களுக்கு எதிராக, சட்டம் தன் கடமையை செய்யும். ...

ஜெ.,க்கு 400; சசிக்கு 1,000 போலீசார் பாதுகாப்பு * போக்குவரத்து நிறுத்தியதால் மக்கள் தவிப்பு

Posted: 31 Dec 2016 09:44 AM PST

அ.தி.மு.க., பொதுச்செயலராக பதவியேற்க, கட்சி அலுவலகம் வந்த சசிகலாவுக்கு, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டதை விட, இரு மடங்கு போலீஸ்பாதுகாப்பு தரப்பட்டதும், போக்குவரத்து நிறுத்தப்பட்டதும், மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா முதல்வராக, முதல் இரண்டு முறை இருந்த போது, அவர் செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2011ல் முதல்வராக பொறுப்பேற்ற போது, தான் செல்லும் பாதையில் போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என, போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதை ஏற்ற போலீசார், அவர் வரும் வழியில் உள்ள சாலை சந்திப்புகளில் மட்டும், ஐந்து நிமிடத்திற்கு முன், ...

மீண்டும் காலில் விழும் கலாசாரமா! முதல்வர் மீது அமைச்சர்கள் கோபம்

Posted: 31 Dec 2016 09:46 AM PST

முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா காலில் விழுந்து வணங்கியது, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை காணும் போதெல்லாம், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகி கள், அவரது காலில் விழுந்து வணங்குவர். எதிர்க்கட்சியினர் கிண்டலடித் தாலும், காலில் விழும் பழக்கத்தை, அ.தி.மு.க.,வினர் கைவிடவில்லை. ஜெ., மறைவை அடுத்து, பன்னீர்செல்வம் முதல்வரானார்.பொதுசெயலர் பதவிக்கு அவர் போட்டியிடுவார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர்; ஆனால், அவர் சசிகலாவை முன்னிறுத்தினார். மற்ற அமைச்சர்களும், சசிகலாவை ஆதரித்தனர். சசிகலா ...

பிறந்தது 2017 புத்தாண்டு:நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

Posted: 31 Dec 2016 10:58 AM PST

புதுடில்லி: நாடு முழுவதும் உற்சாகமாக 2017 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தலைநகர் டில்லியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் ஏராளமானோர் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். உலகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பட்டாசு வெடித்தும் புத்தாடை உடுத்தியும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
நாடு முழுவதும் களை கட்டிய புத்தாண்டு
புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆடல், பாடல் கொண்டாட்டம் களைகட்டியது. வட மாநிலங்களில் தற்போது கடுமையாக குளிர் நிலவி ...

சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு

Posted: 31 Dec 2016 12:06 PM PST

சபரிமலை: புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் நெரிசல் ஏற்படாமல் தடுக்க பம்பை முதல் சன்னிதானம் வரை கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலை மோதும். புத்தாண்டு தினத்தில் பம்பை முதல் சன்னிதானம் வரை கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
மலர் அலங்காரம்
புத்தாண்டை வரவேற்க சன்னிதானத்தின் முன்புறம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.புத்தாண்டுக்காக பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது என்று தேவசம்போர்டு தலைவர் ...

காங்.,கிற்கு 'கிலி' ஏற்படுத்துகிறார் சித்து

Posted: 31 Dec 2016 12:30 PM PST

பா.ஜ., முன்னாள், எம்.பி.,யான, நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாபில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா அல்லது லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா என்ற குழப்பத்தில், காங்கிரஸ் சிக்கியுள்ளது.கிரிக்கெட் வீரரும், பா.ஜ., முன்னாள், எம்.பி.,யுமான, நவ்ஜோத்சிங் சித்து, அந்த கட்சியிலிருந்து விலகி, பரபரப்பை ஏற்படுத்தினார்; அவர், ஆம் ஆத்மியில் சேரப்போவதாக தகவல் வெளியானது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட மூத்த தலைவர்கள் பலருடன், பல கட்டப் பேச்சு நடத்தியும், அந்த முயற்சி நிறைவேறவில்லை. இதன்பின், புதிய அமைப்பை துவங்கி, தேர்தலில் போட்டியிட ...

ரொக்கமில்லா பரிவர்த்தனை: திபெத் அபார சாதனை

Posted: 31 Dec 2016 03:20 PM PST

பீஜிங், திபெத்தில் ரொக்கமில்லா பரிவர்த்தனை முழுமையடையும் நிலையில் உள்ளதாக, சீன அரசு தெரிவித்துள்ளது.சீன அரசின் ஆதிக்கத்தில் உள்ள, திபெத்தில், வசிக்கும் மக்களிடம், 17 லட்சம் மொபைல் இன்டர்நெட் வசதிகள் உள்ளன. உணவகங்கள், சில்லரை விற்பனை நிலையங்கள்,

ஆன்லைன் பரிவர்த்தனை வசதி
சினிமா தியேட்டர்கள், என அனைத்திலும், ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் வசதி உள்ளது. சிறிய நகைக் கடைகளிலும் ஆன்லைன் பரிவர்த்தனை ஏற்கப்படுகிறது.
கடந்த 2015ல் திபெத்தில், 83.3 சதவீத பண பரிவர்த்தனை ஆன்லைனில் செய்யப்பட்டதாக 'சீன ஆன்லைன் பேமென்ட்' நிறுவனம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™