Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் இனி...அவ்ளோ தான்! : இன்று நள்ளிரவு வரை மட்டுமே பயன்படுத்தலாம்:கையிருப்பை 30க்குள் வங்கியில் டிபாசிட் செய்யணும்

Posted: 14 Dec 2016 09:08 AM PST

புதுடில்லி:செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, பழைய, 500 ரூபாய் நோட்டை, குறிப்பிட்ட சில இடங்களில் பயன்படுத்தும் வாய்ப்பு, இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

இன்று நள்ளிரவு முதல், இனி, பழைய, 500 ரூபாய் நோட்டை, எங்கும் பயன்படுத்த முடி யாது. கையில் உள்ள பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், இம்மாதம், 30க்குள் டிபாசிட் செய்யலாம்.கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, நவ., 8ல் பிரதமர் மோடி அறிவித்தார்.அதற்குபதிலாக, புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகளில் ...

சுப்ரீம் கோர்ட்டை மதிக்காத கர்நாடக அரசு 2,000 கன அடி நீர் திறக்காமல் பிடிவாதம்

Posted: 14 Dec 2016 09:12 AM PST

மேட்டூர்: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடகா தண்ணீர் திறக்காமல் முரண்டு பிடிப்பது, டெல்டா விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி, தமிழகத்திற்கு கர்நாடகா, ஜூன், 1 முதல், மே 31 வரை ஓராண்டுக்கு, 192 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும்.நடப்பாண்டு, ஜூன், 1 முதல், நேற்று வரை, 174.5 டி.எம்.சி.,க்கு பதிலாக, 59.5 டி.எம்.சி., நீர் மட்டுமே வழங்கியுள்ளது.நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, மீதமுள்ள, 115 டி.எம்.சி., நீரை மாதாந்திர அளவுப்படி, கர்நாடகா வழங்கவில்லை. இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, ...

பிரதமர் மீதான ராகுல் புகாருக்கு பா.ஜ., பதிலடி புளுகு!:அசட்டுத்தனமான குற்றச்சாட்டு என ஆவேசம்

Posted: 14 Dec 2016 09:50 AM PST

புதுடில்லி:''செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத் தில், பிரதமர் நரேந்திர மோடி, தனிப்பட்ட முறை யில் ஊழல் செய்தது தொடர்பாக, விரிவான தகவல்கள் என்னிடம் உள்ளன,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

இதை மறுத்துள்ள, மத்திய அமைச்சர் வெங் கையா நாயுடு,''ராகுலின் குற்றச்சாட்டு அசட்டுத் தனமானது,'' என, ஆவேசமாக கூறியுள்ளார்.கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், நவ., 8ல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு கள் செல்லாதென, பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு, காங்., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், காங்., துணை தலைவர் ...

கறுப்பு பணம், ஊழல் இல்லாத சுத்தமான நிர்வாகமே இலக்கு:பிரதமர் மோடி உறுதி

Posted: 14 Dec 2016 09:53 AM PST

புதுடில்லி:''நிர்வாகத்தில் இருக்கும் கறுப்புப் பணம், ஊழல் போன்றவற்றை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளே அரசின் தற்போதைய மிக முக்கியமான இலக்கு,'' என, பிரதமர் நரேந்திர மோடி, உறுதியுடன் தெரிவித்தார்.

அண்டை நாடான மலேஷியாவின் கோலாலம் பூரில் நடக்கும், ஆசிய தொழில் மாநாட்டை, டில்லியில் இருந்தபடி, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மலேஷிய பிரதமர் ரஜிப் ரசாக் உள்ளிட்டோர், கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியா, மிகப் பெரிய பொருளாதார மாற்றத்

புயல் பாதிப்புக்கு உடனடியாக நிதி ஒதுக்குங்கள்!: பார்லி.,யில் தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

Posted: 14 Dec 2016 09:57 AM PST

'வர்தா' புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய, உடனடியாக நிதி ஒதுக்கும்படி, பார்லிமென்டில் தமிழக, எம்.பி.,க்கள், நேற்று வலியுறுத்தினர்.

நேற்று ராஜ்யசபாவில், தமிழகத்தில் ஏற்பட்ட, வர்தா புயல் பாதிப்புகள் குறித்து பேச, எம்.பி.,க் களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., ராஜா, ''மின் வினியோகம், முழுவதுமாக பாதிக்கப்பட்டுள் ளது. மத்திய ஆய்வுக்குழுக் களை, உடனடியாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண ஆணைய உயர் அதிகாரிகளையும் அனுப்ப வேண்டும்,'' என்றார்.தி.மு.க., - எம்.பி., சிவா பேசுகையில், ''சென்னையும், ...

மறைகிறது முதல்வர் ஒளிவட்டம் தமிழக அரசியலில் புதிய மாற்றம்

Posted: 14 Dec 2016 10:00 AM PST

முதல்வராக, ஜெயலலிதா பதவி வகித்தபோது, அவரை யாரும் எளிதில் அணுக முடியாத நிலை இருந்தது. அதற்கு மாறாக, முதல்வர், பன்னீர்செல்வம், இரண்டு நாட்களாக, மக்களை சுற்றி வரத் துவங்கியிருப்பது, தமிழக அரசியலில் நல்ல மாற்றமாக தெரிகிறது.

ஜெயலலிதாவை, பத்திரிகையாளர்கள் கூட தொடர்பு கொள்ள முடியாது. அவரது கட்சி நிர்வாகிகளுக்கும்,அதே கதிதான். முன் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே, போயஸ் தோட்டத் தில் சந்திப்பு கிடைக்கும். சில சமயங் களில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு களில், கருத்து தெரிவிக்க, ஆங்கில தொலைக்காட்சி சேனல்களை அழைத்து ...

குறுக்கு வழியில் யோசிக்காதீங்க வருமான வரித்துறை எச்சரிக்கை

Posted: 14 Dec 2016 10:02 AM PST

புதுடில்லி: முந்தைய ஆண்டுகளுக்கான, வரு மான வரி கணக்கு தாக்கலில் திருத்தம் செய்ய உள்ள வாய்ப்பை தவறாகப் பயன்படுத் தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சி.பி.டி.டி., எனப்படும், மத்திய நேரடி வரி வாரியம் எச்சரித்துள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை தொடர் ந்து, பதுக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் வெளிவரத் துவங்கியுள்ளன. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க, அதை பல்வேறு வழிகளில் கிடைத்த வருவாயாக கணக்கு காட்டுவதற்கு, பல ரும் முயற்சித்து வருகின்றனர். வருமான வரித் துறை சட்டத்தின்படி, முந்தைய ஆண்டுகளுக்கு தாக்கல் செய்தவருமான வரிக் கணக்கில் தவறு ...

அரபிக்கடலில் தொடருது 'வர்தா' அவதாரம்: புறப்பட்ட இடத்திற்கே திரும்புமா?

Posted: 14 Dec 2016 10:06 AM PST

வங்க கடல் பகுதியை கலக்கிய, 'வர்தா' புயல், காற்றழுத்த தாழ்வு பகுதியாக, அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த பகுதி, மீண்டும், அந்தமானுக்கு தெற்கே, புறப்பட்ட இடத்திற்கே வருமா என, கண்காணிக்கப்படுகிறது.

வங்கக் கடலில், அந்தமான் அருகே உருவான, 'ரோஜா' என்ற பொருளுடைய, வர்தா புயல், அந்தமானில் துவங்கி, தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களை பதம் பார்த்தது. இந்த மாநிலங்கள் மட்டுமின்றி, கர்நாடகாவி லும், பலத்த மழையை கொடுத்தது.பின், மேகக் கூட்டமாக விலகிய வர்தா, அரபிக் கடலில் சென்று, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுள்ளது. எனவே, வடகிழக்கில் இருந்து, வங்க ...

வங்கிகளில் பண தட்டுப்பாடு: ஏ.டி.எம்.,கள் செயல்படுமா?

Posted: 14 Dec 2016 11:07 AM PST

சென்னை : சென்னையில் உள்ள, பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில், பண இருப்பு குறைந்துள்ளது. அதனால், இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு, பணத்தை குறைத்து வழங்கும்படி, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
2,000 ரூபாய் மட்டுமே கிடைத்தது
சென்னையில், 'வர்தா' புயல், மிலாடி நபி விடுமுறைக்குப் பின், வங்கிகள், நேற்று வழக்கம் போல் செயல்பட்டன. பணம் இல்லாததால், பல, ஏ.டி.எம்., கள் மூடியிருந்தன. திறந்திருந்த, ஏ.டி.எம்.,களில், கூட்டம் நிரம்பி வழிந்தது. அவற்றில் வெறும், 2,000 ரூபாய் மட்டுமே கிடைத்தது. 'ரிசர்வ் வங்கிக்கு வந்ததாகக் ...

சென்னை மறு சீரமைப்புக்கு இது சரியான தருணம் :திட்டமிடும்போதே பேரிடர் மேலாண்மை அவசியம்

Posted: 14 Dec 2016 11:33 AM PST

'புயலுக்கு பின் மேற்கொள்ளப்படும், மறு சீரமைப்புக்கான திட்டங்களை உருவாக்கும் நிலை யிலேயே, பேரிடர் மேலாண்மை தன்மை தேவை. அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டும்; சென்னை மறு சீரமைப்புக்கு இது சரியான தருணம்' என, நகரமைப்புத் துறை வல்லுனர்கள் வலியுறுத்தினர்.

பேரிடர்களால், பெரிய அளவில் பாதிக்கப்படாத நகரமாக அறியப்பட்ட சென்னை, 2004ல், சுனாமி பாதிப்பை சந்தித்தது. அதன் பின், கடலோர பகுதி பாதுகாப்பு விதிகள் குறித்து பேசப்பட்டது. 2015 நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ள பாதிப்பால், சில வாரம் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அப்போது, ...

அண்டார்ட்டிகா கண்டத்தில் தோன்றியுள்ள மர்ம பள்ளம்

Posted: 14 Dec 2016 12:34 PM PST

உலகில் உள்ள ஏழு கண்டங்களில் அதிக அளவிலான பனியால் மூடப்பட்டுள்ள கண்டம் அண்டார்ட்டிகா. இக்கண்டத்தில் பிரமாண்டமான மர்ம பள்ளம் தோன்றியிருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளத்திற்கான காரணம்:
அண்டார்ட்டிகா கிழக்கு கண்டத்தின் ராய் பவுதோயின் என்றழைக்கப்படும் பகுதியில் ஒரு பெரிய ஏரி காணப்பட்டது. அதில் தேங்கியிருந்த நீர், பனிபடலததிற்கு அடியில் தோன்றிய கால்வாய் மூலமாக வெளியேறியது தான் அப்பள்ளத்திற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
3 கி.மீ., விட்டம் ...

கலியுகம் போல் மாறிவிட்டது: ஐகோர்ட் வேதனை

Posted: 14 Dec 2016 01:38 PM PST

மதுரை: 'முன்பு ஆண்கள், பெண்களை கவர்ந்து ஓடுவர். தற்போது காலம் மாறிவிட்டது. பெண்களே தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்கின்றனர். தற்போது புகை பிடிக்கும், மது பழக்கம் உள்ள பெண்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. கலியுகத்தில் நடப்பதுபோல், இது அமைந்துள்ளது,' என முன்ஜாமின் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
20 வயது பெண் 17 வயது சிறுவன்
பட்டுக்கோட்டை அருகே நர்ஸ் வேலை செய்யும் 20 வயது பெண், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் மாயமானார். சிறுவனை கடத்தியதாக, அப்பெண் மற்றும் அவரது பெற்றோர் மீது ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™