Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


துருவா வெற்றி அடைய வாழ்த்துச் சொன்ன ராம் சரணின் மனைவி

Posted:

ஜெயம் ரவி நடிப்பில் தமிழில் ஹிட்டான தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் ராம் சரண் நாயகனாக நடிக்க துருவா என்ற பெயரில் நேற்று திரைக்கு வந்துள்ளது. இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள துருவா படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். ராம் சரணின் மனைவி உபசேனா துருவா படம் வெற்றி அடைய தனது கணவர் ராம் ...

ராம் கோபால் வர்மா பட விழாவில் அமிதாப்

Posted:

சர்ச்சைகளுக்கு பெயர்போன இயக்குனர் ராம் கோபால் வர்மா, இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'சிவா டு வங்கவீட்டி'. சந்தீப் குமார், நைனா கங்குலி, வம்சி ஜகன்டி மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் டிசம்பர் 23ல் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, அண்மையில் நடைபெற்று ...

ஜெ.,க்கு அஞ்சலியுடன் திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்படவிழா துவங்கியது

Posted:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 21வது சர்வதேச திரைப்பட விழா, நேற்று இரவு கோலாகலமாக துவங்கியது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சோ ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியாவில், மாநில அரசு நடத்தும் ஒரே சர்வதேச திரைப்பட விழா, திருவனந்தபுரத்தில் ஆண்டு தோறும் நடக்கிறது. இதில், உலக அளவில் விருதுகள் பெற்ற பல ...

திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன்! -சமந்தா

Posted:

நடிகைகளைப் பொறுத்தவரை திருமணம் செய்து கொண்டால் அவர்களை ஓரங்கட்டி விடுவது சினிமா உலகில் நீணடகாலமாக நடந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக அந்த நிலையை மாற்றும் முயற்சியில் பாலிவுட் நடிகைகள் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில், ஐஸ்வர்யாராய், வித்யாபாலன் உள்ளிட்ட சில நடிகைகள திருமணத்திற்கு பிறகும் கதாநாயகிகளாகவே நடித்து ...

அதிரடி பேயாக மிரட்ட வரும் நயன்தாரா!

Posted:

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் மாயா. அந்த படத்தில் மாயா, அப்சரா என இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்திருந்தார். அது அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்தது. என்றாலும், அதையடுத்து தன்னை முற்றுகையிட்ட பேய் படங்களில் நடிக்க மறுத்த நயன்தாரா, நானும் ரெளடிதான், இது நம்ம ஆளு, காஷ்மோரா, இருமுகன் என மாறுபட்ட கதைக்களங்களில் ...

4 மொழிகளில் சீரியல் தயாரிக்கும் குஷ்பு!

Posted:

மருமகள், ஜனனி, கல்கி, ருத்ரா என நெடுந்தொடர்களில் நடித்தவர் குஷ்பு. அதேபோல், கோடீஸ்வரி, ஜாக்பாட் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சில ஷோக்களும் நடத்தி வருகிறார். அந்த வகையில, சிம்ப்ளி குஷ்பு உள்பட சில நிகழ்ச்சிகளில் பிரபலங்களை சந்தித்து பேட்டி கண்டவர், தற்போது நிஜங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்த ...

மீண்டும் சாந்தனுவை இயக்கும் கே.பாக்யராஜ்!

Posted:

டைரக்டர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு, தயாரிப்பாளர் எஸ்.தாணுவின் மகன் கலா பிரபு இயக்கிய சக்கரகட்டி படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு தந்தை கே.பாக்யராஜின் சித்து பிளஸ்-2வில் நடித்தார். தொடர்ந்து கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி என பல படங்களில் நடித்தவர் தற்போது முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய படங்களில் ...

சினிமாக்காரர்களை கலாய்த்த ஆர்.ஜே.பாலாஜி!

Posted:

ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்த கடவுள் இருக்கான் குமாரு படத்தில், ஜீ தமிழ் சேனலில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்திருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. இதற்கு லட்சுமிராமகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஒரு வாரகாலமாக இணையதளங்களில் பரவலாக பேசப்படும் நடிகராக ...

விக்ரமிற்கு ஜோடியாகிறார் மஞ்சிமா மோகன்!

Posted:

ஒரு வடக்கன் செல்பி மலையாள படத்தில் நாயகியாக நடித்தவர் மஞ்சிமாமோகன். அப்போது சிம்புவைக்கொண்டு தான் இயக்கயிருந்த அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ஹீரோயின் தேடி வந்த கெளதம்மேனன், மஞ்சிமாவின் நடிப்பை அந்த படத்தில் பார்த்து விட்டு தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். சிம்புவுடன் நடிக்க முன்னணி நடிகைகளே தயங்கி நின்ற நிலையில், ...

சிங்கம் 3 இண்டர்நேஷனல் லெவல்: ஹரி பெருமிதம்

Posted:

சூர்யா நடித்து வெற்றி பெற்ற சிங்கம் பட வரிசையில் இப்போது 3ம் பாகம் ரெடியாகி வருகிறது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. முந்தைய இரண்டு பாகங்களில் நடித்த அனுஷ்காவுடன், ஸ்ருதிஹாசன், சூரி இந்தி வில்லன் தாகூர் அனுப் சிங் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார், ப்ரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ...

ரஜினி தவறவிட்ட கதையில் அரவிந்த்சாமி

Posted:

சரியான கதைகள் கிடைக்காமல் திண்டாடி வரும் தமிழ்ப்பட ஹீரோக்களின் பார்வை எப்போதும் பிற மொழிப்படங்கள் மீது இருக்கும். குறிப்பாக மலையாளத்திரைப்படங்கள் மீது. அங்கே வெற்றியடைந்த படங்களின் கதையை வாங்க போட்டிபோடுவார்கள். அந்தவகையில் மலையாளத்தில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் கதையை வாங்கவும் ...

விக்ரமுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க மறுத்தது ஏன்?

Posted:

சிம்பு நடித்த 'வாலு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் சந்தர். அந்தப்படம் வெளிவராமல் முடங்கிக்கிடந்த நேரத்தில் ஜெய்யை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்தப் படத்தில் நயன்தாரா உட்பட அரைடஜன் கதாநாயகிகளை நடிக்க வைக்கவும் திட்டமிட்டார். வாலு படம் முடங்கிப்போனதால், ஜெய்யை வைத்து இயக்கவிருந்த ...

'பாஸ் இஸ் பேக்', கொண்டாடும் சிரஞ்சீவி ரசிகர்கள்

Posted:

ஒரு நடிகருக்கு இப்படியும் ரசிகர்கள் இருப்பார்களா என நீங்கள் வியந்தால் அது சிரஞ்சீவியின் ரசிகர்களைப் பார்த்துதான் வியக்க வேண்டும். தமிழில் ரஜினிகாந்தைக் கொண்டாடுவதை விட, தெலுங்கில் சிரஞ்சீவியை பல ஆண்டு காலமாக அதிகமாகவே கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். சில வருடங்களுக்கு முன்பு அரசியல் ஆசை வந்து தனிக் கட்சி ஆரம்பித்து, ...

மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்த பிருத்விராஜ்..!

Posted:

மலையாள சினிமாவில் இமேஜ் பற்றி கவலைப்படாத நடிகர் என்றால் நிச்சயமாக அது பிருத்விராஜாகத்தான் இருக்க முடியும்.. அவர் நடித்த மும்பை போலீஸ் படத்தில் அவர் ஏற்று நடித்த கேரக்டரே அதற்கு சாட்சி. அப்படிப்பட்ட கேரக்டரிலேயே (அது சஸ்பென்ஸ்.. படம் பார்க்காதவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்) நடித்துவிட்டவருக்கு வில்லன் வேடம் என்றால் ...

குறும்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ஜெயசூர்யாவின் திரைப்படம்..!

Posted:

அனைவரையும் கவர்ந்த குறும்படங்களை திரைப்படமாக எடுப்பதையும், வெற்றி பெற்ற திரைப்படங்களின் தொடர்ச்சியாக அவற்றின் இரண்டாம் பாகங்களை எடுப்பதையும் மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மலையாள திரையுலகில் இதிலும் ஒரு வித்தியாசமாக ஒரு குறும்படத்தின் தொடர்ச்சியை அடுத்து திரைப்படமாக எடுக்கும் அதிசயத்தை அரங்கேற்ற ...

2016 வசூலில் நான்காம் இடத்தை பிடித்த 'புலி முருகன்'..!

Posted:

நூறுகோடி வசூலை தாண்டிய முதல் மலையாள படம் என ஒவ்வொரு மலையாள ரசிகனையும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ள ஒரு வாய்ப்பளித்த 'புலி முருகன்' படத்தின் சீரான ஓட்டம் இன்னும் நிற்கவே இல்லை. தற்போதைய நிலவரப்படி இந்தப்படத்தின் வசூல் ரூபாய் 130 கோடியை எட்டியுள்ளது என்கிறார்கள் கேரள வினியோகஸ்தர்கள். அந்தவகையில், இந்த வருடத்தில் தென்னிந்திய ...

மறைந்த இயக்குனரின் குடும்பத்துக்கு உதவுவதற்காக எடுக்கப்பட்ட படம்..!

Posted:

கடந்த மார்ச் மாதம் 'ட்ராபிக்' பட புகழ் மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் திடீர் மரணம் மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.. அவரது மரணத்திற்கு முதல் நாள் தான் அவர் இயக்கிய 'வேட்ட' படம் ரிலீஸானது. அவர் இந்தியில் இயக்கிய 'ட்ராபிக்' ஏப்ரலில் ரிலீஸானது... ஆக தனது வேலைகளை முடித்துக்கொடுத்துவிட்ட திருப்தியில் ...

பிளாஷ்பேக் : மோகன்லாலை பாராட்டிய ஜெயலலிதா..!

Posted:

சுமார் 20 வருடங்களுக்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் தான் இருவர்.. டப்பிங் படங்கள் மூலமாக மட்டுமே தமிழ் ரசிகர்கள் கண்டுகளித்த மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை இந்தப்படத்தில் நடிக்க வைப்பதற்காக முதன்முதலாக தமிழுக்கு அழைத்து வந்தார் மணிரத்னம். மோகன்லாலை இந்தப்படத்தில் நடிக்க வைத்ததற்கு காரணம் இந்தப்படத்தின் கதை தான். ...

கிறிஸ்துமஸ்துக்கு வருகிறார் பலே வெள்ளையத்தேவா

Posted:

கிடாரி படத்துக்கு பிறகு சசிகுமார் நடித்து வரும் படம் பலே வெள்ளையத்தேவா. அவருடன் கோவை சரளா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா ஹீரோயினாக அறிமுகமாகிறார். ரோகினி சசிகுமார் அம்மாவாகவும், சங்கிலி முருகன் தாத்தாவாகவும் நடித்துள்ளார். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார், பி.சோலை பிரகாஷ் இயக்கி ...

ஸ்ரீஜா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மிகமிக அவரசம்

Posted:

அகடம், வந்தாமல, கங்காரு, கோடை மழை, படங்களில் நடித்த ஸ்ரீப்ரியங்கா தற்போது தனது பெயரை ஸ்ரீஜா என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். பெயரை மாற்றிய ராசியோ என்னவோ பாவாடை, தாவணி கேரக்டரிலிருந்து விட்டு விடுதலையாகி போலீஸ் அதிகாரியாக மிகமிக அவசரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அமைதிப்படை இரண்டாம் பாகம், கங்காரு படங்களை தயாரித்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™