Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


எனக்கு யாரும் போட்டியில்லை - வடிவேலு

Posted:

தமிழ் சினிமாவின் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்த நடிகர் வடிவேலு, சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்தார். பின்னர் தெனாலிராமன், எலி படங்களின் மூலம் ஹீரோவாக நடித்தவர், தற்போது மீண்டும் காமெடி ரோல்களில் தலைகாட்ட துவங்கியுள்ளார். முதல் ரீ-என்ட்ரி காமெடி படமாக விஷாலின் கத்திசண்டை படத்தில் பூத்ரி என்ற கேரக்டரில் இரட்டை ஜடையுடன் ...

‛மாரி-2' கதை ரெடி - தனுஷ்

Posted:

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் 2015ம் ஆண்டு வெளியான படம் ‛மாரி'. தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். பாடகர் விஜய் யேசுதாஸ், நடிகராக களமிறங்கினார், அதுவும் வில்லனாக நடித்தார். கமர்ஷியல் ரீதியாக இப்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து அடுத்த சில மாதங்களிலேயே மாரி 2 உருவாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில் மாரி 2 படத்திற்கான ...

மீண்டும் இணையும் விஜய் - வடிவேலு கூட்டணி

Posted:

விஜய் - வடிவேலு கூட்டணியில் பல படங்கள் வெளிவந்துள்ளன. அவர்கள் கூட்டணியில் வெளியான காமெடிகளும் ரசிகர்கள் மனதில் இப்போதும் சிரிக்க வைத்து கொண்டிருக்கிறது. இடையில் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த வடிவேலு, தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக தொடங்கியுள்ளார். ஹீரோவாக மட்டுமல்லாது காமெடி வேடங்களிலும் நடிக்க ...

‛பாகுபலி'-க்காக கொலையும் செய்வேன் - தமன்னா

Posted:

தமிழ் - தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. பாகுபலியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். பாகுபலி படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை தமன்னா கூறியதாவது... ‛‛என் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படம் பாகுபலி. என் சினிமா கேரியர் மோசமாக இருந்த நேரத்தில் பாகுபலியில் ...

முதல் படத்திலேயே டப்பிங் பேசிய தன்யா!

Posted:

ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமானவர் மறைந்த நடிகர் ரவிச்சந்திரன். அதன்பிறகு இதயக்கமலம், குமரிப்பெண், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, அதே கண்கள் என பல படங்களில் நாயகனாக நடித்தவர், ஊமை விழிகள் படத்தில் வில்லனாக உருவெடுத்தவர், தொடர்ந்து மாறுபட்ட கேரக்டர்களில் நடித்தார்.

பின்னர், அவரது மகன் ஹம்சவர்தனும் பல ...

எனது கனவை நனவாக்கியவர் வடிவேலு! -நடிகர் டெலிபோன் ராஜ்

Posted:

வடிவேலுவுடன் பகவதி, அன்பு, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, குருஷேத்ரம், பாசப்பறவைகள், பேத்தி சொல்லைத் தட்டாதே, கம்பீரம், தில்லாலங்கடி, வாத்தியார், ஜில்லுன்னு ஒரு காதல், சுறா, எலி என பல படங்களில் காமெடியனாக நடித்தவர் டெலிபோன் ராஜ். இவர் தற்போது வடிவேலு நடித்துள்ள கத்திச்சண்டை படத்திலும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

அதுபற்றி ...

மெர்லின் திரைப்பட விழாவில் ஒரு கிடாயின் கருணை மனு!

Posted:

காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் குற்றமே தண்டனை படத்தில் நடித்த விதார்த், அதன்பிறகு மணிகண்டனின் அசோசியேட் சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் நடித்துள்ளார். ஈராஸ் இன்டர்நேசனல் தயாரித்துள்ள இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா நடித்திருக்கிறார். கிராமத்து கதை ...

தியேட்டர்காரர்களுக்கு விஷால் வைத்த கோரிக்கை!

Posted:

சமீபகாலமாக சினிமா தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவதே குறைந்து கொண்டிருக்கிறது. இதற்கு டிக்கெட் விலை, கேன்டீன் பொருட்களின் விலை ஏற்றம் என பல காரணங்கள் சொல்லப்படுகிறது. என்றாலும், அதிகபட்ச விலையை குறைத்து ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்கும் முயற்சிகள் பெரிதாக நடைபெறவில்லை. நடிகர் விஷால், இந்த விசயத்தில் ஓரளவு அக்கறை காட்டி ...

சசிகுமாருக்கு அம்மாவான ரோகினி!

Posted:

மாஜி ஹீரோயின்கள் பலரும் ரீ-என்ட்ரி கொடுத்து வரும் நிலையில், சிலர் அம்மா வேடங்களில் நடிப்பதற்கு மறுத்தபோதும், சிலர் இளவட்ட நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பதற்கு ஓகே சொல்லி வருகிறார்கள். அந்த வரிசையில், நடிகை ரோகினியும் இடம்பிடித்துள்ளார். தற்போது அவர் பலே வெள்ளையத்தேவா படத்தில் சசிகுமாரின் அம்மாவாக ...

இமைக்கா நொடிகளில் நயன்தாராவின் மகளாக நடிக்கும் மானஸ்வி!

Posted:

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் அவருடன் அதர்வா, ராசி கண்ணா உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் நயன்தாராவின் தம்பியாக அதர்வா நடிக்கிறார். கதைப்படி நயன்தாரா வாழ்க்கையில் நடக்கும் ஒரு பிரச்சினைக்காக அவர் போடுவதுதான் கதையாம். இப்படத்தில் நயன்தாரா காக்கி சட்டை அணிந்த ...

2017-ல் துவங்குகிறது "தக் ஆப் இந்துஸ்தான் "

Posted:

பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் அமீர் கான். தற்போது அமீர் கான், ‛டங்கல்' என்ற படத்தில் மல்யுத்த வீரராக நடித்துள்ளார், இப்படம் வருகிற வெள்ளியன்று ரிலீஸாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து அமீர் கான், ‛சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து அமீர், விஜய் கிருஷ்ணா ...

ராம் சரணுக்கு ஜோடியாகும் பிரேமம் நாயகி

Posted:

பிரேமம் படத்தின் வாயிலாக மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அனுமபா பரமேஷ்வரன், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட பிரேமம் படத்திலும் நடித்து தெலுங்கு ரசிகர்களையும் தன்னகப்படுத்தியுள்ளார். தனுஷிற்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்த அனுபமா, அடுத்து டோலிவுட்டின் முன்னணி நாயகனான ராம் சரணுக்கு ஜோடியாக புதிய படத்தில் ...

தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் பெற்ற ராம் கோபால் வர்மாவின் 'வங்கவீட்டி'

Posted:

பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் சிவா டூ வங்கவீட்டி திரைப்படம், அண்மையில் தணிக்கைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 1980களில் விஜயவாடாவில் நடந்த சாதிய அரசியலை ...

டிசம்பர் 24ல் ஓம் நமோ வெங்கடேசாய டீசர்

Posted:

நாகார்ஜூனா நடிக்கும் பக்தி திரைப்படமான ஓம் நமோ வெங்கடேசாய படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரபல பக்தி பட இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்கும் இப்படத்தின் டீசர் டிசம்பர் 24ல் வெளியிடப்படும் என நாகார்ஜூனா அறிவித்துள்ளார். ஓம் நமோ வெங்கடேசாய படத்தின் மோஷன் போஸ்டரை ...

வக்கீலாக மாறி இந்திரஜாவை காப்பாற்றிய மம்முட்டி..!

Posted:

நடிகை இந்திரஜாவை ஞாபகம் இருக்கிறதுதானே..?. விஜய்-அஜித் இணைந்து நடித்து நடித்த ஒரே படமான 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் ஹீரோயினாக நடித்த வரலாற்று சிறப்பு பெற்றவர். பின்னாளில் 'எங்கள் அண்ணா' படத்தில் வில்லியாக வந்து கேப்டன் விஜயகாந்தையே மிரட்டியவர்.. இவர் மலையாள படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந் நேரத்தில் இவருக்கும் ...

2000 ரூபாய் நோட்டில் உடை அணிந்த க்ரீத்தி சனான்..!

Posted:

பிரதமர் மோடியால் கடந்தமாதம் அறிவிக்கப்பட்ட செல்லாத நோட்டு அறிவிப்பால் கடந்த 40 நாட்களாக நாடெங்கும் மக்கள் பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.. ஒரு பக்கம் மக்கள் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மற்றும் வங்கியில் கால் கடுக்க நிற்கின்றனர். இன்னொரு பக்கம் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் யாரோ ஒருசிலரிடம் கற்றை கற்றையாக சிக்கி மக்களை ...

நிவின்பாலி படத்திற்கு டைட்டில் வாங்குவதில் மும்முரம் காட்டும் நட்டி..!

Posted:

தற்போது கௌதம் ராமச்சந்திரன் என்பவரது இயக்கத்தில் நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் மலையாள இளம் முன்னணி நடிகரான நிவின்பாலி.. இது ஏற்கனவே கன்னடத்தில் வெளியான 'உள்ளிடவரு கண்டந்தே' என்கிற படத்தின் ரீமேக் தான். நிவின்பாலிக்கு ஜோடியாக ஷ்ரதா ஸ்ரீநாத் என்பவர் நடிகிறார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் 'சதுரங்க வேட்டை' ...

வரும்.. ஆனா வராது ; வருத்தத்தில் பிரியா ஆனந்த்..!

Posted:

ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த பெட்ரோமாக்ஸ் லைட் வாடகைக்கு போகிறது என கவுண்டமணி சொல்வதுபோல, நீண்ட நாட்களாக படம் எதுவும் இல்லாமல் இருந்த பிரியா ஆனந்திற்கு மலையாளத்தில் ஒரு படம் கிடைத்து அதில் நடித்தும் முடித்துவிட்டார். மலையாளம், தமிழ் என இருமொழியில் இவர் நடித்துள்ள எஸ்றா என்கிற இந்தப்படத்தின் கதாநாயகன் பிருத்விராஜ். ...

ரயீஸ் பாடலை பெரிதும் எதிர்பார்க்கும் சன்னி லியோன்

Posted:

பாலிவுட்டின் கவர்ச்சி புயலான சன்னி லியோன், தற்போது ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‛ரயீஸ்' படத்தில் ஒரு பாட்டில் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். சமீபத்தில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் ரயீஸ் படத்தில் தான் ஆடிய பாடலை மிகவும் எதிர்பார்ப்பதாக கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி சன்னி லியோன் மேலும் விரிவாக கூறியிருப்பதாவது... ...

அஹான் - அச்சுறுத்தும் நடிகராக வருவார் - சுனில் ஷெட்டி

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் சுனில் ஷெட்டி. இவரது மகன் அஹான். இவரும் தந்தையை போலவே நடிகராக களமிறங்க உள்ளார். இப்படத்தை சாஜித் தயாரிக்கிறார். மகன் சினிமாவில் களமிறங்குவது பற்றி சுனில் ஷெட்டி கூறியிருப்பதாவது... ‛‛என் மகனுக்கு ஒரே ஆசை நடிகராக வேண்டும் என்பது தான். தற்போது அவன் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளான். இன்றைய இளம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™