Tamil News | Online Tamil News |
- ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாத விவகாரம் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
- மத்திய அரசுக்கு புகார் 'ஜன்தன்' வங்கி கணக்குகளில்குவியும் கறுப்பு பணம்: 23 கோடி 'அக்கவுன்ட்'கள் கண்காணிப்பு
- கறுப்பு பணத்துக்கு எதிரான அறப்போர்: அரசியல் கட்சிகளுக்கு மோடி அழைப்பு
- குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவக்கம்; பார்லி.,யில் ஜல்லிக்கட்டு சட்ட திருத்தம்? உச்ச நீதிமன்றத்திலும் விசாரணை நடக்கிறது
- நாட்டிலேயே முதல் முறையாக அமல் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் சி.ஆர்.பி.எப்., பெண் கமாண்டோக்கள்:135 பேர் வனப்பகுதியில் ரோந்து
- மீண்டும் தேர்தல் ரத்தா? அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா ஜோர்!:அதிகாரியிடம் கட்சிகள் புகார்
- லஞ்ச ஒழிப்பு போலீஸ் 'ரெய்டு' அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்:சொத்து ஆவணங்கள் சிக்கின
- மீண்டும் மீண்டும் புதிய நோட்டு பெற தடை ரூபாய் மாற்றுவோருக்கு விரலில் மை!:கறுப்பு பண முதலீட்டை தடுக்க சிறப்பு படை:வங்கிகளில் நெரிசல் தவிர்க்க மத்திய அரசு அதிரடி
- வங்கியில் பணம் மாற்றிய பிரதமர் மோடியின் தாயார்; வீல்சேரில் வந்தார்
- கங்கை தூய்மை திட்டத்துக்கு ஒரு பைசா கூட செலவழிக்க கூடாது: தேசிய பசுமை தீர்ப்பாயம்
- ரூ.13 கோடி லஞ்சம் வாங்கிய ரஷ்ய அமைச்சர் அதிரடி கைது : புலனாய்வு துறை விசாரணை
- ஷீலா தீட்ஷித் மருமகனுக்கு 2 நாள் போலீஸ் காவல்
- வாராக்கடன்கள் வசூலில் காலக்கெடு மாறாது: ரிசர்வ் வங்கி மீண்டும் உறுதி
- சென்னையில் கனமழை; தமிழகத்திற்கு மழை வாய்ப்பு
| Posted: 15 Nov 2016 08:14 AM PST புதுடில்லி:புழக்கத்தில் இருந்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு, தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. அதே சமயம், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமலி ருக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க, மத்திய அரசுக்கு உத்தர விட்டு உள்ளது. கறுப்புப் பணத்தை ஒடுக்கவும், கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கவும், ஏற்கனவே புழக்கத்தில் இருந்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்தது.இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன; இவற்றை, தலைமை நீதிபதி, ... |
| Posted: 15 Nov 2016 08:17 AM PST ஏழை, எளிய மக்களுக்கான, 'ஜன்தன்' வங்கிக் கணக்குகளில், கறுப்புப் பணம் அதிக அளவில், 'டிபாசிட்' செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அத்தகைய, 23 கோடி வங்கி கணக்கு களை, மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க துவங்கியுள்ளது. கிராமப்புறங்களில் வங்கிக் கணக்கு இல்லாத வர்கள், அரசின் மானிய உதவிகள், கடன் திட்டங்களை பெறுவதற்கு வசதியாக, 'ஜன்தன்' என்னும் வங்கிக் கணக்கு திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்தது.இதில்,நாடு முழுவதும், 23 கோடி பேர் வங்கிக் கணக்கு துவக்கியுள்ளனர். கடந்த, 8ம் தேதி நள்ளிரவு முதல்,பழைய,500,1,000 ரூபாய்நோட்டுகள் செல்லாது என,அறிவிக்கப்பட் டது. ... |
| கறுப்பு பணத்துக்கு எதிரான அறப்போர்: அரசியல் கட்சிகளுக்கு மோடி அழைப்பு Posted: 15 Nov 2016 08:31 AM PST புதுடில்லி:'கறுப்பு பணத்துக்கு எதிரான அறப்போரை துவங்கியுள்ளோம்; அதன்படியே, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்து கட்சிகளும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்' என, அனைத்துக் கட்சி கூட்டத்தில், பிரதமர் மோடி கூறியுள்ளார். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். 'கறுப்பு பணம்மற்றும் ஊழலுக்கு எதிராக, மத்திய அரசு அறப்போரை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப் ... |
| Posted: 15 Nov 2016 08:49 AM PST பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், இன்று துவங்கும் நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு, தமிழக மக்களிடம் எழுந்துள்ளது; இது தொடர்பான வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் நடத்தப்படும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, 2006 முதல்,சுப்ரீம் கோர்ட் வழக்கு களில் சிக்கி, பல்வேறு தடைகளை சந்தித்து வருகிறது. இதனால், இரண்டு ஆண்டுகளாக, பொங்கலின்போது, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வில்லை. இதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில், கடும் எதிர்ப்பு ... |
| Posted: 15 Nov 2016 09:02 AM PST ராஞ்சி:நாட்டிலேயே முதல் முறையாக, சி.ஆர். பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த பெண் போலீசார், நக்சலைட்டு களை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஜார்க்கண்ட்டில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்க, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக் கை மேற்கொண்டுள்ளன. மாநில போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கூட்டு முயற்சியில்,நக்சலைட்டுகளின் கூடாரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன; பலர் கைதாகியுள்ளனர்.இந்நிலையில், சி.ஆர்.பி.எப்., படை ... |
| மீண்டும் தேர்தல் ரத்தா? அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா ஜோர்!:அதிகாரியிடம் கட்சிகள் புகார் Posted: 15 Nov 2016 09:12 AM PST கரூர்:செல்லாத ரூபாய் நோட்டுகளை, வாக்கா ளர்களுக்கு வாரி வழங்குவதால், அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி, பா.ம.க., - பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில், தேர்தல் செலவின பார்வையாளரிடம் மனு வழங்கப் பட்டது. இதனால், மீண்டும் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், நாளை மாலை, 5:00 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. கடந்த, இரண்டு நாட்களாக, தி.மு.க., தரப்பில், 500 ரூபாய், அ.தி.மு.க., தரப்பில், 1,000 ரூபாய், அவரவர் கட்சி சார்ந்த வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறது. மத்திய அரசால், ... |
| லஞ்ச ஒழிப்பு போலீஸ் 'ரெய்டு' அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்:சொத்து ஆவணங்கள் சிக்கின Posted: 15 Nov 2016 09:17 AM PST சென்னை:ஓய்வு பெற்ற, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் வீட்டில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 50 லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சேலத்தை சேர்ந்தவர், ஜெயராமன். தமிழக நெடுஞ்சாலை துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில், தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர், பணியில் இருந்தபோது, அதிகார துஷ்பிரயோகம் செய்து, 1,500 கோடிரூபாயை, வேறு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கு கமிஷனாக பெற்ற, 36 கோடி ரூபாயில், சேலம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளில்,சொத்துகள் ... |
| Posted: 15 Nov 2016 09:28 AM PST 'பினாமி' நபர்களை நியமித்து, மீண்டும் மீண்டும் சிலர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதை தடுக்கும் வகையில், வங்கிகளில் இன்று முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவோர் கை விரலில், அழியாத மை வைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அப்பாவி மக்களை பயன்படுத்தி, கறுப்பு பணம் முதலீடு செய்யப்படுவதை தடுக்க, சிறப்பு படை அமைக்கப்பட்டு உள்ளது. வங்கிகளில் நெரிசலை தவிர்க்க, இந்த அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.கறுப்பு பண பதுக்கலை தடுக்கவும், கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிக்கவும், 8ம் தேதி நள்ளிரவு முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ... |
| வங்கியில் பணம் மாற்றிய பிரதமர் மோடியின் தாயார்; வீல்சேரில் வந்தார் Posted: 15 Nov 2016 09:48 AM PST ஆமதாபாத்:குஜராத் மாநிலம், காந்தி நகரில் உள்ள கிராமத்தில், பிரதமர் நரேந்திர மோடி யின், 97 வயது தாயார் ஹிராபா, பிற வாடிக்கை யாளர்களை போல், வங்கியில் வரிசையில் சென்று, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிச் சென்றார். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹிராபா, குஜராத் மாநிலம், காந்தி நகர் அருகேயுள்ள கிராமத் தில் உள்ள வங்கிக்கு, வீல் சேரில் சென்று, வரிசையில் ... |
| கங்கை தூய்மை திட்டத்துக்கு ஒரு பைசா கூட செலவழிக்க கூடாது: தேசிய பசுமை தீர்ப்பாயம் Posted: 15 Nov 2016 10:36 AM PST
புதுடில்லி : 'கங்கை நதி துாய்மை திட்டத்துக்கு, இனி ஒரு பைசா கூட செலவழிக்கக் கூடாது' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கங்கை நதி துாய்மை திட்டம் தொடர்பான வழக்கு விசாரணை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், நடந்து வருகிறது.நேற்று நடந்த விசாரணையின் போது, தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி சுதந்திர குமார், தலைமையிலான அமர்வு, பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: சரியான விளக்கம் இல்லை: கங்கை நீதி துாய்மை திட்டத்துக்காக, இதுவரை, 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் குறித்தும், ... |
| ரூ.13 கோடி லஞ்சம் வாங்கிய ரஷ்ய அமைச்சர் அதிரடி கைது : புலனாய்வு துறை விசாரணை Posted: 15 Nov 2016 11:26 AM PST
மாஸ்கோ: எண்ணெய் நிறுவன ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்க, 13 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக, ரஷ்ய பொருளாதார அமைச்சர் அலெக்சிஸ் உல்யுகாயேவ் கைது செய்யப்பட்டு உள்ளார். ரூ.13 கோடி லஞ்சம்: ரஷ்ய நாட்டின் பொருளாதார அமைச்சர், அலெக்சிஸ் உல்யுகாயேவ். எண்ணெய் நிறுவன ஒப்பந்தம் குறித்த அனுமதி வழங்க, தனியார் நிறுவனத்திடம், 13 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, அலெக்சிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து விசாரித்த புலனாய்வு அதிகாரிகள், அவர் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்து உள்ளனர். ... |
| ஷீலா தீட்ஷித் மருமகனுக்கு 2 நாள் போலீஸ் காவல் Posted: 15 Nov 2016 12:08 PM PST
புதுடில்லி: குடும்ப வன்முறை சட்டத்தில் கைது செய்யப்பட்ட, டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மருமகன், இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். கைது: காங்., மூத்த தலைவர் ஷீலா தீட்ஷித், டில்லி மாநில முதல்வராக, தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்துள்ளார். அடுத்தாண்டு துவக்கத்தில், உ.பி.,யில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், காங்., சார்பாக முதல்வர் வேட்பாளராக, ஷீலா அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரது மகள் லதிகா, தன் கணவர் சையது முகமது இம்ரான், தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தன் சொத்துகளை அபகரிக்க முயற்சிப்பதாகவும், ... |
| வாராக்கடன்கள் வசூலில் காலக்கெடு மாறாது: ரிசர்வ் வங்கி மீண்டும் உறுதி Posted: 15 Nov 2016 12:53 PM PST
மும்பை: 'வாராக்கடன்களை வசூலிக்க, வங்கிகளுக்கு அளித்துள்ள, 2017 மார்ச் காலக்கெடுவில், எந்த மாற்றமும் இல்லை' என, ரிசர்வ் வங்கி, மீண்டும் உறுதி செய்துள்ளது. அதிரடி நடவடிக்கை : வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரிப்பது, பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, வாராக்கடன்களை வசூலிக்க மற்றும் குறைக்க, முந்தைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அதிரடி நடவடிக்கை எடுத்தார். 2017 மார்ச்சுக்குள்... இந்நிலையில், தற்போதைய கவர்னர் உர்ஜித் படேல், இந்த விவகாரத்தில், ... |
| சென்னையில் கனமழை; தமிழகத்திற்கு மழை வாய்ப்பு Posted: 15 Nov 2016 02:20 PM PST
சென்னை : எழும்பூர், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய இடங்களில் அதிகாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை: சென்னை -ராயப்பேட்டை, எழும்பூர், மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது; ஆனால், இயல்பை விட மிக குறைவாக பெய்து வருகிறது. இதனால், அணை, ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், நான்கு நாட்களாக, திருநெல்வேலி, துாத்துக்குடி, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 16,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |