Tamil News | Online Tamil News |
- சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதில்... சிக்கல்!:மத்திய, மாநில அரசுகளிடையே அதிகார போட்டி
- வட மாநிலங்களில் உப்பு 200 ரூபாய்க்கு விற்பனையாவதாக...வதந்தி!:பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை
- ' நாட்டுக்காக மணிக்கணக்கில் காத்திருப்போருக்கு மோடி...'சல்யூட்!:பதுக்கல்காரர்கள் மீதான அடுத்த அதிரடிக்கும் தயார்
- அதிவேக புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணம்
- இந்தியா - ஜப்பான் உறவு சீனா வயிற்றெரிச்சல்
- ஜெ., அறிக்கை வெளிவருமா? தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பு
- '3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்!':அருண் ஜெட்லி நம்பிக்கை
- அரவக்குறிச்சி வாக்காளர்களுக்கு 'ஜாக்பாட்' பழைய ரூபாய் நோட்டுகள் சப்ளை கனஜோர்
- அமைச்சர்கள், அதிகாரிகள் அவசர ஆலோசனை
- ஜப்பான் பயணம் முடிந்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி
- மத்திய அரசின் மோசமன திட்டத்தால் மக்கள் அவதியுறுகின்றனர்: மம்தா வேதனை
- கறுப்பு பணம் விவகாரம்:கெஜ்ரிவாலுக்கு பா.ஜ., கண்டனம்
| சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதில்... சிக்கல்!:மத்திய, மாநில அரசுகளிடையே அதிகார போட்டி Posted: 12 Nov 2016 05:24 AM PST புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை, வரும் நிதியாண்டில் அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் அதிகாரம் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே அதிகார போட்டி நிலவுகிறது; இதனால், ஜி.எஸ்.டி., அமலுக்கு வரும் நாள் தள்ளிப் போகும், எனத் தெரிகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு வரி விகிதங் களுக்கு மாற்றாக, ஒரே சீரான வரி விதிப்பை கொண்டு வரும் வகையில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட உள்ளது; அடுத்த ஆண்டு, ஏப்ரல், 1ல் இருந்து, நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு தொடர்பான ... |
| Posted: 12 Nov 2016 08:09 AM PST புதுடில்லி:வட மாநிலங்களில், சமையல் உப்பு கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ''இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக, மாநில அரசுகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில், 'பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, பிரதமர் மோடி, சமீபத்தில் அறிவித்தார். அத்தியாவசிய பொருட்கள் இந்த பணத்தை வங்கிகளில், 'டிபாசிட்' செய்யவும், மாற்றிக் கொள்ளவும், ஏராளமானோர் ... |
| Posted: 12 Nov 2016 09:29 AM PST கோபே:''கறுப்புப் பணம் பதுக்கி வைப்போருக்கு எதிராக, டிசம்பர், 30க்கு பின், மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்; நாட்டு நலனில் அக்கறை வைத்து, வங்கிகளில் பணம் மாற்ற வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா திரும்பும் முன், கோபே நகரில், அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சி யில் பங்கேற்றார்; அப்போது, அவர் பேசியதாவது:கறுப்புப் பணத்தை மீட்க, அரசு மேலும் பல நட வடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. ... |
| அதிவேக புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணம் Posted: 12 Nov 2016 09:30 AM PST டோக்கியோ:பிரதமர் மோடி, ஜப்பான் பயணத் தின் ஒரு பகுதியாக, அதிவேக புல்லட் ரயிலில் பயணம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, கிழக்காசிய நாடான ஜப்பானுக்கு, மூன்று நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்; அவர், ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவை சந்தித்து, இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தார். இதன்பின், அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேயை, மோடி, சந்தித்து பேசினார்; அப்போது, இரு நாடு களிடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க, அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, நேற்று, ஜப்பான் தலைநகர் டோக்கியோவை,கோபேவு நகருடன் இணைக் கும், ... |
| இந்தியா - ஜப்பான் உறவு சீனா வயிற்றெரிச்சல் Posted: 12 Nov 2016 09:36 AM PST பீஜிங்:ஜப்பானுடன்,இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் செய்துள்ளதால் எரிச்சல் அடைந்துள்ள சீனா, 'இந்த ஒப்பந்தத் தின் மூலம், ஜப்பானிடம் இந்தியா, தன்னை அடகு வைத்துள்ளது' என, விமர்சித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன், இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியின் தற்போதைய ஜப்பான் பயணத்தில், இருநாடு களிடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், இந்திய அணுசக்திதொழில்நுட்பம் புதிய வளர்ச்சியை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், சீன ஊடகங்கள் இதை ... |
| ஜெ., அறிக்கை வெளிவருமா? தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பு Posted: 12 Nov 2016 09:45 AM PST சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள, மூன்று தொகுதிகளிலும், இறுதி கட்ட பிரசாரத்தில், நட்சத் திர பேச்சாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தேர்தல் பிரசாரம் முடிவதற்கு முன், முதல்வர் அறிக்கை வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க.,வினரிடம் ஏற்பட்டு உள்ளது. வீதி வீதியாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, வரும், 19ல், தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று தொகுதிகளிலும், 17ம் தேதி மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற உள்ளது. சில தினங்களே உள்ளதால், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர்களின் ... |
| '3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்!':அருண் ஜெட்லி நம்பிக்கை Posted: 12 Nov 2016 09:50 AM PST புதுடில்லி:பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சிரமங்களை அனுபவித்து வரும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ''மூன்று வாரங்களில் பிரச்னைகள் அனைத்தும் சரியாகி விடும். இந்த திட்டத்தால் நாம் அடையப் போகும் லாபங்கள் ஏராளம்,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:வங்கிகளில் பணம் மாற்றும் பொதுமக்களுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் தரப்படுவதால், ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம். இருப்பினும், அரசின் இத்திட்டம் நீண்ட காலப் பயன்களை அளிக்க ... |
| அரவக்குறிச்சி வாக்காளர்களுக்கு 'ஜாக்பாட்' பழைய ரூபாய் நோட்டுகள் சப்ளை கனஜோர் Posted: 12 Nov 2016 09:52 AM PST கரூர்:அரவக்குறிச்சியில், அ.தி.மு.க., - தி.மு.க., போட்டி போட்டு, செல்லாத, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தாராளமாக வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றன. ஆளுங்கட்சி தரப்பில், 3,000, தி.மு.க., தரப்பில், 1,500 ரூபாய் வரை, வழங்கப்பட்டு வருகிறது. புழக்கத்திலிருந்த, 500, 1,000, ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதனால், அரவக்குறிச்சியில், வரும், 19ல் நடைபெறும் தேர்தலுக்கு, கட்சிகள், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் சிக்கல் ஏற்படும் என்று, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், ஆளுங்கட்சியினர், அரசுத்துறை நிறுவனங்களில் வசூலான, 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை பெற்று, ... |
| அமைச்சர்கள், அதிகாரிகள் அவசர ஆலோசனை Posted: 12 Nov 2016 09:55 AM PST சென்னை:சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமை செயலர் ராமமோகன ராவ், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், போலீஸ் டி.ஜி.பி., அசோக்குமார், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமிமற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், மழையை எதிர்கொள்ள, சென்னை, புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக் கப்பட்டது. மேலும் நீதிமன்ற ... |
| ஜப்பான் பயணம் முடிந்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி Posted: 12 Nov 2016 10:55 AM PST
புதுடில்லி:ஜப்பான் நாட்டிற்கு மூன்று நாள் பயணம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினார். இப்பயணத்தில் புல்லட் ரயில், விவசாயம் உள்ளிட்ட 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மன்னர் அகிடோவுடன் சந்திப்பு மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, நேற்று இரவு தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக கடந்த வியாழக்கிழமை ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். தலைநகர் டோக்கியோவில் இரு நாடுகளின் முக்கிய ... |
| மத்திய அரசின் மோசமன திட்டத்தால் மக்கள் அவதியுறுகின்றனர்: மம்தா வேதனை Posted: 12 Nov 2016 12:12 PM PST கோல்கட்டா: 500, 1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்ததால், ஏ.டி.எம்.மையங்கள் மூலம் புதிய நோட்டுகளை பெற முடியுமால் ஏழை, எளிய மக்கள் அவதியுறுகின்றனர். என மேற்குவங்க முதல்வர் மம்தா கூறினார்.கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் கூட்டம் : இதனால், கையில் வைத்துள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, வங்கிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது; கையில் பணம் இல்லாமல் அவதிப் படுகின்றனர். நேரில் பார்வை மேற்குவங்க மாநிம் கோல்கட்டா ... |
| கறுப்பு பணம் விவகாரம்:கெஜ்ரிவாலுக்கு பா.ஜ., கண்டனம் Posted: 12 Nov 2016 01:58 PM PST புதுடில்லி:ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததில் பெரும் அளவில் ஊழல் நடக்கிறது என்று டில்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.இதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து பா.ஜ.க, செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் கூறியதாவது:கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை யாரும் தீவிரமானதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் தனது குற்றச்சாட்டுக்கான பொறுப்பு எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவை எல்லாமே விசாரணை நடத்துவதற்கான ஆதாரமாகவும் அமைந்திருக்கவில்லை. தவிர, அவை முற்றிலும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 13,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |