Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நுழைவு வரி விதிக்க மாநிலங்களுக்கு... உரிமை!:சுப்ரீம் கோர்ட் அமர்வு பரபரப்பு தீர்ப்பு

Posted: 11 Nov 2016 08:36 AM PST

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனைக்கு, மத்திய அரசு, சி.எஸ்.டி., எனப்படும் மத்திய விற்பனை வரியை வசூலிக்கிறது.

ஒரு குறிப்பிட்டமாநிலத்தில் தயாரிக்கப்படும் பொருள், மற்றொரு மாநிலத்தில் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது, அந்தந்த மாநிலங்கள் அவற்றுக்கு, நுழைவு வரியை வசூலிக்கின்றன. இதற்காக, பல்வேறு மாநிலங்கள் சட்டம் இயற்றி உள்ளன.இந்த நுழைவு வரி விதிப்பை எதிர்த்து, 'ஜிண்டால் ஸ்டீல்ஸ் லிமிடெட்' நிறுவனம், 2002ல் வழக்கு தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து, பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களும், நுழைவு வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ...

அ.தி.மு.க.,வினரிடம் ரூ.50, ரூ.100 தாராளம் : அரசு நிறுவனங்கள் வசூல் வாரி சுருட்டல்!

Posted: 11 Nov 2016 08:39 AM PST

கரூர்: மூன்று தொகுதி தேர்தல் பணப்பட்டு வாடாவுக்காக, அரசுத்துறை நிறுவனங்களில், வசூலான, 50, 100 ரூபாய் நோட்டுகளை, அ.தி.மு.க.,வினர் வாங்கி பதுக்கியதாக புகார் எழுந்து உள்ளது.

திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடப்பதால், பணப் பட்டுவாடா உள்ளிட்ட செலவுகளை சரிகட்ட, பிரதமர் மோடியின் நடவடிக்கையால் ஆளுங்கட்சியினர் திண்டாடினர். கடந்த, 8ல், நள்ளிரவு முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்ததால், சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டது. தேர்தல் செலவுக்காக, 100, 50 ரூபாய் கிடைக்காமல், அ.தி.மு.க., பொறுப் பாளர்கள் ...

'வெளுத்து வாங்கும்' எதிர்க்கட்சிகள்: வெலவெலக்கும் ஆளுங்கட்சியினர்

Posted: 11 Nov 2016 08:39 AM PST

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி தேர்தலில், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு, அ.தி.மு.க., தரப்பில் பதிலடி கொடுக்க முடியாமல், அமைச்சர்கள் பேச தயங்குவதால், அக்கட்சி தொண்டர்கள் சோர்வாக உள்ளனர்.

தமிழகத்தில் நடக்கும் தேர்தல்களில், முதலில் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தில் இறங்குவது முதல்வர் ஜெயலலிதா தான். ஆனால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதி களில், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சி களின் புகார்களுக்கு, அ.தி.மு.க.,வினரால் பதில்
சொல்ல முடியாத நிலை ஏற்பட்டு ...

தலைமை செயலகத்தில் முக்கிய கோப்புகள் தேக்கம் : வெளியூர் செல்லும் அரசு அதிகாரிகள்

Posted: 11 Nov 2016 08:52 AM PST

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ளதாலும், அமைச்சர்கள் தேர்தல் பணிக்கு சென்று விட்டதாலும்,தலைமை செயலகத்தில், கோப்புகள் தேக்கம் அடைந்துள்ளன.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக, செப்., 22 முதல், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேநேரத்தில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, 19ல் தேர்தல் நடைபெற உள்ளதால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், மூன்று தொகுதிகளிலும் முகாமிட்டுள்ளனர்.
அரசு ஆலோசகர், தலைமைச் செயலர் என, அனைவரும், தினமும் அப்பல்லோ மருத்துவ
மனை சென்று வருகின்றனர். ...

ஸ்டேட் வங்கியில் மட்டுமே இரண்டு நாட்களில் டிபாசிட்...ரூ.53,000 கோடி! :கள்ள நோட்டுகளை ஒழிக்க மோடி நடவடிக்கை முழு வெற்றி

Posted: 11 Nov 2016 08:56 AM PST

மும்பை:நாடு முழுவதும், எஸ்.பி.ஐ., எனப் படும் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில், இரண்டு நாட்களில், 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு, பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மக்கள், 'டிபாசிட்' செய்துள்ளனர். இதன் மூலம், கள்ள நோட்டுகளை முடக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

நாட்டில், கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகை யிலும், கள்ள நோட்டு புழக்கத்தை ஒடுக்கும் வகையிலும், '500, 1,000 ரூபாய் நோட்டுகள், செல்லாது' என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ரிசர்வ் வங்கியிலிருந்து, புதிய ரூபாய் நோட்டுகள் சென்றடைவதற்காக, வங்கிகள் மூடப்பட்டன; இரண்டு ...

இந்தியா - ஜப்பான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து

Posted: 11 Nov 2016 09:24 AM PST

டோக்கியோ:பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணத்தின் ஒரு பகுதியாக, அந் நாட்டுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, கிழக்காசிய நாடான ஜப்பானுக்கு, மூன்று நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று, ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவை சந்தித்து, இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாகஆலோசித்தார். ஜப்பான் மன்னர் வழக்கமாக, வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதில்லை என்பதால், அவரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது, முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த ...

வரிசையில் காத்திருந்து நோட்டு மாற்றிய ராகுல்

Posted: 11 Nov 2016 09:29 AM PST

புதுடில்லி:டில்லியில், காங்., துணைத் தலைவர் ராகுல், 40 நிமிடங்கள் வரிசையில் நின்று, பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, புதிய நோட்டுகளை பெற்றுச் சென்றார்.

கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை, 8ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த நோட்டுகள் தவிர, ஏற்கனவே புழக்கத்தில் உள்ள, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளும் வங்கிக ளில் ...

சொத்து பத்திரங்களில் 'ஆதார்' எண்: அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயார்

Posted: 11 Nov 2016 09:31 AM PST

கறுப்பு பணம், கள்ள நோட்டு பிரச்னைக்கு தீர்வாக, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த மத்திய அரசு, அடுத்த அதிரடியாக, சொத்து பத்திரங்களில், 'ஆதார்' எண் இணைப் பதற்கான வழிமுறைகளை ஆராய துவங்கி உள்ளது.

கறுப்பு பணம், கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. அடுத்தகட்டமாக, தங்க நகை விற்பனை, சொத்து பரிமாற்றத்திலும் அதிரடி கட்டுப்பாடுகள் வரலாம் என கூறப்படுகிறது.சொத்து பத்திரங்களில் ஆதார் எண் சேர்ப்பதை கட்டாயமாக்கி, யார் பெயரில் எவ்வளவு அசையா சொத்து உள்ளது என்பதை கண்காணிக்க ...

'மாஜி' ஜனார்த்தன ரெட்டி மகள் திருமண ஏற்பாடுகள்...தடபுடல்!: பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கோலாகலம்

Posted: 11 Nov 2016 09:48 AM PST

பெங்களூரு:அரண்மனை போன்று வடிவமைத்து, முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகள் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக, பெங்களூரு, அரண்மனை திடலில் நடைபெற்று வருகிறது. இத்திருமணத்திற்காக, 500 கோடி ரூபாய் வரை செலவிடப்படுவதாக, செய்தி பரவி வருகிறது.

திருப்பதி ஏழுமலையானுக்கு, 45 கோடி ரூபாய் மதிப்பில், 15 கிலோ தங்கத்தால் கிரீடம் செய்து, தன் நேர்த்திக்கடனை செலுத்திய ஜனார்த்தன ரெட்டி, பல்லாரி மாவட்ட முடிசூடா மன்னராக திகழ்ந்தார்.வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், இரும்பு சுரங்க ஊழலில் முறைகேடு செய்ததாகவும் சிறையில் அடைக் கப்பட்டார்.சிறையிலிருந்து ...

விஜய் மல்லையாவின் ரூ.1,620 கோடி சொத்து முடக்கம்

Posted: 11 Nov 2016 09:51 AM PST

மும்பை: வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்து வெளிநாடுக்கு தப்பியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின், 1,620 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி, 9,000 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, வெளிநாடு தப்பி சென்றுள்ளான்.
மல்லையா மீதான பண மோசடி வழக்குகளை விசாரித்து வரும், அமலாக்கத் துறை, அவனுக்கு சொந்தமான, 8,041 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது.
இந்த நிலையில், மல்லையாவுக்கு சொந்தமான மேலும் சில சொத்துக்களை முடக்க அனுமதி கோரி, பண மோசடி ...

நாடகமாடுகிறது காங்.,:முதல்வர் பாதல் குற்றச்சாட்டு

Posted: 11 Nov 2016 01:20 PM PST

சண்டிகர்:சட்லஜ் - யமுனை கால்வாய் விவகாரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது திட்டமிட்ட நாடகம் என பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மொஹாலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:சட்லஜ் - யமுனை கால்வாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது பஞ்சாபுக்கு எதிரான நடவடிக்கை ஆகும். இந்த உத்தரவை சிரோமணி அகாலி தளம் - பாஜக கூட்டணி அரசு எதிர்க்கிறது.இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. எத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™