Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


கேப்டன் தோனியுடன் ஜோடியாக ஆண்ட்ரியா

Posted:

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியுடன், ஆண்ட்ரியா ஜோடி சேர்ந்த படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், தோனியுடன் சேர்ந்து எடுத்த படத்தை, டுவிட்டரில் வெளியிட்டார். உடன், இருவரும் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து ஆண்ட்ரியா ...

தமிழில் இடைவெளி ஏன்? அமைரா விளக்கம்

Posted:

தமிழில் அனேகன் படத்தில் அறிமுகமானவர் அமைரா. அதன்பின் தொடர்ந்து தமிழில் நடிக்காமல் இந்திக்கு சென்று விட்டார். அங்கு மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்தவருக்கு அடுத்து குங்பூ யோகா என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது மீண்டும் ஓடி ஓடி உழைக்கணும் படத்தின் மூலம் வருகிறார். இதில் அவர் சந்தானம் ஜோடியாக ...

மீண்டும் பிசியாகும் விமல்

Posted:

இளம் ஹீரோக்களில் தற்போது சற்றே பின் தங்கியிருப்பவர் விமல். 2014 ஆம் ஆண்டு சுமார் அரை டஜன் படங்களில் நடிக்குமளவுக்கு பிசியாக இருந்த விமல், அவர் நடித்த படங்களின் தோல்வி காரணமாக பட வாய்ப்புகளை இழந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் விமல் நடித்தது மொத்தமே மூன்று படங்கள்தான். அவற்றில் இரண்டு படங்கள் இந்த வருடம் வெளிவந்தன. அஞ்சல, மாப்ள ...

வைரஸ் அனுப்பி த்ரிஷா, ஹன்சிகா மொபைலை 'சுத்தம்' செய்த 'ஹேக்கர்ஸ்'

Posted:

மொபைல் போன்களை 'ஹேக்' செய்ய முடியுமா என்று சிலருக்குக் கேள்வி இருக்கும். எப்படி சில வைரஸ் இணையதளங்கள் மூலம் நம்முடைய கம்ப்யூட்டர்களுக்குள் வைரஸ் வருமோ, அதே போல தேவையற்ற மெசேஜ்கள், இணையதளங்கள் மூலமும் வைரஸ்களை அனுப்ப முடியும். அப்படித்தான் த்ரிஷா, ஹன்சிகா ஆகியோரது மொபைல் எண்களைத் தெரிந்து வைத்துள்ள யாரோ, அவர்கள் மொபைலுக்கு ...

அம்பலமான கதைத்திருட்டு

Posted:

'பிச்சைக்காரன்' வெற்றிக்குப் பிறகு புதுமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள் 'சைத்தான்' படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்னரே சர்ச்சையில் சிக்கியுள்ளது. பொதுவாக ஒரு படம் வெளியாவதற்கு முன் அப்படத்தின் டீஸர், டிரெய்லர்தான் வெளியிடப்படும். ஆனால், புதுமைய செய்வதாக நினைத்துக்கொண்டு ...

பட்டியலில் சேருமா பலே வெள்ளயத்தேவா சேருமா?

Posted:

'கிடாரி' படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடித்து வரும் படம் 'பலே வெள்ளையத் தேவா'. இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சோலை பிரகாஷ் என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் சங்கிலி முருகனும், கோவை சரளாவும் நடித்துள்ளனர். காமெடிப் படமாக உருவாகியிருக்கும் ...

'ரெமோ' - தெலுங்கில் நவம்பர் 25ல் ரிலீஸ்

Posted:

பாக்கியராஜ் கண்ணன் இயக்க அனிருத் இசையமைக்க சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த 'ரெமோ' திரைப்படம் தமிழில் கடந்த மாதம் 7ம் தேதி வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. 'கபாலி, தெறி' படங்களக்குப் பிறகு இந்த ஆண்டின் வசூல் படமாக இந்தப் படம் அமைந்தது என்று சொல்லப்பட்டது. சுமார் 60 கோடி ரூபாய் வரை இப்படம் ...

ஜெயராம் படத்தின் நாயகியானார் 'நெடுஞ்சாலை' ஷிவதா..!

Posted:

மோதிரக்கையால் குட்டுப்பட்டு திரையுலகில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஷிவதா நாயர். பிரபல இயக்குனர் பாசில் இயக்கிய 'லிவிங் டுகெதர்' படத்தில் அறிமுகமான ஷிவதா நாயர், அடுத்து தமிழில் நடித்த 'நெடுஞ்சாலை' படம் மூலம் பாப்புலரானர். மலையாள நடிகரான முரளி கிருஷ்ணன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டவர், அப்படியே மற்ற நடிகைகளை போல் ...

அடுத்த படத்தை அறிவித்தார் பத்தேமாறி இயக்குனர்..!

Posted:

நான்கு வருடங்களுக்கு முன்பு தேசியவிருது, சர்வதேச திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை அள்ளிய ஆதாமிண்டே மகன் அபு படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் சலீம் அஹமது, தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருதை கைப்பற்றிய இந்தப்படத்தின் இயக்குனர் சலீம் அஹமது, அடுத்ததாக மம்முட்டியை வைத்து குஞ்சானந்தண்டே கதா என்கிற படத்தை ...

கலாபவன் மணி மரணத்துக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை; அஞ்சு அரவிந்த்..!

Posted:

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மரமமான முறையில் மரணத்தை தழுவி சுமார் 9 மாதங்களாகிவிட்டது.. அவர் மரணம்சந்தேகத்துக்கு இடமான முறையில் உள்ளது என மருத்துவ அறிக்கையில் உருதிப்படுத்தப்பட்டும் கூட, அதற்கு காரணமானவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது போலீஸ்.. கலாபவன் மணியின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்கள், அவரது கெஸ்ட் ...

மம்முட்டி படத்தில் மீண்டும் இடம்பிடித்த பேபி அனிகா..!

Posted:

அஜித்துடன் இணைந்து 'என்னை அறிந்தால்' படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் பேபி அனிகா. அடுத்தடுத்து தமிழில் மிருதன், நானும் ரவுடி தான் படங்களில் நடித்த அணிகாவுக்கு தம்ழை விட மலையாளத்தில் தான் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.. குறிப்பாக மம்முட்டி-நயன்தாரா நடித்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் நயன்தாராவின் மகளாக ...

'2.0' வெளியீடு, 'பாகுபலி 2' குழுவினருக்கு நிம்மதி

Posted:

இந்தியத் திரையுலகில் ஹிந்தித் திரைப்பட இயக்குனர்கள் அல்லாமல் இரண்டு தென்னிந்திய இயக்குனர்கள் பேசப்பட்டு வருகிறார்கள். அவர்களில் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த ஷங்கர், தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த ராஜமௌலி முக்கியமானவர்கள். ஷங்கர் அவருடைய முந்தைய படங்கள் மூலமாக ஏற்கெனவே பேசப்படும் ஒரு இயக்குனராக இருக்கிறார். ...

விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறிய அர்பாஸ் - மலைக்கா

Posted:

பாலிவுட்டின் நம்பர் 1ஹீரோவாக இருப்பவர் நடிகர் சல்மான் கான். இவரது சகோதரர் அர்பாஸ் கான். இவர் நடிகை மலைக்கா அரோராவை கடந்த 1998-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தநிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களை சமாதானம் செய்ய அண்ணன் சல்மான் ...

ஷாரூக்கை புகழும் கவுரி ஷிண்டே

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் கவுரி ஷிண்டேவும் ஒருவர். இவர் தற்போது நடிகை ஆலியாபட், ஷாரூக்கான் ஆகியோரை கொண்டு ‛டியர் ஜிந்தகி என்ற படத்தை இயக்கி உள்ளார். ரிலீஸ்க்கு தயாராகியுள்ள டியர் ஜிந்தகி படத்தின் புரொமோஷன் வேலைகளில் ஆலியா, கவுரி உள்ளிட்ட படக்குழு ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற இயக்குநர் கவுரி ...

ஜூட்வா-2 வில் இரண்டு ஹீரோயின்கள்

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். வருண், தற்போது இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் ‛ஜூட்வா' படத்தின் வரிசையில் அடுத்த பாகமான ‛ஜூட்வா-2' படத்தில் நடிக்க இருக்கிறார். சஜித் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.

டேவிட் தவான் இயக்கவிருக்கும் ‛ஜூட்வா-2' படத்தில் வருண் முக்கிய வேடத்தில் நடிக்க ...

6 மாத தேடலுக்கு பிறகு மாயமான மதன் திருப்பூரில் கைது

Posted:

சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திகழ்ந்து வந்த மதன், கடந்த மே 29ம் தேதி திடீரென மாயமானார், சுமார் 6 மாத தேடுதல் வேட்டைக்கு பின்னர், திருப்பூரில் தனிப்படை போலீசார் அவரை இன்று(நவ., 21-ம் தேதி) கைது செய்தனர்.

மாயம் : வேந்தர் மூவிஸ் சார்பில் ஏராளமான படங்களை தயாரித்தும், விநியோகித்தும் சினிமாவில் பரபரப்பாக ...

சஞ்சய் தத் நடிக்கும் பூமி!

Posted:

மேரி கோம், சரப்ஜித் படங்களை இயக்கிய ஓமங் குமார், அடுத்தப்படியாக சஞ்சய் தத்தை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப்படத்திற்கு ‛பூமி' என்று பெயரிட்டுள்ளனர். இதை பூஷண் குமார் மற்றும் சந்தீப் சிங் தயாரிக்கிறார்கள்.
இப்படம் பற்றிய சஞ்சய் தத் கூறியிருப்பதாவது... ‛‛ஒரு அழுத்தமான, என்னை பாதிக்கக்கூடிய கேரக்டரில் நடிக்க ...

‛2.O' விழாவிற்கு அழைக்காமல் வந்த சல்மான்

Posted:

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட படம் ‛2.O'. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக பிரமாண்டமாய், சுமார் ரூ.350 கோடி செலவில் உரவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில், நேற்று நடந்தது. இதில் ரஜினி, ...

சதுரங்க வேட்டைக்காக ஒரு கோடியில் ஜெயில் செட்

Posted:

நட்டி நட்ராஜ், இஷாரா, நடித்த சதுரங்க வேட்டை படத்தை வினோத் இயக்கினார். இப்போது சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் தயாராகிறது. இதற்கு வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நிர்மல் குமார் இயக்குகிறார். இவர் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கியவர். அரவிந்த்சாமி, த்ரிஷா, நாசர், பிரகாஷ்ராஜ், உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இது ...

தமிழில் வெளியாகிறது அமீர்கானின் தங்கல்

Posted:

பாலிவுட்டில் அடுத்து ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படம் தங்கல். அமீர்கான் நடிக்கும் இந்தப் படத்தை நிதீஷ் திவாரி இயக்கி உள்ளார். டிஷ்னி வோர்ல்ட் சினிமாவுடன் இணைந்து அமீர்கான் தயாரித்துள்ளார். பியூஷ்குப்தா, ஸ்ரேயாஸ் ஜெயின், நிகில் மஹோத்ரா நடித்துள்ளனர். பிரித்தம் சக்ரபோர்த்தி இசை அமைத்துள்ளார், சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™