Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெ., குறித்த வதந்தியால், அ.தி.மு.க., - தி.மு.க., மோதல்...முற்றுகிறது!:சமூக வலைதளங்களை முடக்கியதால் பெரிதாகிறது பிரச்னை

Posted: 15 Oct 2016 06:13 AM PDT

சென்னை:உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, முதல்வர் ஜெயலலிதா குறித்த வதந்திகளை பரப்புவதாகக் கூறி, தி.மு.க.,வின், 'பேஸ்புக்' மற்றும் வலைதளங் களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளது. இது குறித்து, இரு கட்சியினரும், எதிரெதிர் பேட்டி கள் கொடுத்து வருவதால், இரு கட்சியினரி டையே சண்டை முற்றி வருகிறது.

கடந்த, 22ல், அப்பல்லோ மருத்துவமனையில், முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதலே, பல வகையான வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு, ...

4 மாநில தேர்தலில் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு... பிரகாசம்!:பஞ்சாபில் ஆம் ஆத்மி - காங்., போட்டா போட்டி

Posted: 15 Oct 2016 06:20 AM PDT

புதுடில்லி:அடுத்த ஆண்டில், ஐந்து மாநிலங் களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தல்களில், நான்கு மாநிலங்களில்,பா.ஜ., வெற்றி பெறும் என, கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பஞ்சாபில், ஆளும் அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி,தோல்வியை சந்திக்கும் என தெரிகிறது.

உ.பி., - உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில், சட்ட சபை தேர்தல், அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்க உள்ளது. இதையொட்டி, இந்த மாநிலங் களில், இப்போதே தேர்தல் பிரசாரம், சூடு பிடிக்க துவங்கி உள்ளது. இந்த ஐந்து மாநில சட்ட சபை தேர்தல் முடிவு கள், பிரதமர் மோடி ஆட்சி மீதான, மக்களின் எண்ணத்தை ...

ஓ.பி.எஸ்.,சுக்கு காத்திருக்கும் கடும் சவால்கள்!

Posted: 15 Oct 2016 07:58 AM PDT

பொறுப்பு முதல்வர் அந்தஸ்தில் இருக்கும், நிதியமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு, ஆட்சி யிலும், கட்சியிலும் கடும் சவால்கள் காத்திருப் பதாக, கோட்டை வட்டாரம் கூறுகிறது.

முதல்வர் ஜெயலலிதா, உடல் நிலை பாதிக்கப் பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு, 25 நாட்களாக சிகிச்சையில் உள்ளார். இதையடுத்து, அவர் வகித்து வந்த உள்துறை, ஆட்சிப்பணி, காவல் பணி உள்ளிட்ட முக்கிய துறைகள், நிதியமைச்சர், ஓ.பன்னீர்செல்வத்திடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளன. பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டதும், விடுமுறை நாளிலும், கோட்டைக்கு வந்து, தன் பணிகளை துவங்கி விட்டார் ...

தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு பின் காவல் துறைக்கு தனி அமைச்சர்

Posted: 15 Oct 2016 08:01 AM PDT

எம்.ஜி.ஆர்.,- டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வாலை தொடர்ந்து, நம் நாட்டில், இலாகா இல்லாத மூன்றாவது முதல்வராக, ஜெயலலிதா பொறுப்பு வகிக்கிறார்.

கடந்த, 1984ல், முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., நோய்வாய்ப்பட்டார். அப்போது, அவர் வகித்து வந்த பொறுப்புகள் அனைத்தும், மூத்த அமைச்சராகவும்; நிதியமைச்சராகவும் இருந்த நெடுஞ்செழியனுக்கு, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., துறைகள்
இல்லாத முதல்வராக இருந்தார்.
அதன்பின், சமீபத்தில், டில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி யேற்றார். அப்போது, 'முதல்வராக மட்டுமே இருப்பேன்; ...

அ.தி.மு.க.,வை எதிர்க்க அமித் ஷா பச்சைக்கொடி

Posted: 15 Oct 2016 08:03 AM PDT

'ஜெயலலிதா உடல்நிலை குறித்து, யாரும் விமர்சிக்க வேண்டாம்; அதற்காக, அ.தி.மு.க., அரசின் செயல்பாடுகளை விமர்சிக்காமல் இருக்க வேண்டாம்' என, தமிழக பா.ஜ., தலை வர்களிடம், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, தமிழக பா.ஜ., தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது; ஆனால்,முடியவில்லை. இதனால், அ.தி.மு.க., மீது, பா.ஜ., தலைமை கோபம் அடைந்தது. இருப்பினும், மத்திய ஆட்சிக்கு,அ.தி.மு.க., - எம்.பி.,க் கள் ஆதரவு தேவை என்பதால், மோதல் போக்கை விரும்பாமல் இருந்தது.ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, ஜி.எஸ்.டி., ...

சசிகலா புஷ்பாவின் விமர்சனம் : பதிலடி தர அ.தி.மு.க., தயார்

Posted: 15 Oct 2016 08:05 AM PDT

தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வரும், ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பாவுக்கு பதிலடி கொடுக்க, அ.தி.மு.க.,வினர் தயாராகி வருகின்றனர்.

தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., திருச்சி சிவாவுடன் ஏற்பட்ட மோதலால், சசிகலா புஷ்பா, கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதனால், அ.தி.மு.க., தலைமை மீது, தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். 'அடிமைகளின் கூடாரம்' என்று, அ.தி.மு.க.,வையும், தலைமையையும் கடுமையாக விமர்சித்தார்.
போலீசாருக்கு பச்சைக்கொடி :
பின், முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில், 'அட்மிட்' ஆனதும், அவரது தோழி சசிகலாவையும் ...

7 கோடி கிலோ வெங்காயம் வீண் : அரசு அலட்சியத்தால் அவலம்

Posted: 15 Oct 2016 08:30 AM PDT

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், அரசு குடோனில், குளிர்பதன வசதி இல்லாததால், ஏழு கோடி கிலோ வெங்காயம், அழுகி வீணாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது; இங்கு, சமீபத்தில், வெங்காய விலை, பெரும் சரிவடைந்தது. ஒரு கிலோ வெங்காயம், 50 பைசாவுக்கு விற்கப்பட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, மாநில அரசு, ஜூன் மற்றும் ஜூலையில், விவசாயிகளிடம் இருந்து, கிலோ 6 ரூபாய் விலையில் வெங்காயத்தை வாங்கி, குடோனில் இருப்பு வைத்தது. மொத்தம், 10 கோடி கிலோ வெங்காயம், விவசாயிகளிடம் இருந்து ...

தமிழக திடக்கழிவு திட்டத்துக்கு மத்திய அரசு பாராட்டு!:மற்ற மாநிலங்களும் பின்பற்ற அறிவுரை

Posted: 15 Oct 2016 09:17 AM PDT

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு, மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.'தமிழக அரசு பின்பற்றும் நடைமுறையை, பிற மாநிலங் களும் பின்பற்ற வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக் கில், 'துாய்மை இந்தியா' இயக்கத்தை, 2014ல், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நாடு முழு வதும், 4,000 நகரங்களில், தெருக்களை சுத்தப் படுத்துவதும், சுகாதார கட்டமைப்பை மேம் படுத்துவதும் இதன் நோக்கம். இந்த திட்டத்தை மக்களிடம் பிரபலப்படுத்தும் விதமாக, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் கிரிக்கெட் வீரர் ...

சபாஷ்! பாக்.,கிற்கு பாடம் புகட்ட ரஷ்யாவுடன் கைகோர்த்தார் மோடி:புதியவர்களை விட பழைய நண்பர்களே மேல் என உருக்கம்

Posted: 15 Oct 2016 10:00 AM PDT

பெனாலிம்:பயங்கரவாதிகளை ஊக்குவித்து அட்டூழியம் செய்து வரும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில், ரஷ்யாவுடன் கைகோர்த்துள்ளார் பிரதமர் மோடி. கோவாவில் நடக்கும்,'பிரிக்ஸ்' மாநாட்டில், ''இரண்டு புதிய நண்பர்களை விட, பழைய நண்பரே சிறந்தவர்,'' என, உருக்கமாக பேசி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஈர்த்தார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்த, 'பிரிக்ஸ்' கூட்டமைப் பின், எட்டாவது மாநாடு, கோவா மாநிலத்தின் பெனாலிம் பகுதியில் நேற்று துவங்கியது.இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் ...

முதுமையை தள்ளிப்போடும் புதிய சேர்மம் கண்டுபிடிப்பு

Posted: 15 Oct 2016 02:02 PM PDT

வாஷிங்டன்: மனிதனின் முதுமை அடையும் தன்மையை தள்ளிப்போடும் புதிய மருந்து

ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதன் முதுமை அடையாமல் தடுக்கும் பேராசையில் இன்று வரை உலகில் பல நாடுகளில் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சயில் ஈடுபட்டு வருகின்றனர். மனிதன் முதுமையடையும் போது ஞாபக மறதி, புத்திகூர்மை குறைவு, நரம்பு மண்டலம் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மற்றும் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இறுதியில் மரணத்தை தழுவ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
முதுமைக்கு காரணம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™