ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அன்று சொன்னவை அர்த்தம் உள்ளவை
- நாமும் மறந்து விட்டோம்
- ‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’
- உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....
- மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள்
- ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்
- தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..!
- மன்னித்துவிடுங்கள் மகாத்மாவே!
- சுறுசுறுப்பைப் போதிக்கும் வண்ணத்துப்பூச்சி
- அக்டோபர் -3 உலக வசிப்பிட தினம் இன்று .
- பின்னோக்கி செல்வது…
- உன் புன்னகை மந்திரமே...!
- ஐயோ பாவம் அப்பா
- நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
- மறைநெறி நவிலும் நிறைமொழி
- 'தங்க நகை அணிய மாட்டோம்!' பீஹார் மாணவியர் சபதம்
- உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி!
- அன்பு… என்ன காட்சிப் பொருளா…?
- வா… வா… பைரவா
- காஞ்சனா ஜெயதிலகர் எழுதிய அதிசய ராகம் தெளிவான மின்னூல்
| Posted: 03 Oct 2016 10:15 AM PDT - - |
| Posted: 03 Oct 2016 10:02 AM PDT நாமும் மறந்து விட்டோம் அக்டொபர் 2 தேதி காந்திஜியை நாமும் மறந்து விட்டோமே . நேற்று அவரது பிறந்த தினம் . அதே போல் காமராஜரின் நினைவு தினம் . இந்த மகான்களை மறந்தது மனதை உறுத்துகிறது . ரமணியன் |
| ‘‘குழந்தைகளிடம் பொய்சொல்லக் கூடாது!’’ Posted: 03 Oct 2016 09:33 AM PDT - 1926-ம் ஆண்டு ஓர் இளைஞர் சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். அவர், குழந்தைகளிடத்தில் நன்கு பிரபலமானார். ஒருநாள் அவர், எட்டு வயது பெண் குழந்தைக்கு எலுமிச்சைப் பழம் ஒன்றைவைத்து வேடிக்கை காண்பித்துக்கொண்டிருந்தார். அதை எடுத்துக்கொள்ள அந்தக் குழந்தை நினைத்தது. ஆனால் அவரிடமிருந்து அந்தப் பழத்தை எடுக்க முடியவில்லை. மிகவும் களைப்படைந்துபோன குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது. ஆஸ்ரமத்தில் உள்ள ஒரு நோயாளிக்காக அந்த எலுமிச்சைப் பழம் இருந்தது. அவருக்கு இப்போது தர்மசங்கடமான நிலை. இதை அந்தக் குழந்தையிடம் ... |
| உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Posted: 03 Oct 2016 09:21 AM PDT உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... நான் பிறந்தது பக்கத்து மாநிலம் ஆனால் வளர்ந்தது ...என்னை வாழவைத்தது....தமிழ்நாட்டின் தலைநகரம் தான்.நான் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் ஒரு குளம் உண்டு அதில் மழைக்காலத்தில் நீர்நிரம்பி அருகில் உள்ள குட்டையில் நிறையும்..நாங்கள் எங்கள் வீட்டின் வழியாகச்செல்லும் நீரில் குதித்து விளையாடுவோம். என்னை வாழவைத்த சென்னையை மிகவும் நேசிக்கிறேன்... இன்று என் வீட்டின் அருகே உள்ள குளத்தின் மீது உயர்ந்து நிற்கிறது ஒரு குடியிருப்பு பகுதி ...சென்ற வருட வெள்ளத்தில் நீர் தனது பகுதியை ... |
| மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள் Posted: 03 Oct 2016 08:33 AM PDT ஸ்ரீகுருவே நம: மறைகளில் மலர்ந்த மந்திர மலர்கள் உலகின் ஞான பீடம், நமது பாரததேசம் என்பதில் ஐயம் இருக்க முடியாது. நமது பரத கண்டத்தில் எங்கேனும் ஓர் இடத்தில் எப்போதும் உலக மக்களுக்கு நமது கொடையாகும் வேதங்கள் ஒலித்துக் கொண்டே இருப்பவை என்பதிலும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை. ரிக், யஜுர், சாம , அதர்வணம் என வேதங்கள் நான்கு. இவை சதுர்வேதம் என்னும் ஒரே சொல்லால் குறிப்பிடப்படுபவை. நம் அமுதத்தமிழ் சதுர்வேதத்தை நான்மறை என நவிலும் . பொதுவாக மறை என்றும் வேதங்கள் , குறிப்பிடப்படுபவை. மறை நான்கிலும் ... |
| ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம் Posted: 03 Oct 2016 06:56 AM PDT தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்) ஔவைக்குறள் (ஔவையார் அருளியது) வீட்டு நெறிப்பால் 1.பிறப்பின் நிலைமை. 4. தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும் உருவத்தா லாய பயன். (1-04) தெளிவுரை : உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு ... |
| தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Posted: 03 Oct 2016 06:48 AM PDT – தன் மகனின் உடல்மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த சாரதா தேவி, அவனை ஒருநாள் காந்திஜியிடம் அழைத்துச் சென்றார். அந்தச் சமயம் அவர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். – நாலாபக்கமும் காகிதங்கள் சிதறிக்கிடந்தன. சிலவற்றின் மேல் துண்டுக்கற்கள் வைக்கப்பட்டிருந்தன. பக்கத்திலேயே பனை ஓலை விசிறி ஒன்றும் இருந்தது. சாரதா தேவியின் மகனைப் பார்த்து காந்திஜி விசிறியை எடுக்குமாறு ஜாடை செய்தார். – காந்திஜியின் குறிப்பைப் புரிந்துகொண்ட பையன் விசிறியை எடுத்து விசிற ஆரம்பித்தான். சில நிமிடங்கள் கழிந்தன. குளிர்ந்த காற்று ... |
| Posted: 03 Oct 2016 06:23 AM PDT - மகாத்மாவே… கண்ணியம், மார்க்கமற்ற கனவான்கள் விமர்சனம் செய்வதால் நின் மாண்பு மழுங்கப் போவதில்லை! விமர்சித்தோர் கண்டிக்கப்படலாம் விழா எடுத்து உம்மை வாழ்த்தும் நாங்கள் மட்டும் விசேஷமானவர்களா? சத்திய சோதனையை நாங்கள் காட்சிப் பொருளாக்கினோம் வாழ்க்கையின் வாசலாக்கவில்லை! தங்களின் பாத சுவட்டை பின்தொடர்ந்து வாழவில்லை தங்கள் பாதுகையை பேழையில் பாதுகாத்து மகிழ்ந்தோம்! கைராட்டை சுற்றியே அந்நிய ஆட்சியை சுழற்றியடித்த மனோதிடத்தை நாங்கள் கற்கவில்லை! ஆடம்பரத்தில் எங்களின் அடையாளத்தை ... |
| சுறுசுறுப்பைப் போதிக்கும் வண்ணத்துப்பூச்சி Posted: 03 Oct 2016 06:15 AM PDT - கூர்ந்து பாருங்கள் சுறுசுறுப்பைப் போதிக்கும் வண்ணத்துப்பூச்சி – இல்லாவிட்டாலும் கவலை இருந்தாலும் கவலை பணம் – உடல் சுத்தம் நீரால் உள்ளத்தின் சுத்தம் தியானத்தால் – மழலைகளிடம் மூட நம்பிக்கை விதைப்பு மயில் இறகு குட்டி போடும் – பரவசம் அடைந்தனர் பார்க்கும் மனிதர்கள் கவலையில் தொட்டி மீன்கள் – அம்மாவை விட மழலைகள் மகிழ்ந்தன அம்மாவிற்கு விடுமுறை இளமையின் அருமை தாமதமாக புரிந்தது முதுமையில் – தோற்றம் மறைவு சாமானியர்களுக்குத் தான் சாதனையாளர்களுக்கு இல்லை – ———————— Udthikumsuriyan |
| அக்டோபர் -3 உலக வசிப்பிட தினம் இன்று . Posted: 03 Oct 2016 06:11 AM PDT நாம் வாழும் பூமியை எவ்வாறு வைத்துள்ளோம் என்று நினைவுறுத்தும் நாள் இன்று. அழகு சாதனப்பொருட்களால் வீட்டை அலங்கரிக்கும் நாம் …பூமியை அலங்கரிக்கும் இயற்கை அழிவதை அலட்சியப்படுத்துவது ஏன்…? விஞ்ஞான வளர்ச்சி மனிதர்களுக்கு பல வசதிகளைத் தந்திருக்கலாம் ஆனால் இயற்கைக்கு…! தென் அமெரிக்காவின் பழங்குடியினத்தலைவர் சியாத்தல் வாஷிங்டனின் பிரசிடென்ட் அவர்களுக்கு எ ழுதிய கடிதத்தில்… "என் பூமியை விற்க சொல்கின்றீர்கள் நான் எவ்வாறு பூமியை விற்க முடியும்?இங்கு ஓடும் ஆற்றின் முணுமுணுப்பு என் மூதாதையர்களின் ... |
| Posted: 03 Oct 2016 05:14 AM PDT - ஒரு சமயம், காந்தியடிகளுடன் நேரு போன்றவர்கள் நடைப்பயணம் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வழியில் ஒரு சிறு ஓடை குறுக்கிட்டது. – அதைப் பார்த்த காந்தியடிகள், அதில் இறங்காமல் நின்றபடி பின்னே வந்தவர்களிடம், ''இதைத் தாண்டிவிட முடியுமா?'' எனக் கேட்டார். அதற்கு நேருவோ, ''ஓ முடியுமே'' எனக் கூறியவாறு சற்றுப் பின்னோக்கிச் சென்று மறுபடி வேகமாய் ஓடிவந்து அதைத் தாண்டினார். – காந்தியடிகள் புன்னகைத்தவாறே, ''பரவாயில்லை. தாண்டி விட்டீர்கள். ஆனாலும், ஒரு சிறு விஷயம். ஐந்து அடி அகலமுள்ள இந்த ... |
| Posted: 03 Oct 2016 04:08 AM PDT உன் புன்னகை மந்திரமே...! ==================== சிரிப்பு சாரலில் உதிக்கும் ஒற்றை வானவில்லின் உன் பூவையிதழ் புன்னகை ஓர் மந்திரம் தான்...! தெறிக்கும் தேன்துளியில் பறிக்கும் பால்மொழியின் உன் தூரல் புன்னகை ஓர் மந்திரம் தான்...! பனிமலை தோட்டத்தில் உதிக்கும் உயிர்துளி உன் காதல் புன்னகை ஓர் மந்திரம் தான்...! இருண்ட இதயத்தின் திரண்ட நிலவின் ஒளி உன் விழி புன்னகை ஓர் மந்திரம் தான்...! என் உதிரத்தில் சேர வைத்த தந்திர புன்னகை மந்திரமே...! என்றும் உன் புன்னகை மந்திரமே...! ================================= பிரியமுடன், J ... |
| Posted: 03 Oct 2016 01:59 AM PDT ஐயோ பாவம் அப்பா நன்றி whatsapp ரமணியன் |
| நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு Posted: 03 Oct 2016 01:17 AM PDT ![]() |
| Posted: 03 Oct 2016 12:59 AM PDT தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -3 ( நீதி நூல் ) {நீதிநூல் – மாயூரம் முனிசீப், வேதநாயகம் பிள்ளை அவர்கள் அருளியது} அவையடக்கம் வெயிலுக்கு இடும்விளக்குப் போலும்யான் நீதிநூல் கூறல் 1.வெயிலினைச் சோதிசெய்வான் விளக்கிடல் போலுங்காகங் குயிலினுக் கிசையுணர்த்துங் கொள்கையே போலு நட்டம் மயிலினுக் குணர்த்துங் கான வாரண மெனவும் யாவும் பயிலுல கிற்கு நீதி பகரயான் துணிவுற் றேனால். பதப்பொருள்: வெயில் – சூரியன் சோதிசெய்தல் – காட்டுதல். விளக்கு – கைவிளக்கு. ... |
| 'தங்க நகை அணிய மாட்டோம்!' பீஹார் மாணவியர் சபதம் Posted: 02 Oct 2016 10:03 PM PDT - பாட்னா: பீஹாரில், 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியர், தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டும் வரை, தங்க நகை அணியப் போவதில்லை என, சபதம் செய்துள்ளனர். பீஹாரில், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், புக்ஸார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பில், 18 மாணவியர் படிக்கின்றனர். இவர்களில் ஆறு மாணவியர், தங்கள் வீடுகளில், பெற்றோர் கழிப்பறை கட்டும் வரை, தங்க நகை எதுவும் அணியப் போவதில்லை என, சபதம் செய்துள்ளனர். இதுகுறித்து, புக்ஸார் ... |
| உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! Posted: 02 Oct 2016 09:57 PM PDT - ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவ், பேராசிரியர் ஆனந்த் குமார் உள்ளிட்டோர் "ஸ்வராஜ் இந்தியா' எனும் புதிய கட்சியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர். இந்தியாவில் ஊழலை ஒழிக்கும் நோக்கில் அண்ணா ஹசாரேவுடன் இணைந்து அரவிந்த் கேஜரிவால், யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து, அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. இதில் யோகேந்திர யாதவ், மூத்த வழக்குரைஞர் ... |
| Posted: 02 Oct 2016 09:52 PM PDT - அன்பு… என்ன காட்சிப் பொருளா…? காட்டிக் காட்டி இருப்பைச் சொல்ல… நட்பு… என்ன வாணிபப் பொருளா…? லாப நட்டக் கணக்குப் பார்க்க… பொறுமை… என்னச் சோதனைக் களமா…? குத்திக் குத்தி வலிமை பார்க்க…! காதல்… என்னக் காமத் துறையா…? வெறுத்து ஒதுக்கித் தூக்கி எறிய…? உரிமை… என்ன சுரண்டல் விதியா…? கேட்டுக் கேட்டுப் பிச்சை எடுக்க…? மனிதம்… என்ன இலவச இணைப்பா…? ஆசை முடித்து அதன் மேல் ஒட்ட…? மடமை கொண்ட மனது சொல்லட்டும் அறிந்து கொண்டு வாழ்வை வெல்லட்டும்…! – நன்றி தமிழ் அலை ... |
| Posted: 02 Oct 2016 09:26 PM PDT - சட்டை போடாமல் விஜய் சண்டை போடும் காட்சி வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. பைரவாவுக்காக பெரிய செட் போட்டு சண்டைக் காட்சியை படமாக்கி வருகிறார் இயக்குநர் பரதன். விநாயகர் சதுர்த்திக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த வேளையில் 48 மணிநேரத்திற்கு முன்னதாகவே படங்கள் வெளியாக… படக் குழுவுக்கு பயங்கர ஷாக்! எப்படி? யாரோட வேலை? இதுவரை அந்த சஸ்பென்ஸூக்கு விடை கிடைக்கவில்லை. யார் வெளியிடயடால் என்ன? விஜய் இருக்கிறாரா? அதுபோதுமே! மொத்த ரசிகர் பட்டாளமும் பட்டாசாக பரபரக்க ஆரம்பித்துவிட்டார்கள். நடிகர் ... |
| காஞ்சனா ஜெயதிலகர் எழுதிய அதிசய ராகம் தெளிவான மின்னூல் Posted: 02 Oct 2016 08:39 PM PDT காஞ்சனா ஜெயதிலகர் எழுதிய அதிசய ராகம் தெளிவான மின்னூல் ஈகரை உறவுகளுக்காக http://www.mediafire.com/file/ti2n7hxp652oukw/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.pdf நன்றி |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
