Tamil News | Online Tamil News |
- உத்தரவை மதிக்காத கர்நாடகா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்! நீதிமன்ற மாண்பை குலைப்பதா என நீதிபதிகள் ஆவேசம் மூன்று நாட்களுக்கு 6,000 கன அடி தண்ணீர் திறக்கவும் உத்தரவு
- இலவச சமையல் 'காஸ்' இணைப்பு திட்டம் மந்தம்; விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை
- அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவாதம் ஹிலாரி அசத்தல்; டிரம்ப் சொதப்பல்
- தேர்தல் கமிஷன் திணறல்: நாராயணசாமி பதவிக்கு சிக்கல்
- 'ஜம்மு - காஷ்மீருடன் பீஹாரையும் தருகிறோம்!'
- அவசர கதியில் தேர்தல் அறிவிப்பு ஏன்? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
- அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ., ஆலோசனை
- 'சார்க்' மாநாட்டை புறக்கணிக்க மத்திய அரசு அதிரடி முடிவு
- ஹிந்தி பண்டிட்களுக்கு பறிபோகும் வேலைவாய்ப்பு
- ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கை நியாயமற்றது: திக்விஜய் சிங்
- ஆந்திர வெள்ள பாதிப்பு; வெங்கையா ஆய்வு
- ம.பி., சிறைக்கு கடும் கிராக்கி: சிபாரிசு இருந்தால் அனுமதி
- மோடி நிகழ்ச்சிக்கு குண்டு மிரட்டலா?
- மணமான பெண் வீட்டுக்கு பெற்றோர் போகலாமா?
| Posted: 27 Sep 2016 09:47 AM PDT 'காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டும்' என்று உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல், நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்படுவதாக, கர்நாடகா அரசுக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், 'அடுத்த மூன்று நாட்களுக்கு, வினாடிக்கு, 6,000 கன அடி வீதம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீரை பங்கிடுவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. 'கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், தண்ணீர் திறந்து விடும்படி பிறப்பித்த உத்தரவை திருத்த வேண்டும்' என, கர்நாடகா சார்பில் மனு தாக்கல் ... |
| இலவச சமையல் 'காஸ்' இணைப்பு திட்டம் மந்தம்; விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை Posted: 27 Sep 2016 09:49 AM PDT பிரதமர் நரேந்திர மோடியால், சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்ட, இலவச சமையல், 'காஸ்' இணைப்பு திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் தாமதமாகி வருகின்றன. இதனால், நிர்ணயிக்கப்பட்டபடி, ஐந்து கோடி இலவச இணைப்புகளை வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உ.பி.,யில், மே மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நாடு முழுவதும், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள, ஐந்து கோடி குடும்பப் பெண்களுக்கு, இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். மண்ணெண்ணெய் போன்ற, மாசு ஏற்படுத்தும் எரிபொருட்களுக்கு மாற்றாக, நாடு முழுவதும், சமையல் காஸ் பயன்பாட்டை ... |
| அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவாதம் ஹிலாரி அசத்தல்; டிரம்ப் சொதப்பல் Posted: 27 Sep 2016 09:56 AM PDT ஹெம்ப்ஸ்டெட்,:அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நடந்த, முதல் நேரடி விவாதத்தில், ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன், 68, தன் நேர்த்தியான வாதத் திறமையால் அசத்தினார்; அவருடைய வாதத்தை சமாளிக்க முடியாமல், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், 70, சொதப்பினார். அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 8ல், நடக்கிறது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக, முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில், தொழிலதிபர் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.அதிபர் தேர்தலுக்கு முன், இரு ... |
| தேர்தல் கமிஷன் திணறல்: நாராயணசாமி பதவிக்கு சிக்கல் Posted: 27 Sep 2016 10:03 AM PDT நெல்லித்தோப்பு தொகுதியில், இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக, முடிவெடுக்க முடியாமல், தேர்தல் கமிஷன் திணறுகிறது. அதனால், முதல்வர் நாராயணசாமியின் பதவிக்கு சிக்கல் உருவாகி உள்ளது. புதுச்சேரியில், மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ், 15 இடங்களைப் பிடித்தது; தி.மு.க., ஆதரவுடன், ஆட்சி அமைத்தது. தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி, ஜூன், 6ல், முதல்வராக பதவியேற்றார்.தற்போது, நாராயணசாமி முதல்வராக பதவியேற்று, மூன்று மாதங்கள் நிறைவடைந்து விட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்குள், அவர், எம்.எல்.ஏ.,வாக வேண்டும். அதற்கு வசதியாக, நெல்லித்தோப்பு, எம்.எல்.ஏ., ... |
| 'ஜம்மு - காஷ்மீருடன் பீஹாரையும் தருகிறோம்!' Posted: 27 Sep 2016 10:03 AM PDT பாட்னா: 'ஜம்மு - காஷ்மீரை கைப்பற்ற பாகிஸ்தான் விரும்புகிறது; தாராளமாக எடுத்துக் கொள்ளட்டும்; ஆனால், ஜம்மு - காஷ்மீருடன், பீஹாரையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு, சமூக வலைதளத்தில் கிண்டலாக கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், பாகிஸ்தானை குறிப்பிட்டு எழுதிய பதிவு விபரம்: உங்களுக்கு காஷ்மீர் வேண்டுமானால், பீஹாரையும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். பீஹாரையும், காஷ்மீரையும், 'பேக்கேஜ்' ... |
| அவசர கதியில் தேர்தல் அறிவிப்பு ஏன்? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் Posted: 27 Sep 2016 10:25 AM PDT 'உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில், மாநில தேர்தல் ஆணையம், அவசரம் காட்டுவது ஏன்' என, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. * தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்:உள்ளாட்சித் தேர்தல் தேதியை, அவசரமாக அறிவித்துள்ளனர்; மறுநாளே, வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்ப, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல், அடுத்த நாளே வெளியாகிறது. எதிர்க்கட்சியினரால், வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு, நெருக்கடி கொடுப்பது தான், இதன் உள்நோக்கம்.எனவே, நியாயமாகவும், நேர்மையாகவும் உள்ளாட்சி தேர்தல் நடக்காது; அதை, இதன் மூலம், தேர்தல் ஆணையம் உணர்த்தி விட்டது. ... |
| அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ., ஆலோசனை Posted: 27 Sep 2016 10:30 AM PDT சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு நேற்று மாலை, 4:30 முதல், 5:30 மணி வரை, காவிரி பிரச்னை குறித்து, அரசு தலைமை செயலர் உட்பட, சில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, காவிரியில், 6,000 கன அடி நீரை திறந்து விடும்படி, கர்நாடக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதையும், மீண்டும் இந்த வழக்கு, வரும், 30ல், ... |
| 'சார்க்' மாநாட்டை புறக்கணிக்க மத்திய அரசு அதிரடி முடிவு Posted: 27 Sep 2016 10:40 AM PDT புதுடில்லி,: பாகிஸ்தானில் நடக்கவுள்ள, 'சார்க்' எனப்படும், தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு மாநாட்டை புறக்கணிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரியில் உள்ள ராணுவ முகாமுக்குள், சமீபத்தில் ஊடுருவிய பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; இதில், 18 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்தியா - பாக்., இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பாக்., துாதரக அதிகாரி அப்துல் பாஷித்தை, வெளியுறவு செயலர் ஜெய்சங்கர், தன் அலுவலகத்துக்கு நேரில் வரும்படி, நேற்று, 'சம்மன்' அனுப்பினார். பாஷித்திடம், பாக்., ... |
| ஹிந்தி பண்டிட்களுக்கு பறிபோகும் வேலைவாய்ப்பு Posted: 27 Sep 2016 11:07 AM PDT தமிழகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழ் கட்டாய பாடம் ஆனதால், ஹிந்தி ஆசிரியர்களுக்கான பணி, பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. பிறமொழி பள்ளிகள்தமிழகத்தில், உள்ள பள்ளிகள் அனைத்திலும், தமிழை முதல் மொழிப்பாடமாக கற்பிக்க, தமிழ்நாடு தமிழ் கற்பிக்கும் சட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது.இதன்படி, பிறமொழி பள்ளிகளிலும், தமிழ் கட்டாயமானது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழ் கற்பிக்கும் சட்டம், 2015ல், அமலானது.கடந்த கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கு, தமிழ் பாடம் கட்டாயம் ஆனது. நடப்பு கல்வி ஆண்டில், ஒன்று மற்றும் இரண்டாம் ... |
| ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கை நியாயமற்றது: திக்விஜய் சிங் Posted: 27 Sep 2016 11:25 AM PDT புதுடில்லி : டில்லியில் காவல் துறையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கை நியாயமற்றது என காங்., கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்., கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியதாவது: டில்லியில், காவல் துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம், மாநில அரசுக்கு கிடையாது. நம் நாட்டின் தலைநகரின் பாதுகாப்பு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். 'டில்லியில், காவல் துறையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்' என்ற, ஆம் ஆத்மி கட்சியின் கோரிக்கை ... |
| ஆந்திர வெள்ள பாதிப்பு; வெங்கையா ஆய்வு Posted: 27 Sep 2016 12:14 PM PDT
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, ஹெலிகாப்டரில் பார்வையிட்டார். ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடக்கிறது. சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குண்டூர், விசாகப்பட்டினம் மாவட்டங்களில், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால், பயிர்கள் நாசமடைந்து உள்ளன. விசாகப்பட்டினத்தில், தாழ்வான பகுதிகளில் வசித்த, 10 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். ... |
| ம.பி., சிறைக்கு கடும் கிராக்கி: சிபாரிசு இருந்தால் அனுமதி Posted: 27 Sep 2016 12:33 PM PDT போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு சிறைக்கு செல்ல கைதிகளிடையே, கடும் போட்டி நிலவுகிறது. பலத்த சிபாரிசுடன் வரும் கைதிகள் மட்டுமே, இந்த சிறைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். நம்பிக்கை : ம.பி., மாநிலத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது; இங்கு, ஹோஷங்காபாத்தில், 25 கைதிகளை அடைக்கும் வசதியுள்ள, திறந்தவெளி சிறை உள்ளது. இங்கு, பணிபுரியவும், சிறுதொழில் செய்யவும் வசதி இருப்பதால், மாநிலத்தின் மற்ற சிறைகளில் உள்ள கைதிகள், இந்த சிறைக்கு வர, ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு அடைக்கப்பட்ட கைதிகளில் சிலர், ... |
| மோடி நிகழ்ச்சிக்கு குண்டு மிரட்டலா? Posted: 27 Sep 2016 12:51 PM PDT கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த, பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்துக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள போலீசார், அதுகுறித்த விசாரணையை துவக்கியுள்ளனர். கேரளாவில், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், இங்குள்ள கோழிக்கோட்டில் நடந்த, பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில், அந்த நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக, போலீஸ் தரப்பில் தற்போது ... |
| மணமான பெண் வீட்டுக்கு பெற்றோர் போகலாமா? Posted: 27 Sep 2016 02:41 PM PDT
புதுடில்லி: திருமணமான பெண் குடியிருக்கும் கணவரின் வீட்டுக்கு, அந்தப் பெண்ணின் பெற்றோர் செல்ல முடியுமா என்பது குறித்து, டில்லி கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், டில்லி செஷன்ஸ் கோர்ட் நீதிபதி, விகாஸ் தல் அளித்த தீர்ப்பு: கணவன் மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் இந்தப் பெண்ணுக்கு பிரச்னை உள்ளது; அதே நேரத்தில், அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். 'பெண்ணின் பெற்றோர், எங்கள் வீட்டுக்கு வரக் கூடாது' என, கணவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக விசாரித்த கீழ் கோர்ட், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 28,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |