Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'இருமுகன், வாய்மை' - முதல் நாள் நிலவரம் என்ன ?

Posted:

விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்த 'இருமுகன்', பல சீனியர் நட்சத்திரங்களுடன் சாந்தனு நடித்த 'வாய்மை' ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியாகின.

விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்தில் 'லவ்' என்ற வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் விக்ரம் நடித்துள்ளதால் அந்த ...

காவிரி விவகாரம் தொடர்பாக நான் எந்த கருத்தும் சொல்லவில்லை - சுஹாசினி

Posted:

காவிரி விவகாரத்தால் தமிழகம், கர்நாடக மாநிலங்களில் பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. இருமாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிலும் கர்நாடகாவில் அனைத்து கட்சியினரும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி, ...

பண்டிகை நாட்களை புக் செய்த கான்கள்

Posted:

பாலிவுட்டில் இருக்கும் மூன்று கான் நடிகர்கள் அமீர் கான், ஷரூக் கான் மற்றும் சல்மான் கான். இவர்கள் முவரும் அவர்களுக்கு என்று தனி இடத்தை பிடித்துள்ளனர். சில வருடங்களாக இவர்கள் படம் பற்றி அறிவிப்பு வெளியாகும்போதே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிப்பதை டிரெண்டாக வைத்துள்ளனர். அதன்படி மூன்று கான்களும், 2018-ம் ஆண்டின் முக்கிய பண்டிகை ...

வித்தியாசமான வேடத்தில் அமீர் கான்

Posted:

பாலிவுட்டில் 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில், அமீர் கானும் ஒருவர் . இவர் தற்போது நிதேஷ் திவாரி இயக்கத்தில் "டங்கல் " படத்தில் மல்யுத்த வீரராக நடித்து வருகிறார். இதையடுத்து ‛தக் ஆப் இந்துஸ்தான்' எனும் படத்தில் அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இதற்கிடையே அமீர்கான், தன்னுடைய முன்னாள் ...

‛மீரா' இல்லை, ‛நாம் ஷபானா' - டாப்சி

Posted:

தென்னிந்திய படங்களில் நடித்து வந்த டாப்சி, இப்போது பாலிவுட் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். பேபி படத்தை தொடர்ந்து தற்போது ‛பிங்க்' என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் அமிதாப் பச்சன் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்தவாரம் செப்., 16ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில், பேபி படத்தின் இரண்டாம் ...

“ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள்” ; திருமண செய்தியால் திலீப் சீற்றம்..!

Posted:

இத்தனை நாட்கள் பொறுமை காத்துவந்த மலையாள நடிகர் திலீப், பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துள்ளார்.. எந்த விஷயத்தில்..? தனது திருமணம் குறித்த வீண் வதந்தி பரப்பப்படும் விவகாரத்தில்.. அவருக்கும் காவ்யா மாதவனுக்குமான நட்பு குறித்தும் தவறாமல் பத்திரிகைகளில் செய்திகள் இடம்பெறுவது வாடிக்கை தான். அது எல்லை மீறாமல் இருந்தாவரை ...

மலையாள நடிகரின் ஷூட்டிங் ஸ்பாட் சூறையாடப்பட்டது..!

Posted:

மலையாள சினிமாவின் இளம் இயக்குனர் கம் நடிகர் வினீத் சீனிவாசன்.. ஒரு வடக்கன் செல்பி படஹ்தில் நிவின்பாளியுடன் இணைந்து நடிருந்தாரே அவர்தான். இந்த வருடம் சென்னையிலேயே 100 நாட்கள் ஓடிய 'ஜெக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படஹ்தை நிவின்பாலியை வைத்து இயக்கியதும் இவர்தான்.. இவர் தற்போது 'அபி' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். ...

'கும்கி' நடிகரின் வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி சஸ்பென்ட்..!

Posted:

பிரபுசாலமன் இயக்கிய 'கும்கி' படத்தில் ஃபாரஸ்ட் ரேஞ்சராக நடித்தவர்தான் மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி.. அதன்பின் 'எட்டுத்திக்கும் மதயானை' மற்றும் விஷாலின் 'கதகளி' ஆகிய படங்களில் வில்லனாக நடித்த இவர், புகழ்பெற்ற மலையாள நடிகர் டி.ஜி.ரவியின் மகன் ஆவார்.. சில தினங்களுக்கு முன் பள்ளி மாணவிகளிடம் தனது நிர்வாண உடலை காட்டி அவர்களிடம் ...

கௌதம் மேனன் - சிம்பு சமரசம்

Posted:

வெறும் கையால் முழம்போடுவது என்ற சொல்வார்கள். இது இயக்குநர் கௌதம் மேனனுக்குத்தான் மிகவும் பொருந்தும். கையில்போதிய பணம் இல்லாமலேயே முன்னணி ஹீரோக்களை வைத்து படத்தைத் தொடங்கிவிடுவார். ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் ஹீரோக்கள் ஒருகட்டத்தில் சம்பளத்தைக் கேட்கும்போது, படப்பிடிப்பையே நிறுத்திவிடுவார். இப்படித்தான், கௌதம் மேனன் ...

ஐதரபாத்திற்கு மாற்றப்பட்ட ஜனதா கேரேஜ் சக்ஸஸ் மீட்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள ஜனதா கேரேஜ் திரைப்படம் செப்டம்பர் 1ல் வெளிவந்து ரூ 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ஜூனியர் என்.டி.ஆர் விசாகபட்டிணத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றி கொண்டாட்ட நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தார். திடீரென ஒத்திவைக்கப்பட்ட ஜனதா கேரேஜ் சக்ஸஸ் ...

சீனியர்களுடன் கை கோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்

Posted:

ஜி.வி.பிரகாஷ்குமார் கடைசியாய் நடித்த படம் ‛எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. டார்லிங் படத்தில் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய சாம் ஆண்டன் இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. எனவே, தற்போது நடித்து வரும் புரூஸ் லீ, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களை ரொம்பவே நம்பியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவற்றில் ...

இளையராஜாவின் பாடல்களை வெளியிட்ட கேரள முதல்வர்..!

Posted:

மலையாள நடிகர் கலாபவன் மணி இறந்து சுமார் நான்கு மாதங்களாகி விட்டது. இறப்பதற்கு முன் அவர் நடித்து முடித்த படங்கள் கடந்த மாதங்களில் ஒன்றன்பின் ஒன்றாக ரிலீசாகின. கலாபவன் மணி நடிக்க ஒப்புக்கொண்ட இன்னும் ஒன்றிரண்டு படங்கள் அப்படியே முடங்கிப்போயின. ஆனால் அவற்றில் 'டபேதார்' என்கிற படத்தை மட்டும் நட்சத்திரங்களை மாற்றி படப்பிடிப்பை ...

மீண்டும் சிறிய ஹீரோயின் ஜோடி, உதயநிதியின் மாற்றம்

Posted:

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமான முதல் படமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திலேயே முன்னணி ஹீரோயினான ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்தவர். அடுத்து நயன்தாரா, எமி ஜாக்சன், மீண்டும் ஹன்சிகா ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்தார் உதயநிதி. நடித்தால் முன்னணி ஹீரோயின்கள் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். ஆனால், அதன் பின் என்ன நடந்ததோ ...

மோகன்லாலை வாழ்த்திய ஜூனியர் என்.டி.ஆர்

Posted:

ஜனதா கேரேஜ் படத்தில் இணைந்து நடித்த மோகன்லாலும், ஜூனியர் என்.டி.ஆரும் படப்பிடிப்பின் போதே ஒருவருக்கு ஒருவர் பரிசளித்துக் கொண்டு நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். ஜனதா கேரேஜ் திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளிவந்து வசூலை வாரி குவித்து வருகின்றது. இந்நிலையில் மோகன்லால் நடித்துள்ள ஒப்பம் எனும் மலையாள திரைப்படம் இன்று ...

மஜ்னு படத்தின் ரிலீஸில் மாற்றம்

Posted:

நான் ஈ, வெப்பம் போன்ற தமிழ் படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் நானி தற்போது மஜ்னு, நேனு லோக்கல் போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். இதில் இயக்குனர் விரின்சி வர்மா இயக்கத்தில் நானி மலையாள நடிகை அனு இமானுவேலுடன் இணைந்து நடிக்கும் மஜ்னு திரைப்படம் செப்டம்பர் 16ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மஜ்னு ...

50வது நாளில் 'கபாலி'

Posted:

தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த ஒரு திரைப்படமாக அமைந்த 'கபாலி' படம் ஜுலை 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான நாளிலிருந்தே இருவேறு விதமான கருத்துக்கள் வலம் வந்தாலும் வியாபார ரீதியாக 'கபாலி' படம் மிகப் பெரும் சாதனையைப் புரிந்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவே அறிவித்தார். ...

அல்லு அர்ஜூனுக்காக ஸ்டைலை மாற்றும் டிஎஸ்பி

Posted:

பெரும்பாலும் டிஎஸ்பி என அறியப்படும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர். சிரஞ்சீவியின் 150வது திரைப்படம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். அந்த வகையில் டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் ...

ஒரே நாளில் இரு மகன்களுக்கும் திருமணம் நிச்சயம் செய்யும் நாகார்ஜூனா

Posted:

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன்கள் நாகசைதன்யா மற்றும் அகிலின் திருமணம் தான் தற்போது டோலிவுட்டில் ஹாட் டாப்பிக். நாகார்ஜூனா மற்றும் அவரது முதல் மனைவி லக்ஷ்மியின் மகன் நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலிக்கின்றார். நாகார்ஜூனா மற்றும் அவரது இரண்டாவது மனைவி நடிகை அமலாவின் மகன் அகில் தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த ...

சமூக வலைதளங்களில் விமர்சனம் : சித்தார்த் பாய்ச்சல்

Posted:

சமூக வலைதளங்களில், சினிமா விமர்சனம் செய்யும் ரசிகர்களுக்கு, நடிகர் சித்தார்த், காட்டமாக பதிலளித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: தியேட்டருக்கு சென்றால், ஏதாவது ஒரு ஸ்கிரீனை தான், நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்; அது எது? படமா அல்லது உங்களின் முட்டாள் போனா? படம் பிடித்திருந்தால் பாராட்டுங்கள்; பிடிக்கவில்லை என்றால், ...

அமலாபாலின் முருகவேல்

Posted:

அமலாபால், மோகன்லால், சத்யராஜ், ரம்யா நம்பீசன், நடித்த மலையாளப் படம் லை ஓ லைலா. ஜோஷி இயக்கி இருந்தார், லோகநாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார், கோபி சுந்தர் இசை அமைத்திருந்தார். கடந்த ஆண்டு வெளிவந்த இந்தப் படம் பெரிய அளவில் அங்கு வெற்றி பெற்றது. தற்போது இந்தப் படத்தை முருகவேல் என்ற தலைப்பில் தமிழில் வெளிவருகிறது.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™