Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாடலாசிரியர் அண்ணாமலை திடீர் மரணம்!

Posted:

200 பாடல்களுக்கு மேல் எழுதிய பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை திடீரென மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50. விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் என் உச்சி மண்டையிலே, வேலாயுதம் படத்தில் ரத்தத்தின் ரத்தமே, சகுனி படத்தில் போட்டது பத்தல, நினைத்தாலே இனிக்கும் படத்தில் பன்னாரஸ் பட்டுக்கட்டி, ஈட்டியில் ஒரு துளி மழையினில் என 200 பாடல்களுக்கு ...

அஜித் நடிக்கும் அடுத்த படம் யாருக்கு?

Posted:

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் அஜித், அடுத்து உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கிறார். தற்போது மகேஷ்பாபு நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அந்தப் படத்தை முடித்ததும் ...

அக்கா தம்பியைப்போல் அதர்வாவும், நயன்தாராவும்

Posted:

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'கத்தி சண்டை' படத்திற்கு 'ஹிப் பாப் தமிழா' ஆதி இசை அமைக்கிறார். இந்தப் படத்தை அடுத்து அதர்வா, நயன்தாரா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' என்ற படத்திற்கு இசை அமைக்க உள்ளார் ஆதி. மாயா படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. ...

சிபிராஜை இயக்கும் 'சைத்தான்' பட இயக்குநர்

Posted:

கடந்த சில வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் உட்கார்ந்திருந்த சிபிராஜுக்கு முதன்முறையாக 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் மூலம் வெற்றி கிடைத்தது. அதைத்தொடர்ந்து நடித்த போக்கிரி ராஜா சூப்பர் ப்ளாப் ஆனது. அடுத்து நடித்த, 'ஜாக்சன் துரை' ஓரளவு வசூலித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிபிராஜ் நடிப்பில் அடுத்து ...

மீண்டும் ஒரு படத்துக்கு ரஜினி பட டைட்டில்

Posted:

'ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்' எல்ரெட் குமார் தயாரிப்பில் வெளியான கோ உள்ளிட்ட ஒரு சில பல படங்கள் தவிர மற்ற படங்கள் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அதிலும் குறிப்பாக ஜீவா நடித்த யான் படம் படு தோல்வியை தழுவியது. கிருஷ்ணா நடிப்பில் வெளியான 'யாமிருக்க பயமே' படம் மட்டும் ஓரளவு லாபம் சம்பாதித்து கொடுத்தது.

தற்போது ஜீவா, காஜல் ...

‛ரெமோ' -வுக்கு ‛யு' சான்று - படக்குழு மகிழ்ச்சி

Posted:

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ரெமோ. சிவகார்த்திகேயன் நடிப்பிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள படமும் கூட. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது காரணம், படத்தில் சிவகார்த்திகேயனின் அசத்தலான நர்ஸ் வேடம் தான். ...

பணத்திற்காக தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை : விஜய்சேதுபதி

Posted:

வா டீல் படத்தை இயக்கிய ரத்தின சிவா, விஜய் சேதுபதியை கொண்டு இயக்கியுள்ள படம் றெக்க. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். விஜய் சேதுபதி கொஞ்சம் கமர்ஷியலாக ஆக்ஷ்ன் ரோலில் எல்லாம் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய ...

பாலிவுட்டிற்கு செல்லும் பிரபாஸின் திரைப்படம்

Posted:

பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸ், அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை தவிர வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கிட்டதட்ட மூன்று வருடங்களாக பாகுபலி படத்திற்காக மட்டுமே உழைத்து வரும் பிரபாஸ், பாகுபலி -2 படத்திற்கு பின்னர் ரன் ராஜா ரன் படப்புகழ் இயக்குனர் சுஜீத் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். எமி ...

ராணா நடிக்கும் “ஹசி” பிப்ரவரியில் வெளியீடு

Posted:

1971ல் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஹசி எனும் போர்கப்பலையும், அப்போரினையும் மையப்படுத்தி உருவாகும் ஹசி எனும் திரைப்படத்தில் நாயகனாக ராணா நடிக்கிறார். இதில் அவர் கப்பற்படை அதிகாரியாக நடிக்கின்றார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தில் டாப்சி, ராணாவிற்கு ஜோடியாக ...

தன் பெயரில் பேஷன் உடை துவக்குகிறார் கத்ரீனா

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகை கத்ரீனா கைப். தொடர்ந்து அவரும் வரிசையாக படங்களில் நடித்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் படங்கள் தான் வெற்றி பெறவில்லை. இப்படியே போனால் தனக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போய்விடும் சூழலும் உருவாகி விடும் என்பதால் இப்போதே உஷாராகி விட்டார். ஏற்கனவே அவர் ஒரு மாடலிங் என்பதால் அவர் தன் சொந்த பெயரில் பேஷன் ...

பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய பான்ஜோ, பார்ச்சுடு

Posted:

அஜய் தேவ்கன் தயாரிப்பில் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான படம் ‛பார்ச்சுடு'. அதேப்போன்று ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛பான்ஜோ'. இந்த இரண்டு படங்களும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியுள்ளது. பார்ச்சுடு படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வசூல் குறைவு தான். படம் ...

‛காபில்', ‛ரயீஸ்' மோதலால் பாதிப்பு இருக்கும்-ஹிருத்திக்

Posted:

பாலிவுட்டின் இரு முன்னணி நடிகர்கள் ஷாரூக்கானும், ஹிருத்திக் ரோஷனும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. தற்போது இயக்குநர் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வரும் படம் ‛ரயீஸ்', இப்படத்தில் ஷாரூக், கள்ளச் சாரயம் விற்பவராக நடித்து வருகிறார். அதேசமயத்தில் இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில் நடிகர் ...

இசைக்கு எல்லை இல்லை: இளையராஜா

Posted:

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கலைஞர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று ராஜ்தாக்ரேயின் நவநிர்மான் சேனா மிரட்டல் விடுத்துள்ளது. இது இந்திய கலைஞர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றுள்ள இசை அமைப்பாளர் இளையராஜாவிடம் இதுகுறித்து அங்குள்ள ...

பிரபாஸ் பிறந்த நாளில் வெளிவரும் பாகுபலி டீசர்

Posted:

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபாஸ், ரானா, தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் ...

ஜென்டில்மேன்-ஐ மிஞ்சிய மஜ்னு

Posted:

நானி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த காதல் கதையம்சம் கொண்ட திரைப்படமான மஜ்னு வசூலில் லாபம் பார்த்து வருகின்றது. மஜ்னு படத்திற்கு முன்னர் நானி நடிப்பில் வெளிவந்த திரில்லர் திரைப்படம் ஜென்டில்மேன் படத்தின் வசூலைக் காட்டிலும் மஜ்னு படத்தின் முதல் வார வசூல் விநியோகஸ்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ...

திட்டம் போட்டு திருடுற கூட்டத்துக்காக பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம் செட்

Posted:

டூ மூவி பப்ஸ் சார்பில் ரகுநாதன், அக்ராஸ் பிலிம்ஸ் சார்பில் பிரபு வெங்கடாச்சலம் இணைந்து தயாரிக்கும் படம் திட்டம் போட்டு திருடுற கூட்டம். கயல் சந்திரன், சாட்னா டைட்டஸ் நடிக்கிறார்கள். படத்தில் கிரிக்கெட் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்காக கலை இயக்குனர் பிரமாண்ட கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி உள்ளார். இந்த மைதானத்தில் ...

கவர்ச்சி உடை... ரசிகர்கள் கிண்டலால் ஓட்டம் பிடித்த கங்கனா

Posted:

தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர். கங்கனா மீது எப்போதும் ஒரு புகார் உண்டு. அது பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சியாக உடை அணிந்து கலந்து கொள்வது. கங்கனா நல்ல மார்க்கெட்டில் இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் ஏன் இதுபோன்று உடை அணிந்து வரவேண்டும். அதை வைத்து அவர் வாய்ப்பு ...

சீரியல் இயக்குனராகிறார் சுபத்ரா

Posted:

தேவதை, கைராசி குடும்பம் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் சுபத்ரா. கைராசி குடும்பத்தில் அண்ணி கேரக்டரில் அசத்திக் கொண்டிருக்கிறார். விரைவில் தனது அடுத்த அவதாரத்தை எடுக்க இருக்கிறார். அது எழுத்தாளர் அவதாரம் மற்றும் இயக்குனர் அவதாரம்.

"எனக்கு விருப்பமானது நடிப்பா, எழுத்தா என்ற கேட்டால் எழுத்து என்று தான் சொல்வேன். ...

தரம் வாய்ந்த கதைதான் வெற்றியை கொடுக்கும்: தயாரிப்பாளர் எல்ரெட் குமார்

Posted:

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட்குமார் தற்போது தயாரித்து வரும் படம் வீரா. கோ 2 படத்திற்கு பிறகு இந்தப் படத்தை தயாரிக்கிறார், கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணா, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, உள்பட பலர் நடிக்கிறார்கள். புதுமுக இயக்குனர் ராஜாராம் இயக்குகிறார். படம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. டிசம்பர் மாதம் ...

சென்னையில் நார்வேஜியன் திரைப்பட விழா

Posted:

சென்னையில் நார்வேஜியன் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது. டில்லியில் உள்ள ராயல் நார்வேஜியன் தூதரகம், சென்னையில் உள்ள நார்வேஜியன் கான்சுலேட் ஆகியவற்றுடன். இணைந்து இண்டோ சினி அப்பரிசேஷன் அமைப்பு இதனை நடத்துகிறது.

நார்வேக்கான இந்திய பிரதிநிதி அரவிந்த் கோபிநாத் விழாவை துவக்கி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™