Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'காஷ்மோரா'வில் 90 நிமிட கிராஃபிக்ஸ் காட்சிகள்

Posted:

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலரது நடிப்பில் கோகுல்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'காஷ்மோரா.' கார்த்தி நடித்துள்ள படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் இது. கடந்த வருடம் ஆரம்பமான படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர்தான் முடிந்தது. படத்தில் பிரம்மாண்டமான செட்டுகள் அதிகம் என்பதாலும் அதிகமான ...

சாமி-2 ; தொடர்ச்சி அல்ல.. முன்கதை..!

Posted:

பத்து வருடங்களுக்கு முன் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தான் சாமி. இயக்குனர் ஹரியின் இரண்டாவது படமாகவும் சேதுவுக்குப்பின் காசி, தில் என செலக்டிவாக சில படங்களில் நடித்து விக்ரமின் முக்கியமான படமாகவும் வெளியான இந்தப்படம், அவர்கள் இருவரின் கேரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இந்தப்படத்தில் 'ஒருச்சாமி.. ...

பட்டைய கிளப்பும் மிஷ்கினின் பார்பர் கீதம்

Posted:

இயக்குனர் மிஷ்கின் தனது லோன் வுல்ஃப் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எழுதி, தயாரித்து, வில்லனாக நடிக்கும் படம் சவரக்கத்தி. இயக்குனர் ராம், பூர்ணா ஹீரோ, ஹீரோயின். இப்படத்தை அவரது இளைய சகோதரரும், உதவியாளருமான ஜி. ஆர் ஆதித்யா இயக்குகிறார்.

இந்தப் படத்தில். "தங்கக் கத்தி, வெள்ளிக் கத்தி, செம்புக் கத்தி, இரும்புக் கத்தி, சவரக் ...

ரிக்ஷாக்காரன் பாடல் வெளியீட்டு விழா: 21ந் தேதி நடக்கிறது

Posted:

1971ம் ஆண்டு வெளிவந்த படம் ரிக்ஷாக்காரன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் மஞ்சுளா, அசோகன், தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன், மனோகர், சோ, பத்மினி, ஆகியோர் நடித்திருந்தார்கள். கிருஷ்ணன் நாயர் இயக்கி இருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் பட்டத்தை பெற்றுக் கொடுத்த ...

ஜீவாவுக்காக பாடிய பாலிவுட் பாடகர் அர்மான் மாலிக்

Posted:

பாலிவுட்டின் பிரபலமான பாடகர் அர்மான் மாலிக். இவர் தற்போது ஜீவா, காஜல் அகர்வால் நடிக்கும் கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவிற்காக "உன் காதல்..." என்ற பாப் டைப்பிலான மெலடி காதல் பாடலை பாடியுள்ளார். இது குறித்து இசை அமைப்பாளர் லியோ ஜேம்ஸ் கூறியதாவது:

அர்மான் மாலிக்கின் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த ...

தனி ஹீரோவானார் பசங்க கிஷோர்

Posted:

பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்களில் ஸ்ரீராம், ஏற்கெனவே சில படங்களில் ஹீரோவாக நடித்து விட்டார். தற்போது நடித்தும் வருகிறார். இன்னொருவரான கிஷோர் பசங்க படத்திற்கு பிறகு வஜ்ரம், கோலிசோடா உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது கிஷோரும் தனி ஹீரோவாகிவிட்டார்.

சினேகம் பிலிம்ஸ் பட ...

மா.கா.பா ஆனந்துக்கு கை கொடுக்குமா கடலை?

Posted:

சிவகார்த்திகேயன் அது இது எது தொடரில் பிரபலமாகி இப்போது கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் டாப் ஹீரோவாகிவிட்டார். சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து விட்டதால் சின்னத்திரையில் அவர் இடத்தைப் பிடித்தார் மா.கா.பா.ஆனந்த். அதன்பிறகு சிவகார்த்தியேன் வழியிலேயே சினிமாவுக்கும் வந்தார்.

வானவராயன் வல்லவராயன் படத்தில் ...

அப்பாவிடம் பாஸ் மார்க் வாங்கணும்: லுத்புதீன்

Posted:

நாசர் மகன் லுத்புதீன் சைவம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இது என்ன மாயம் படத்தில் நடித்தார். தற்போது பறந்து செல்லவா என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படம் விரைவில் வெளிவர உள்ளது. "இந்த படத்தை பார்த்து விட்டு அப்பா எனக்கு பாஸ் மார்க் போடணும்" என்கிறார் லுத்புதீன்.

அவர் மேலும் கூறியதாவது: சினிமா இயக்க ...

அமெரிக்க டி.வி தொடரில் நடிக்கிறார் நீது சந்திரா

Posted:

பாலிவுட் நடிகை நீது சந்த்ராவை தமிழ் ரசிகர்கள் நன்கு அறிவார்கள். யாவரும் நலம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பிறகு தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன், படங்களில் நடித்தார். பாலிவுட்டில் பிசியாக நடித்தவர் இப்போது, அமெரிக்க டி.வி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ...

டப்பிங் சீரியல்களால் கலாச்சாரம் அழிகிறது: சின்னத்தரை கலைஞர்கள் போராட்ட அறிவிப்பு

Posted:

தமிழ் சேனல்களில் கடந்த சில வருடங்களாகவே இந்தி சீரியல்கள் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியிலும் சேனல் வைத்திருக்கும் விஜய், ஜீ தொலைக்காட்சிகள் இதனை ஆரம்பித்து வைத்தது, அதன் பிறகு பாலிமர், ராஜ், வசந்த், ஜெயா என அனைத்து சேனல்களும் டப்பிங் சீரியலுக்கு தாவியது. எந்தக் காலத்திலும் டப்பிங் சீரியலை ஒளிபரப்ப மாட்டோம் அது ...

‛நூர்'-ல் சன்னி லியோன்

Posted:

பாகிஸ்தானை சேர்ந்த எழுத்தாளர் சபா இம்தியாஸ் எழுதிய ‛கராச்சி யு ஆர் கில்லிங் மீ' என்ற நாவலை மையமாக வைத்து இயக்குநர் சுனில் சிப்பி, ‛நூர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா தான் லீடு ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் நடிகை சன்னி லியோன் சிறப்பு ...

2017, ஏப்., 7-ல் ஜகா ஜசூஸ் ரிலீஸ்

Posted:

ஹிந்தி திரையுலகில் தனக்கு என்று ஒரு தனியிடத்தை பிடித்த இயக்குநர்களில் அனுராக் பாசுவும் ஒருவர். தற்போது அனுராக் இயக்கத்தில், யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரன்பீர் கபூர், கத்ரீனா கைப் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ஜகா ஜசூஸ்'. ரொமான்ட்டிக் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து மாறிக் கொண்டே ...

ரன்வீர் சிங்கை இயக்கும் சிமித் அமின்

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் சிமித் அமினும் ஒருவர். ஷாருக்கை வைத்து இவர் இயக்கிய "சக் தே இந்தியா" படம் நம் தேசிய விளையாட்டான ஹாக்கியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் சிமித்திற்கு ஹிட் படமாக அமைந்தது. அதன்பின்னர் சில படங்களை இயக்கிய சிமித், விரைவில் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். தற்போது ரன்வீர், ...

ஸ்ரீரஸ்து சுபமஸ்து சக்ஸஸ் மீட்டில் அல்லு அர்ஜூன்

Posted:

டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகின்றார். தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கவிருக்கும் இப்படத்தை 2017 கோடை விடுமுறையில் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றி வரும் அல்லு ...

சிவாய் படத்தில் சல்மான் கான் நடிக்கவில்லை

Posted:

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் அஜய் தேவ்கனும் ஒருவர். தற்போது அஜய் தேவ்கன், இயக்கி, நடித்து வரும் படம் ‛சிவாய்'. சிவாய் படத்தில் அஜய் மலையேறுபவராகவும், தன் குடும்பத்தை எதிரிகளிடமிருந்து கடவுளின் துணையோடு பாதுகாப்பவராகவும் நடித்துள்ளார். இப்படம் பற்றி பல செய்திகள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், சில தினங்களுக்கு முன் ...

இயக்குனர் விக்ரம்குமார் இயக்கத்தில் நடிக்கும் அகில்?

Posted:

தெலுங்கு திரை உலகில் மனம் எனும் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்ரம்குமார் தமிழிலும் யாவரும் நலம், 24 போன்ற படங்களை இயக்கியுள்ளார். சூர்யா மூன்று வேடங்களில் நடித்த 24 எனும் சயின்ஸ் பிக்ஷன் படத்திற்கு பின்னர் தெலுங்கில் படம் இயக்க விக்ரம் முடிவு செய்துள்ளார். அப்படத்தில் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் ...

மகேஷ் பாபுவின் பிறந்த நாளில் புதிய படம் அறிவிப்பு

Posted:

தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று(ஆகஸ்ட் 9) தனது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றார். மகேஷ் பாபுவின் ரசிகர்களும் நண்பர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் வாஸ்கோடகாமா படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு அடுத்ததாக பிவிபி நிறுவனம் தயாரிக்கும் ...

ஹன்சிகாவுக்கு வாழ்த்து சொன்ன சிம்பு

Posted:

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா இன்று தன்னுடைய 25வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். ஹிந்தித் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, 2011ம் ஆண்டு வெளிவந்த 'மாப்பிள்ளை' படம் மூலம் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் ...

ரஜினிகாந்த், கமல்ஹாசனை 'செதுக்கியவர்' பஞ்சு அருணாச்சலம்

Posted:

காலத்தில் அழியாத பல பாடல்களைக் கொடுத்த கவியரசு கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து இளையராஜா என்ற திறமைசாலியை அடையாளம் கண்டு திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம். தமிழ்த் திரையுலகம் ஒரு திறமையான தயாரிப்பாளரை, கதை, திரைக்கதையாசிரியரை, வசனகர்த்தாவை இன்று இழந்துவிட்டது. கடந்த 30 ...

முன்னணி நட்சத்திரங்களுடன் மோதும் சர்வானந்த்

Posted:

எக்ஸ்பிரஸ் ராஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் சர்வானந்த் நடிக்கவிருக்கும் சதமானம் பவதி படத்தில் பிரேமம் நாயகி அனுபமா பரமேஸ்வரன் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று(ஆகஸ்ட் 9) வெளிவந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் படத்தின் தலைப்பை உறுதி செய்து வெளிவந்திருக்கும் அப்போஸ்டரில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™