Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


குடிபோதையில் கார் ஓட்டி விபத்து : கைது பயத்தில் நடிகர் அருண் விஜய் தலைமறைவு

Posted:

குடி போதையில் கார் ஓட்டி, போலீஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய், போலீஸ் காவலில் இருந்து, தப்பி ஓடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். இவர், பாண்டவர் பூமி, மாஞ்சா வேலு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், அஜித் நடித்த, என்னை அறிந்தால் படத்தில், ...

தெலுங்கு பேசப் போகும் 'விசாரணை'

Posted:

தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ், சமுத்திரக்கனி நடித்து வெளிவந்த படம் 'விசாரணை'. ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டது. நடிகர் சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும், கிஷோருக்கு சிறந்த படத் ...

தமன்னாவுக்காக பாடல் பாடும் ஸ்ருதிஹாசன்

Posted:

ஸ்ருதிஹாசன் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. அவர் இதற்கு முன் '7ம் அறிவு, 3, என்னமோ ஏதோ, மான் கராத்தே, புலி, வேதாளம்' ஆகிய படங்களில் சூப்பர் ஹிட்டான பாடல்களைப் பாடியுள்ளார். யாராவது பாட அழைத்தால் மட்டுமே பாடும் ஸ்ருதிஹாசன் அடுத்து தமன்னாவுக்காக பாட உள்ளார். விஷால் ஜோடியாக தமன்னா நடித்து வரும் 'கத்திச் சண்டை' படத்தில்தான் ...

'எனை நோக்கி பாயும் தோட்டா'விற்கு என்ன ஆயிற்று ?

Posted:

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்க கடந்த மார்ச் மாதத்தில் திடீரென ஆரம்பமான படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷா எனத் திரையுலகமே ஆச்சரியப்பட்டது. அதற்கேற்ற விதத்தில் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. திடீரென அந்தப் படம் அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டது. கௌதம் ...

கலக்குவது கவுண்டமணி மட்டுமே

Posted:

ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையான நேற்று "54321, அந்தக் குயில் நீதானா, கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, மீண்டும் ஒரு காதல் கதை, வென்று வருவான்" ஆகிய ஐந்து படங்கள் வெளியாகின. இதில் எந்தப் படமுமே முன்னணி நடிகர்களோ அல்லது முன்னணி இயக்குனர்களோ இயக்கிய படங்கள் அல்ல. எந்தப் படமும் பெரிய பட்ஜெட் படமும் அல்ல. ...

கதைக்களமானது நாகேஷ் தியேட்டர்

Posted:

பழம்பெரும் நடிகர் நாகேஷ் தன்னுடைய சம்பாத்தியத்தில் சென்னை, தி.நகரில் கட்டிய திரையரங்கம் தியேட்டர் நாகேஷ். தியேட்டர் நாகேஷ் என்று பெயர் வைக்கப்பட்டாலும் மக்கள் அந்த திரையரங்கத்தை நாகேஷ் தியேட்டர் என்றே அழைத்து வந்தனர். வியாபாரிகள் நிறைந்த இடத்தில் அமைந்ததினாலோ என்னவோ நாகேஷ் தியேட்டர் வெற்றிகரமாக இயங்கவில்லை. எனவே நாகேஷ் ...

ஆயிரத்தில் ஒருவனுக்கு பின் அதிகம் கஷ்டப்பட்ட ‛காஷ்மோரா' கார்த்தி

Posted:

கார்த்தியின் கேரியரில் மறக்க முடியாத படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கிய இந்தப் படத்துக்காக வருடக்கணக்கில் கால்ஷீட் கொடுத்தார் கார்த்தி. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படம் படு தோல்வியடைந்தது மட்டுமல்ல, கார்த்திக்கு மிகப்பெரிய சறுக்கலையும் கொடுத்தது.

இந்நிலையில் தற்போது அவர் நடித்து வரும் காஷ்மோரா படத்தை என்ன ...

பெண் குழந்தைக்கு அப்பாவானார் ஷாகித் கபூர்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாகித் கபூரும் ஒருவர். இவருக்கு கடந்தாண்டு, டில்லியை சேர்ந்த மீரா ராஜ்புட் உடன் திருமணம் நடந்தது. இதையடுத்து மீரா, கர்ப்பமானார். நேற்று மீராவிற்கு பிரசவ வலி ஏற்பட மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை ஷாகித் கபூர் தன் ...

இம்ரான் ஹாஸ்மி நடிக்கும் ‛கேப்டன் நவாப்'

Posted:

பாலிவுட்டின் முத்த மன்னனான இம்ரான் ஹாஸ்மி, விரைவில் தயாரிப்பாளராக களமிறங்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, இப்போது இம்ரான் ஹாஸ்மி தயாரிப்பாளராகிவிட்டார். அவர் தன் முதல்படமாக ராணுவத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தை தயாரிக்கிறார். கூடவே ஹீரோவாகவும் நடிக்கிறார்.

ரெமோ டிசோசா இயக்கும் ...

‛பைட்டர்'-ல் பைலட்டாக ஹிருத்திக் ரோஷன்

Posted:

‛மொகஞ்சதரோ' படத்தின் தோல்விக்கு பிறகு காபில் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் ஹிருத்திக் ரோஷன். இப்படத்தை தொடர்ந்து ஹிருத்திக், சித்தார்த் ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‛பைட்டர்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கூடவே ஹிருத்திக், பைட்டரில் விமானப்படை பைலட்டாக நடிக்கிறார்.
‛பேங் ...

‛பேபி-2' பட தலைப்பு ‛மீரா'

Posted:

நீரஜ் பாண்டே இயக்கத்தில் கடந்தாண்டு அக்ஷ்ய் குமார், ராணா, டாப்சி ஆகியோரது நடிப்பில் வெளியான படம் ‛‛பேபி''. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து பேபி படம் விரைவில் உருவாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.

இந்நிலையில், பேபி 2 படம் உருவாவது உறுதியாகியிருக்கிறது. அத்துடன் படத்திற்கும் ...

கோலிவுட்டை போட்டு தாக்கும் கவுண்டமணி

Posted:

கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது படம் நேற்று வெளியானது. சுமார் 150 தியேட்டர்களில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் கவுண்டமணியின் காமெடிகள் தியேட்டரை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. இதில் கோலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கு கேரவன் வாடகைக்கு விடும் தொழில் நடத்துபவராக நடித்திருக்கிறார். இதில் அவர் ...

‛தினமலர் வாசகர்களின் மாறா அன்பிற்கு நன்றி' - கமல்ஹாசன்

Posted:

தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவரான உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‛செவாலியே' விருது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்து கமல்ஹாசனுக்கு ஏராளமானபேர் வாழ்த்து சொன்னார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி பக்கத்து மாநில முதல்வரான பினராயி விஜயன் வரை பலரும் வாழ்த்து சொன்னார்கள். ...

இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டாம்: கே.பாக்யராஜ்

Posted:

"இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை காப்பாற்ற படம் இயக்க வேண்டாம். தங்களை காப்பாற்றிக் கொள்ள நல்ல படம் எடுத்தால் போதும்" என்று இயக்குனர் கே.பாக்யராஜ் கூறினார்.
தியா என்ற புதுமுகம் இயக்கி நடித்துள்ள படம் கன்னா பின்னா. அஞ்சலிராவ் ஹீரோயினாக நடித்துள்ளார். வில்சே இசை அமைத்துள்ளார், ஆர்.நாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் பாடல் ...

அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் : டாப் 20 பட்டியலில் 4 இந்தியர்கள்

Posted:

லண்டன்:உலகின் அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலில், டாப் 20 இடங்களில், இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகர்கள், நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில், 220 கோடி ரூபாய் வருமானத்துடன், நடிகர் ஷாருக் கான், எட்டாம் இடம் பிடித்துள்ளார்.

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை, உலகின் அனைத்து தரப்பு நடிகர்களின் வருமானத்தின் ...

தமிழில் வெளிவருகிறது டோன்ட் பிரீத்

Posted:

உலக மக்களால் அடுத்து எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படம் டோண்ட் ப்ரீத். இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஸ்டீபன் லாங் பார்வையற்ற முன்னாள் அமெரிக்க ராணுவ வீரராக நடித்துள்ளார். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? பார்வையற்றவராக நடிக்க தன் கண் பார்வையை மங்கச் செய்யும் லென்ஸ் அணிந்து நிஜமான பார்வையற்றவராக மாறி நடித்திருக்கிறார். ஸ்பீன் ...

பிளாஷ்பேக்: 100 படங்களில் கணவனுடன் நடித்த ஒரே நடிகை டி.ஏ.மதுரம்

Posted:

உலகில் உள்ள எந்த நடிகைக்கும் இல்லாத சிறப்பு டி.ஏ.மதுரத்திற்கு உண்டு. ஆம் அவர் தன் கணவர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் இணைந்து 100 படங்களுக்கு மேல் ஜோடியாகவும், மனைவியாகவும் நடித்துள்ளார். உலகில் எந்த நடிகைக்கும் கிடைத்திராத அபூர்வ வாய்ப்பு இது.
திருவரங்கத்தைச் சேர்ந்த மதுரம் திருமண வீடுகளில் நலுங்கு பாடல்கள் பாடி அந்த ஏரியாவில் ...

ஆர்யாவுக்காக நாயகி தேடும் அமீர்!

Posted:

சமீபகாலமாக சறுக்கல்களை சந்தித்து வரும் நடிகர்கள், அதிலிருந்து மீண்டு வருவதற்காக வெற்றிப்பட நாயகிகள் மற்றும் முன்னணி நடிகைகளை தங்களது படங்களை இணைத்து வருகின்றனர். அந்த வகையில், நயன்தாரா, காஜல் அகர்வாலுடன் ஜீவா நடித்திருப்பது போன்று, ஆர்யாவும் தற்போது நடித்து வரும் கடம்பன் படத்தில் கேத்ரின் தெரசாவுடன் நடிப்பவர் அடுத்தபடியாக ...

ஒருவாரம் பொள்ளாச்சியில் முகாமிடுகிறார் விஜய்!

Posted:

விஜய் நடித்து வரும் 60-வது படத்தின் படப்பிடிப்பு உள்ளாடு - வெளிநாடு என்று பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆரம்பத்தில் விஜய்யுடன் ஜெகபதிபாபு, டேனியேல் பாலாஜி, மைம் கோபி ஆகியோர் மோதிக்கொள்ளும் சண்டை காட்சிகளை சென்னையிலுள்ள பின்னி மில்லில் படமாக்கி வந்தனர். அதன்பிறகு சென்னை மற்றும் வெளிநாடுகளில் ...

அரை நிர்வாண போட்டோவை வெளியிட்டு பரபரப்பை கூட்டிய எமி

Posted:

மதராஸப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் லண்டன் நடிகையான எமி ஜாக்சன். தொடர்ந்து விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் 2O படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்தவர் எமி ஜாக்சன். அதனால் பிகினி டிரஸ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™